Thursday, September 9, 2010

எழுத்துக் கலை - நிஜமும் கற்பனையும்

மதார்

உங்களுக்கு இட்ட பின்னூட்டம்?

விமல்லதித்த மாமல்லன் என ஓபன் ஐடி போட்டால் இல்லீகல் கேரெக்ட்டர் என வருகிறது.

நான் லீகல் கேரெக்ட்டருங்க மெய்யாலும்.

மதார் said...

@madarasdada neenga nallavarthan k nampiten.

மதார்

மிக்க நன்றி

http://www.maamallan.com/

http://www.maamallan.com/2010/09/blog-post_08.html#commentsகிட்டத்தட்ட என் கதையை இன்றைக்காவது முடித்துவிட வேண்டும் என்று மும்முரமாய் - நிறம் என்கிற கதையை எழுதிக்கொண்டிருந்தவன் - அப்பப்ப எட்டிப்பார்க்கிற அல்லாட்ட புத்தி காரணமாய், உங்கள் பின்னூட்டம் பார்த்ததும், ஏதோ கிழம்தான் கல்கியை தாங்குகிறது என்ற வேகத்தில் அதற்குப் ஒரு பின்னூட்டம் போடப்போய் அது பெரிதாதல் கண்டு, நோட்பேடுக்கு காப்பி செய்து வளரத் தொடங்கிற்று வாரா வாரத் தீட்டு -கட்டுரையாய்.

அதிலிருக்கும் கதை முடிக்கையில் இன்றைய இளைஞனை முன் நிறுத்தினால் இன்னும் பொருத்தமாய் இருக்குமே என  தர்கிக்கத் தொடங்கினேன். முடித்து அப்லோடும் பண்ணியாச்சு. இடுகையிட்டது Madrasdada நேரம் 9:28 AM

உள்ளூர, கொஞ்சம் ஓவரா அடிச்சிட்டமோன்னு சின்ன உதைப்பு, எதற்கும் யாரெனப் பார்ப்போம். பயலுக்கு என்ன ரசனையெனப் பார்ப்போம் என்று என் கட்டுரைப் பின்னூட்டத்தில் இருக்கும் மதார் ஐக் க்ளிக் பன்னினால் டமார்.

ஐயையோ கிச்சென்று எழுந்து நிற்கிற கட்டுரையையும் விடமுடியலை. தலைப்பை மாத்தறதாவது, பத்திரிகையைப் பத்திரிகைன்னு சொல்லாம சொல்றதுக்கு தொடர்கதைக் கருமாந்திரத்தைக் கருமாந்திரம்னு சொல்லாம சொல்லறதுக்கு இதவிட ஆப்ட்டா வேறென்ன காயின் பன்றது. ஆனாப் பொண்ணை அட்ரஸ் பண்ணிட்டு தீட்டுன்னு போட்டா அதை ஹர்ட் பண்ணிடுத்துன்னா? மூனம் பேஸ்த்து மாதிரி ஆயிடுத்து.

உள்ளுர ஒரு சின்ன நம்பிக்கை, இந்தக் காலத்துப் பொண்களைப் பத்தி.

நானும் ஆத்துக்காரியுமா, என் ஃப்ரெண்டோட

(சுஜாதான்னு பேரு, சைக்கிள் பயனத்துல 85 டிஸம்பர் கன்யாகுமரி டு காஷ்மீர் நாலு மாச பயணம் பாபா ஆம்தே வோட போனது.

அவளோட டூவீலரை TVS 50  திருநெல்வேலீலேர்ந்து ஆறு மணிக்கு டெலிவரி எடுத்தது. ஓட்ட ஆரம்பிச்சு நாகர்கோயில் வரச்சயே மணி பதிணொண்ணு பக்கமா ஆயிடுத்து. அவளோட வண்டி மட்டுமில்லே அவளே ரெண்டு நா பழக்கம். நன்னா நீள ஜடை நல்ல ஒசரம் அதப்பாத்துதானே  வண்டி டெலிவரி எடுக்க நான் வரேன்னு முந்திண்டது. பயனத்துக்கு வந்த ஒரே மதராஸ்காரன். தாடி வெச்சு மார்டனா இருக்கான். அப்பிடின்னு கோ ஆர்டினேட்டர் அத்துல் ஷர்மா கூட அனுப்பி வெச்சான்.  ஒண்றை வயசுக் கொழந்தைக்காரி. ஒரு வயசு பெரியவோ. ஜெமினி வேறை கேக்கணுமா. 24 - 25 வயசுல பக்கத்துல ஒரு பொண் இருந்தாலே போறும். அவ பாக்கறாளோ இல்லையோ அடுத்தவா பார்த்தா போதும். வெத்து ஜொள்ளுக்கு ஜாதகப் பொருத்தம் வேற வேணுமா.

ஏழுமணிக்கே ஜிலோன்னு ஆயிட்ட ஹைவேஸ். நாகர்கோயில்ல நொழஞ்சப்பறம் ஊருக்கே 0 வால்ட் போட்டாப்புல ஒரு வெளிச்சம். இருட்டே தேவலாம். ஒன்னுமே தெரியாததுல இருக்கற தைரியம். தைரியமா எலக்கியம்னு கற்பனைன்னு டிஸ்கஸ் பண்ண வர்ரதில்லையா அது மாதிரி மப்பும் மந்தாரமுமா ஒரு வெளிச்சம். புது வண்டி சீஸ் ஆயிட்டாங்கற பயம். கட்டைவண்டியவிட சொல்ப்பம் ஸ்பீடா ஓட்டிண்டு வந்தது. 

பசி கொடலப்  புடிங்கிடுத்து. கண்யாகுமரி கேம்ப்லை சோறிருக்குமான்றதுல ட்வுட்டே இல்லை. இருக்காது. மிச்சம் மீத்தறாப்பல வடிக்கவேப்படாதுங்கறதுல கரார் காரர் ஆம்தே. காந்தீயவாதி இல்லியோ? நம்ப தேசத்துலை, காந்தியப் பெரியவ்ர்னு சொன்னவாள்ளாம் கூட இருந்திருக்கா தெரியுமோ. சாப்பாட்டுக்குக் கவலையே படாதே இருபத்திநாலு மணி நேரமும் தெறந்துருக்கற நேக்குத் தெரிஞ்ச மடம் ஒன்னு இருக்கு வா போலாம்னு போய் வண்டிய வாசல்ல நிறுத்திட்டு அவளையும் கூட்டிண்டு படியேறி கதவத்தட்டினா ஆரோ கதவத் தொறந்தா. பேரச் சொல்லி விஷயமும் சொன்னேன். உள்ள வாங்கோன்னு சொல்லிட்டு உள்ள போயிட்டா.

கன்யாகுமரில பயிற்சிக் கூடம் ஆரம்பிக்கறதுக்கு மூனு நா மின்னாடி வந்து எறங்கின பேஸ் CAMP ன்னா அது. ரெண்டு நாள் மின்னாடிதான் மாடியிலிருந்து கீழிறங்கி ப்ரேக்ஃபாஸ்ட்டுக்கு டைனிங் டேபிள் வந்த போது மணி 9 பக்கம் -பகலறியா ட்ராகுலான்னா ரொம்ப காலமா-  இவளுக்கு ஒங்க சைக்கிள் பயனம் பத்தித் தெரியணுமாம் கார்த்தாலேர்ந்து வெய்ட் பண்ணிண்டிருக்கா. மோவாய்ல கை வெச்சுண்டு கால்மேல கால் போட்டுண்டு வெள்ளை சட்டை பச்சைல வெள்ளைப் பூப்போட்ட ஸ்கர்ட் போட்டுண்டு டைனிங் டேபிள் சேரைக் கொஞ்சம் தள்ளிப் போட்டுண்டு ம் கொட்டாம மொகத்தையே பாத்துக் கேட்டுண்டிருந்தா எட்டு படிச்சிண்டிருந்திருப்பாளோ என்னவோ. நமக்கு என்னிக்கும் வாய். அந்த மாதிரி அந்தாத்துக்கே காது. அடுத்தவாளைக் கேக்கற காது. அடுத்தவாளைப் புரிஞ்சிக்கற காது. நமக்கோ காதே லேது காதா?

நான்னா தூங்கிட்டா போல இருக்கு. ஆனா ஒருத்தர் பின்னாடி ஒருத்தரா எழுந்து வந்துட்டா. மொதல் காரியமா, மாமி சுஜாதாவை டேபிளுக்குக் கூட்டிண்டு போய்ட்டா.

அவர் கன்யாகுமரி கேம்ப்புக்கு ஃபோன் போட்டார். சுஜாதாதான் பேசினா நர்சியோட வந்துண்டிருக்கேன் கவலப்பட வேண்டாம். அவன் ஃப்ரெண்டோட வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். வந்துகொண்டே இருக்கிறோம்னு.

வர்றோம்ம்னு சொல்லிண்டு கெளம்பிட்டோம். இருந்துட்டு கார்த்தால போலாமெ என்றார் மாமி. இல்லை இவா இப்ப கேம்ப்புல அவ்வாளோட பொறுப்புல இருக்கா. தகவல் சொல்லியாச்சு, அங்க போயிட்றதுதான் சரி. போய்ட்டு ஃபோன் பண்ணுங்கோ.

போய் சேர்ந்தது நடந்தது.  ஃபோன் போடலை. அது அவர். இது நா.

சுஜாதா சைக்கிள் ரேலியில் வந்த சுதிர் ரவுத் ங்கற மராத்திகாரன்கிட்ட ரேலியிலேயே யாருக்கும் தெரியாம மனசக் குடுத்து. பெங்களூர் போய் எறங்கறச்சயே ஆத்துக்காரனாண்ட நடந்ததை சொல்லி, தள்ளிப் படுத்தது பையனப் பெத்துண்டு டைவர்ஸ் வாங்கி எல்லார் வாய்லயும் விழுந்து எழுந்து ஊர் சாபத்த ஏத்துண்டு, என்னோடதும் சேர்த்துத்தான், மூணு வருஷம் மின்னாடி செல்லுல சொன்னா, ஒன்ரறை வயசு வளந்து, யூஎஸ் போறத்துக்கு மின்னாடி பாண்டிச்சேரி போய்ட்டு மெட்ராஸ் மார்க்கமா பெங்களூர் வரப்போறதா. அந்தப் பல்லவிங்கற பல்லுவை பஸ் ஏத்தாதான் நானும் ஆத்துக்காரியுமா, கோயம்பேட்ல நின்னுண்டிருக்கோம்.

பக்கத்து சீட் லேடீசா வேணுமேன்னுட்டு கண்டக்டராண்டை கொழஞ்சிண்டிருந்தேன். மொதல்ல அதுக்குப் புரியலை டிக்கெட் கைல இருக்கச்சே இவன் என்னத்துக்குக் கண்டக்ட்டரைக் கெஞ்சறான்னு நெனச்சுருக்கு. பாஷை புரியாட்டையும் விஷயம் புரிஞ்சிண்டு. அங்கிள் டோண்ட் ஒர்ரி. இட்ஸ் ஓகே.

அதுங்கிட்ட தீட்டுன்னா, போடா கெழ போல்டே. இதப் போயி ஒரு விஷயமாப் பேச வந்துட்டயேன்னு திட்டினாலும் திட்டும்.

உள்ளத்தில் உண்மையொளி உண்டாகில்
வாக்கினிலே ஒளியுண்டாம்

வாழ்ந்து சொன்ன பாரதி மேல பாரத்தப் போட்டு 

இங்க வந்து பார்த்தா

தமிழ்ப்பறவை

ஒரு விஷயம் சொல்றேன். சொறியிறேன்னு நினைச்சுக்காதீங்க...
ஒரு கருத்தைப் பின்னூட்டத்தில் உங்களுக்கு அறிவுறுத்த நினைத்து, பின் இல்லை மெயிலிலாவது அனுப்பலாம் என நினைத்துப் பின் வேண்டாம் என அழித்து விட்டேன். அதைச் சரியாகச் சுட்டிக் காட்டி விட்டீர்கள்.(பிழை பற்றி அல்ல)...

அப்பிடின்னு கமல் டயலாக் டெலிவரி மாதிரி மென்னு முழுங்கியாறது. இதைத்தான் சொல்றாரோ என்னவோ.

வாரா வாரம் - தொடர்கதைத் தீட்டுன்னு எழுதினா நீர்த்துப்போய் ஸ்பூன் ஃபீடிங்காட்டம் ம்ஹூம் நன்னாவே படலை.

சரியானது, எப்பவும் சடார்னு வந்து முன்ன நிக்கும். இட்டுக் கட்டறதுக்குதான் ஸ்நோ பான்கேக்குன்னு எல்லாத்தையும் தேடி எடுத்துண்டு வரணும்.

ஐயோபாவம் நிறம் கதைல ராம சுப்பிரமணிய ராவ் பர்த்த புடிச்சிண்டு தொங்கிண்டே இருக்கான் அவன் குல்ஃபியோட மடில வந்து விழுந்து மூக்கை நச்சிண்டாகணும் இன்னும் மாம்சமலை அடுத்த கம்ப்பார்ட்மெண்ட்ல இருக்கு, அது இன்னும் வந்து சேரவே இல்லை. அது கம்பார்ட்மெண்ட் கம்பார்ட்மெண்டா குடியும் ரயிலாட்டமுமா சேர்ந்து தள்ளாடிண்டே வந்தாகணும். வெறும் சத்தத்தோடதான் அவன் எண்ட்றி இருக்கணும் கடைசீல மூக்குத்தி அப்பபிண்ட மொகம் கத்தணும். நெஜத்துல அப்பிடி நடக்கலை.

அதனாலென்ன சொல்லவரதை சொல்றதுக்குதானே கற்பனையத் தொட்டுக்கறோம்.

கல்கிய ட்ஃபேண்ட் பண்றாப்பல எஸ்.ராவை டிஃபெண்ட் பண்ணின மதார் கடன்காரனை அடிக்கப் போறச்சேதான் என்னை அந்த கழிசடை சிம்மன்னு என் பாதி நெஜப்பேர் போட்டு கிள்ளியிருக்குன்னு தெரிஞ்சுது. அதனால கொழந்த பேர் சேஞ்சாயிடுத்து.

நீ குச்சி எடுத்தா நான் அம்பெடுப்பேன் டோய். எதுலயும் ஒரு சுவாரசியம் வாண்டாமோ.

மதார் நான் உங்க பசுவ படிச்சிட்டு, ஒங்களுக்கு நீ சின்னவோன்னு தெரிஞ்சப்பறமும் உங்களை ஒங்களைன்னா அது அப்பீஸ்ல இருக்கறாப்பலையே இருக்கு. உன்னைனு சொன்னாதான் இல்லாட்டி மதார்னு சொல்லனும். எனக்கு சரி. இல்லை நேக்கு சரியில்லைனு சொல்றேன்னா உங்களுக்கு. சிவத்தை சவம்னு நெனைக்காதவரை எந்தப்பேர்ல கூப்ட்டாலும் அது சிவம் தான் இல்லியோ.

அவொ, அதான் ஆத்துக்காரி டெஸ்க்டாப்புல ஒக்காந்துண்டு எல்லாத்தையும் படிச்சிண்டிருக்கா. ஏண்டா தடியா, திரும்ப எழுத வந்ததே ஜொள்ளுக்குதான்னானு அப்லோடானதும் வந்து நிப்பா. மைசூர்ல படிச்ச கன்னட மாத்வ தமிழ்நாட்டுக்காரி. தேனீ பெரியகுளம் பக்கத்துல மார்க்கையங்கோட்டை அக்ரஹாரத்துல பொறப்பு. மூனாங்கிளாஸ்லேர்ந்து மைசூர். கல்யானம் வரைக்கும்.

இளசுதான் ஆனா வழுக்கையும் இல்லாத எளநி. ஜோஸ்யன் சொன்ன 5 லேர்ந்து 10 வருஷத்துக்கே விட்டுட்டேன்னு சொல்லுன்னு மல்லு கட்டிண்டிருக்கா. எழுத்து பத்தி சுத்தம். ஒன்னும் தெரியாது. நம்பறதை நம்பலேன்னு சொல்லுவோம் நம்பாதை நம்பறாதா சொல்லுவோம் இதெல்லாம் எழுத்து ரகஸ்யமோல்லியோ. சொன்னாலே நெருப்பு சுட்டுடும்னு நம்பறது.

கன்னடத்துலயும் தமிழ்லயும் அனுராதா ரமணந்தான் வாசிப்பு. வலக்கைல சாதம், எடக்கைல அனுராதா ரமணன். வயத்துக்கு ஒரு வா கண்ணுக்கு ஒரு வா. மனசுக்கு இல்லே. ஒரு  தடவ கேட்டேன். இந்த ரமணி சந்திரன் எப்பிடின்னு. அய்யோ நங்க அதெல்லா சாரலாரீ. அதெல்லாம ச்க்குதுகளிகெ. காலேஜ்லி ஓதவளே அந்தர சரி. ஈகெல்லா ம்ஹூம் பாளெ கஷ்ட்டா.

அப்பதான் தெரிஞ்சிடேன். அவா லோகத்துலெ அதான் வாரா வார லோகத்துல அனுராதா ரமணன்தான் அசோகமித்திரன், சுந்தர ராமசாமி சர்வமும்னு. பாலா கூட பப்பரப்பேதான் இப்போல்லாம். காலம் மாறிடுத்து. படிச்சாலும் பொட்டியத்தூக்கிண்டு பாய்ஃப்ரெண்டோடதான், எக்மோர் வரதுகள். வயசில்லே ஆன்மீகத்துக்குத் தள்ளினது, வறண்டு போன வாய்ப்பு இல்லாட்டி வாய்ப்பு பசுமையா இருக்கறத்துக்கான ஏய்ப்பு.

ஒரே ஒரு பிரச்சனை. அவ அனுராதா ரமணனனை மட்டுமே படிசிண்டிருந்தப்போ நேக்கும் லைஃப் பீஸ்ஃபுல்லா இருந்துது. ஏண்டா திரும்ப எழுத வந்தோம்னு தோண ஆரம்பிச்சுடுத்து.

டெஸ்க்டாப்புல என்னைப் படிச்சுட்டு, நீ பண்றது மட்டும், இது சரியா அது சரியான்னு எதிர்கேள்ள்வி கேக்க ஆரம்பிச்சுட்டா.

எழுத்தோட பர்பஸ்ஸே அதானன்னு சொல்றேளா. ஆஹா கேக்க நன்னாதான் இருக்கு.

எழுத்து ஜெயிச்சுது எழுத்தாளன் செத்தான்.