Tuesday, October 5, 2010

டூடண்ஸ்

எல்லா எழுத்தாளர்கள் மேலும் கல்லும் பூவும் வீசினால் இலக்கிய விமர்சனம். இறந்த கைகளால் தனக்கு அட்சதை போட்டுக்கொள்வதற்குப் பெயர் என்ன?
சுஜாதா சுந்தர ராமசாமி என யாராகவும் இருக்கலாம். தனக்கு வேண்டியது அட்சதை. அவர்களின் கைகளைத் தன் கைகளில் எடுத்துத் தன் தலையில் அட்சதை

எழுத்தைக் காசாக்க பேயாய் அலைகிறான் எழுத்தாளன். பிரித்து மேய்கின்றன பதிப்பகங்கள். இதில் எந்திரன் சர்வதேச வியாபாரம் அவ்வளவே
எதை எழுதுவது என்பது எழுத்தாளனின் தேர்வாக இருந்தது ஒரு காலம். தேர்வே அற்று எழுதுவதெல்லாம் பதிக்கப்படுவது இந்தக் காலம்
குற்றிலக்கியம் குடிசைத்தொழிலாகவே இருந்திருக்கலாம். எழுதுவதற்குப் பின்னால் இருந்த உழைப்பு இன்று எழுதுவது என்கிற உழைப்பாய் கஷீணப்பட்டுவிட்டது
எது எழுத்தாகத்தேறும்? என்று மனதில் உருட்டிக்கொண்டிருந்தது போய் எதையெல்லாம் எழுதித் தேத்தலாம் என உருட்டத்தொடங்கிவிட்டான். எழுதுவதெல்லாம் இலக்கியம்
புணரும்முன் எத்தனைக் குட்டி என பன்றி முன்முடிவு எடுப்பதில்லை. புணர்ச்சியின் விழைவு போகமா? பிறப்புகளின் எண்ணிக்கையா?
Delta Nathan(அது சரி) - நிறைய பேர் லைக் பண்ணிருக்காங்க. எனக்கென்னவோ கொஞ்சம் ஒப்புதல் இல்லை. இறந்தவங்க இறந்த பின்னாடி அட்சதை போட்டுக்கிட்டா தப்பு, ஆனா இப்படி போட்ருக்காங்கன்னு சொல்றதில என்ன தப்புன்னு புரியலை. ஒரு வேளை அப்படி போடவே இல்லை, ஆனா அப்படி சொல்லிக்கிறார்னா அது தப்பு

எல்லாமே பட்டவர்த்தனமா சொன்னாதான் நமக்குப் புரியுங்கற அளவுக்குப் போயிட்டோம். ம். அதனாலதான் கூச்சத்தைவிட்ட சுயதம்பட்ட நாராசம். நான் நான் நான்.
உங்களமாதிரி உண்டா நொங்களமாதிரி உண்டான்னு ஒரு கோஷ்டி பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பாடும். வெக்கமே இல்லாம வெங்கடேசப் பெருமாள் தட்டியெழுதி தானே புடிச்சிப்பார். பல்லக்கு தூக்கற பெருமைல அடிப்பொடிகள் இலக்கியக்கடித லட்சார்ச்சனை.
எனக்குத் தெரிஞ்சி இரங்கற்பாவுல இயற்றினவன் தான் இறந்தவனைவிட, இத்தினி இஞ்ச் ஒசரம்னு சொல்லிகிட்ட ஒரெ ஊரு இதுதான்.
கொட்டங்குச்சியே இந்தக்கூத்து ஆடும்போது, கோடிகள்ல முதலீடு பண்ணின சினிமாவைக் கொற சொல்லி கலை இலக்கிய சினிமா கட்டுரை எழுதறது கோமாளித்தனமா படல. படலை, ஏன்னா நாமதான் வெக்கத்தை விட்டு வெகு நாள் ஆச்சே. ஊருக்கெல்லாம் விமர்சனம் ஒரு அடி ஸ்கேல். நமக்கு ஸ்கேலே கிடையாது.
கதை எழுதறத்துக்கு முன்னாடியே இத்தனை பக்கம்னு பப்ளிசிட்டி பண்ணிட்டு எழுத, இது என்ன இலக்கியமா இல்லே ஷூ தயாரிக்கிற ஃபேக்ட்டரியா?
இந்த லட்சனத்துல நாம்ள்லாம் ஒன்னுமே இல்லை ரமணி சந்திரன் விற்பனைக்கு முன்னாடின்னு ஒரு அங்கலாய்ப்பு வேற. இப்பிடியே தண்ணிகலந்துகிட்டேப் போனா கூடிய சீக்கிறத்துல, உள்ளடக்கத்துலையும் ரமணி சந்திரன் கிட்டப் பொயிடலாம்.
எவனாச்சியும் எழுத்தாளன், தன் ஃப்ரெண்டப் பத்தி சொன்னான்னா நைட்டோட நைட்டா நாவலாக்கி மூனு மாசத்துல புக்கே போட்டுட்றான் இன்னோருத்தன்.
இன்னோன்னு, டவுசரைத் திருப்பிப் போட்டுகிட்டு பின்நவீனத்துவம்னு பெனாத்தும். முன்னோடியோட பொஸ்தகத்துமேல ஒன்னுக்கடிப்பென்னு சொல்லும்.
பெரிய பிஸ்த்துதானே, யப்பா என்னைப்பத்தி எதுவும் தப்பா எழுதிடாதேன்னு ஏன் கேன்வாஸ் பண்னனும். இடது கை சுண்டு விரலால எத்தையாவுது சுட்டி காட்டினா 5000 ஹிட்ஸ் அங்க போவுதே. அப்பறம் ஏம்பா இப்பூடி ஒரு உள்ஜொரம். உள்ளீடற்றதனால வரும் ஜுரம்.
கிரேட் டிக்டேட்டர் படத்துல, குஜாலா சூத்தாம்பட்டைல சுத்திவுட்ட ஒலகம், ஏறிக் குந்தினதும் படார்னு வெடிச்சிடும். அடுத்த செகெண்ட் திரைச்சீலைல ஏறி பயத்துல, விட்டத்தைத் தொட்டுகிட்டு இருப்பான் ஹிட்லர்.
அந்தப் படம் வரத்துக்கு முன்னாடி ஹிட்லர், சாப்ளினோட பரம ரசிகன். படத்தப் பாத்துக் கடுப்பாயி சாப்ளினைப் போட்டுத்தள்ள ஆள் அனுப்பிச்சான்.
பேசாத படமெடுத்த சாப்ளினை, தொழில்நுட்பம் வளர்ந்து இப்பதான், சினிமால பேச்சு வந்தாச்சே இன்னும் ஏன் பேசாப்படமே எடுக்கிறீங்கன்னு கேட்டாங்க. அதுக்கென்ன தேவைப்படும் போது உபயோகிக்கலாம்னு அசட்டையா சொன்னார்.
கிரேட் டிக்டேட்டர் க்ளைமேக்ஸலப் பேச்சு வரும். பிரவாகமான பேச்சு. பிரமாதமான பிரச்சாரப் பேச்சு. போருக்கு எதிரான பிரச்சாரம்.
சினிமா பேசத்தொடங்கியும் தான் மட்டும் பேசமாட்டேன் என்று அடமாய் நின்ற சாப்ளின் முதல் முறையா பேசினார்யாருமே இப்படிப் பேச முடியாதுங்கறாப்புலப் பேசிட்டார்னு, உலகமே தலைலத் தூக்கிவெச்சிக் கொண்டாடிச்சி.
சாப்ளின் இலவசமா படம் காட்டலை. முதலீடு பண்ணிதான் படம் எடுத்தார். டிக்கெட் போட்டுதான் படம் காட்டினார். தர்ம ஸ்தாபனம் நடத்தலே. லாபமும் ஈட்டினார்.
 சமூகத்துலக் கலைஞனோட பங்கு சாதாரணமில்லை. அவன் உண்மையா இருக்கணும். ஓட்டவும் கூடாது எது பின்னாடியும் அவன் ஓடவும் கூடாது.
இலக்கிய எழுத்தாளர்னு பேரை எஸ்டேப்ளிஷ் பண்ணிட்டா எழுதறதெல்லாம் இலக்கியமாயிடுது.
ஒவ்வொரு புக்குலையும் நாலு நாலு கதையும் கட்டுரையும் ரிப்பீட் பண்றது சுரண்டல் இல்லையா? இதுக்கு மறுப்பு தெறிவிக்காம மண்டையாட்டற எழுத்தாளன் வியாபாரி இல்லையா?
ஹிட்ஸ் ரேட்டை மெய்ண்டெய்ன் பண்ன என்னத்தையாவுது எழுதித் தள்ளிகிட்டே இருக்கணும்.
தெரியாமதான் கேக்கறேன், தெரிஞ்சதை அடுத்தவனோட பேசறத்துக்குப்பேருதான சார் பகிர்வு. தெரியாதுங்கறதையே ஒருத்தன் காத்தாலை மத்தியானம் சாய்ங்காலம்னு எழுதித் தள்றான். இதுக்குப் பேரு மொக்கை இல்லையா சார்.
ஒரு எழுத்தாளன் இந்த மொக்கையப் பதிவாப் போட்டா அதுக்குப் பேர் கட்டுரை. அத்தையெல்லாம் சேத்து டிஸம்பர்ல ப்ரிண்ட் பண்ணிட்டா அதுக்கு பேரு புக்கு. பிராண்டட் பதிப்பகம் வெளியிட்டா அதுக்குப் பேர் இலக்கியம்.
அடப் பாவிங்களா சொத்தைத் தொலைக்கிற அளவுக்குத் தீவிரமா இருந்த இலக்கியத்தைத் தொழில் ஆக்கிட்டீங்களேடா
பொழைக்க எத்தினியோ கெவுறுதையான தொயில் இருக்கு அதுல ஒன்னு கண்ணகி செலையாண்ட நின்னுகிட்டுப் போற வர்ரவங்ககிட்ட டூடண்ஸ் இருக்கு சார் ஆல் ஸ்டேட் டூடண்ஸ் வேனுமா சார்....