Friday, October 22, 2010

மனவெளியில் அலையடிப்பு - விசு என்கிற விஸ்வநாதன்

பங்குச்சந்தை பரிசளிக்கும் வான்-தரை சீஸாப்பலகை வாழ்வை உலர்ந்த முறுவலோடு ஏற்று வாழ்ந்து கொண்டிருக்கும் உலக சினிமா தகவல் களஞ்சியம். பற்பல ஆண்டுகளாக சர்வதேச திரைப்பட விழாவைத் தவறவிடாமல் தரிசிக்கும் சபரிமலை குருசாமி. வாழ்வின் கூறுகளை சினிமாவின் தீற்றல்களில் மீட்டியபடி வஞ்சனை இல்லாமல் சிரிப்பவர். இதே மெட்ராஸில் நீங்கள் என்றேனும் சந்திக்கும் நபர் அல்லது சிற்றுண்டி விடுதியில் உங்கள் பக்கத்து மேசையில் அமர்ந்து ஹஹ்ஹா என ஹைஃபை போட்டபடி எதிரிலிருப்பவரிடம் கீழ்க்கண்டவற்றில் ஏதேனும் ஒன்றை அல்லது சிலவற்றைப் பேசுவாரேயாகில் அது விஸ்வனாதனாக இருக்கவே வாய்ப்புகள் அதிகம்.


மரக்கிளையில் நடிகனான கதாநாயகன் உட்கார்ந்திருக்கிறான். எதிரில் மரணம் வந்து உரையாடுகிறது 

மரணம்: நீ இறக்க வேண்டிய தருணம் வா . 

நடிகன்: எனக்கு ஒரு நிகழ்ச்சி இருக்கிறதே 

மரணம்: அது ரத்தாகி விட்டது

நடிகன்: இதிலிருந்து தப்பிக்க வேறு ஏதேனும் சந்து பொந்துகள்?

மரணம்: இல்லை

நடிகன்: நடிகர்களுக்கு என்று ஏதும் விசேஷ விதிகள் உண்டா?

படம்: வைல்ட் ஸ்ட்ராபெரீஸ் 
இயக்குநர்: இங்மார் பெர்க்மென் 

பாரீஸின் நடைபாதையில் நடந்து கொண்டிருக்கும் ழான் பால் பெல்மாண்டோ பேப்பர்கடையில், பனத்தைப் போட்டுவிட்டு நியூயார்க் டைம்ஸை எடுத்துக் கொண்டு ஷூவைத் துடைத்துவிட்டு குப்பை கூடையில் பொட்டுச் செல்கிறான். 

நம்மப் பசங்க பேப்பர் கால்ல பட்டா சரஸ்வதின்னு தொட்டு கண்ல ஒத்திக்குவான் ஹஹ்ஹா 

படம்: ப்ரெத்லெஸ் 
இயக்குநர்: கோதார்து 

ஒன் ஹூ ஃப்லூ ஓவர் த க்கூஸ்நெஸ்ட்ல நிக்கல்ஸ்ஸன் வாட்டர் கூலரை எடுக்க ட்ரை பண்ணுவான் முடியாம ஐ ட்ரைட் இட் ஆஃப்ட்ரால் யூநோன்னு சொல்லிட்டுப் போவான்

டே ஆஃப் த ஜேக்கால் ஈஸ் பைபிள் ஃபார் சினிமா ல்வ்வர்ஸ். 

அமேடியஸ் சூஉப்போர்ப் ஃபில்ம். ஃபெண்டாஸ்டிக் எப்பிடி எடுத்திருப்பான் மிலோஸ் ஃபோர்மென்.

நிறைய முதல் தடவைகளை திரையில் நிகழ்த்தியவர் ஹிட்ச்காக். சினிமா ஹிஸ்ட்ரில பெட்ரோல் பங்க் ஸ்க்ரீன்ல கொளுத்திக் காட்டினது ஃபர்ஸ்ட்டு பேர்ட்ஸ் படத்துலதான்

மோஸ்ட் ஸின்ஸியர் ஒர்க் வில் லுக் ஃபோனி - த்ரூஃபோ

ஃப்ரெஞ்சு பசங்களை அடிச்சிக்கவே முடியாது. எவ்ளோ கஷ்ட்டமான சப்ஜெக்ட்டையும் சும்மா கேஷுவலா, ஜாலியா எடுப்பானுங்க. தே டோண்ட் லெக்ச்சர் யூ நோ.

சொல்லிக் கொண்டே போகலாம் மாளாது. சினிமாவுடன் தீராத காதல்.

எனது உயிர்த்தெழுதல் புத்தகம் வெளியிட மொத்த பணமும் கொடுத்தவர். இரண்டு வருடம் சென்றும் ஆறுமாதத்திற்கு ஒரு கடனடைத்து வாழ்வில் பொருளாதார ரீதியில் நான் முன்னேறிக் கொண்டிருக்கையில் மூன்றாவது நான்காவது ஆறுமாதங்களாகத் தள்ளிக்கொண்டிருந்தும் இட்ஸ் ஓகே என முறுவலித்து சினிமா பேசியவர். மூன்றாவது ஆண்டில் கடனைத் திருப்பித் தராமல் NTSC ப்ளேபேக்கிற்காக டிவி மாற்ற நேர்ந்த போது சீசாப்பலகை சொல்லிக்கொள்ளும் படியாக இல்லாத போதும், தனது க்ரெடிட்கார்டை நீட்டி வாங்கிக்கொள் என்றவர். அநேகமாக நான்பட்ட கடனை தேதி தவறாது திருப்புபவன் என்கிற பெயரை அடகு வைத்து மீட்டது இவர் ஒருவரிடம் மட்டுமே. 

அநேகமாக என் கதைகள் திரைக்கதை உதவிகள் தொலைக்காட்சி வசனங்கள் என என் எழுத்து அத்தனையும் ட்ரைவ்-இன் மேஜைகளில் எழுதப்பட்டவைதான். ஒரு கதையை குறைந்தது எட்டுமுறை படியெழுதி இழைப்பவன் என்கிற காரணத்தால் கொஞ்சமாக எழுதியும் நிறைய நேரம் செலவழித்தவன். பேப்பரும் பேனாவுமாக இருந்தால் விஸ்வநாதன் உட்பட நண்பர்கள் எவருமே அருகில் வராமல் இருந்தது மட்டுமல்லாது, ட்ரைவ்-இன் மேனேஜர் அப்புவிலிருந்து - ஏசியாட் அப்பு டிவிஎஸ் 50 ல் வீடு செல்வதை கற்பனை செய்து கொண்டால் ட்ரைவ்-இன் அப்புவை நேரில் காணலாம் - ட்ரைவ்-இன் ஊழியர்கள் மற்றும் மதிய நேரங்களில் குடும்பப்பகுதியில் உட்கார்ந்து பார்வையால் உரசும் டூடண்ஸ் உட்பட எவருமே இடையூரு விளைவித்ததில்லை. ட்ரைவ்-இன் மேஜைகளில் வாழ்ந்தவர்களில் நான் கேள்விப்பட்ட நேரடியாக அறிந்தவர்களைப் பற்றி எழுதத் தலைப்பட்டால் ரஜினி-ருத்ரனுக்கு முன்பிருந்து தொடங்க வேண்டியிருக்கும். ஒருவருக்கொருவர் பேசிக்கொள்லாமல் எத்துனை இளம் கும்பல்கள். நான், குறைந்தது மூன்று இளைய தலைமுறைகளை இருபத்தியெட்டு ஆண்டுகளில் அவதானித்து வாழ்ந்து வளர்ந்திருக்கிறேன். எல்லாவற்றையும் பின்னொரு நாள் எழுதப் பார்க்கிறேன்.

விசு என்று அழைக்கப்படும் விஸ்வநாதன் என்கிற நண்பரின் ட்ரைவ்-இன் பறிக்கப்பட்ட இழப்பின் குறிப்பு. ஒரு கையெழுத்து எத்துனை பேர் வாழ்வைப் புரட்டிப் போட்டுவிடுகிறது. 

ரஜினி நீங்களாவது ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாம், பெரியவர் நிச்சயம் பரிசீலித்திருக்கக் கூடும். வாழ்க்கைப் போராட்டத்தின் வஸந்த மண்டபமாக உங்களுக்கு டிரைவ்-இன் இருந்த நாட்களுக்காகவேனும், கேட்டுக்கொண்டு இருந்திருக்கலாம். 

முதலில் வாங்கிய இரண்டாம்தார புல்லட்டில் இடவலமாய் மடிந்து மடிந்து உள்ளே வந்த நாட்கள் நினைவிருக்கிறதா? மூதாதையர்கள் சொற்களில் பார்த்த பரவச சித்திரம். எத்துனை பியரர்களுக்கு, வந்து ஏன் பார்க்கவில்லை என உரிமையோடு உதவி இருக்கிறீர்கள். மொத்தமும் பொக்கெனப் போகிறதேயென எப்படி உங்களுக்குத் தோன்றாமல் போனது.

நீங்கள் செய்திருக்ககூடிய ஆனால் செய்யமல் போன நிறைய விஷயங்களில் இது இன்னொன்று. குறைந்தது முயற்சியாவது செய்திருக்கலாம் க்கூஸ்நெஸ்ட் நிக்கல்ஸன் போல.

நண்பர் விஸ்வநாதனின் ட்ரைவ்-இன் பறிக்கப்பட்ட இழப்பின் குறிப்பு.

13th April 2008 ( The Day Chennai Died) OR 
How I Learned to Live without Drive-In 

Can never forget the morning of 14th April 2008 as I was flooded with calls from places as far as US, Canada, Australia & good old Madurai from where my dear friend Swaran called me. All the calls had one thing in common, closure of Drive-In.

The late 80’s saw the 1st table (non service area) of Drive-In being occupied by our wonderful group of 8. Vishu the stock market speculator & aspiring filmmaker (on the drop of a hat will quote Godard), Swaran an advertising executive & also an aspiring filmmaker (call me for all your creative emergencies his business card will scream), Ganesh a rolling stone changes jobs & businesses at will (his life mantra “Barter Trade”), Mamallan a writer, Dilip who breathes Osho all the time, Suku jack of all things, Sekar & Joseph comprised the group. 

The group used to chat, discuss, argue, debate, quarrel over several issues happening all around the world. No it is not MGR – Shivaji, Kamal – Rajini, Jayalalitha – Karunanidhi or not even about cricket. The topic would be French New Wave, Italian Neo Realism, Existentialism, Michael Jackson, Steve Jobs, Rubens paintings, Ayan Rand, Alain Delon, Charles Correa, music of Jimmie Hendrix, Jazz music & Beattles, Jonathan Livingston Sea Gull, Derrida & deconstruction and of course about Freud, women & sex. Also certain trivia like Imran Khan’s numerous affairs.

Drive-In opened shop in the sixties. Right since inception to its closure in 2008 it was always lively, colourful & full of young crowd. In 60’s Drive-In was just a novelty.

In 70’s after Woodstock happened with hippie culture routing the heart of the youth all over the world, Drive-In Chennai was not an exception. Complexion of its Patrons changed. Long haired youth with no work used to make Drive-In their home. The Management was ahead of their time (whether they knew it or not) in promoting an existential youth culture by allowing Patrons to stay as long as they wished.

The relationship between Drive-In & Stella Marris girls was legendary. There were some cute revolutionaries who talked about Marx & free sex, pop music & acid trips & their zest for life matched with guys who talked about Zen & the art of motorcycle maintenance.

The 80’s saw Drive-In in another metamorphosis unlike Kafka’s. A new crop of youngsters (Indian equivalent of baby boomers) who did not want to get lost in the hippie cult but at the same time wanted to set their own values started frequenting the place, stayed from morning to night at their new found home. The 1st table group enters the picture now.

Come 90’s the laid back attitude of the 70’s & 80’s have gone making place for career oriented youngsters. They replaced the dreamers. Poetry, literature & cinema made way for Amway salesperson, software professionals & MLM crowd. Yet the dreamers were around watching the world & life pass by.

To quote Keats I wonder “was it a vision or a waking dream” did Drive-In really exist in this city.

DRIVE-IN PROJECT

The film on Drive-In could be made partly as a documentary & partly as fiction using interviews, paper cuttings, live conversations, voiceover, songs & titles. 

60’s & 70’s could be covered thru interviews & later part of 80’s to the end of Drive-In era will be covered by way of lively discussions with 1st table group.

As the famous song which ends “It all happened in Constantinople & not in Istanbul” our film will feature a song which will end “It all happened in Drive-In Madras & not in Chennai”.