Monday, September 20, 2010

சொந்தக் காசில் twitter சூனியம்

ஜனாதிபதி கையால் சிறந்த குமாஸ்தா என்று விருது வாங்க நினைத்த குமாஸ்தா எழுத்தாளர் ஒரே மாதத்தில் பதிவர் உலகில் ஃபேமஸ் ஆவதற்கு கரணம் போடுகிறார்.

ஓ இணையத்தில் திருவோடு ஏந்த இவ்வளவு வருஷம் செர்வீஸ்னு ஏதும் ரூல் இருக்கோ

போஸ்டல் டிபார்ட்மெண்டு ஸ்டெனோ வேலைய விட்டுட்டு வந்துதா? தொரத்தினாங்களா? திருவோடே  சொல்லனுமு  இல்லே. சிஷ்யகோடிகள்  கூட  கேட்டு சொல்லலாம்

எழுத்தாளர் என்றாலே இப்படித்தானோ :)

இருக்கவே  இருக்கு  தகவல்  அறியும்  சட்டம். மவுண்ட்  ரொடு  GPO  ல கேட்டாக்கூட

பென்ஷன் வருதா இல்லையான்னு தெரிஞ்சுடுமே! திர்வோட்ஸ்!

சைக்கிள்ல போயி ஜட்டி ப்ரா வித்த கவிஞன் என்னிக்காவது திருவோடு ஏந்தினானா? - சுயகெளரவம்டா!

அப்பளம் வித்த எழுத்தாளன் என்னிக்காவது திருவோடு ஏந்தினானா? - சுயகெளரவம்டா!

பத்திரிகைல பர்மெனண்ட் வேலை போன விமர்சகன் என்னிக்காவது திருவோடு ஏந்தினானா? - சுயகெளரவம்டா!

சும்மா நொண்டினா சூத்தாம்பட்டல அடிவிழும் - சுயகெளரவம்

சோம்நாத்தில் பாபா ஆம்தேவின் தொழுநோயாளிகள் முகாம் பேனர் - we don't want your charity - give us opportunity

 :)))))))))))))))))))))) அதி உன்னத வார்த்தை எழுத்தாளரே

’மாஜி எழுத்தாளன்’ பிரமோஷன் கெடைச்சு இப்ப ’குமாஸ்தா எழுத்தாளன்’ ஆயாச்சா. ரொம்பொ தேங்ஸ்ஸு. பே விக்ஸேஷன் எப்போ சார்.

காலடியில் ஆதிசங்கரரின் ICICI பாங்க் அக்கவுண்ட் நெம்பர் என்ன? ஒரே திர்வோட்ஸ்?

நாலு மாசம் வாழ்ந்துருக்கேன் பாபா ஆம்தேவுடன் கன்யாகுமரி டு காஷ்மீர் தேசிய ஒருமைப்பாட்டு சைக்கிள் பயணத்தில்

பொச்சு காட்டிட்டு உச்சா போவோர் சங்கம் :)))))))

சுயகெளரவம் - அடுத்தடுத்த  கட்டுரை  மேட்டரெல்லாம்  உம்மகிட்ட பீஸ்மீலா ரிலீஸ் ஆகிக்கொண்டிருக்கிறது ஓய் உம்மிடம்

நிஜமா சொல்லுங்க தேசிய ஒருமைப்பாடுன்னு சொல்லிட்டு நம்மளோட
சாகசத்தை தேடுற மனநிலையை திருப்திபடுத்திக்கிறோம் தானே

தன்யனானேன் எழுத்தாளரே :)

ஒரு நிமிடம் எல்லாம் விட்டு விட்டு செத்துப்போய் விடத்தோணுகிற மனநிலைக்குப் பெயர் என்ன

பாபா  அம்தே  நம்ம  ஊர்  சாய்  பாபா  இல்லே  சார்.  தொழுநோய் தொற்றுநோய் இல்லைன்னு நிரூபிக்க வேண்டி...

ஆராய்ச்சியாளர்கள் எதிரில் தொழுநோய் சீழெடுத்து தனக்குத்தானே ஊசி போட்டுக் கொண்டவர்

தூங்கிக்  கிடப்பதால்  போர்வாள்  துருபிடிப்பதில்லை. வாங்கி  வாங்கி திருவோடு வழவழப்பாவதைப் போல!

சைக்கிள் பயணம் போய் இருபத்தியைந்தாவது வருடம் இது! விழாவிற்கு
நிர்பந்த அழைப்பு - நிராகரிக்கப்பட்டது!

வெள்ளிவிழா போயிருக்கலாம் எழுத்தாளரே :(

சரித்திரம்  போற்றப்பட  வேண்டியது  தனிமனித  நினைவில்! திரும்ப வாழ்விக்க நினைத்தால் திகட்டிவிடும்!

தனிமனித நினைவில் சரித்தரமாய் எப்படி தெரியும் வெறும் நினைவுகளாய்
சிதறிப்போகும் இல்லையா

சாகஸம்? 117 சைக்கிள்களுக்கு முன்னோடி சைக்கிளை ஓட்டியவனுக்கு ஒரு கால் கிடயாது. அது சாகஸம்! நானல்ல நாங்களல்ல

நிறையபேர் வாழ்வைப் புரட்டிப் போட்டது. நான் சொல்ல வந்தது தனி
மனிதர்களின் சரித்திரம்

திருவோடு ஏந்துவதில் என்ன கௌரவக் குறைவு சார்? கிட்டத்தட்ட
எல்லா வேலைகளுமே திருவோடு ஏந்துவது போல்தாமே?

விட்டால் நீர் ட்விட்டரிலேயே என் கதைகளையும் உதிர்த்துவிடிவீர் போலிருக்கே!

திருவோடு ஏந்துவதே ஒரு வேலையாகிப் போய்விடும்!

இதுவரை டூயலாக இருந்தது இப்போ இதற்குப் பெயர் த்ரீயலா?

பலருக்கு (அலுவலக) வேலைகளே நேரம் தின்னும்போது அதிலிருந்து
வெளியேற சினிமாவோ திருவோடோ ஏதோ ஒன்று. பெருசா என்ன போச்சு?

 :) :) இல்லை சார். அவரவர்க்கு அவரவர் வழி, அவரவர் பாணி.
எழுதுவதுதானே முக்கியம்.

பத்திருபது ட்விட்டுகளாகப் பார்த்துக் கொண்டு இருந்தும் இதைக்
கேட்கிறீர் என்றால் ஒன்று வாய்பிடுங்குகிறீர் என்ரு அர்த்தm

இல்லை சார். சரி... பிறகு விரிவாகப் பேசுவோம்.

உயர்ந்த உணவு எதையும் தருமு ஒப்பமாட்டார். இன்னக்கி நீ வாங்கிக் குடுப்பீர் நாளைக்கி? என்பார். ஒரு நாளும் கேட்கமாட்டார். நாமாக செய்ய வேண்டும்

சொந்தக் காரில் பெட்ரோல் போடமுடியும். ராயல்ட்டி வாங்க முடியும். அப்புறம் என்ன பேஷன் திருவோடு.
(ஒரு காரோட்டிக்கு சம்பளம் 7,000/- செலவாகும் அதுவும் திருவொட்ஸில்தானா - twitterல் வராதது இப்போது செருகியது, முழுமை வேண்டி)

திருவோடு காட்டி பீ எழுத்தைப் பேரிலக்கியமாக்கும் கேப்மாரித்தனம்

சார். தர்மு கதை தெரியும். ஆனால் அதையே அளவுகோலாக்க
வேண்டுமா?

இந்தச் சாயலில் வேறொரு (வளர்மதியினுடையதுதான்) கட்டுரையையும்
படித்திருக்கிறேன் : http://vinaiyaanathogai.wordpress.com/ சினிமா-சிந்தனை-காதல்

எல்லாம் துறந்தவனை ஊர் ஏற்பதுதான் திருவோடு கான்ஸப்ட். இது
என்ன என் வாய் பிடுங்குவது போல் இருக்கே தாங்ஸ்.

பெரிதாக ராயல்டி வந்து கிழித்த்டுவிட்டது தமிழ் எழுத்தாளனுக்கு?

திருவோடு என்பது நீங்கள் சொன்னது சார். அதனாலேயே நான் அதைத் தொடர்ந்தேன். பிச்சை  எடுப்பதொன்றும்  கேவலமாகத்  தோன்றவில்லை எனக்கு.

இந்த உரையாடல் அப்படியே எங்கே வேண்டுமானாலும் மீள்வெளியீடு செய்வதில் ஆட்சேபம் இல்லையெ வேண்டுமென்றால் உங்கள் இருவரின் பெயர்கள் தவிர்க்கப்படும்

ஆரம்பத்திலிருந்து  படித்தீர்  தானே. திருவோடு  நான்  சொல்லவில்லை. திருவோடு நியாயப்படுத்திற்று

செய்ங்க சார். இதிலென்ன இருக்கிறது. பொதுத்தன்மை வர பெயர்கள் நீக்குவது நல்லதுதான்.எனக்கும் முதலில் சற்று தெளிவாக விளங்கவில்லை. சரி, XXX
தாக்குவதற்கான ஒரு வழி என்று நினைத்துக்கொண்டேன்

டுவீட்டரில்  எழுத்தாளர்களின்  கதை  உருவப்படுகிறது. போலி எழுத்தாளர்களின் கதை முடிக்கப்படுகிறது.

ஒருவனை ஒருவன் twitterல் தாக்குகிறான். பத்துமணி நேரம் சென்றபிறகே, தான்  தாக்கப்பட்டிருப்பது  மற்றவனுக்குத்  தெரிய  வருகிறது. ரீ ட்வீட் செய்து எதிர் தாக்குதல் தொடங்குகிறது. ஒருவர் இடை புகுகிறார்.  இருவருக்குள் உரையாடல் வளர்கிறது. ஒரு சமயத்தில் ஒருவர் அமைதிபட மற்றொருவர் உள்நுழைகிறார், உரையாடல் தொடர்கிறது. அது முடிபடும் தருவாயில், தொடங்கியவனின் தொடர்வோரில் ஒரு எண் கூடியிருப்பது புலப்படுகிறது. அவரைத் தேடி ஃபாலோ செய்ய புதியவரின் கடைசீ இரண்டு குக்கூவில் முடிவடைகிறது கூவலாட்டம்.

இதை மட்டும் ஒருவன் கற்பனையாக எழுத முடிந்திருந்தால்.... அதுதான் கலை. வெரும் உரையாடல்களில் மட்டுமே வாழ்வு, மதிப்பீடுகள், சார்புகள்  என  நிகழ்  மனிதர்கள்  பாத்திரங்களாக உயிர்பெருகிறார்கள்.

இது முழுவதும் என் ஒருவனால் மட்டுமே படைக்கப்பட்டிருந்தால் எவ்வளவு இலக்கிய நிறைவைக் கொடுத்திருக்கும். கூடுவிட்டு கூடுபாய்தல் எழுத்தில் சாத்தியப்படும்போதுதான் அது பெரும் இலக்கியமாக உயர எழுகிறது. 

வெகுஜன  பத்திரிகைக்  கதைகளின்  மற்றும் எளிய  பிரச்சாரக் கதைகளின்  உரையாடல்கள் பெரும்பாலும் முன்முடிவு பல்லிளிக்க ஒற்றைப் பரிமாணத்தில், மேலோட்டமாய்  விறுவிறுப்பாய்  நகர்ந்து  ஒரு கருத்தை  போதித்து  வெற்றிகரமாய் சுழிக்கப்பெறும். மனதில் தங்கி அலை எழுப்பாமல்,  எழுதிய  / படித்த  வேகத்திலேயே  விடைபெற்றுக்கொள்ளும் அற்ப ஆயுசுகள்.

புனைவு என்ற பெயரில் புண்ணாக்கு எழுதிக் கொண்டிருக்கும் புத்திசாலிகளே, உங்களுக்கு ஒரு வார்த்தை. படிக்கக் கற்றுக் கொண்டது எழுதக் கற்றுக்கொண்டதற்கான சான்றிதழ் அல்ல.

யாரை வேண்டுமானாலும் தாக்குங்கள், அது எழுதத் தூண்டிய வன்மமாக மட்டுமே  இருக்கலாமேயன்றி  முடிவாக  இருக்கலாகாது.  இவ்வளவு கொடும் தாக்குதலுக்கு நீங்கள் தயாரான காரணமென்ன, இருவருக்குள் என்ன  நடந்தது, அது  உங்களுக்கு  எந்தவிதமான  வலியைக்  கொடுத்தது, அதற்கும் முந்தைய மூலம் எது? அந்தப் புள்ளிக்கு எதிராளியின் பின்புலம் என்ன? யோசித்துவிட்டு  எழுதத்  தொடங்குங்கள், எழுதத்தொடங்கிவிட்டு யோசியுங்கள், எழுதும் போது யோசியுங்கள். இப்படிச் செய்தால், ஒன்று எழுத மாட்டீர்கள் அல்லது எவரை வைத்து எழுதப் படுகிறதோ அவரையும் யோசிக்க  வைத்துவிடும் உங்கள்  எழுத்து.  சண்டையின்  காலம்  கடந்த பின்னும் இந்தப் பின்னணியே தெரியாத புதியவனையும் சிந்திக்கவைக்கும். அதன் உள்பலம் அதன் ஆயுளை நீட்டித்துக்கொண்டே இருக்கும்.

இவ்வளவும் எழுத்தாளன் ஆவதற்கு முந்தைய படியில் இருப்பவனுக்கு சொல்லப்பட்டது, அப்பாவியாக இதை எழுத்தாளனுக்குப் பொறுத்தி விடை கேட்காதீர்கள். எழுத்து தேறும் அளவிற்கு எழுத்தாளன் தேறவே மாட்டான். அவன் பூட்ட கேஸ். தானே நூறு பலூன்களை ஊதி தலைக்குமேல் பிடித்துக் கொண்டு  திருதிருவென  விழித்தபடி, அக்கம்பக்கம்  பார்க்காமல் பலூன்களைத்  துரத்தியபடி ஓடிக்கொண்டிருப்பவன். அவன் கொஞ்சமேனும் உருப்படியாய் இருக்கும் தருணம் எழுதும் போது மட்டுமே. அருகில் போய் அதையும் கெடுத்துவிடாதீர்கள்.

வெறும் விஷயமாக மட்டுமே இது விவாதிக்கப் படவேண்டும் என்கிற விழைவில்  அனைத்துப்  பெயர்களும்  நீக்கப்  பட்டிருக்கின்றன.  கட்சி கட்டுவதும் கண்டும்காணாமல் கடப்பதும்  அவரவர் விழைவு.

என் தொப்பிக்குக் கிடைத்தது  இன்னுமொரு இறகு.