Tuesday, November 16, 2010

ஒரு எழுத்தாளனிடம் எதிர்பார்க்க வேண்டியது என்ன?

? said...
ஞானிக்கு
மதிய உணவுத்திட்டத்தை காப்பி அடித்தார் எம்ஜிஆர் என்ற தங்களது புரிதலை நினைத்தால் தமிழக அறிவுஜீவிகளின் குறுகிய வட்டம் பற்றி சிரிப்புதான் வருகிறது. உலக வங்கி முன்வைத்த அந்த திட்டத்தை நிறைவுசெய்த அந்த மனிதர்களே இதனை கேட்டால் வாய் விட்டு சிரிப்பார்கள்.

gnani said...
? என்ற பெயரில் எழுதிய அன்பருக்கு: காமராஜர் திட்டத்தை எம்.ஜி.ஆர் காப்பி அடித்தார் என்று நான் சொல்லவில்லை. ராம்ஜி சொல்லியிருந்தார்., அதை நான் மறுத்துத்தான் எழுதியிருகிறேன். சரியாகப் படித்துவிட்டு யாரைத் திட்ட வேண்டுமோ அவரைத் திட்டிக் கொள்லவும். எனக்குத் தகுதியில்லாத புகழ், திட்டு இரண்டும் தேவையில்லை - அறிவுஜீவி என்ற பட்டம் உட்பட. 

ஞாநி
November 15, 2010 10:01 PM 
? said...
மாமல்லனுக்கு
சென்ஷி எழுதிய வடிவத்தில் வடிவம் எல்லா அரேபிய இரவுகளின் காப்பி என்ற நாச்சியார்மட விவகாரத்தை விட தாங்கள் வந்து சேர்ந்த வடிவமா அல்லது உள்ளடக்கமா என்ற விவாதம் நன்றாக உள்ளது. நானும் எதிர்பார்த்த ஒன்றுதான். ஆனால் இன்னும் ஆழமாக உங்களிடம் எதிர்பார்க்கிறேன். அது உள்ளடக்கங்களின் தன்மையை வரையறுக்கும் என்றும் கருதுகிறேன். மா.லெ இயக்கங்கள் பெரும்பாலும் ஒன்றுபோல இருப்பதற்கும் உங்களைப் போன்ற அறிவாளிகள் ஒன்று போல சிந்திப்பதற்கும் உள்ள ஒற்றுமையை அலசி ஆராய்ந்து உங்களை நீங்களே கொடிகட்டி புகாரினைப் போல தொங்க விடுவீர்கள் நேர்மையாக என்றும் நம்புகிறேன்.
-
மணி
அன்பான தோழர் ‘?’ அவர்களே!

//சென்ஷி எழுதிய வடிவத்தில் வடிவம் //

மீண்டும் ஒரு முறை படிக்கவும், அது சென்ஷி எழுதிய கடிதம் அல்ல. சென்ஷிக்கு Siddharth Venkatesan எழுதிய கடிதம்.

//இன்னும் ஆழமாக உங்களிடம் எதிர்பார்க்கிறேன்//

நன்றி.


மேற்காட்டப்பட்ட தங்களின் இரண்டு வலைப்பூக்களும் ஏப்ரல் 2010ல் தொடங்கப்பட்டு பதிவுகளே இல்லாமல் வெட்டியாக உள்ளன. இதை இதுவரை 280 பேர் வேறு வெட்டியாக எட்டிப் பார்த்து ஏமாந்திருக்கிறார்கள். நானும் இன்னும் ஆழமாக உங்களிடம் எதிர்பார்க்கிறேன்.

//மா.லெ இயக்கங்கள் பெரும்பாலும் ஒன்றுபோல இருப்பதற்கும்// 

எந்த மார்க்ஸிஸ்ட் லெனினிஸ்ட் குழுவும் பெரும்பாலும் ஒன்றாகவெல்லாம் இல்லை. தற்போது அகில இந்திய அளவில் போராடிக்கொண்டு முனணியில் இருக்கும் மாவோயிஸ்ட்டுகளை ஏற்காமல், அவர்களின் மேல் கடுமையான விமர்சனம் கொண்டவர்கள்தானே தங்களைப் போன்ற இணைய கம்யூனிஸ்ட்டுகள். ட்விட்டரே சாட்சி.

//உங்களைப் போன்ற அறிவாளிகள்//

நான் அறிவாளி இல்லை. 

//ஒன்று போல சிந்திப்பதற்கும் உள்ள ஒற்றுமையை அலசி ஆராய்ந்து //

நான் சிந்திக்கிறேனா?

அட அட நண்பரே முதலில் உங்கள் புகைப்படமும் முகவரியும் கொடுங்கள். நான் விட்டுச் செல்லப் போகிற சொத்தில் ஒரு பகுதியையேனும் உங்கள் பெயரில் எழுதிவைக்காமல் இறந்தால் இப்பூவுலகில் ஜனித்ததற்கு என்னதான் பொருள். 

//ஒன்று போல //

நீங்கள் கிண்டலாகத்தான் குறிப்பிடுகிறீர்கள் என நினைக்கிறேன். தோளில் துப்பாக்கியை சுமந்தபடி கையில் இருக்கும் தோட்டாக்களை எண்ணியபடி இருக்கும் தங்களைப் போன்றவர்கள் எவ்வளவு தூரத்திற்கு புரட்சிக்காரர் என்பது பொறுந்துமோ அந்த அளவுக்கே அறிவாளி யும் எனக்குப் பொருந்தும்.

//உங்களை நீங்களே கொடிகட்டி புகாரினைப் போல தொங்க விடுவீர்கள் நேர்மையாக என்றும் நம்புகிறேன்.//

யார் அந்த புகாரின். மவுண்ட் ரோடு புகாரி ஓட்டல் அதிபரா?

தங்களின் பின்னூட்டம் அதி அவசரத்தில் எழுதியதா? இல்லை கட்டுக்கடங்காத கோபத்தில் எழுதியதா? ஏன் சிறுபத்திரிகை புத்திஜீவிகள் போல கொசகொசவென்று இருக்கிறது.

பொதுவாகவே, தோழர்கள் பொறாமைப் படவைக்கும் அளவிற்கு தர்க்க கட்டுமானத்திலும், தாம் சொல்லவருவதை ஆணித்தரமாக நிறுவுவதில் தர்ம ஆவேசமும் கொண்டவர்கள். இணையத்தில் வினவு என்று ஒரு முற்போக்கு ப்ளாகர் / வலைப்பூ இருக்கிறது, அதில் எழுதப்படும் கட்டுரைகளை உங்களுக்கு சிபாரிசு செய்கிறேன். சமூக அக்கறை கொண்டவர்களை நல்லவிதமாய் வழிநடத்திச் செல்கிறார்கள். அவர்களின் சமூகத் தொண்டு பாராட்டுக்குரியது.

தாம் சரி என நம்புவதை உயர்த்திப் பிடிப்பதற்காக தங்களையே அழித்துக் கொள்ளவும் தயங்காத வீர வைஷ்ணவ வீர சைவர்களைப் போன்றவர்களே  தீவிரமான முற்போக்காளர்கள். இதுவே எதிர் கருத்து கொண்டவர்கள் எல்லோரையும் எதிரிகளாக மட்டுமே பார்க்கவைத்து அவர்களை மூர்க்கமாக எதிர்க்க வைக்கிறது.

அன்று கழுமரம்

இன்று வீடுபுகு ஆஃபீஸ்புகு பிட்நோட்டீஸ் மிரட்டல்கள்

கம்யூனிஸ்ட்டுகளை மட்டுமே கம்யூனிஸ்ட்டுகள் ஏற்றுக்கொள்வது என முனைந்தால் அதுவும் தன் அளவுகோளில் அவன் கம்யூனிஸ்ட் எனத் தேறினால் மட்டுமே அவனை ஏற்றுக் கொள்வது எனத் தொடங்கினால் முடிவில் என்ன மிஞ்சும்?

என் தளத்தில் வெளியிடப்பட்டிருக்கும் 12க்கும் மேற்பட்ட கதைகளே என் நேர்மைக்கு சான்று. எனக்கு சரி எனப்படுவதை கடந்த முப்பது ஆண்டுகளில் சமரசமின்றி எழுதி வருவாத்ற்கான சான்று. எழுத்தில் மட்டும் வாள்வீசி அலுவலகத்தில் வாளாவிருப்பவன் அல்ல நான். பாபர் மசூதி இடிப்பிற்கு முன்னும் பின்னும் சாய்பாபா பஜனை அலுவலகத்தில் நடந்ததைக் கடுமையாக தனி நபராக எதிர்த்தவன். தனிப்பெரும் தலைமை அதிகாரிக்கு இது குறித்த எனது எதிர்ப்புக் கடிதம் அனுப்பப்படாமைக்காக மேஜை நாற்காலிகளை ஓரம்கட்டிவிட்டு தரையில் உட்கார்ந்து தர்னா செய்தவன். கடவுள்/சாமியார் நம்பிக்கை தனிநபர் சம்பந்தமானது, அனைவருக்குமான அரசின் இடத்தை அதற்கு அனுமதித்தல் முறையல்ல என தனிப்பெரும் அதிகாரியிடம் தனியாக 45 நிமிடங்கள் வாதிட்டு சாய்பாபா பஜனையை நிறுத்தியவன். அந்த பஜனையை முன்னின்று நடத்தியவர் தனிப்பெரும் அதிகாரியின் மனைவியான மற்றொரு தனிப்பெரும் அதிகாரி என்பது ஒரு கூடுதல் ருசிகரம்.

2001ஆக இருக்கலாம், தஞ்சை மக்கள் கலை விழாவில் உபயோகப் படுத்தப்பட்ட ஓவியர் ட்ராட்ஸ்கி மருதுவின் கோட்டோவியங்களைக் கணினியில் பெரிது படுத்தி விடியவிடிய எடுத்துக் கொடுத்ததில் இந்த அணிலுக்கும் பங்கு உண்டு. அது ராமனுக்கு செய்யும் உதவியல்ல என்பதை நன்றாகவே அறிந்த அணில்.

எந்த ஒரு இயக்கத்திற்கும் பிட் நோட்டீஸ் எழுதுவது இயக்க பிரச்சாரகனின் காரியம்.

எழுத்தாளனிடம் எதிர்பார்க்கவேண்டியது அவன் வாழும் சமுதாயத்தை அவனுக்கு உண்மையாகத் தோன்றும் விதத்தில் பதிவு செய்திருக்கிறானா என்பதுதான். உண்மையாகவே சமுதாயம் மோசமாகத்தானே இருக்கிறது. அவன் சார்ந்த வாழ்வை அவன் உண்மையாக எழுதினால் அது சமுதாயத்தின் மேல் அவன் வைக்கும் விமர்சனமாகத்தானே அமையப் போகிறது. அப்புறம் ஏன் இந்த பதற்றம். எதிரிப்பார்வை. 

நமக்கு சாதகமாக நமது கொள்கைகள்படி எழுதி இருக்கிறானா எனப் பார்ப்பதில் தவறில்லை. பார்த்துக் கொண்டே இருக்க வேண்டியதுதான்.

சமுதாயம் நம்மை நடைபாதையில் கிடத்தி தன் போக்கில் போயிருக்கும். நாம் பார்த்துக் கொண்டே இருப்போம்.

இது ஒரு கருத்து மட்டுமே. 

இது ஒன்று மட்டுமே கருத்தல்ல.

தோழர் - மணி அவர்களே!