Friday, December 31, 2010

ஸ்ரீலஸ்ரீ

உண்மை ஞானத்துடன் ஊழிக்கூத்தாடும் ஞானக்கூத்தன்

ஞானக்கூத்தனின் அன்று வேறு கிழமை தொகுப்பில் இருந்து

ஸ்ரீலஸ்ரீ

யாரோ முனிவன் தவமிருந்தான்
வரங்கள் பெற்றான் அதன் முடிவில்
நீர்மேல் நடக்க தீபட்டால்
எரியாதிருக்க என்றிரண்டு

ஆற்றின் மேலே அவன் நடந்தான்
கொடுக்குத் தீயைச் சந்தனம் போல்
உடம்பில் பூசிச் சோதித்தான்
மக்கள் அறிந்தார் கும்பிட்டார்

மறுநாள் காலை நீராட
முனிவன் போனான் ஆற்றுக்கு
நீருக்குள்ளே கால்வைக்க
முடியாதவனாய்த் திடுக்கிட்டான்

கண்ணால் கண்டால் பேராறு
காலைப் போட்டால் நடைபாதை
சிரித்துக் கொண்டு கண்ணெதிரே
ஆறு போச்சு தந்திரமாய்

காலைக் குளியல் போயிற்றா
கிரியை எல்லாம் போயிற்று
வேர்த்துப் போனான். அத்துளிகள்
உடம்பைப் பொத்து வரக்கண்டான்

யாரோ பிணத்தைக் கண்டெடுத்தார்
செத்துப் போக ஒரு நாளில்
தீயிலிட்டார். அது சற்றும்
வேகாதிருக்கக் கைவிட்டார்

நீரின் மெலே நடப்பதற்கும்
தீயாலழியா திருப்பதற்கும்
வரங்கள் பெற்ற மாமுனிவன்
மக்கிப் போக நாளாச்சு

*******************************

இந்தக் கவிதையை எந்த ஒரு புத்தகமும் படிப்பது போல் வாசித்து இருப்பீர்கள். முடித்ததும் ஒரு குறுநகை உதட்டோரம் தவழ்ந்து கொண்டு இருக்கும்.

ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் எனக்காக இன்னொருமுறை கொஞ்சம் வாய்விட்டுப் படியுங்கள்.

கைவீ சம்மா கைவீசு
கடைக்குப் போகலாம் கைவீசு

போல ராகம் போட்டு படித்தால் கவிதை புதிதாய்த் தெரியும்.
உள் அர்த்தங்கள் புரியும்.
போலி ஆன்மீகம் புலப்படும்.
புரட்சிக்காரன் எழுத வேண்டிய கவிதை.
பாவப்பட்ட இலக்கியவாதியான கவிஞர் ஞானக்கூத்தன் எழுதி இருக்கிறார்.

ஆஃபீ சுக்கு டைமாச்சு
மாலை வந்து பேசிக்கறேன்
பேசிக்காக நான் சொல்ல
வந்தது என்ன புரிகிறதா?

காமாட்சிக்கும் டாடா பை
கொமட்லகுத்து. வேணாம் பொய்
மாமல்லன்டா மாமல்லன்
மாமா இல்லே நான் மல்லன்

ஸியா!

Thursday, December 30, 2010

எட்றெட்றா நாக்குமுக்க நாக்குமுக்க நாக்குமுக்க

சட்டபூர்வ நடவடிக்கை எடு!

ஆதாரம் இல்லாமல் ஒருவனை ஊழல் பேர்வழி லஞ்ச லாவண்யம் இடைக்காலப் பணி நீக்கம் என்று அத்தனை பண்ணாடைகள் அவதூறு செய்ததற்கும் சேர்த்து காக்கா குருவி பன்னி மேல் நடவடிக்கை எடு!

நான் வகிக்கும் பதவிக்கு, அனுமதி வாங்க வேண்டிய அனைத்திற்கும் அனுமதி வாங்கி இருக்கிறேன். அறிவிக்க வேண்டிய அனைத்தையும் அரசுக்கு அறிவித்தும் இருக்கிறேன்.

மனவெளியில் அலையடிப்பு - ட்ராட்ஸ்கி மருது

மருது சகோதரர்கள் எனக்குப் பரிச்சயமானது கிட்டத்தட்ட ஒரே காலகட்டத்தில் எனலாம். ட்ராட்ஸ்கி மருது திலகர் மருது போஸ் மருது. இவர்களில் ஓவியர் போஸ் மருது முத்துசாமி நடேஷ் (அப்போதைய ஓவியப் பள்ளி) மூலமாகவும் திலகர் மருது ராஜன் சர்மா ஸ்ரீதரன் போன்ற திரைப்படக் கல்லூரி மாணவர்களின் ட்ரைவ் இன் தொடர்பினாலும் ட்ராட்ஸ்கி மருது 80-81ல் (என் தந்தையின் 8/5) பெஸண்ட் நகர்  க்வார்ட்டர்ஸில் 8/4ல் அண்டைவீட்டுக் காரரான ஓவியர் ஆதிமூலம் வழியாகவும் அறிமுகம்.

Wednesday, December 29, 2010

சாட் பூட் த்ரீ

காஞ்சிக் கோயிலிலே காமாக்ஷி தரிசனம்

சனம் நிக்கிது சைடால கிட்டிமுட்டி
வந்தார் ஐயா வண்டி கட்டி

”சட்டையக் கழட்டுங்கோ
ஸ்பெசல் தரிசனம் பார்க்கலாம்
உள்ளே வாங்கோ
கர்ப க்ருஹத்துக்கு எதுத்தாப்புல
ஒக்காந்துக் கோங்கோ”

தட்டிலே விழுகின்ற தட்சணை பார்த்துப்
பின் முறுவலிக்குது பித்தளை கேட்டு

Tuesday, December 28, 2010

கவியும் சிறுவனும்

ஓவியம் ஆதிமூலம்

ஒட்டகம்

ஆயிரம் முறைகள் எண்ணிப்
பார்த்தபின் முடிவு கண்டேன்
ஒட்டகம் குரூபி இல்லை

Sunday, December 26, 2010

விடிஞ்சுடுத்தோ!

எவன் விழாவாக இருந்தாலும்
அழையா விருந்தாளியாய்
வாசலில் கடைபரப்பு.

ஆரம்ப இதழ்முதல்
விலைபோகா சரக்கை
கொலுவாக வை
பாத்ரூம் போய்வருபவன்
பார்வையில் பட

ஷாப்பிங்போல
விண்டோ புரட்சி செய்
***************************

Saturday, December 25, 2010

உயிர்மையும் வினவும் சிரிப்பானும்

இருக்கவே இருக்கு


புரட்சிகர நூல்களை 

வெளியிடும் பிரமுகர்கள் யார்?


ஒருவர் நீரா ராடியாவின் சென்னைத் தோழியின் நெடுநாளைய நண்பர்

மற்றவர் செம்மொழி மாநாட்டின் கவின் முகப்புகளை அமைத்த கலைஞர்இதிலென்ன பிரச்சனை


ஒரு பிரச்சனையும் இல்லை

இதனால் இவர்களின் அறிவும் கலையும் 

இம்மியும் குறைந்துவிடவில்லைதத்துவம் கொள்கை 

தனிமனித உறவு

அனைத்தும் தனித்தனி
என்பதறியா புரட்சிக் குருடில்லை


Thursday, December 23, 2010

சென்னை உலக திரைப்பட விழா 22.12.2010

இன்றைய தினம் இப்படிக் கடி ஆகும் என்று நான் நினைத்தும் பார்க்கவில்லை. திரைப்பட விழாவின் மிக ஏமாற்றமான தினம். 7.15 வரை. அதிலும் குறிப்பாக ஏமாற்றுதலுக்கு வேறு உள்ளாக நேர்ந்தது பெருங்கொடுமை. 

2000 டாலரில் தயாரிக்கப்பட்ட படம் என்று கேள்விப்பட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள். இருப்பவர்கள் 2000 டாலரை எடுத்து முதலில் தனியாக ஒதுக்கிவைத்து விட்டுதான் மறுகாரியம் பார்ப்போம் இல்லையா? எதுவும் இல்லையென்றாலும் கூட அட 2000 டாலரில் எடுக்கப் பட்ட படம் எப்படித்தான் இருக்கிறது என்று பார்க்க் கண்டிப்பாக முண்டியடிப்போம். போகவும் படம் எடுத்தவர் வேறு வந்திருக்கிறார் அவரும் நாமும் ஒன்றாக அமர்ந்து வேறு பார்க்கப் போகிறோம் என்றால் கேட்கவும் வேண்டுமா?

Wednesday, December 22, 2010

சென்னை உலகத் திரைப்பட விழா 21.12.2010

விழிப்பு வந்தபோது நன்றாகத் தூங்கியதான உணர்வுடன் எழ நேர்ந்தது ஆச்சரியமாக இருந்தது. பின்னுமொரு ஆச்சரியம் ஆள் வைத்து எழாமல், தானாகவே எழுந்து கொண்டது. பிள்ளையாரைப் பார்த்துவிட்டு கடிகாரத்தைப் பார்த்தால் பகீலென்றது.

Tuesday, December 21, 2010

சென்னை உலக திரைப்பட விழா 20.12.2010

எழுப்புவதும் இதோ இதோ எழுந்துவிட்டேன் என்பதும் கனவாய்த் தெரிந்தது.  எட்டரை, ஒன்பது ஒன்பதேகால் என்று நிலைக் கடிகாரமாய் பல்லாண்டு. இந்தியக் கலைப்டம்போல் மெல்ல எழுந்து, காரியம் மூளையில் கமர நிமிடமுள் பார்த்தபடி பரபரவென பல்விளக்கி தினசரி தடவி காஃபி குடித்து அடச்சே எவ்வளவு தினப்படிகள். கிரிபிரியென அனைத்தையும் முடித்து கிளம்பிப் போய் மணிக்கு மணி வெட்டி முறிக்கப் போகிற வேலை என்னவோ மன்னாரு & கம்பெனி.

Monday, December 20, 2010

சென்னை உலக திரைப்பட விழா 19.12.2010

10.15 & 10.30 உட்லண்ட்ஸ் & சிம்ஃபொனி இரண்டிலும் திரையிடப் பட்டிருந்த இரண்டு படங்களில் இருந்தும் FAITH / Dir: Burhan Qurbani / Germany / 2010 / 89 Min & THE TAQWACORES / Dir: Eyad Zahara / USA / 2010 / 84 Min கொஞ்ச கொஞ்ச நேரம் பார்த்துவிட்டு வாக் அவுட். 

இலக்கியம் போலவேதான் சினிமாவும். 

அறிமுகமான ஆரம்ப காலங்களில் எல்லா எழுத்தும் சிரமேற்கொண்டு படிக்க வேண்டியவை என்கிற ஒருவித பக்தி மனப்பான்மையுடன் படிக்கிறோம். வாசிப்பில் ஆழம் பிடிபட நமக்கென அபிப்ராயங்கள் உருவாகின்றன. தொடர்ந்த வாசிப்பில் சொந்த யோசிப்பில், நமது அபிப்ராயங்களும் பொருட்படுத்தக் கூடியவைதான் என்கிற தன்னம்பிக்கை உருவாகிறது. எல்லாம் இலக்கியம்தான் என்றாலும் எழுத்துகளுக்கு உள்ளேயே தரம் புலப்படத் தொடங்குகிறது.

Sunday, December 19, 2010

ஜே ஜே சில குறிப்புகளில் ஒரு குறிப்பு

சுந்தர ராமசாமியின் ஜே ஜே சில குறிப்புகளில் இருந்து ஒரு குறிப்பு

13.4.1947: ஒரு பைசா கூட இல்லை என்ற நிலை................நன்மைகள், உதவிகள், தான தர்மம், சமூக சேவை, இவற்றிற்குப் பின்னாலுங்கூட விரோதங்கள், கொடுமைகள், ஆங்காரம், துர்புத்தி, பொறாமை எல்லாம் இருக்க முடியும். மிக மோசமான அகந்தை சோறும் கறியுமாக வெந்து ஆயிரக் கணக்கான ஏழைக் குழந்தைகளின் வயிற்றை நிரப்புவதைப் பார்த்திருக்கிறேன். 


சென்னை உலக திரைப்பட விழா 18.12.2010

வண்டியெடுக்கப் போனால் முன் வீல் பஞசர். ஒட்டியபின் ஓட்டிப் பறந்தாலும் கிட்டத்தட்ட 30 நிமிடப் படம் எள்ளு. இத்துனைக்கும் கடைசியாகத் தொடங்கும் சிம்ஃபொனிக்கே இந்த கதி.

10.30 மணி
பாலஸ்தீனத்தில் நிரந்தப் போர்ச் சூழலுக்கு நடுவே படம் எல்லாம் கூட எடுக்கிறார்கள் என்பதே முக்கியம் அல்லவா? 51 நிமிடமே பார்க்க முடிந்தாலும்  பரவாயில்லை. பாலஸ்தீனம் கொந்தளிப்பில் மட்டும் முன்னணியில் இல்லை. முக்கோணக் காதலை ஏகப்பட்ட படங்களில் மொக்கையாக எடுத்துத் தள்ளியிருக்கிறோம். போராட்டத்தை வாழ்நாளின் அன்றாட அம்சமாய்க் கொண்டவர்கள், அதன் இடையிலும் வாழ்தலின் அத்துனை பின்னல்களுடனும் கலைகளைப் படைத்துக் கொண்டு இருக்கிறார்கள் என்பதைச் சொல்லும் படம்.

Saturday, December 18, 2010

சென்னை உலக திரைப்பட விழா 17.12.2010


10.30 மணிக் காட்சி
தேவதை போலொரு இத்தாலியச் சிறுமியின் பார்வையில் இரண்டாம் உலகப் போர் மனிதர்கள்மேல் செலுத்திய கொடூரங்கள். நேரடியாக யதார்த்த பாணியில் கதை சொல்லும் படும். இத்தாலியின் குக்கிராமத்தின் மேல் நாஜிப் படையினரின் தாக்குதல்கள். உள்நாட்டு இளைஞர்களின் எதிர்த் தாக்குதல்கள்.

இணையவெளியில் யானைக்கால் நோய்

யானையைப் புணர்ந்த
கொசுவென்று எழுதப் போய்

கொசுவல்ல நான்,
குல்லா போட்ட
குட்டிச்சாத்தான் என்று
குரல் வளையைப் பிடிக்கிறது

ஆரோ பெற்று
வந்த கொசுவை,
நன்றிக்கடனுக்கு
யானையாக்க

லாலாவும் அதை
ஆமென்று நம்பிவிட
கழிவிரக்க அழுக்காச்சி

விம்மலுக்கு ஊடாக
விழாவில் ஒரு விமர்சனம்

தேகக் கொசு
வெளியிட்டு இருப்பது
வெற்றுக் குசு

கொம்பு மட்டும் நீளமுள்ள
மடியில்லா யானையின்
வாதைப் பிளிறல்

அட என்ன அதிசயம்

இணையவெளியில்
யானைக்கால் நோய்

இலக்கியத்திற்கு விளம்பரம் தரமான எழுத்து

என் சிறுகதைகளும் குறுநாவலுமாக 11 கதைகள் கொண்ட அறியாத முகங்கள் (1500 ரூபாய் பத்மினி கோபாலன் அவர்களால் கடனாகவும் பின்னொருநாள் திருப்பித்தரப் போகையில் தேவையில்லை என்கிற அன்பளிப்பாகவும் 1000 ரூபாய் சேமிப்பு மற்றும் அலுவலக GPF லோனாகவும் மொத்தம் 2500 ரூபாய் செலவில் போடப்பட்ட புத்தகம்) 

வெளியீட்டுவிழா 21.12.1983ல் நடந்தது. இடம்:  LLA கட்டிடத்தின் சிறிய அறை. 

Friday, December 17, 2010

சென்னை உலக திரைப்பட விழா 16.12.2010

உலக திரைப்பட விழாவினை உலகத்தர திரைப்படங்களின் விழாவாக்க் கருதிக் கொள்வது நமது அறியாமையையே குறிக்கும்.

ஆங்கிலத்திலும் இன்ன பிற மொழிபேசும் நாடுகளிலும் கூட வருதகறிகளை வெட்கப்பட வைக்கும் படங்களும் எடுக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. அவற்றை விழாவிற்குத் திரையிடத் தேர்ந்தெடுப்பதும் நிராகரிப்பதும் விழாக் குழுவின் தரத்தைப் பொருத்தே அமைகிறது.

உலக திரைப்பட விழாவில் உயர்ந்த தரமான ஆக்கங்களே காட்டப்படக்கூடும் என்பதும்கூட ஒருவித சுய அனுபவமற்ற மூட நம்பிக்கையே.

Thursday, December 16, 2010

சென்னை உலகத் திரைப்பட விழா 15.12.2010

எல்லா உலகத் திரைப்பட விழாக்களுக்கும் உள்ள ஒரு பொதுவான அம்சம், பார்க்கும் படங்களைவிட,பார்க்கத் தவறும் திரைப்படங்களே எண்ணிக்கையில் அதிகமாக இருக்கும்.

Tuesday, December 14, 2010

சிரிப்பாய் சிரிக்கிற சிரிப்பு

பகடி மாஸ்டர் ஜெயமோகன் அருளிச் செய்து வசந்த குமார் அச்சடித்து அவர்கள் இருவர் மட்டுமே வாசிக்கும் தமிழினி பத்திரிகையின் செப்டம்பர் இதழில் அங்கதம் என்கிற பிரிவில் வெளியான ”இலக்கியக் கோட்பாடுகள்” - முழு கட்டுரை ஆசிரியரின் வலைபூவிலும் கிடைக்கிறது.

இந்தக் கட்டுரையைப் படித்து சிரிக்க வேண்டும் என்றால் செய்முறையாவன

1. கண்ணாடி முன் நின்று கொள்ளவும்
2. உங்களது இரண்டு கரங்களின் இரண்டு சுட்டு விரல்களையும் நீட்டி, நன்றாகக் கொக்கி போல் வளைத்துக் கொள்ளவும்
3. உங்கள் வாயை சற்றே விரித்து, இரண்டு ஓரங்களிலும் ஏற்கெனவே தயாராய் வளைத்து வைத்திருக்கும் இரண்டு விரல்களையும் உள்ளே விட்டு இருபுறமாகவும் நன்கு இழுத்து விட்டுக் கொள்ளவும்
4. இப்போது கண்ணாடியில் பார்த்தால் அச்சு அசலாக நீங்கள் சிரிப்பது போலவே இருக்கக்கூடும்.

Monday, December 13, 2010

ஜெயமோகன் என்கிற தம்புட்டன்

ஜெயமோகன் அவதரிக்க ஜெயமோகன் மனமுவந்து ஜெயமோகன் தேர்ந்தெடுத்த ஜெயமோகனின் தமிழ்நாட்டில் ஜெயமோகனின் காலகட்டத்தில் ஜெயமோகன் தீர்மானிக்கும் ஜெயமோகச் சூழலில் ஜெயமோகன்  எழுதுவதை ஜெயமோகனின் வாசகர்கள் ஜெயமோகன் போல்படித்து ஜெயமோகனாய் ஆவதற்காக...

ஜெயமோகன் வலைப்பூவில் ஜெயமோகன் வெளியிட்டிருக்கும் ஜெயமோக்கக் கடிதங்களில் இருந்தும் ஜெயமோகனிடம் இருந்தும் சிந்திய முத்துக்களில் சில கீழே....

எடுக்கவா? கோர்க்கவா?

Sunday, December 12, 2010

க்ளாஸிக் - கொல்லையில் கிடக்கும் பழந்துணியல்ல

//ரொம்பவும் கறாரா லாஜிக் பாத்தம்னா நாம் ரொம்ப சிலாகிக்கற கிளாசிக் படங்கள் கூட தேறாது.//
ஒன் ஃப்ளூ ஓவர் த குக்கூஸ் நெஸ்ட்
ஒரு அடி ஸ்கேலில் உடைந்த சிள்ளைக் கையில் வைத்துக் கொண்டு உலக சினிமாவை அளக்க முயற்சிப்பது அபத்தம். அளந்ததோடு நில்லாமல் தீர்ப்பும் வழங்குவது அதைவிட அபத்தம். பட்டாணி என்றிருந்தால் சொத்தை இல்லாமலா இருக்கும் என்பது போலப் பொத்தாம் பொதுவான ஒரு தத்துவ முத்து.
மிலோஸ் ஃபோர்மென்
வயதாகிக் கிழடுதட்டிவிட்டது என்கிற காரணத்தால் ஒரு கலைப் படைப்பு உலக அளவில் க்ளாசிக் என அழைக்கப் படுவதில்லை.

Saturday, December 11, 2010

நந்தலாலா

மிஷ்கின் என்கிற ஆர்வக்கோளாறான முட்டாள் கலைஞனுக்கு வாழ்த்துக்கள், சினிமா எடுக்கத் தெரிகிறது என்பதற்காக. கூடவே ஒரு வேண்டுகோள்: தயவு செய்து மூளையைக் கழற்றி வைத்துவிட்டுப் படம் எடுக்கப் பார்க்கவும்.

கலையில் மூளையின் பங்கு கைத்தடிக்கு ஒப்பானது. அவ்வபோது உபயோகித்துக் கொள்ளலாம். நிரந்தரமான மூன்றாவது கால் ஆகிவிடக் கூடாது. ஊன்றுதடியே கால் என ஆகிவிட்டால் நிராதரவாக நிற்க வேண்டியதுதான், கலை நம்மைக் கைவிட்டுப் போய்விடும் தனக்கு நெருக்கமான உறவைத் தேடி.

நந்தலாலா நான் பார்க்கும் மிஷ்கினின் முதல் படம்.

Thursday, December 9, 2010

இது தமிழ்நாடு ஒரு நாளும் தலிபான்நாடு ஆகாது.

கலைவாணி 
காபரே ஆடவேண்டுமென்று 
கட்டாயமா என்ன 
நடந்தாலே அது நடனம்

இது நான் முகநூலில் எழுதி இருந்தது.

அதற்குப் பின்னூட்டங்களாக

Sethu Vairam என்ன சார், இது கலைவாணியை போய்,காபரேனு காயப்படுத்துறீங்க?

பிம்பம் களைந்தால் பேரின்பம்

நட்பிற்கழகு நல்லதைப் பகிர்தல் நன்றி: சம்பத் ராஜகோபாலன்
நாய்க்கு வேலையில்லை நிற்க நேரமில்லை என்று ஒரு வாசகம் உண்டு. முதலில் கடும் கோபம் வரவழைத்தாலும் கொஞ்சம் யோசித்தால் நம் வாழ்நாளின் பெரும்பகுதியை இப்படித்தான் செலவழித்துக் கொண்டு இருக்கிறோம் என்பதை எவரேனும் உணரக்கூடும்.
அந்த எவருக்காகவோதான் இது.

Wednesday, December 8, 2010

நிக்லோஸ் யான்ஸ்கோ - ரவுண்ட் அப்

Miklos Jancso - The Round-Up (Svegénylegények)
தீவிர ஸ்மார்த்தனுக்கு ஸ்ருங்கேரி போல திரைப்பட மாணவனுக்கு ஹங்கேரி.
இந்தப் படத்தை சென்னை ஃபில்ம் சொஸைட்டியில் பார்த்தேன். ஹங்கேரி  படம். நிக்லோஸ் யான்ஸ்கோ என்கிற புகழ்பெற்ற இயக்குநரின் 1966ல் எடுக்கப் பட்ட படம். நான் பார்த்தது 80களின் இடையில் இருக்கலாம்.
19ம் நூற்றாண்டின் ஹங்கேரி, ஆஸ்திரியாவின் ஆக்கிரமிப்பில் இருக்கிறது.   பொது மக்களும் தேசியப் போராளிகளுமாக ஆஸ்திரியப் படையால் சுற்றி வளைக்கப் பட்டிருக்கிறார்கள். இவர்களில் போராளிகள் அடையாளம் கண்டு பிரித்தெடுக்கப்பட வேண்டும். ஆக்கிரமிப்பாளர்கள் எந்தெந்த வகையிலான தந்திரோபாயங்களை மேற்கொள்கிறார்கள். உலுக்கி எடுத்த படம்.

நீ நம்பும் ஒரே காரணத்தால் ஒரு போதும் பொய் உண்மையாகிவிடாது

@ வடகரை வேலன் அவர்களின் சமூகத்திற்கு பொடியன் விமலாதித்த மாமல்லன் பணிவன்போடு சமர்ப்பித்துக் கொள்வதாவது:

//வடகரை வேலன் - இந்தப் பதிவை 11.38 க்கு எழுதி இருக்கிறீர்கள். அவரது பதிவு வழக்கம்போல 12 மணிக்கு வெளியாகி இருக்கிறது.

அதற்குள் ஏன் இந்த அலப்பறை?

அநேகமாக செட்யூல் செய்வதற்குப் பதில் பப்ளிஷ் செய்திருப்பார். அஸ் செட்யூல்ட் இப்ப வெளியாகி இருக்கு.

வழக்கமாக நான் சொல்வதுதான் உங்களிடம் ஜெமோவுக்கு எதிரான ஆயுதம் உண்மையிலேயே இருக்கலாம், ஆனால் அதைப் பிரயோகிப்பதில் தடுமாறி விடுகிறீர்கள்.1:20 am//

இது என்னைப் பத்தி உங்க எக்ஸ்பர்ட் கமெண்டுண்ணே!

Tuesday, December 7, 2010

ஓஹோ எந்தன் புரட்சி

//அவரது நிலைபாடுகள், வாதங்களை ஒட்டுமொத்தமாக பார்க்கையில் அவர் ஒரு கலகக்காரர், புரட்சிக்காரர் என்ற சித்திரமே உருவாகிறது. இதை நம்பும் இடதுசாரிகள் அவர் முதலாளித்துவ ஊடகங்களின் சிருஷ்டி என்பதை வசதியாக மறந்துவிடுகிறார்கள். அவரை இன்று வரை தூக்கி நிறுத்தி இருப்பது அவருக்கு இருக்கும் ‘உலகப்புகழ்’ என்ற மாயை. அந்த மாயையை உருவாக்கியவை மேலை ஊடகங்கள்.

பொக்கே திரும்பப் பூவாகுமா?

திஜாவோடு நடந்து போகையில் அந்தக் கதை சுமார் என்றேன் அதுசரி எல்லாக் கதையும் நன்னாவே எழுத நாம என்ன மெஷினா ரெண்டு இப்டியும் இருக்கும் # தெய்வம்

இதை முகநூலின் சுவரில் எழுதியிருந்தேன்.

இதற்குப் பிரதிபலிப்பாக

Tamilnathy Rajarajan நீங்கள் திஜாவுக்குச் சொன்ன கருத்தை நான் எனது நண்பர்களில் ஒருவருக்குச் சொன்னேன்... அதெப்படி... நிதானமாக நேரம் எடுத்து எழுதவேண்டாமா?“ என்று கடிந்துகொண்டார். திஜாவுக்கே இப்டின்னா....

Sunday, December 5, 2010

எழுத்துக் கலை - பூரண சிருஷ்டி

கிகுஜிரோ நந்தலாலா என்னாச்சு? 

இப்படி ஒரு Direct message sent by kavirajan (@kavi_rt) to you (@maamallan) on Dec 05, 3:57 PM.

அன்பான கவிராஜன்,

கிகுஜிரோவாவது நந்தலாவாவது:)))

தமிழ்ப்பறவை உதவியால ப்ரூஃப் பார்த்து ட்ராஃப்ட் புத்தகம் ஒரு வழியாக முடிந்தது என மனுஷ்ய புத்தரனுக்கும் தெரிவித்து இன்று கொடுப்பதாய்க் கூறினேன்.

எதற்கும் ஒரு கடைசி ரிவிஷன் எனப் புரட்டினால். ’இலை’ கதையின் மூன்றாவது பத்தி டைப் அடிக்கப் படவே இல்லை. நானும் பப்ளிஷிங்கின் ஆதார சூத்திரமான ”எதற்கும் நீ ஒரு முறை பார்” கடைப்பிடிக்காமல் பதிவேற்றி இருக்கிறேன். 

Saturday, December 4, 2010

யாரோ ஒரு மனுஷன் [சிறுகதை]

கீய்ங்கீய்ங் கீய்ங்கீய்ங் ஏதோ குறுஞ்செய்தி. அசிரத்தையாக தலைமாட்டில் தடவி அரைத்தூக்கத்தில் மொபைலை எடுத்துப் பார்த்தார் ராஜ கோபால் ராவ்.

ஒரு பெண்ணிற்கு விபத்து. சோழிங்கநல்லூர் அருகில் இருக்கும் மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவசரமாக ரத்தம் தேவைப்படுகிறது. எந்தப் பிரிவு ரத்தம் எனினும் பரவாயில்லை. பின்குறிப்பு: ராஜீவ் காந்தி சாலை, வேளச்சேரி போன்ற இடங்களில் உங்கள் நிறுவனம் / வீடு இருந்தால் அங்கே போவது சுலபம்.

Tuesday, November 30, 2010

உண்மையான மரியாதை உதட்டில் இல்லை

இன்று ட்விடரில் கீழ்கண்ட ட்விட் காண நேரிட்டது.

kavi_rt kavirajan 
இந்தப் பேச்சு ஒங்கா மக்காவென்று இருக்கிறதே!http://bit.ly/hNPkzx இவ்வளவு சொல்பவர் ஒரு நன்றி செலுத்தியிருக்கலாமே படத்தில்

அதில் இருந்த சுட்டியை பின் தொடர அது மிஷ்கின் மற்றும் இன்றைய இயக்குநர்களின் கலந்துரையாடலில் கொண்டுவிட்டது. அதில் மூன்றில் இரண்டு பகுதி முடிந்த பிறகு சேரன் சார் ஒரு விஷயத்தை வியாக்கியானம் போலவும் நியாயப்படுத்தலாகவும் கேள்வியாகவும் தொடங்குகிறார், குறிப்பாக 9.19ல் மார்க்கெட்டிங் டிஸ்கஷன் போல. 

Sunday, November 28, 2010

Bach Double (Concerto for Two Violins in D minor)


ராஜாதி ராஜனிந்த ராஜா
இளையராஜா ஆராதிக்கும் ராஜா
டெஸ்ட் மேட்ச் விரும்பிகள் மட்டும் எட்டிப் பார்க்கவும்

Tchaikovsky Nutcracker Highlights (4/4); Flowers Waltz/Sugar Plum Fairy ...


தயவுசெய்து 1/4லிருந்து வரிசைக் கிரமமாகக் கேட்கவும்

Tchaikovsky Nutcracker Highlights (3/4); Chinese Dance/Russian Dance/Ree...


தயவுசெய்து 1/4லிருந்து வரிசைக் கிரமமாகக் கேட்கவும்

Tchaikovsky Nutcracker Highlights (2/4); March/Snowflakes Waltz; Lanchbery


தயவுசெய்து 1/4லிருந்து வரிசைக் கிரமமாகக் கேட்கவும்

Tchaikovsky Nutcracker Highlights (1/4); Overture/Christmas Tree Decorat...


தயவுசெய்து 1/4லிருந்து வரிசைக் கிரமமாகக் கேட்கவும்

TCHAIKOVSKY: Serenade for Strings in C major, Op. 48
இந்தவகை இசைக்கு அதிக பரிச்சயமற்றவராக இருப்பின் தயவுசெய்து முதல் இரண்டு மூன்று நிமிடங்களுக்கு கொஞ்சம் பொறுத்தருளவும். மாபெரும் இசைக் கோலகலம் உங்களுக்காகக் காத்திருக்கிறது.

TCHAIKOVSKY: Swan Lake - Лебединое Озеро


தயவு செய்து தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். இயலுமெனில் சிறப்பு இசைக்கருவியில் இணைத்துக் கேட்கவும். அல்லது ஐபாடில் அதுவும் இல்லை கேட்கப் போவது கணினியில்தான் எனில் குறைந்தது இயர்ஃபோனில் கேளுங்கள். இழைகளுக்காகவும் தெறிப்புகளின் துல்லியத்திற்காகவும் மட்டுமே இங்கே இது குறிப்பிடப் படுகிறது

Friday, November 26, 2010

தண்ணீர்க் குழாயும் சாக்கடையும் சிவப்புக் காமாலையும்

அசோகமித்திரனின் தண்ணீர் நெடுங்கதையில் இருந்து ஒரு பகுதி. இது எழுதப்பட்டு வெளியான ஆண்டு 1973. ஆனால் இன்றைக்கும் இந்த க்ஷணத்திலும் கூட இந்த ட்விட்டர் பஸ்ஸ் இருக்கும் இணைய காலத்திலும் கூட எவ்வளவு அர்த்தபூர்வமாய் இருக்கிறது.

கைகொட்டி சலித்தேன், பிறகு இதைப் படித்து சிலிர்த்தேன்.

இலக்கியத்திற்கும் மொக்கைக்கும் வித்தியாசம் எத்துனைத் துல்லியமாய் இருக்கிறது.

மொக்கை எழுதப்பட்ட அன்றைக்கு மட்டுமேயானது. இலக்கியம் என்றைக்குமானது.

Wednesday, November 24, 2010

சுகுமாரன் கவிதையிலிருந்து ஜெயமோகன் சுட்ட மொக்கை

கைதி – ஜெயமோகன்

என் அறை சிறியது,
நிறைய ஜன்னல்கள்.

என் புத்தகங்கள் கலைந்து கிடக்கின்றன.

மேஜைக்கு கீழே காகிதக் குப்பை.
கறைபடிந்த காபி கோப்பை.
ஓயாது சஞ்சலிக்கும் சுடர்.
என்னை விட பெரிதான நிழல்.

Tuesday, November 23, 2010

ஊரான் வீட்டு நெய்யே என் பெண்டாட்டி கையே

சுவர்கள் – சுகுமாரன்
(ஜூன் 1981)
வந்த வழிகளெல்லாம் அடைபட்டன
புறங்கள் நிமிர்ந்து சுவர்களாயின.
விவரங்களற்று
அகப்பட்டேன் நான்.

Monday, November 22, 2010

மொக்கு அவிழும் தருணம்

கவிதை என்பது அது தரும் அனுபவம்தானே? மத்யகதி, மெல்லினம் இதெல்லாம் என்ன?

இது ட்விட்டரில் கவிராஜன் என்கிற நண்பர், ஜெயமோகன் எழுதிய பிரமிள் கவிதை என்கிற கட்டுரையில் நான் எழுதியிருந்தமைக்கு அவரது பிரதிபலிப்பாய் கேட்ட கேள்வி. 

அந்தக் கட்டுரையில் காவியம் கவிதையில் பிரமிள் உபயோகித்திருக்கும் வார்த்தைகள், அவற்றின் வடிவங்கள், எப்படி அந்தக் கவிதையைக் காட்சிரூபப் படுத்துகின்றன, அல்லது காட்சிரூபப்படுத்த கவிஞன் எப்படி மொழியைக் கையாள்கிறான், என்பதை என் பார்வையில் கொஞ்சம் விலாவாரியாக விளக்க முற்பட்டிருந்தேன். 13 வார்த்தைகளில் உள்ள கவிதைக்கு இவ்வளவு ஆய்வாலஜி அவசியமா?

Sunday, November 21, 2010

ஜெயமோகன் எழுதிய பிரமிள் கவிதை

இலக்கியம் வாழ்வு பற்றிய தீவிரமான கூர்மையான பார்வைகளை அவதானிப்புகளை முன்வைக்கக் கூடியது. இலக்கிய இயக்கத்தில் நாவல் கதை கவிதை விமர்சனம் என பல பிரிவுகளில் அவரவர்க்கு உகந்ததை படைப்பாளியைப் போலவே வாசகனும் தேர்வு செய்து கொள்கிறான்.

இவை அனைத்திலும் கைவண்ணம் காட்டிய அல்லது காட்ட முனைந்த நிறைய படைப்பாளிகள் இருக்கிறார்கள். வெற்றிபெற்றவர் சிலரே எனலாம்.

முதல் மூன்றிலும் கைவரிசை காட்டி நிரூபித்ததோடல்லாது, விமர்சனத்திலும் ஒரு படைப்பாளி இறங்க முற்படுகையில் அவன் முக்கிய கவனத்தை ஈர்க்கிறான். புனைவுகளில் இருக்கும் முக்கியமான பாதுகாப்பு கட்டுரைக்கு இல்லை. புனைவு – இணையத்தில் இந்த வார்த்தைக்குக் காழ்ப்புணர்வில் எழுதப்படும் கதை – என்பதான பொருள் துரதிருஷ்டவசமாய் அப்பிக்கொண்டுவிட்டது.

Thursday, November 18, 2010

குருதேவரின் இஷ்டபதி

விஷ்ணுபுரம் இலக்கிய விருது விழா -2010 கோவையில்

வித்தியாசமாய் இப்படி ஒரு தலைப்பில் ஜெயமோகனின் பதிவு இருப்பதை ஜ்யோவ்ராம் சுந்தர் பஸ்ஸில் பார்க்கக் கிடைத்தது. ஆயிரக்கணக்கான வாசகர்கள் வந்து போகும் மேற்குறிப்பிட்ட வலைப்பூவுக்கு இந்தக் கட்டுரையாளனும் ஒரு வாசகன். தொடர்ந்து தவராமல் படிக்க முடிவதில்லை எனினும் வாசகன்.

தலைப்பே படிக்கிற ஆர்வத்தைத் தூண்டியது. படித்து முடித்ததும் பகட்டின் பளபளக் கூச்சம்தான் கண்ணைக் கரித்தது.

Wednesday, November 17, 2010

மனவெளியில் அலையடிப்பு – ஸ்வரன் என்கிற ஸ்வர்னகுமார்

இவனை எப்படி சொல்வது.

பெளதிகரீதியில் சொல்ல முற்பட்டால், பெரிய சைஸில் இருக்கும் நீள அகல உருளைக் கிழங்கு. உருளைக்கிழங்கு, வேகவைக்கும் முன்பாகவும் சரி பின்பும் சரி அதும் பாட்டிற்கும் அமைதியாக வைத்த இடத்தில் இருக்கும். எடுத்து சாப்பிட வாவா என இச்சையுடன் அழைக்கும். சப்புகொட்டி எடுத்து சாப்பிட்டப் பிறகுதான் தன் வேலையை அது காண்பிக்கும்.

Tuesday, November 16, 2010

ஓஸிப் பொங்கல்னா எனக்கு ரெண்டு தொண்ணை

இணையத்தில், எல்லோரும் எல்லா  கதைகளையும் PDF ஆக்கச் சொல்லி முறையிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அநேகமாக இது தவறு என சொல்ல ஒரு குரல்கூட இல்லை.

எனக்கு
எனக்கும்
எனக்கும் கூட
இது என் மெய்ல் ஐடி என்னைக் கேட்க வேண்டும் என்று இல்லை, இதை நீங்கள் டிபால்ட்டாக பட்டியலில் சேர்த்துக் கொள்ளுங்கள்
ஒரு கதைதானா, முழு தொகுப்பும் கிடைக்குமா

ஒரு எழுத்தாளனிடம் எதிர்பார்க்க வேண்டியது என்ன?

? said...
ஞானிக்கு
மதிய உணவுத்திட்டத்தை காப்பி அடித்தார் எம்ஜிஆர் என்ற தங்களது புரிதலை நினைத்தால் தமிழக அறிவுஜீவிகளின் குறுகிய வட்டம் பற்றி சிரிப்புதான் வருகிறது. உலக வங்கி முன்வைத்த அந்த திட்டத்தை நிறைவுசெய்த அந்த மனிதர்களே இதனை கேட்டால் வாய் விட்டு சிரிப்பார்கள்.

gnani said...
? என்ற பெயரில் எழுதிய அன்பருக்கு: காமராஜர் திட்டத்தை எம்.ஜி.ஆர் காப்பி அடித்தார் என்று நான் சொல்லவில்லை. ராம்ஜி சொல்லியிருந்தார்., அதை நான் மறுத்துத்தான் எழுதியிருகிறேன். சரியாகப் படித்துவிட்டு யாரைத் திட்ட வேண்டுமோ அவரைத் திட்டிக் கொள்லவும். எனக்குத் தகுதியில்லாத புகழ், திட்டு இரண்டும் தேவையில்லை - அறிவுஜீவி என்ற பட்டம் உட்பட. 

ஞாநி
November 15, 2010 10:01 PM 
? said...
மாமல்லனுக்கு
சென்ஷி எழுதிய வடிவத்தில் வடிவம் எல்லா அரேபிய இரவுகளின் காப்பி என்ற நாச்சியார்மட விவகாரத்தை விட தாங்கள் வந்து சேர்ந்த வடிவமா அல்லது உள்ளடக்கமா என்ற விவாதம் நன்றாக உள்ளது. நானும் எதிர்பார்த்த ஒன்றுதான். ஆனால் இன்னும் ஆழமாக உங்களிடம் எதிர்பார்க்கிறேன். அது உள்ளடக்கங்களின் தன்மையை வரையறுக்கும் என்றும் கருதுகிறேன். மா.லெ இயக்கங்கள் பெரும்பாலும் ஒன்றுபோல இருப்பதற்கும் உங்களைப் போன்ற அறிவாளிகள் ஒன்று போல சிந்திப்பதற்கும் உள்ள ஒற்றுமையை அலசி ஆராய்ந்து உங்களை நீங்களே கொடிகட்டி புகாரினைப் போல தொங்க விடுவீர்கள் நேர்மையாக என்றும் நம்புகிறேன்.
-
மணி
அன்பான தோழர் ‘?’ அவர்களே!

//சென்ஷி எழுதிய வடிவத்தில் வடிவம் //

மீண்டும் ஒரு முறை படிக்கவும், அது சென்ஷி எழுதிய கடிதம் அல்ல. சென்ஷிக்கு Siddharth Venkatesan எழுதிய கடிதம்.

//இன்னும் ஆழமாக உங்களிடம் எதிர்பார்க்கிறேன்//

நன்றி.


மேற்காட்டப்பட்ட தங்களின் இரண்டு வலைப்பூக்களும் ஏப்ரல் 2010ல் தொடங்கப்பட்டு பதிவுகளே இல்லாமல் வெட்டியாக உள்ளன. இதை இதுவரை 280 பேர் வேறு வெட்டியாக எட்டிப் பார்த்து ஏமாந்திருக்கிறார்கள். நானும் இன்னும் ஆழமாக உங்களிடம் எதிர்பார்க்கிறேன்.

Monday, November 15, 2010

கற்பனை செய்து பாருங்கள்

சற்றுமுன் மின்னஞ்சலில் ஒரு கடிதமும் ஒரு மொழிபெயர்ப்பும் வந்தது. எனது நேற்றைய இடுகையில் கீழிருக்கும் ஜான் லெனன் பாடலைத் தகுதியுடையோர் மொழிபெயர்த்தால் உதவியாக இருக்கும் என விழைந்திருந்தேன். நண்பர் சம்பத் ராஜகோபாலனின் கடிதமும் மொழி பெயர்ப்பும் கீழே. என்ன இருந்தாலும் தமிழில் படித்தால் எவ்வளவு அருகாமையில் இருக்கிறது.

அடடா கவித! கவித!! Imagine Live - John Lennon - 72


Mr Maamallan

It is nice that you have blogged the invaluable "imagine".


I have attempted to bring out the 'sense' of the original as much as possible w/o deviation.

Though iam not qualified .. But One can (also) imagine that i may be qualified to do so.


The attached doc is in rich text format. Vijaya font is also attached if you need. ( Kindly spell check the doc )
This word doc will open with latha font too.

For ref i have also attached every para as jpegs with 1 to 5 numbers.


Sampath rajagopalan

கற்பனை செய்து பாருங்கள்

Sunday, November 14, 2010

The Plastic Ono Band - Give Peace A Chance


அமைதிக்கு வாய்ப்பளி

Ev'rybody's talking about
Bagism, Shagism, Dragism, Madism, Ragism, Tagism
This-ism, that-ism
Isn't it the most
All we are saying is give peace a chance
All we are saying is give peace a chance

அடடா கவித! கவித!! Imagine Live - John Lennon - 72குரல் விளையாட்டு

பொதுவாகவே மேலை நாட்டு சங்கீதம் என்றாலே காட்டுக்கத்தல் என்கிற பாமரக் கருத்து ‘படித்த’ பாவங்களிடம் இருக்கிறது. சுய நிரப்பு வெற்றிடங்கள். திறந்த மனமே அனைத்திற்கும் திறவுகோல்.

Friday, November 12, 2010

பின் தொடரும் நிழலின் குரலின் முன்னால் சென்ற உருவம்

நவம்பர் 1999ல் வெளியான பின் தொடரும் நிழலின் குரல் பற்றி இன்று கூகுள் பஸ்ஸில் படிக்க நேர்ந்தது.

//அருணாசலம் என்ற தொழிற்சங்கவாதியிடம் வீரபத்திரப் பிள்ளை என்ற இயக்கத்திலிருந்து துரத்தப்பட்ட, இயக்கப் பதிவுகளில் இருந்து முற்றிலும் நீக்கப்பட்ட குடிக்குத் தன்னை இழந்து சக்கடையில் மரிக்கும் ஒரு முன்னாள் தோழரின் கைப்பதிவுகள் கிடைக்கின்றன. அவையே மேற்சொன்ன புனைவுகளாக நாவலில் அமைகின்றன.// http://kaalapayani.blogspot.com/

இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்பாக, இணையத்தில் சாரு நிவேதிதாவிடம் யானையைப் புணர்ந்த கொசுவாக நான் மாற்றப்பட்ட பிறகு, இதைவிடக் கேவலப்பட இனி ஏதுமில்லை என்ற முடிவோடு தனு உண்டு காண்டீவம் அதன் பேர் எனக் களம் இறங்கிய பின்னர் ஜெயமோகனின் வலைப்பூவில் படிக்க நேர்ந்தது இது.

அண்ணாச்சி 3 June 15th, 2009
பின் தொடரும் நிழலின் குரல்நாவலில் குடிகாரன் குறிப்புகள் என்று ஒரு பகுதி வரும். கட்சியிலிருந்து நீக்கபப்ட்ட வீரபத்திரபிள்ளை குடிகாரனாகி தெருவில் இறப்பார். அவரது முழுமைபெறாத டைரி அது. அந்தக் குறிப்புகளைப் பற்றி அண்ணாச்சிஎன்ன சொல்கிறார் என்ற ஆர்வம் எனக்கிருந்தது. ஆனால் அவரிடம் கேட்கக்கூடாதென எண்ணியிருந்தேன். அண்ணாச்சி நாவலை வாசித்துவிட்டு குமுதத்தில் தமிழில் வெளிவந்த சிறந்த பத்து நாவல்களில் ஒன்று என்று சொல்லியிருந்தார். http://www.jeyamohan.in/?p=2945

Monday, November 8, 2010

மாற்றம் - ஷங்கர் ராமன் (ஆகஸ்ட் 1983) மீட்சி முதல் இதழ்


மனமறிந்து பொய்யைப் பிழைப்பாக்கலாமா? கட்டுரையில் குறிப்பிடப்படும், எனது நண்பன் ஷங்கர் ராமன் எழுதிய இரண்டு கதைகளில் ஒன்று இது.


மாற்றம்

ஷங்கர் ராமன்

சுமார் எட்டு ஆண்டுகளுக்கு முன் நடந்த சில நிகழ்ச்சிகளைத் திரும்பிப் பார்க்க முயற்சி செய்கிறேன். அப்போது நான் பள்ளி இறுதியாண்டில் படித்துக் கொண்டிருந்தேன். அன்று பள்ளியிலிருந்து வீட்டுக்கு விடுபட்டு எஞ்சிய சயங்காலத்தை கிரிக்கெட்டில் செலவழிக்க யத்தணித்துக் கொண்டிருந்தேன். பதினைந்து பதினாறு வயதில் உடம்பும், மனமும் கிரிக்கெட்டிற்கு ரொம்ப ஏங்கும். வீட்டில் எவரும் இல்லை. அத்தை வீட்டிற்குப் போயிருந்தனர். பள்ளியிலிருந்து வந்தவுடன் டிபன், காப்பி சாப்பிட எப்பொழுதும் நிர்பந்திக்கும் அம்மா இல்லாதது புது அனுபவமாக இருந்தது. கிரவுண்டிற்கு கிளம்புவதற்கு முன் சிறிது நேரம் ஃபேன் கீழ் நின்றுவிட்டுப் போகலாம் என்று இருந்தபொழுது வாசல் மணி அடித்தது. திறந்தவுடன் ஒருவன் கையில் ஏதோ தாளுடன் நின்றுகொண்டிருந்தான். தந்தையின் பெயரைச் சொல்லி, வேண்டும் என்றான். அவர் இல்லை என்றும், இன்னும் சில மணி நேரம் கழித்து, அல்லது நாளைவந்து பார்க்கும் படியும் கூறினேன். அவன் நகைத்தது போல் எனக்குத் தோன்றியது. அவனுக்கு சற்றுதள்ளி மற்றொருவன் நிற்பதை அப்பொழுதுதான் பார்த்தேன். அவன் காலடியில் ஏதோ தோல் கருவி இருந்தது. முதலாமவன் என்னிடம் அந்தத் தாளைத் தந்தான். அதில் எழுதியிருந்தது எனக்கு ரொம்பப் புரிந்தது என்று சொல்ல முடியாது. ஆனால் பயமாக இருந்தது. தந்தையைக்