Monday, January 17, 2011

புதுமைப்பித்தன் - நவீன தமிழின் கலகமுகம்

”இணையற்ற இந்தியா”

இந்தியா தேசம்-அது
இணையற்ற தேசம்!-என்று
யாங்களு மறிவோம்-வெள்ளை
ஆங்கில ரறிவார்-பிள்ளைத்
துருக்கனு மறிவான்-அறிவால்
சூழ்ந்தது தொல்லை.


வேறு

சிந்தையிலே பின்னிவைத்த சிலந்திவலைச் செல்வி
செல்வழியில் கண்ணியிட்டு செயத்தம்பம் நாட்டும்!
“எந்தையர்கள் நாடல்லோ இமையவர்கள் நாடு!
இமவானின் ஆதரவில் இருந்துவரும் நாடு!
கந்தமலர் பூச்செறிவில் கடவுளர்களோடு
கன்னியர்கள் கந்தருவர் களித்துவளர் நாடு”
என்று பல சொல்லியதை சொல்லளவில் நம்பி
எவனுக்கும் மண்டியிடும் ஏந்து புய நாடு!
ஆற்றுக் கரையருகே அணிவயல்கள் உண்டு;
சோற்றுக்குத் திண்டாட்டம் சொல்லி முடியாது!

வேறு

வேதம் படித்திடுவோம் வெறுங்கை முழம் போட்டிடுவோம்
சாதத்துக் காகச் சங்கரனை விற்றிடுவோம்!
அத்தனைக்கும் மேலல்லோ அஹிம்சைக் கதை பேசி
வித்தகனாம் காந்தியினை விற்றுப் பிழைக்கின்றோம்!

இந்தியா தேசம்-அது
இணையற்ற தேசம்.

- புதுமைப்பித்தன்

*******************
ஜெயமோகன் சார்வாள், 
புதுமைபித்தன் இப்படிப் பேத்தி இருக்கானே, அருந்ததி ராய்க்கு சைனாலேந்து வறாப்ல, எந்த தேசத்துக் கரன்ஸி அவனுக்கு வந்துதுன்னு ஆராய்ச்சி பண்ணி, விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்துல ஒரு செமினார் நடத்துங்களேன், தேச  க்ஷேமத்துக்காக. 
புதுமைப்பித்தனும் குருவி மண்டையா?
தெத்துப் பல்துருத்திப் பயலா?

பட்டறையில் பங்கேற்பவர்களுக்கு - ஹிந்து ஞான்மரப்பா இலவசம். 
சிறப்புப் பார்வையாளர் சினிமா சிந்தனையாளர் ஸ்ரீமான் மணிரத்தினம் சார், ஸ்பெஷல் அர்ச்சனை பொன்னியின் செல்வன் அருளிச் செய்த, ஸ்ரீலஸ்ரீ கல்கி பகவானுக்கு!
குறி கோ விந்து

புதுமைப்பித்தன் புத்தகத்தின் மேல் 
ஒன்றுக்கடிக்கச் சொன்ன 
சூன்ய 
சுய இன்ப அரிப்பே
முடிந்தால் தூக்கி அடித்துப் பார்.

ட்ரான்ஸ்ஃபார்மரைக் 
குறி பார்த்து 
செல்லும் சிறுநீர் 
தீப்பொறிகளாய்த் திரும்பிவரும்.

புட்டத்தைச் சொறிந்தபடி 
நாக்கைத் துழாவி
பொக்கைவாயால் 
மெல்லுவதை எல்லாம்
இலக்கியம் எனச்சொல்லிக்
கொல்லும்
மனிதவதை நிறுத்து
பாட்டுக் களஞ்சியமே!

வாக்கின் முதுகினிலே
வந்துவிழும் நினைவெல்லாம்
கற்பனையென்றே சொல்லி
காலமெனும் வீதியிலே
அந்திச் சரக்குவிற்கும்
அங்காடிக்காரிகள் போல்
முதுசொற் புலவோர்கள்
முன்பெழுதி முன்பெழுதி
முறைமுறையாய்த் தானெழுதி
கருத்தை எலும்பாக்கி
காச நோய் பற்றியபோல்
தன்னுருவைத் தானிழந்து
தத்துவத்தால் மேதினியில்
தன்னை யழித்தவர்போல்
த்ன்னிலே சூனியத்தைக்
காட்டிப் பின்-
சொல்வோர் முகத்தில் 
சோதி ஒளிகாட்டியந்தச்
சொல்லில் படுவோர்
சொல்லிலெதோ உண்டென்று 
வரட்டெலும்புதான் கடித்து
வாலாட்டிப் பொழுதயரும்
அலர்மகளின் அட்டமத்துச்
சனியான
அருமைத் திருமகனே!

பாட்டுக் களஞ்சியமே
பலசரக்குக் கடைவையேன்!
இருக்கின்ற துன்பத்தை
எடுத்தேந்தும் வல்வினையே!
சற்றேநீ மவுனம்
சாதித்தால் போதுமடா!
எழுத்தை மறந்துவிடு
எருவடுக்கிப் பிழையப்பா!
கிடக்கட்டும்...

*****************

அடடா! சண்டாளா!
சரஸ்வதியாள் சனிவீடே!
ளகர லகரம் புரியா 
நினக்கோ
லகரத்தில் அர்ச்சனை செய்
சடையப்ப வள்ளல்பலர்!
ஏண்டா இடும்பு? இந்த
சோலிக்கு ஏன் வந்தாய்?
உடும்புப் பிடியாலே
ஊட்டிதனை நெருக்கும்....

*******************

நாட்டுக்கவி என்பார்
நாகணவாய்ப்புள் என்பார்
கோட்டுக்குயில் என்பார்
குருக்கத்திப்பூ என்பார்
பட்டணத்துப் பஸ்எல்லை
தாண்டி யறியார்தமை
தண்டி யெனவே புகழ்வார்
பகவானருளால்
பகல்குருடர் சஞ்சீவி-
புளிய மரத்தைப்
புத்தகத்திலே மட்டும்
பார்த்தறிந்த பண்டிதரின்
பக்கபலமாய் விளங்கும்
அபிதான சிந்தா
மணியடித்து
கிராமக் கவிதைஎனும்
கிண்ணாரக் குப்பைதனை
ஊரில் சுமடேற்றும்
உண்மைசொல யாருண்டு?
கும்பல் கோமாளியைப்போல்
வேடமிட்டே நடந்தால்
கோமாளிக்கார் சிரிப்பார்?
ஊரே திரண்டு....

- புதுமைப்பித்தன்