Thursday, January 13, 2011

ஒரு புடுங்கி உத்தியோகம்


@ உங்கள் இடுகைகளை இரவில் போடுங்கள். காலையில் பிரமீள்,மார்தா த்ராபா எல்லாம் கண்ணில் பட்டால் வேலையே ஓடாது.

பஸ்ஸில்: அனுஜன்யா மும்பை - வாவ், என்ன மாதிரியான கவிதை! பிரமிள்! 


நீங்க முதல் ஷாட்டை விவரித்ததும் அட்டகாசம். இந்தக் கவிதையும், அன்று உங்கள் அனுபவமும் எப்படி ஒன்றிப் போகின்றன! ஏன்னு தெரியல. இந்த பஸ் ரொம்பப் பிடிச்சிருக்கு பாஸ்.


 @அனுஜன்யா மும்பை: 

’கன்னி’ கவிதை பத்தித் தனி பதிவெழுத வெக்கறீங்க சந்தோஷம். ஆரம்பிச்சிட்டேன்.  இந்தக் கவிதை பத்தி பிரமிள்கிட்டப் பேசினப்போ அவன் - பிரமிளின் ஆர்வலர்கள் மன்னிக்கவும், இப்படி விளிச்சாதான் தருமுவைப் பத்தித் தெருத்தெருவா கெடச்சவன் கிட்டல்லாம் பேசின காலம் போல இருக்கு, அவர்னு சொல்றது கோட்டு சூட்டு மாட்டிக் கோமாளி வேஷம் போட்டு மேடைக்கு ஆடறாப்புல இருக்கு - தருமு சொன்ன ரெண்டே வார்த்தை. ”விவிட் எக்ஸ்ப்ரஷன்”. 

நாம ஒக்காந்து ஹம் ஹம்னு, வெளிப்படுத்தத் தெரியாம  கையைக் காலையெல்லாம் பக்கவாத்தியமா ஆக்கிக்கிட்டு, என்னென்னமோ சொல்லி திண்டாடிகிட்டு இருக்கறோம். அவன் ஒரு வீச்சுல அறுத்து கட்டி வெச்சிட்டுப் போயிக்கிட்டே இருக்கான்.

என்ன மசுத்துக்கு இப்ப நெஞ்சு விம்மி, இந்தக் கண்ணு கலங்கி மானிட்டரை மறைக்குது.

ரெண்டு ரிப்போர்ட்டு நாலு பேப்பர் அட்டெண்ட் பண்ணனும். நாலு நாளா ரெண்டு ஃபைலைத் தேடிகிட்டு இருக்கேன். இருக்கறதே 88 இருந்தா ஜாஸ்த்தி. ஆனாக் கெடைக்க மாட்டேங்குது தரித்திரம். ஹைக்கோர்ட்டு அப்பீல் மேட்டர். 

ஏப்ரல் 2010தோட 28 வருஷம் சர்வீஸ் முடிஞ்சிடுச்சி. 5 வருஷம் வெய்ட்டேஜ் போட்டா அதிக பட்சமான 33 வருஷத்தைத் தொட்டுடும். முழு கிராச்சுட்டி 16.5 மாச சம்பளம் லம்ப்பா கெடச்சுடும்.

விஆர்எஸ் குடுத்துட்டா, கஞ்சி ஊத்த வக்கில்லே என்னடா உங்க கெவர்மெண்ட்டுன்னு பாடிகிட்டு ஹாய்யா, நானும் கூடப் புரட்சி பண்ணலாம். 

ரெண்டே ரெண்டு விஷயம்தான், பல்லைக் கடிச்சிக்கிட்டு, தினமும் 25 + 25 கிமீ பெண்டு கழல, பைக்கோட்ட வெக்குது.

1.பெஸ்ண்ட் நகர் க்வார்ட்டர்ஸ் காலி பண்ணிட்டு, கிரோம்பேட் குக்கிராமத்துல போய் ஒக்காரணும்.
2 டிவிடி பாக்க .ஃபுல் பென்ஷன் பத்தாதப் போனா சினிமா டிஸ்கஷனுக்குப் போய் பெட்ரோல் பேட்டா எதிர்பார்த்து சீரழியணும்.

அந்தக் கேவலத்துக்கு, இன்னும் இருக்கிற பத்து வருஷ சர்வீஸை, அரசு வேலையை அண்டியே கெவுருதையா வாழ்ந்துடலாம். 

எனக்கும் ஒரு நல்ல டைம் வராமலா போயிடும். மிஞ்சி மிஞ்சிப் போனா அடுத்த ஜூன் பொது மாற்றத்தில் ஆறேழு கிலோ மீட்டர் தொலைவுக்குள்ளப் போயிடமுடியாதா என்ன? 

கொஞ்சம் உடல் சிரமம் கொறைஞ்சா, மனசை இன்னும் கொஞ்சம் முறுக்கலாம், மூளையைக் கொஞ்சம் கசக்கலாம், கூடக் கொஞ்சம் எழுதல்லாம். (நிண்ணு நிதானமா வாங்கடா வாங்கடான்னு சண்டையும் போடலாம்)

ஒரு புடுங்கி உத்தியோகம் - ஞானக்கூத்தன் (தவளைகள்)