Thursday, September 9, 2010

எழுத்துக் கலை - சிறு சுயவிளக்கம்

நான் எப்போதோ இறக்கிவைத்தாயிற்று. அதிர்வு அலையோடிக் கொண்டு இருக்கிறது. இன்றைய மூர்க்க எதிர்ப்பு, ஒருவேளை இருக்கவும் கூடுமோ என்ற சந்தேகமாய் மாறும், தான் அறியாது உள் மனம் உரசிப் பார்க்கும், உண்மை புலப்படக்கூடும், தெளிவு பிறக்கும்.

விமர்சனம் என்பது ஒரு எழுத்தைப் பற்றி எனினும், ஒருவனை முன்னிருத்தி உலகுக்குக் கூறியதாக ஏன் ஒருவர்கூட புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறீர்கள்.

சாரம் வற்றினால் எனக்கும் இது நேரலாம். அல்லது என்னை கூர் தீற்றிக் கொள்ளும் சுய பரிசீலணையில் என் எழுத்து இதுவா? நான் பயனம் தொடங்கியது எதை நோக்கி? கடைசியில் இங்கு வந்து சேர்வதற்கா இவ்வளவு பிரயாசைகள்? இதுவல்ல என் உயரம். நான் குறுக்காக வளரத் தலைப்பட்டு விட்டேன். முதலில் என்னை சரி செய்து கொள்ள வேண்டும்.  அப்போது நான் என்றில்லை எவனும் செய்ய வேண்டிய, சுய மரியாதைக்கு உரிய விஷயம், ஒன்றுதான் எழுதுவதை நிறுத்தி - மாஜி எழுத்தாளனாகி விடுவது.

சுந்தர ராமசாமி இடையில் ஏழு வருடங்கள் எழுதாமல் இருந்தார்.

வராவிட்டாலும் முக்கி முக்கி வடை சுட்டுக்கொண்டே இருக்க இலக்கியம் என்ன திறந்தவெளி கக்கூசா?

மதாருக்கு எழுதிக் காட்ட ஆரம்பித்து என் லயத்தை கண்டடைய நான் பயிற்சி செய்து கொண்டு இருக்கிறேன். எது நிஜம் எது கற்பனை. எது எங்கே தொடங்குகிறது, எதனுடன் எது எங்கே இழைகிறது. இரண்டின் சாத்தியங்கள் எவ்விதம் போகக்கூடும். மற்றபடி மேலே குறிப்பிட்ட இங்கிலீஷ் பேரை வைத்து என்னை வைகிறீர்கள் என்றே எடுத்துக் கொள்கிறேன். அதனாலேயெ எது என்னை எழுதத்தூண்டியது என்று பின்னூட்டதை குறிப்பிடும் தகுதியை அது இழக்கிறது. தயவு செய்து அந்த வார்த்தையை எடுத்து விடுங்கள். முடிந்தால் அந்தப் பின்னுட்டத்தையேக் கூட. மட்டறுப்பதில்லை என்று முடிவெடுத்திருப்பதால் தயவு செய்து அதை நீங்களே எடுத்து விடுங்கள். ஓசியில் கிடக்கிறது என்பதற்காக உளரல்துண்டுகளை பொன்னாடையாகப் போட்டுக்கொள்பவனில்லை நான். அது ஆபாசம். 

எவனெவனைப் பத்தியோ எனக்கு ஆயிரம் வயித்தெரிச்சல் இருக்கும். சில நியாயமானவை. சில அநியாயமானவை. பல  எனது வெற்றுக் கற்பனையாகக் கூட இருக்கலாம். இவை எல்லாம் ஒன்றோடு ஒன்று முட்டி மோதி எனது சுய அனுபவங்களோடு கற்பித வாழ்வோடு கலவி கொண்டு, என்னவாக வெளிப்படுகிறது என்பதுதான் எனது எச்சம். எதவது ஒரு இணைய ப்ரும்மா  ”எச்சம்” என்பதைக் காக்காப் பீ என்று புரிந்து கொண்டு இங்கு வந்து என் உசுரை எடுக்கும். வள்ளுவன் என்ன பாவம் செய்தான் - அதற்காகவே இந்த விளக்கம்.

நான் சிறைத் தண்டனைக்கு உரியவன் - ஏனெனில் உங்களின் தெய்வங்களை தூஷிக்கிறேன். என்னை உதாசீனப்படுத்துங்கள். (வரலாறு என்னை விடுதலை செய்யும்).

ஆனால் சொல்லிப் பல நூறு ஆண்டுகள் ஆன விஷயம்
தக்கார் தகவிலார் என்பது அவரவர்தம்.....