Wednesday, January 12, 2011

ஆயோன் பாயிரம் - 1

இஸ்ட்டும் ட்விஸ்ட்டும்


காரல் மார்க்ஸிஸ்ட்டு
ஃப்ரெட்ரிக் ஏங்கலிஸ்ட்டு
வ்ளாடிமிர் இலியிச் உல்யனோவ் லெனினிஸ்ட்டு
ஜோசெஃப் ஸ்டாலினிஸ்ட்டு
மா ஓ சே தோங்கிஸ்ட்டு
நக்ஸல்பாரியிஸ்ட்டு
லோக்கல் டச்சுக்குப் பெரியாரிஸ்ட்டு
அபயத்துக்கு அம்பேத்காரிஸ்ட்டு


இருட்டுக்கு உள்ளிருக்கும் காமாக்ஷிக்கு,
எக்ஸ்ட்ரா துட்டு கொடுத்தால்
அஷ்டோத்திர சத நாமாவளியை 
கற்சிலைக்கும் கடவுளுக்கும் இடையில் நின்று
ஸ்பஷ்டமாய் முழுக்கச் சொல்லும்
பார்ப்பானிஸ்ட்டுக் காலில் விழுவதற்கு
இஸ்ட்டும் ட்விஸ்ட்டும் என்னத்துக்கு?

நாங்களெல்லாம்
பூமா தேவியின் மேல்
சாஷ்டாங்கமாய்ப் படுத்து நமஸ்கரிக்கும்
மூட சிம்பிளிஸ்ட்டு.

*******************

கூமுட்டக்கு மேடைகொடுத்த குருமுட்டை

மறைக்கல்லே நானெதையும் மறைக்கல்லே
வேஷமற்ற நிர்வானத்தில் தானிருக்கேன் 
மானக்கேடு எனக்கில்லே!

கண்டாமணி ஆடக் கத்திக் கொண்டிருந்தார்

ஆபாசம் எனச்சொல்லி எனையேண்டா
அரெஸ்ட்டு செய்றீங்கள்!

மேடையில் நின்றபடி
தாடி நீவி முழங்கினார்

தாற்காலிக மேடை
அமைத்துக் கொடுத்தவனையும்
அபெட்டார் எனச்சொல்லி அள்ளிற்று
குற்றவியல் சட்டம்

*******************

ஸ்வாமிஜி

வக்கிருந்தால் பெற்றுக்கொடு
மூணாவதாயும் கட்டிக்கிறேன்.

காமாக்ஷிக் கடாக்ஷம் பரிபூரணம் என நம்பி
நரபலி கேட்டு நீண்டது நாக்கு

வக்கத்தப் பயல் தத்தெடுத்துக் கொடுத்தான்.

பேத்தியைக் கட்டிகிட்டவன்
கம்பி எண்ணிகிட்டு இருக்கான்
பிரகாஷோடு.