Monday, October 25, 2010

எழுத்துக் கலை - மர்மம்


தயவுசெய்து மேலேயுள்ள கதையைப் படிக்காமல் கீழேயுள்ளதைப் படிக்காதீர்கள்.


கதாசிரியர் சார்பிலும் என் சார்பிலும், இது ஒரு வேண்டுகோள். மேலும் இது இவர் எழுத்தைப் பற்றிய ஒட்டுமொத்த அபிப்ராயம் அல்ல, இந்தக் கதை பற்றி மட்டுமே. இதுவே நான் படிக்கும் இவரது முதல் கதை.

இது ஒரு மர்மக்கதை அன்று. கடைசி வரியில் மர்மத்தை வைத்திருக்கும் கதை.

Friday, October 22, 2010

மனவெளியில் அலையடிப்பு - விசு என்கிற விஸ்வநாதன்

பங்குச்சந்தை பரிசளிக்கும் வான்-தரை சீஸாப்பலகை வாழ்வை உலர்ந்த முறுவலோடு ஏற்று வாழ்ந்து கொண்டிருக்கும் உலக சினிமா தகவல் களஞ்சியம். பற்பல ஆண்டுகளாக சர்வதேச திரைப்பட விழாவைத் தவறவிடாமல் தரிசிக்கும் சபரிமலை குருசாமி. வாழ்வின் கூறுகளை சினிமாவின் தீற்றல்களில் மீட்டியபடி வஞ்சனை இல்லாமல் சிரிப்பவர். இதே மெட்ராஸில் நீங்கள் என்றேனும் சந்திக்கும் நபர் அல்லது சிற்றுண்டி விடுதியில் உங்கள் பக்கத்து மேசையில் அமர்ந்து ஹஹ்ஹா என ஹைஃபை போட்டபடி எதிரிலிருப்பவரிடம் கீழ்க்கண்டவற்றில் ஏதேனும் ஒன்றை அல்லது சிலவற்றைப் பேசுவாரேயாகில் அது விஸ்வனாதனாக இருக்கவே வாய்ப்புகள் அதிகம்.

Wednesday, October 20, 2010

அர ச்சீற்றம்

சமூகம் கெட்டுப் போய்விட்டதாடா?
சரி
சோடாப் புட்டிகள் உடைக்கலாம் வாடா

***

பூ உதிர்ந்த முல்லைக் காம்பாய்
மரம் பட்ட
சாலைக் கென்னை
அனுப்பு முன்
பேரைக் கொஞ்சம்
சோதித்துப் பாருங்கள் சார்

***

யோசனை

உனக்கென்ன தோன்றுது?
கருத்துக்கு மாறாக போலீசார்கள்
கட்டிவைத்து கையெழுத்து வாங்கலாமா

எனக்கென்ன தோன்றுது?
வருத்தத்துக்காளானான் புலவன் என்றால்
யாப்பிலொரு கவி பாடச் சொன்னால்
போச்சு

கம்பி இழுப்புக் கலை

குழந்தைகளுக்கு எதை அறிமுகப்படுத்துவது, குழந்தைகள் படிக்கவேண்டியவை எவை என்று பெரியவர்களே தெரிந்து வைத்திருக்கவில்லை. தமிழ் சிறுகதையின் நு¡ற்றாண்டுத் தொடர்ச்சியில் குழந்தைகளின் மனவுலகைச்சித்திரிக்கும் பத்திருபது நல்ல கதைகள் இருக்கின்றன. அவைகளைப் பெரியவர்கள் முதலில் படிக்கவேண்டியது அவசியம். . கு.அழகர்சாமியின் அன்பளிப்பு, கிருஷ்ணன்நம்பியின் கணக்கு , விமலாதித்த மாமல்லனின் கறிவேப்பிலை, கி.ராஜநாராயணனின் கதவு, புதுமைப்பித்தனின் மகாமசானம், பி. எஸ் ராமையாவின் நட்சத்திர குழந்தைகள், வண்ணதாசனின் நிலை, கோணங்கியின் கறுப்பு ரயில், போன்றவை குழந்தைகளின் உலகை மிகுந்த கவனத்தோடு பதிவு செய்த கதைகள். http://www.tamiloviam.com/atcharam/page.asp?ID=24&fldrID=1

இந்தப் பட்டியல்லில் இருக்கும் கதைகளில் குழந்தைகளை மையமாகக் கொண்டவை எத்தனை. இவற்றை குழந்தை அல்லது குழந்தைகளுக்கான கதைகள் என வகைப்படுத்த முடியுமா? பெரும்பாலானவற்றில் குழந்தைகளின் பங்கு மிகக் குறைவு அல்லவா?.

Monday, October 18, 2010

கம்யூனிஸ்ட்டு எந்திரன்கள்

”யப்பா சர்கோசி என்ன எழவு வேணுமோ கொடுத்து தொலைப்பா டெய்லி கொய்யோன் கொய்யொன்னு ஸ்ட்ரைக் பன்றானுங்க”
இதுதான் என்னால் ரி-ட்விட்டப் பட்ட ட்விட்.
ஒருவனுக்கு பிடித்த ட்விட்டை ரி-ட்விட் செய்ய முன் அனுமதி எந்த மரத்தடியில் வாங்க வேண்டும்?
சர்காஸமாக ஒருவர் ட்விட் எழுதினால் ரி-ட்விட்டக் கூடாது என்பது எந்த மண்டபத்து சட்டம்? அதை  மட்டுமே  ரி-டிவிட்டுவது, உள்நோக்கம் கொண்டதா.
ட்விட்டர் பற்றிய தவறான புரிதலை ரி-ட்விட் கொடுத்துவிடும் எனில் அதைப்பற்றிய முதல் கவலை யாருக்கு இருக்க வேண்டும்? அந்த கவலை இருக்கிற பட்சத்தில், ட்விட்டரே அதை இயற்றாமல் இருந்திருப்பாரே.
ட்விட்டில் சர்கோசி என்றுதான் இருந்தது சர்காஸம் என்றில்லை. ட்விட்டர் தனது முன்னனுமதி இன்றி ரி-ட்விட்டக் கூடாது என்று முன் நிபந்தனை விதித்திருந்து, அதை மதியாமல் ரி-ட்விட்டினால் தவறு.
இதுகூட நம் போன்ற மாக்களுக்குதான் பொருந்தும்.

Thursday, October 14, 2010

இழுத்தா கோடு வளைச்சா எழுத்து [சிறுகதை]

செம்மண் தரையில் கட்டைவிரல் அழுந்தி இழுக்கப்பட்டது கோடு. பக்கத்துக் கால் அனுசரணையாக நொண்டியடித்து பின் நகர்ந்து கொண்டிருந்தது. அந்தக் கோடியில் இன்னும் இரண்டு கால்கள் அதே காரியத்தை செய்யத் தொடங்கின. இரண்டு ஜோடிக் கால்களும் ஒன்றோடொன்று பேசிக்கொள்ளாமலே ஒத்திசைவோடு வந்து ஓரிடத்தில் சந்திக்க, பெரிய செவ்வகம் உருவாகி இருந்தது.

Wednesday, October 13, 2010

நீங்க மறுக்கும் நினைவு - எலிப்பத்தாயம் (எலிப்பொறி)

திண்ணையின் ஈஸிச்சேரில் சாவகாஸ பத்திரிகை விரிப்பு.
எதிரில் திறந்த வெளியில் திண்ணையை ஒட்டி, சாவகாஸமாய் வெயிலில் காயும் பொருளை மேயும் மாடு.
பேப்பர் தாழ்த்தி கண்ணாடிக்கு மேல் கீழ்க்கண்ணால் பார்த்துவிட்டு தாமஸமாய் ஒரு விளி
சாந்தம்மே...

Tuesday, October 12, 2010

எழுத்துக் கலை - ஏமாற்றும் எளிமை


மிகச்சில கோடுகளில் பாத்திரங்களின் மனங்களை உயிர்ப்பிக்கும் கலைஞன் வண்ணநிலவன். பொஸ்தகங்களில் இருந்தல்ல வாழ்க்கையில் இருந்து இலக்கியம் படைத்தவன். வாழ்க்கை எவ்வளவு அழகு அல்லது அவலம் என்பதை பாதாளக்கரண்டியால் சல்லிசாக தேடிக்கொடுத்தவன். தொட்டியில் வாளியைத் துழாவும் மொக்கை இலக்கியங்களுக்கும் அசல் இலக்கியத்திற்கும் வித்தியாசம் துல்லியப்பட வாசிக்கவும் வண்ணநிலவனின் எஸ்தர் மிருகம் சாரதா....
பட்டுக்கோட்டையின் கண்ணதாசனின் எளிய வார்த்தை பாடல் இலக்கியம் போல வண்ணநிலவன் சாதாரன வார்த்தைகளில் அசாதரண மனுஷ நிலைகளை  உக்கிர  ஓவியங்களாக்கியவர். எழுத்திலும்  படாடோபமற்ற எளிய மனிதர்.

Sunday, October 10, 2010

கசாப்புக்கடை

பாவண்ணனின் எனக்குப் பிடித்த கதைகள் சீரிஸ் - சிலிகான் ஷெல்ஃப்
எனக்குப் பிடித்த கதைகள் - 9 -சுந்தர ராமசாமியின் 'பள்ளம் ' (மோகமும் மூர்க்கமும்) - பாவண்ணன்

தயவுசெஞ்சு  யாராச்சும்  சொல்லுங்க. கதை  அனுபவ  அறிமுகம்  நல்லது. அதை செய்வதற்கு நல்லெண்ணம் மட்டும் போதாது.

10 பாரா கட்டுரையில் 8 வது பாராவின் இறுதியில்

<சிறிது நேரத்துக்குப் பிறகுதான் சுந்தர ராமசாமியின் 'பள்ளம் ' கதை நினைவுக்கு வந்தது. தமிழ் மக்களின் திரைப்பட மோகத்தை இந்த அளவு வலிமையாகச் சொன்ன படைப்பு வேறில்லை.>

அப்பிடின்னு சொல்ல ஆரம்பிச்சு ‘பள்ளம்’ கதையவே எட்டு வாக்கியத்துல சொல்லி முடிச்சுட்டார்.

Tuesday, October 5, 2010

கல்கிமேல புதுமைப்பித்தனுக்கு காண்டு


இது  முழுக்கவும்  என்  பக்க  எழுத்து  மட்டுமே. முழு  விவாதம்  மேற்கண்ட பஸ்ஸில் காண்ககாலம் யாரைத் தூக்கித் தலையில் வைத்திருக்கிறது? கல்கியையா?

ஜனரஞ்சக எழுத்து, என்றும் பரவலாகத்தான் பளபளப்பாகத்தான் இருக்கும். புதுமைப்பித்தனின்  வம்சாவளி  நூற்றாண்டுகளைத் தாண்டும். கல்கிக்கு லீகல்  ஹேர்  சர்ட்டிஃபிகேட்டோடு  ஓவர். கல்கியைப்  பார்த்து புதுமைப்பித்தனுக்கு வயிற்றெரிச்சலா?

பாதம் நனைக்கத் துப்பற்ற நீர்வரத்தைப் பார்த்து அகண்ட காவிரிக்கு வயிற்றெரிச்சல்?!

பாரதியை மகாகவி அல்ல எனப் பழித்துவிட்டு, விமர்சன அடிகிடைத்ததும் அவரைப் பிரபலமாக்க வேண்டுமென்கிற நோக்கத்தில், அவர் கவிதைகள் பரவலாகப் பேசப்படவேண்டும் என்பதற்காகவே அப்படி சொன்னேன் என சமாளித்த, விகடன்  குமுதம்  கல்கி  என்கிற  கலை  இலக்கியதிற்கு சம்பந்தமற்ற குப்பைகளின் முன்னோடி வியாரிதான் கல்கி.

வயிற்றில் கனன்ற பசியுடன் மனதின் அலையடிப்பை அலட்சியமாகக் கலையாக்கியவன் புதுமைப்பித்தன்.

மிஸ்டர்  பேசுமுன்  பல்துலக்கிவிட்டுப்  பேசுங்கள், விஷயம்  இல்லை எனினும், குறைந்தது வீச்சமாவது இருக்காது

டூடண்ஸ்

எல்லா எழுத்தாளர்கள் மேலும் கல்லும் பூவும் வீசினால் இலக்கிய விமர்சனம். இறந்த கைகளால் தனக்கு அட்சதை போட்டுக்கொள்வதற்குப் பெயர் என்ன?
சுஜாதா சுந்தர ராமசாமி என யாராகவும் இருக்கலாம். தனக்கு வேண்டியது அட்சதை. அவர்களின் கைகளைத் தன் கைகளில் எடுத்துத் தன் தலையில் அட்சதை