Sunday, October 10, 2010

கசாப்புக்கடை

பாவண்ணனின் எனக்குப் பிடித்த கதைகள் சீரிஸ் - சிலிகான் ஷெல்ஃப்
எனக்குப் பிடித்த கதைகள் - 9 -சுந்தர ராமசாமியின் 'பள்ளம் ' (மோகமும் மூர்க்கமும்) - பாவண்ணன்

தயவுசெஞ்சு  யாராச்சும்  சொல்லுங்க. கதை  அனுபவ  அறிமுகம்  நல்லது. அதை செய்வதற்கு நல்லெண்ணம் மட்டும் போதாது.

10 பாரா கட்டுரையில் 8 வது பாராவின் இறுதியில்

<சிறிது நேரத்துக்குப் பிறகுதான் சுந்தர ராமசாமியின் 'பள்ளம் ' கதை நினைவுக்கு வந்தது. தமிழ் மக்களின் திரைப்பட மோகத்தை இந்த அளவு வலிமையாகச் சொன்ன படைப்பு வேறில்லை.>

அப்பிடின்னு சொல்ல ஆரம்பிச்சு ‘பள்ளம்’ கதையவே எட்டு வாக்கியத்துல சொல்லி முடிச்சுட்டார்.

எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் இந்தக் கதையைப் படிக்கிறவனுக்குக் கிடைக்கிற  அனுபவத்தை  இப்படியாக்  கெடுப்பாங்க. இவருக்குக்  கெடைச்ச அனுபவத்தைப் பிறருக்குக் கிடைக்கவிடாம பண்றது மகா கொடுமை இல்லையா?.

சிறு பத்திரிகைல ஆசிரியர்னு ஒருத்தர் இருப்பாரு அவரது விருப்பு வெறுப்புக்கு உட்பட்டதுதான் என்றாலும் பதிப்பிக்கறதுக்கு முன்னால எழுதினவன்கிட்ட ஒரு சின்ன அபிப்ராய பரிமாற்றமாவது நடக்கும்.

இணையத்தின் கட்டற்ற சுதந்திரம், எதையும் எப்படியும் எழுதலாம் என்கிற வசதியைக்  கொடுத்துவிடுகிறது. இது  ஆரம்ப  வாசகர் / பார்வையாளரிடம் காணப்பட்டால்  ஆர்வக்கோளாறு, முதிரா  மூர்க்கம்  என பொறுத்துக்கொள்ளலாம்.

எழுதி எழுதி புத்தகங்கள் பல வெளியிட்டு எழுத்தாளன் என பேர் ஆகிவிட்ட  ஒருவர்  இதை  செய்தால்  நியாயமா?  இணையம்  கொடுக்கிற கட்டற்ற சுதந்திரத்தின் மிக முக்கியமான சரிவுகளில் ஒன்று.

இது  புத்தகமாக  வேறு  வந்திருக்கிறதோ  என்னவோ. இப்போதுதான் எழுதுவதெல்லாம் புத்தகமாகிவிடுகிறதே.

சினிமான்னாலும் கதைய சொல்றாங்க க்ளைமாக்ஸோட சேர்த்து சொல்ராங்க.

கதைனாலும் கதையவே சொல்லிடறாங்க.

எழுத்தாளனுக்கு எட்டு பக்கத்துல அதை எழுத எவ்வளவு காலம் எடுத்துதோ. எவ்வளவு காலம் அந்தக் கதை உள்ள இருந்து கொடஞ்சிகிட்டு இருந்துதோ. திரும்பத்திரும்ப  எத்தனை  தடவை  எழுதச்சொல்லி  வேலை வாங்கிச்சோ. கடைசீல கதை எழுதினவன் கேனையன் ஆனதுதான் மிச்சம்.
எட்டுவரில சல்லிசா எழுதிட்டுப் போயிடறாங்க.

இந்தப் பள்ளம் எனக்கு குடுத்த பாதிப்பை ராமசாமிகிட்ட மாஞ்சி மாஞ்சி சொல்லிகிட்டு  இருந்தேன். சிரிச்சுகிட்டே  கேட்டுகிட்டு  இருந்தவர். கடடைசீல  சொன்னார்  - மாமல்லன்  உங்களுக்கு  புடிச்சிருக்குங்கறதுல எனக்கு  சந்தோஷம்தான். ஆனா  கதை  பப்ளிஷ்  ஆன பிறகு  எனக்கு  என் மேல  கடுமையான  கோவம்தான்  வந்துது. இன்னும்  நல்லா  எழுதி இருக்கணும்னு.

வைத்தீஸ்வரன் என்கிற நண்பரிடம் இந்தக் கதையைப் பற்றி 84-85 வாக்கில் இருக்கும், சொல்ல ஆரம்பித்தேன். சுந்தர ராமசாமி பள்ளம்னு ஒரு கதை சினிமா மோகத்தைப் பத்தி...

போதும் மாமல்லன். சினிமா - பள்ளம் இது போதும் இதைவிட சினிமா நம்ம நாட்ல ஜனக்க மேல செலுத்திக்கிட்டு இருக்கிற பிடியை வேற எப்படி சொல்லிட முடியும்.

இலக்கியத்தைப் படித்து அது நம்மை பாதிக்கிறது என்பதே நமது சென்சிடிவிட்டியைக்  குறிக்கிற  ஒரு  விஷயம்தான். அனால்  அதை  எப்படி இவ்வளவு இன்சென்ஸிடிவாகப் பகிர முடிகிறது.

இது ’பள்ளம்’ கதைக்கு மட்டும் கிடைத்த ஸ்பெஷல் ட்ரீமெண்ட் இல்லை இன்னும்  இரண்டு  மூன்றுக்கும்  பார்த்தேன். எல்லாக்  கண்றாவியும் இப்படித்தான் இருக்கும் போல என்கிற கசப்புதான் எஞ்சியது.

நூறும்  இப்படித்தானா  என  எனக்குத்தெரியாது. ஏனென்றால்  நானெங்கே இவ்வளவு படித்தேன்.

ஆனால்  ஒன்று  நிச்சயம். இந்த  அரி-முகங்கள்  படித்தாலே  ஒருவர் இலக்கியத்தைக் கரைத்துக்குடித்த, மெத்தப் படித்த மேதாவி ஆகிவிடலாம்.

இந்த மேட்டரத்தானேய்யா கதைங்கற பேர்ல எளுத்தாளனுங்கோ ஜவ்வுமாதிரி இளுத்து இளுத்து சொல்லி இருக்கானுங்கோ!

கட்டுரை என்ற பெயரில் கதையின் உயிரை உரி, கசாப்புக்கடையில் தொங்கவிடு?