Saturday, September 4, 2010

முதல் கதை - (ஜனவரி 1980) ’குப்பை’ பற்றி

2 கருத்துரைகள்:

ராம்ஜி_யாஹூ said...

அருமையாக எழுதி இருக்கிறீர்கள். முதல் கதை என்றே சொல்ல முடியாத நடை, தொடர் சுவாரஸ்யம்,. முடிவு இந்த மாதிரிதான் இருக்கும் என்று தெரிந்தாலும் நல்ல வட்டார மொழி நடை.

கைதியின் டைரி சினிமாவை கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தி விட்டீர்கள்.

தேர்தல் அலுவலகம், போஸ்டர்கள், தெருமுனை கூட்டங்கள் - அது ஒரு கனாக் காலம். இன்று அது எல்லாம் போய் விட்டது.

ஒவ்வொரு ஒன்றியத்திற்கும், ஒரு கிளைக் கழக வாக்குகளுக்கும் இவளவு அமௌன்ட் என்று கணக்கு பார்த்து பணப் பட்டுவாடா செய்தால் போதும்.

வாக்கு வாங்கும் முறைதான் முப்பது ஆண்டுகளில் எப்படி மாறி விட்டது.

September 4, 2010 1:47 AM


செல்வராஜ் ஜெகதீசன் said...

நல்லா இருக்குங்க.

September 4, 2010 1:49 AM



ராம்ஜி_யாஹூ

செல்வராஜ் ஜெகதீசன்


நன்றி

1979 பாராளுமன்றத் தேர்தல் - முற்போக்கு கவிதைகள் தாக்கம் - அசோகமித்திரன் கதைகளின் ஆரம்ப வாசிப்பு - பிரசுரமாகவே இல்லை - முற்போக்கு பத்திரிகைகளுக்கு நேரடி செய்தி இல்லை - இலக்கிய பத்திரிகைகளுக்கு ‘மேம்போக்கான முற்போக்கு செய்தி - பின்னதே சரியான கருத்தென முடிவெடுத்ததால் எழுதுவதை நிறுத்தி வாசிப்பைக் கூட்டினேன்.
 
பரீக்‌ஷாவில் தீவிரமாய் இயங்கத் தொடங்கியாயிற்று.  அடுத்து  மார்ச் 1981ல் எழுதிய ’இலை’ கணையாழியில் பிரசுரமாகாமல் பெண்டிங்கில் கிடந்ததால், ஜூன் 1981ல் ஒரு கதை எழுதி, ஒரு பலவீனமான தருணத்தில் கல்கி நினைவு சிறுகதைப் போட்டிக்குக் கொடுத்தேன். ஆக அறிமுகம் என்ற பெயரில் கல்கியில் பிரசுரமான முதலும் கடைசீயுமான கதைதான் ’வலி’ இதைப் பற்றி அடுத்து......