Thursday, December 9, 2010

இது தமிழ்நாடு ஒரு நாளும் தலிபான்நாடு ஆகாது.

கலைவாணி 
காபரே ஆடவேண்டுமென்று 
கட்டாயமா என்ன 
நடந்தாலே அது நடனம்

இது நான் முகநூலில் எழுதி இருந்தது.

அதற்குப் பின்னூட்டங்களாக

Sethu Vairam என்ன சார், இது கலைவாணியை போய்,காபரேனு காயப்படுத்துறீங்க?


Eltech Chennai if not help or praise no hurting on others sentiments PLEASE....

Antony Anbarasu கலைவாணி என்பது பெயர்ச்சொல் போலும் :P

இதற்கு என் பதில்

கலைவாணிக்குக் காப்பிரைட் அல்லது கஸ்டடி ரைட் வச்சிருக்கறவங்க யாரு? சொல்லவரது என்னன்னு தெரிஞ்சிகிட்டு சொம்பத்தூக்கினா பெட்டர்.

காரல் மார்க்ஸை ரெஃபர் பண்ணினா ஒருத்தர்க்கு காயமாயிடுது.

கலைவாணின்னா இன்னோருத்தருக்கு காயமாயிடுது.

காயமாக்கிக்கறதுக்குன்னே காயத்தை சுமந்துகிட்டுத் திரியிறீங்களோ.

எனக்குக் காயம் பட்டுடுச்சின்னு கலைவாணி வந்து சொல்லட்டும் கட்டு போடப் பாக்கறேன்.

ஹே முண்டேன்னு காளியத் திட்டின காளிதாசனைப் போயி மொதல்ல கேளுங்க. அப்பறமா அவன் பேரன்கிட்ட வாங்க.

இப்பப் போயி சாப்ட்டுட்டுத் தூங்குங்க.

இது தமிழ்நாடு ஒரு நாளும் தலிபான்நாடு ஆகாது.