Saturday, January 1, 2011

முட்டாளுக்கு மூணு மொக்கை

கோழை

எல்லோரும் அறிய
காறிவிட்டு
எத்துனை நேரம்தான்
வாயிலேயே 
வைத்திருக்க உத்தேசம்.

ஒன்றா துப்பு
இல்லையேல் முழுங்கு
எல்லோருக்கும் உள்ளதுதான்

கெளரவக்காரா!
உனக்கு மட்டும் என்ன
தங்கத்திலா தொங்குது

 **************

ஓட்டுண்ணி

ஓட்டுப் பொறுக்கி
ஓட்டுப் பொறுக்கி என்று
ஊரில் இருப்பவனையெல்லாம்
பார்த்து
ஓயாமல் கோஷி

காசு கட்டி
ஓட்டைப் பொறுக்கறியே
உன்னால்
இந்திய ஜனாதிபதியாகவாவது
ஆக முடியுமா?

சொந்த காரியம்.
ஓ அப்ப சரி
சுக்ல பக்ஷத்தில் ஆரம்பி

 ************

நம்பிக்கை

நம்பிக்கை.
மிக ஆழமான நம்பிக்கை எனில்
மெடலாகக் குத்திகொள்

நம்பித்தான் இவன் இடிச்சித் தள்ளினான்
நம்பித்தான் அவன் குண்டு வெக்கிறான்
நம்பித்தான் நீ கொல்லுடான்னு கோஷம் போடறே

அப்பா பாரு அப்பா
ஆத்தா சொல்ல நம்பித்தான
அப்பான்னே கூப்புட்டே

நல்லா இருக்குன்னு சொல்லுறதை
நம்பிக்கிட்டுதாண்டா எல்லாரும்
ஆடிகிட்டு இருக்கான்

எதுர்ல இருக்கற ஜென்மம் நல்லா இருக்குன்னு
சொல்லுறதை நம்பிகிட்டுதாண்டா

எல்லாரும் இங்க ஆட்டிகிட்டு இருக்கான்

நம்பிக்கையின் பேர்ல
எம்பி எம்பிக் குதிக்கறான்
ஏகப்பட்ட பேரு