Tuesday, November 30, 2010

உண்மையான மரியாதை உதட்டில் இல்லை

இன்று ட்விடரில் கீழ்கண்ட ட்விட் காண நேரிட்டது.

kavi_rt kavirajan 
இந்தப் பேச்சு ஒங்கா மக்காவென்று இருக்கிறதே!http://bit.ly/hNPkzx இவ்வளவு சொல்பவர் ஒரு நன்றி செலுத்தியிருக்கலாமே படத்தில்

அதில் இருந்த சுட்டியை பின் தொடர அது மிஷ்கின் மற்றும் இன்றைய இயக்குநர்களின் கலந்துரையாடலில் கொண்டுவிட்டது. அதில் மூன்றில் இரண்டு பகுதி முடிந்த பிறகு சேரன் சார் ஒரு விஷயத்தை வியாக்கியானம் போலவும் நியாயப்படுத்தலாகவும் கேள்வியாகவும் தொடங்குகிறார், குறிப்பாக 9.19ல் மார்க்கெட்டிங் டிஸ்கஷன் போல. 
இதற்கு பதில் கூறும் முகமாக, நான் ஒரிஜினல் பட்த்தை இயக்கியவனுக்கு ட்ரிப்யூட்டாக சில காட்சிகளை அப்படியே வைத்திருக்கிறேன் என்கிறார் இயக்குநர் மிஷ்கின்.

ட்ரிப்யூட் என்றால் என்ன?

tribute 
- 4 dictionary results
trib·ute
 [trib-yoot]  
–noun
1.
a gift, testimonial, compliment, or the like, given as due or inacknowledgment of gratitude or esteem.
2.
a stated sum or other valuable consideration paid by onesovereign or state to another in acknowledgment ofsubjugation or as the price of peace, security, protection, orthe like.
3.
a rent, tax, or the like, as that paid by a subject to asovereign.
4.
any exacted or enforced payment or contribution.
5.
obligation or liability to make such payment.

தற்போதைய விவாத சூழ்நிலைக்கு முற்றிலும் பொருந்திப் போவதாகக் கீழ்க்காணும் விளக்கம் இருக்கிறது. given as due or in acknowledgment of gratitude or esteem.

இந்த ட்ரிப்யூட் என்பது மிஷ்கின் சார் சொல்வது போல் அப்படியே சில சீன்களை மூலத்திலிருந்து ’தேமே’ என்று எடுத்து தனது படைப்பில்  வைத்துக் கொள்வது அல்ல. படத்தில் ஒரு பேச்சுக்குக் கூட இது பற்றி ஒன்றும் சொல்லாமல், தியேட்டரில் படம் வெளியாகி காப்பி காப்பி இல்லை என சாதக பாதக  கருத்துகள் உலாவத் தொடங்கியதும், கேள்வி கேட்பது போலக் கேட்டு பதில் சொல்வது போல சொல்வதுதான் உரிய மரியாதை அளிப்பதா? இந்தப் படத்தின் மூலத்தை எடுத்த ஜப்பானிய இயக்குநர் என் குரு அவருடன் உட்கார்ந்து இந்தப் படத்தைப் பார்க்க விரும்புகிறேன் என்று சொல்வது குருவை கனப்படுத்துதல் என்று அர்த்தமா?

இதில் நம்மை மிஞ்ச யாரும் உண்டுமா? காட்ஃபாதர் என்கிற பிட்ஸ்ஸாவை நமது குண்டானில் வேகவைத்து நாயக இட்லியாக்கி அதை கொப்பல்லோவுக்கே பறிமாறி, போதாக்குறைக்கு எப்படி இருக்கிறது எனக் கேட்கவும் வேறு செய்து, அவன் தன் கெவுருதையைக் காப்பாற்றிக்கொள்ள ஒரு மரியாதைக்கு இட்ஸ் நைஸ் எனச் சொன்னால், பார்த்தியா அவாளே பேஷா இருக்குன்னு சொல்லிட்டா, எந்தப் போய்க் காப்பிங்கறியே, நீ எல்லாம் நேக்கு எம்மாத்திரம் என்று அதையும் பீற்றிக் கொள்பவர்கள் அல்லவா நாம்.

ஆஸ்கார் கோழியே இந்த கெதி என்றானபின் அமஞ்சிக்கரைக் குஞ்சைக் கேட்கவும் வேண்டுமா?

வாயைத் திறந்தால் உலகநாயகனுக்கு அடுத்தபடியாக சர்வதேச சினிமா மற்றும் இலக்கியப் பெயர்களாக உதிர்க்கும் ஒரு மகா அறிவுஜீவிக்கு எது உண்மையான ட்ரிப்யூட் என்பது கூடத் தெரியாதா என்ன?

ஒரு அளவிற்குமேல் சட்ட சிக்கல் என்பது வெற்று சால்ஜாப்புதான். ஏனெனில் இதற்கு முன் இப்படியான விஷயங்கள் நடந்ததில்லையா என்ன?

உலகத் திரைப்பட மாணவனுக்கு, மைக்கலேஞ்சலோ அண்டோணியோணி என்பது இன்னொரு ஐரோப்பியப் பெயர் கிடையாது. இத்தாலிய நவீன சினிமாவின் முக்கியமான இயக்குநர்.

அவருடைய பிரசித்திபெற்ற படங்களில் ஒன்று Blow up (1966).

மாடலிங் புகைப்படக் கலைஞனின் ஸ்டில் கேமராவில், நிகழ்ந்து கொண்டு இருக்கையிலேயே எதேச்சையாகப் பதிவாகி விடுகிறது கொலை.  முக்கியமான சாட்சியத்தைத் தான் நிரந்தரமாக்கி இருக்கிறோம் என்பது கூட அவன் அறிந்திருக்கவில்லை. வழமை போல புகைப்படம் டெவலப் செய்யப் படுகையில் ஏதோ வித்தியாசமாகப் படுகிறது. புகைப்படத்தைப் பெரிது படுத்துகிறான். பெரிதுபடுத்த பெரிதுபடுத்த கொலை துல்லியப் பட்டுக்கொண்டே வருகிறது. அப்புறம் என்ன நடக்கிறது? படத்தைப் பார்த்து அதை நீங்கள்தான் சொல்ல வேண்டும். 40 ரூபாய் டிவிடியில் கிடைக்கிற உயர்ந்த வஸ்து. 
உலகத்திலிருந்து உள்ளூருக்கு வருவோம். உலகம் எல்லாம் ஓகேதான் உள்ளூர்காரந்தான் உட்டாலக்கடி என்று எழுதுவதே நம்மாளுங்களுக்குப்  பொழப்பைய்யா என்கிற அலுப்பு ஓரளவு சரியும்தான். முற்றிலும் சரியல்லவும்தான்.

குந்தன் ஷா http://en.wikipedia.org/wiki/Kundan_Shah என்ற இந்திப்பட இயக்குநரைக் கேள்விப்பட்டிருக்கலாம். NFDC க்காக எழுதி இயக்கி 1983ல் வெளியான அவரது முதல் படத்தின் பெயர் ஜானே பி தோ யாரோ. Jaane Bhi Do Yaaro (aka Who Pays the Piper)

இந்தப் படத்தின் மிக மிக முக்கியமான, பகுல் நோக சிரிக்க வைக்கும் நெடுந்தொடர் காட்சி, ஓம் பூரி பிணமாக நடிப்பது. இந்தப் பகுதியை மட்டும் உலக நாயகன் சார், தமது படமான மகளிர் மட்டுமில் சுட்டுக் கொண்டார். நமது நாகேஷ் சார் பிணமாக நடித்துப் பின்னியெடுத்ததைப் பார்த்துக் களித்திருப்பீர்கள், எந்தவித தார்மீக அங்கீகரிப்பும் இல்லாமல். நடிப்புச் சக்ரவர்த்தியின் நாடகீயம் நாடறிந்தது, இதில் பேச ஏதுமில்லை. போகட்டும் துட்டு மேட்டர்.

ஜானே பி தோ யாரோ. இது யூட்யூபில் இலவசமாகவேக் கிடைக்கிறது 16 பகுதிகளாக. அவற்றில் Jane bhi do yaar - Part 7 இதில் 4.55வது நிமிடத்தில்
இப்படி ஒரு ஷாட் வருகிறது.

இத்தனைக்கும் பார்க்கில் கொலையுண்ட பிணத்தைப் புகைப்படம் எடுத்து சந்தேகப்பட்டு டெவலப் செய்து திரும்பப் பார்க்குக்குப் போக பிணம் காணாமல் போவது என்பது மட்டுமே இரண்டு படங்களிலும் உள்ள ஒற்றுமை.

இந்திப்படம் இந்த மையத்திற்கு முன்னும் பின்னும் மேம்பால காண்ட்ராக்ட் மோசடி மேயர் மாஃபியா பத்திரிகையாளர் மகாபாரத நாடகம் திருதராஷ்ட்டிரன் இங்கே என்ன நடக்கிறது எனக் கூவிக்கொண்டே கிடப்பது என செமை கலக்கல் சடையர். இன்றைய நடப்பிற்கும் அர்த்தமுள்ளதாக இருக்கும் சமூக விமர்சனம்.

அந்த பார்க் காட்சி மற்றும் ப்ளோ அப் விட்டால் அண்டோணியோணியின் படம் இருப்பதே முற்றிலும் வேறு தளத்தில்.

மிஷ்கின்னே அவரது மேற்குறிப்பிட்ட விவாதத்தில் சொல்வது, நந்தலாலா என் வாழ்க்கையில் நடந்த கதை. ஆனால் என் குருநாதர் படமான கிகுஜிரோ என்கிற பட்த்தைப் பார்த்த உடனே என் கதையை இந்த ப்ளாட்ஃபார்மில்தான் சொல்ல வேண்டும் எனத் தோன்றி விட்டது

இதை உண்மை எனவேக் கொள்வோம் நமக்கென்ன நஷ்டம். கூடவே கிகுஜிரோ பார்த்திருக்காவிட்டால் என் சொந்தக் கதையை எப்படி படமாக எடுப்பது என்றோ அல்லது அது படமாக எடுக்கக் கூடியதுதானா என்றோக்கூட தோன்றாமல் இருந்திருக்கவும் வாய்ப்பு இருக்கிறது என்கிற 
அர்த்தமும் வருவதை எப்படிதான் தடுப்பது?

என் கதை என் வாழ்க்கையில் நடந்த கதை என்று அடிக்கடி சொல்லிக் கொண்டு இருந்தால், மன சமாதானத்திற்காக சொல்கிறீர்களோ என சந்தேகம்தான் வலுக்கும். அதே போல தாய்மையை எடுத்திருக்கிறேன் என்று சொல்லிக் கொண்டிருப்பதை விட்டு வாய்மையோடு எடுத்திருக்கிறேன் என்று சொல்ல முயற்சி செய்யுங்கள். 

இதுதான் உயர்ந்த கலையாக ஆகும் என்றெல்லாம் தனியாக சப்ஜெக்ட் இருக்கிறதா என்ன. உயர்ந்த கலைஞன் தொடுவதெல்லாம் உன்னதக் கலைப் படைப்பாகத்தான் கண் திறந்திருக்கின்றன். நம் கண்களையும் திறக்க வைத்திருக்கின்றன.

சொம்மா சொம்மா அம்மா ஆயா அழுவாச்சின்னு எடுத்துகிட்டு இருந்தாதான் உன்னதக் கலைனு எல்லாம் கிடையாதுங்கோ. லோக்கல் எலக்கியப் புண்ணாக்குங்க, ஒண்ணா மாயா யதார்த்த வாதம்னு குதிக்குங்கோ, உட்டா நேரா ஆயா இதுதான் பதார்த்தம்னு சப்ளாங்கால் போட்டுக்குங்கோ. 

ஏண்டா, உப்பு சக்கரைனு பாத்து பாத்து பேலன்ஸ்டா கொட்டிக்கறீங்க  இல்லே, அது இன்னாதது சினிமான்னு வந்துட்டா மட்டும் கோமணம் கூத்தாடுது. 

ஏம்ப்பா நீங்கதான் எலக்கிய அறம் கைலையே வெச்சிக்கிணுத் திரியறவனுங்களாச்சே ஒருத்தனாவுது மிஷ்கின்னுக்கு அட்வைஸ் பண்ணீங்களா? 

ங்கொய்யால படத்துல ஒரு தாங்ஸ் சொல்றதுக்கு ஏண்டா இவ்ளோ அவதி?

மிஷ்கின் சார், டைட்டிலில் கார்ட் போட்டு வழக்கு வியாஜியத்தில் மாட்டிக் கொண்டு கட்டைவிரல் இழந்து ஏகலைவனாக ஆனால்தான் குரு மரியாதை என்று இல்லை. மிகக் கவித்துவமாக குந்தன் ஷா போலவும் செய்யலாம். இத்துனைக்கும் அது தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம் என்கிற அரசு நிறுவனம் தயாரித்த படம்.

ப்ளோ அப் 90களின் சர்வதேசத் திரைப்பட விழாவில் பார்த்த படம்தான். ஜானே பி தோ யாரோ அண்ணா தியேட்டரில் நண்டு சிண்டுகளோடு 1984ல் பார்த்த படம்தான். அண்டோணியோணி பார்க் என்கிற பலகை பற்றி நண்பர்களோடு விவாதித்தும் இருக்கிறேன். படத்தின் இறுதியில் வரும் மார்ட்டின் லூதர் கின்கின் வி ஷேல் ஓவர்கம் பாடலின் இந்தி வடிவம் ஹோங்கே கார்ம்யா ஏக் தின் மனதிற்கு மிக நெருக்கமானதுதான். காரனம் பாதல் சர்க்காரின் ஜூலூஸ் நாடகத்தின் (தமிழில் ஊர்வலம் - பரீக்ஷா) இறுதியில் நாங்கள் வெல்லுவோம் என ம்யூஸியம் தியேட்டரில் பாடியும் சென்றிருக்கிறேன்தான். 

அவ்வளவும் என் அனுபவம்தான், நான் வாழ்ந்து அனுபவித்ததுதான் எனினும் 


இந்த சுட்டியில் இருக்கும் இந்தப் பக்கத்தை மட்டும் இன்று நான் படிக்க நேர்ந்திருக்கவில்லை எனில் இன்று இந்தப் பதிவு எழுதி இருப்பேனா என்பதே சந்தேகம்தான். (பின்னொரு நாள் நானேஎழுதியிருக்கக்கூடும் ஆனால் அது பிறிதொரு பதிவாகத்தான் இருந்திருக்கும் இதுவாக இருந்திருக்காது இல்லையா)

இதைச் சொல்லாமல் போவேனாகில் நந்தலாலா போலவே நானும் தேடிப் போக வேண்டியதுதான் என் அம்மாவை அல்ல என் அப்பனை.

உண்மையான மரியாதை உதட்டில் இல்லை, மனதில் இருக்கிறது, மனசாட்சி என்பது அதன் பெயர்.


மெயிலில் வந்த கருத்துகள்

1.
fromlogu ravi <logieravi@gmail.com>
tomadrasdada@gmail.com
dateTue, Nov 30, 2010 at 12:34 PM
subjectஜப்பானில் மிஷ்கின்
mailed-bygmail.com
signed-bygmail.com
hide details 12:34 PM (1 hour ago)

அகிரோ குரோஷோவாக்கள் மரிக்கின்றார்கள்
மிஷ்கின்
பிடித்த இயக்குனர்
1.அகிரா குரோஷோவா
2. அகிரா குரோஷோவா
3.அகிரா குரோஷோவா
4.அகிரா குரோஷோவா
5.அகிரா குரோஷோவா
நந்தலாலா
1.பின்ன்னி இசையின் மேதைமை
2.உலக சினிமாவின் பரிணாமம்
3.இந்தியாவின் ஆர்ட் பிலிம் மாதிரிகள் உலக படத்தின் முன் நெருங்குவதில்லை
4.போல செய்தல், தொடர் நிகழ்வு
5 தன் மக்களுக்கான களனை தேர்வு செய்யாத்து
6. லாங் சாட்கள் உலக படங்களில் நான் பார்க்கவில்லை                
            யோகி சிறந்த படம என்றால் நந்தலாலா சிறந்த படம்தான்
>>
நந்தலாலா புகழும் பதிவர் உலகம், சாருவின் ஆயிரத்தில் ஒருவன், அங்காடி தெரு, விமர்சன்ம் படிக்கவும்
>>ஜப்பானிய இயக்குனர்களை தொடர்ந்து புகழும் இயக்கனர்கள் அவர்களை சரிவர உள்வாங்வில்லை


fromramji yahoo <yahooramji@gmail.com>
tomadrasdada@gmail.com
dateTue, Nov 30, 2010 at 2:37 PM
subjectலோகு ரவி யின் கருத்துகள் சரியாகத்தான் இருக்கும் ena எண்ணுகிறேன்.
mailed-bygmail.com
signed-bygmail.com
hide details 2:37 PM (3 hours ago)

லோகு ரவி யின் கருத்துகள் சரியாகத்தான் இருக்கும் ena எண்ணுகிறேன்.
எனக்கு உலகப் படங்கள் அதிக அளவில் பரிச்சயம் கிடையாது.


--
ramji_yahoo
Regards