Tuesday, September 7, 2010

எழுத்துக் கலை - உண்மை எழுத நேர்ந்த கதை

சுரேஷ் கண்ணன் said...

படைப்புக்கோ கட்டுரைக்கோ நம்பகத்தன்மையும் தர்க்கமும் அவசியமானதுதான் என்றாலும் இத்தனை அதிகறார்தனம் தேவையா என்று தோன்றியது.
September 7, 2010 2:06 AM

இந்தக் கட்டுரைக்கான முழுப்பழியும் உள்ளபடி உம் தலைமேல்தான் விழ வேண்டும்.

நீர் கேட்ட அந்த ஹிட்ச்காக்கின் படம் என்ன படம் என்கிற கேள்விக்கு பதில் சொல்லும் முகமாக அந்தப் படம் சம்பந்தப் பட்ட தகவல்களைத் தேடி சேகரித்து உம்மிடம் சொன்னது போலவே உமக்குத் தகவல் அளித்துவிட எண்ணி கூகுளில் இப்படி ஆரம்பித்தேன் ...  இந்தா பிடி...

அவா எப்பிடி எழுதறா பாத்தேளா! படிச்சி பாருங்கோ. மொதல்ல நம்புளுக்கு ஒரு படம் வார்தைக்கு வார்த்தை புரியறதில்லெ. இதைப் படிச்சப்பறம்தான் ப்ளூடைமண்ட்னு ஞாபகம் (அய்யாவோட கைங்கர்யம் ட்ரைவின் மாதிரி அம்மாவோட கைங்கர்யம் ப்ளூடைமண்ட் - அவாள்துதானே தகவல் தப்பாக் குடுத்ததுக்கெல்லாம் ஆட்டோ வராது, சரியாக் குடுத்ததுக்குதானே வரும்)

என்னதான் DVD வந்துடுத்து நிறுத்தி நிறுத்தி பாக்கலாம்னா படத்தோட அனுபவம் போயிட்றது. மொதல்தடவை பார்த்துட்டு ரெண்டாம் தபா பாக்க நேரமில்லை. இதுல எஸ். ராமக்ருஷ்ணன் ஆறாயிரம் DVD மச்சுல குச்சுலல்லாம் வெச்சுண்ட்ருக்கார்னு ஜெயமோகன் அவாத்துக்குப் போயிருந்தப்போ பார்த்ததா எழுதியிருக்கறதைப் படிச்சதும் நேக்கு தூக்கி வாரிப் போட்டுது. ஒரு படம் கொறைஞ்சது 1.30 மணித்தியாலம் 90 நிமிஷம் 6000 படம்னா செத்தெ இருங்கோ எக்செல் ஷீட்டை ஓப்பன் பண்ணிக்கறேன். 5,40,000 நிமிஷம் இதை 24 X 60 = 1440 மணி அதை இதால வகுத்தா 375 நாள் வரது. அவரே ஒரு நாளைக்கு 5 படம் பார்ப்பேன்னு சொல்லியிருக்கார். அப்பிடீன்னா 75 நாள்ல் முடிஞ்சுடும். நாம்பளும் ஆய் சுசூ கூட போகாம அவ்ளோத்தையும் பார்த்தோன்னா நன்னா சினிமா பத்தின நாலேட்ஜும் வந்துடும். நாம்பளும் சினிமாவுக்குப் போயிடலாம்.
பாக்கறத்துக்கில்லேங்காணும் பண்றத்துக்கு. நெஜம்மாவே இவ்ளோ படம் பாக்க முடியுமா. அதொண்ணும் ப்ரமாதமில்லே ஷக்கீலா சேச்சியை ஆக்‌ஷன் தவிர ஃபாஸ்ட் ஃபார்வேர்டுலயே பாக்கறமாதிரி பாப்பாளோ என்னவோ.

எப்பேர்ப்பட்ட எழுத்தாளர் ஜெயமோகன் அவர் போய் பொய் சொல்வரா அவரென்ன ஆய் சாஸ்திரிகள் மாதிரியா? ஒண்ணுகெடக்க ஒண்ணு சொல்லி வெச்சுடாதேள். லோகம் பூரா இருக்கற அவரோட ரசிகாள் ஏதாவுது செஞ்சுடப்போறா. சேச்சே என்ன இருந்தாலும் அத்வைத சாத்வீகாள் இல்லையோ, பஸ்ஸெல்லாம் கொளுத்தமாட்டா. வினவுகாராளாட்டம் ஆத்து வாசல்ல வந்து தட்டி வெச்சுண்டு ஆர்பாட்டம்லாம் பண்ணமாட்டா. என்ன ரசிகாள்ல ஒரு ஏழெட்டுபேர் தொங்கினாலும் தொங்கிடுவா.

ராமகிருஷ்ணன்னும் பொய்யெல்லாம் சொல்றவர் இல்லை. இலக்கிய தீட்சண்யத்தோட பைனாக்குலர் பார்வையோட எழுதறவர்

"பழனி அருகே ரயில்வே கேட் மூடப்பட்டிருக்கிறது என்று பேருந்தில் காத்திருந்தேன். சற்று தொலைவில் சிறிய மலை" .....

அப்பறம் விடுபட்ட எடிட் பண்ணிண மிச்சத்தையும் குடுத்துட்றேன்

வாழ்க்கையின் அவ்வளவு இடிபாடுகளையும் எழுதி காசாக்கினான் அல்லது சூதாட்டத்தில் பட்ட கடனடைக்கக் கதையாக்கினான் தாஸ்த்தயேவ்ஸ்கி. காசுக்காக வேண்டி எழுதியது கலையாயிற்று.

இங்கே கலை போல எழுதுவது காசாகிக் கொண்டிருக்கிறது.

மெல்ஸன்பூனின் தமிழ் பதிப்பாக இந்துமதி இருந்தால் இழிவு, திசை திருப்பல். பருவமடைந்த பெண்களை முப்பது நாளும் அந்த மூணு நாள்ல வலிக்குதாடா என்று தலை தடவிக்கொடுத்துக் கொண்டிருந்த பாலகுமாரன் கேவலம். ஆத்துல ஒரு கால் சேத்துல ஒரு காலாய் இருந்து எஸ்.ரா செய்தால் சரியா. இதைத்தான் பம்மாத்து இலக்கியம் என்ற பிரயோகம் உபயோகப்படுத்த்ப் பட்டது.  இணைய காலத்துக்கு முற்காலத்தில். 

முலைக்கு பதிலாக மலையை வருடிக் கொடுத்தாகிறது.

சுந்தர ராமசாமி சொல்லுவார்.

நேக்கு விட்டலாச்சார்யாவண்ட பிரச்சனையே இல்லை. ஆடு மாடு கோழி பேய் பிசாசு மந்தரவாதின்னு ரோட்டோரமா ஏதோ பண்ணிண்ட்ருக்கார். அவர் எடுக்கறதை அவரும் நம்பலை. பாக்கறவனும் நம்பலை. அவன் சொசைட்டிக்குப் பிரச்சனையே இல்லை. பாலச்சந்தர்னா ப்ராப்ளம். லைஃபோட மொகம் மாதிரி பொய்யன்னா வித்டுண்ட்ருக்கார். உண்மைன்னே தோன்றாப்ல பொய்யின்னா சொல்லிண்ட்ருக்கார். படிச்சவன்ல பெரும்பாலானவன் பாமரனாதான் இருக்கான். அவன் தன்னை அறிவாளியா நெனச்சுக்கறத்துக்கு சொகம்மா சொறிஞ்சு குடுத்துண்ட்ருக்கார். ஆர்ட்டிஸ்ட்டோட வேலையே லைஃபோட விஸ்தீரணத்தை வாசகனுக்குக் காட்டி அவனை பிரமிக்க வைக்கறதுதான். அவன் அதுவரைக்குக் பெரியவா குடுத்துட்டு போனதுன்னு வெச்சிண்டு சீராட்டிண்டு இருக்கறதை சுக்கு நூறா ஒடச்சி போட்டு அவனுக்கானதை அவனாவே கட்டிக்க வைக்கறது. ஸ்டேட்டஸ்கோ மெய்ண்டெய்ன் பண்ண வைக்கறதில்லை.

புதிர் போட்டு விடை கண்டுபிடித்தால் இண்டலெக்ச்சுவல் என்கிற சுய சன்மானம் வழங்கிக் கொள்ள மிடில் கிளாசுக்கு ஒரு சோவும் பாலச்சந்தரும் போதாதா.

ஜெயமோகனிடத்தில் மல்லுக் கட்டியவர்களுக்கு,  அவர்களுள் சிலர் பொருட்படுத்த பொருட்படுத்தக் கூடியவர்களும் கூட என்பதால். பாலகுமாரனுக்காக நின்றவர்களிடம் ஒரு வார்த்தை

போலி என்பது போல செய்வது. எப்போதுமே போலிக் ’கலைஞன்’ துல்லியமான சொல் ’செய்திறனாளி’ தீவிரமான பிரச்சனைய எடுப்பான் அது பிரச்சனைய பூரணமாக தீவிரத்தோடு அனுக எடுத்தது அல்ல. படைப்பை எவ்வளவு உண்மையாக அணுகியிருக்கிறான் என்பதை வைத்தே அவனது உயரம் கணிக்கப்பட வேண்டும். செய்திறன் தொழில்நுட்பத் திறன் பல சமயம் கலையாகக் கண்டு, கொண்டாடப்படுகிறது. இதன் ஆகச் சிறந்த உதாரணம் மணிரத்தினம்.

இந்துமதிக்கும் பாலகுமாரனும் எக்ஸ்டென்ஷனாக ஒரு எஸ்.ரா தேவையா.

எஸ்.ரா கண்டிப்பாக ஒரு சமூகத்தேவை. ஒரு வணிக வெகுஜனத் தேவை. நிச்சயமாக இலக்கியத்தேவை அல்ல, இப்படியே அவர் எழுத்தை ஓட்டிகொண்டு இருப்பாரேயானால்.

**********************************************************************************

அப்பா ஒருத்தரும் இனிமே பின்னூட்டமே போடமாட்டா. போய் போய் பார்த்து பதில் சொல்லணுமேங்கற பதைப்பே இல்லை. ராம்ஜீ யாஹூ வை மட்டும் சரி கட்டிட்டா போறும்.

நம்ம பொஸ்தகத்தைப் போடலாமேன்னு நெனச்சவாளும் நிறுத்திடுவா.

ஒரே ஒரு விண்ணப்பம், நீங்கள்ளாம் ரொம்ப இன்வ்லுவன்ஷியல் இலக்கியாஸ். ஒரே ஒரு ஒதவி பண்ணுங்கோ. பெஸண்ட்னகர் ஆபீசுக்கு போஸ்டிங் வாங்கிக் குடுத்துடுங்கோ. போறும் ஒங்க சங்காத்தத்துக்கே நான் வரமாட்டேனாக்கும். ஜனதிபதி பரிசு வாங்க முடியறதோ இல்லையே, கண்டிப்பா திரும்பவும் மாஜி எழுத்தாளனாயிட்றேன். லத்தியால ஆன யானைக்கு நன்பரோட நன்பர் ராகுலாமே. செத்தெ மனசு வெக்க சொல்லுங்கோ.

ஒரு தடவை இதே மாதிரி ஆபீஸ்ல பிரச்சனை. அப்போ துணை நிலை உயர் அதிகாரியா இருந்தவர் என்னப் பார்த்து ஒரு அவாதானிப்பு விட்டார்

You have mastered the art of antagonizing others

ஜனாதிபதி பரிசே கெடைச்சாப்ல பூரிச்சுட்டேன். அப்ப ஆபீசை பின்புலனா வெச்சி எழுதினதுதான் “பந்தாட்டம்”  1994 அதை நான் ட்ரைவ்-இன்ல ஒக்காந்துண்டு எழுத்திண்டிருக்கசேதான் ஜெயமோகனாச்சார்யாளோட தரிசனமும் கெடைச்சிது. சார்வாள் ஞாபகத்துல தப்பாமப் பதிஞ்சோமான்னு தெரியலை. யாராவுது கேட்டு சொல்லுங்கோ.