Wednesday, October 20, 2010

கம்பி இழுப்புக் கலை

குழந்தைகளுக்கு எதை அறிமுகப்படுத்துவது, குழந்தைகள் படிக்கவேண்டியவை எவை என்று பெரியவர்களே தெரிந்து வைத்திருக்கவில்லை. தமிழ் சிறுகதையின் நு¡ற்றாண்டுத் தொடர்ச்சியில் குழந்தைகளின் மனவுலகைச்சித்திரிக்கும் பத்திருபது நல்ல கதைகள் இருக்கின்றன. அவைகளைப் பெரியவர்கள் முதலில் படிக்கவேண்டியது அவசியம். . கு.அழகர்சாமியின் அன்பளிப்பு, கிருஷ்ணன்நம்பியின் கணக்கு , விமலாதித்த மாமல்லனின் கறிவேப்பிலை, கி.ராஜநாராயணனின் கதவு, புதுமைப்பித்தனின் மகாமசானம், பி. எஸ் ராமையாவின் நட்சத்திர குழந்தைகள், வண்ணதாசனின் நிலை, கோணங்கியின் கறுப்பு ரயில், போன்றவை குழந்தைகளின் உலகை மிகுந்த கவனத்தோடு பதிவு செய்த கதைகள். http://www.tamiloviam.com/atcharam/page.asp?ID=24&fldrID=1

இந்தப் பட்டியல்லில் இருக்கும் கதைகளில் குழந்தைகளை மையமாகக் கொண்டவை எத்தனை. இவற்றை குழந்தை அல்லது குழந்தைகளுக்கான கதைகள் என வகைப்படுத்த முடியுமா? பெரும்பாலானவற்றில் குழந்தைகளின் பங்கு மிகக் குறைவு அல்லவா?.

அறிமுகப்படுத்தி நல்லகாரியம் செய்யறார் ஒரு மனுஷன், நாய் கொற சொல்லுது
என எடுத்துக் கொள்ளாமல் தயவுசெய்து படித்து ஆராய்ந்து பார்க்கவும். குழந்தை மையப்பொருளாகவோ அல்லது குழந்தையின் பார்வையில் சொல்லப்பட்டதாகவோ எழுதப்பட்டவை தவிர சில ஃப்ரேம்களில் குழந்தை தலைகாட்டுவதை எல்லாம்குழந்தைகளின் உலகை மிகுந்த கவனத்தோடு பதிவு செய்த கதைகள்என்று சொல்ல முடியுமா?
அசோகமித்திரனின் ரிக்ஷா கதையை இந்த வகையில் சொல்லி இருந்தால் சரியாக இருந்திருக்கும்
அவருக்குப்பட்டதை அவர் சொன்னார் உனக்குப்பட்டதை நீ சொல்லிவிட்டுப் போ
மெத்த சரி. அண்ணனுடைய முக்கியமான  இலக்கியப்  பங்களிப்பாக பேசப்படுபவற்றில் முதன்மையானது நல்ல படைப்புகள் பற்றிய  அறிமுகங்கள்.
இதில் இரண்டுவகை உண்டு.
அறிமுகப்படுத்தி உயர் பிம்பம் அடைதல்.
பிரபலம் என்கிற பெரும் பிம்பம் கிடைத்தபின் நல்ல விஷயம் என நாம் நம்புகிறவற்றை பிராபல்யத்தைப் பயன்படுத்தி வெகுஜனங்களிடம் அறிமுகப்படுத்துதல்.
பின்னதன் முற்றமுழுமுதல் உதாரணம் சுஜாதா. அவரது வடிவ பங்களிப்பு போலவே இலக்கிய அறிமுகப் பங்களிப்பும் அபாரமானது. இலக்கியவாதிகளின் பெயர்களை குமுதத்தில் ‘உதிர்த்ததால்’ அவருக்கு ஒரு பிரயோஜனமும் இல்லை. ஏகப்பட்ட இளைஞர்களுக்கு பிரயோஜனம். இன்னும் சொல்லப்போனால் இதில் சுஜாதாவுக்கு நஷ்டம் என்று கூட சொல்லலாம்.
சுஜாதா மூலம் கிடைத்த அறிமுகத்தால் தீவிர இலக்கிய வாசிப்பிற்கு வந்து சுஜாதாவைத் தாண்டிப் போனவர்கள் கனிசமானோர் எனலாம். அதைப் பற்றி அறியாதவர் அல்லர் என்பது மட்டுமின்றி அதைப்பற்றி கவலைப்படாதவராகவும் அவர் இருந்தார்.
ஆனால் இன்றைக்கு எழுதப்படும் அறிமுகங்கள் எவ்வளவு உள்ளீடற்ற நேர் அனுபவமற்ற மொக்கைகளாக உள்ளன.
லோசாவை அவன் எப்படி லீவ் போட்டு படித்தான் இவன் எப்படி டீக்கு கூட வழியில்லாமல் படித்தான் என ஆலாபனை.
நான் என்ன படித்தேன் எனக்கென்ன அவன் தந்த அனுபவம். வீக்கிபீடியாவில் IMDB யில் சொல்லியிருப்பது போக, அவனது ஆன்மாவாக எனக்கு என்ன கிடைத்தது. லோசா  பற்றி  எதுவுமே  எழுதாமல்  லேசா கட்டுரை இயற்றிவிட்டுப் போய்விடலாம்.
அட்டவணை போட்டு கட்டம்கட்டி வாழ்பவர்கள் ஃபோட்டோவில் நடந்தாலே போதும் நானூறு பக்க நடைபயணக் கட்டுரை தயார். இங்கனக்குள்ள இருந்து வந்தவுக எங்கறதால செய்யறதெல்லாமே இலக்கியமா.
இன்னக்கி பக்கத்தை ரொப்பணும் எடுத்துவுடு ராசா எவன் கேக்கப்போறான்
இது போக போனஸ் குழந்தைகளுக்கு எதை அறிமுகப்படுத்துவது, குழந்தைகள் படிக்கவேண்டியவை எவை என்று பெரியவர்களே தெரிந்து வைத்திருக்கவில்லைஅப்பிடின்னு ஒரு ஆசீர்வாத ஸ்டைலில் அட்வைஸ் வேறு.
நட்சத்திரத் தொப்பியும் நாலு குச்சுகுச்சு தாடியும் கிறுக்கினால் சே குவேரா என்பது நம் மனதில் விழுந்த பிம்பத்திற்க்குப் பின்னால் இருப்பது கிளர்ச்சி தரும் அவனது வாழ்க்கை. பதவியின் பவிசை, பத்திரத்தை விட்டு வெளியேறிய நிஜ கலக வாழ்வு. சாவு நோக்கிய பயணத்தின் விளைவாய்க் கிடைத்த இறப்பின்மை.
உருவாகும் பிம்பங்களுக்கும் உருவாக்கும் பிம்பங்களுக்கும் இடையிலுள்ள வித்தியாசம் உண்மைக்கும் உண்மை போன்ற போலிகளுக்குமானது.
இப்பூடித்தான் அண்ணன் பேசின் ப்ரிட்ஜுலயே துண்டு போட்டு எடம் புடிச்சாரா? பாராட்ட வேண்டிய தெறமதான்.
”அடுத்து அண்ணன்  வளசை சுனா பானா அவர்களை பேச வருமாரு அளைக்கிறேன்”
அடப்பாவிகளா வரவேற்புரைக்கெல்லாம் விருது குடுக்கறாங்கப்பா இந்த ஊர்ல
சகல செளபாக்கியங்களோடு சீக்கிரமே இலக்கிய மேயர் பதவி கிடைக்க வாழ்த்துக்கள்.