1997 ல் கணினியைக் கண்டு பயந்ததைப் போல், தட்டச்சையும் பார்த்து முதலில் பயந்துதான் போனேன். ஏற்கெனவே கொஞ்சம் கொஞ்சம் வெவ்வேறு மென்பொருட்களில் அடித்திருக்கிறேன், என்றாலும் நீளமாக அடிக்க முனைகையில் எக்கச்சக்க பிழைகள். அழகிதான் சிறந்தது என எண்ணி அதில் பழகிவிட்டேன். NHM அதைவிடவும் சிறப்பாகவே உள்ளது. ஆனால் ந் nh க்கு பதிலாக w க்குப் போய்விட்டது. ழ் க்கு z அடித்தாலே போதும். இந்த மாற்றதிற்குப் பழக, கொஞ்சம் அவகாசம் எடுக்கக்கூடும். தமிழ்கூறு நல்லுலகு அதுவரை தாங்கித்தான் ஆக வேண்டும். தாங்கிக் கொள்ளல் தமிழனின் தனித்துவம்.
செப்டம்பர் 1994 ல் எழுதிய சோழிகள் என்கிற கதை அகநாழிகையில் இரண்டொரு நாளில் மீள்-பிரசுரமாக வர உள்ளது.




