Thursday, January 6, 2011

சுந்தர ராமசாமிக்கு சில கடிதங்கள்

சுந்தர ராமசாமியின் காலச்சுவடில்

நித்தின் குல்கர்னி, நான், சுதிர் ரவுத், பூப்பேந்த்ர மஜும்தார். 


சைக்கிள் பயணத்தில் தடை செய்யப்பட்ட சிகரெட் பிடிக்க மரம் சந்து பொந்து தேடிக்கண்டடைதல் ஒரு தினப்படிப் பிரச்சனை. புறப்பாடு கதையில் குறிப்பிடப்படும் (பைப்புக்கான) ’சுருட்டற சிகரெட்’ புகையிலை இழைகளைக் கொஞ்சம் போல எடுத்து, ஸ்பெஷல் துண்டுத்தாளில் சுருட்டிப் பிடிக்கிற பிரத்தியேக சிகரெட், பெரும்பாலான மட்டிப்பயல்களால் கஞ்சாவாக நம்பப்பட்டு வதந்தியாகப் பரப்பப்பட்டு, மதுரைக்கு முன்னாலேயே என்னை மூட்டைகட்ட பெரும் ஆலோசனை நடந்தது. ஜம்முவை அடைந்தபோது ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொண்டபோது மைதானத்தின் தொலைதூர மூலையில் எல்லாக் கூத்தையும் தனியனாக நின்று பர்த்துக் கொண்டிருந்தேன். மனம் வெறுமைப் பட்டிருந்தது. சில பெண்களும் விரலெண்ணிக்கையிலான பசங்களும் தேடி வந்து கண்கலங்னர். 

எங்கே போனாலும் எனக்கென்றொரு வில்லன். எனக்குத்தெரியாமல், ஃபோட்டோ எடுத்த அத்துல் சர்மா பாபா ஆம்தேவிடம் போட்டுக் கொடுக்கவே இந்த சாட்சி என்றான் பிறகொரு நாள் சிரித்தபடி. கேமரா கண்டதும் கக்கா போவது போல் ஃபோட்டோவைக் கெடுத்தது பெயர் தெரியா ஒரு பூதம்.

அலுவலகப் பிரச்சனையில் உடனடி மேல் அதிகாரி ஒருவர் திருமணச் சந்திப்பொன்றில் கூறினார். நரசிம்மன் எல்லோரும் அடைவது போல நீங்களும்தான் இலக்கை அட்கிறீர்கள். உங்கள் பதவி உயர்வு முதலாக அனைத்தியும். ஆனால் மற்றவன் சர்வ சாதாரணமாய் அடைவதை நீங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு என்ன விலை கொடுத்து அடைகிறீர்கள். வருத்தப்பட வேண்டாம். யோசித்துப் பாருங்கள் என்றார்.

அவர் என்மீது மிகுந்த மரியாதையும் அன்பும் கொண்டவர். 

பிரயாணத்தின் வெற்றி இலக்கில் இல்லை. எனக்குப் பிரயாணம்தான் இலக்கு என்றால் அவருக்குப் புரியுமா என்கிற சந்தேகத்தில் சிரித்துக் கொண்டு சும்மா இருந்துவிட்டேன். 
இயல்பிலேயே மற்றவர்கள் போல இருக்க முடியாதவன். எல்லோரும் திங்கும் போது தூக்கம். ஒரு நாள் கடைசி பந்தியில் சமையல் காரர்களோடு சாப்பாடு. மறுநாள் முதல் ஆளாய். ஜூன் மாத பிறப்பின் சூனியம்.


ஜேக்கப் நல்லித்தலன் சுவாமிஜி. இன்னும் இது ஒண்டிக்கட்டையாய் சமூகசேவையிலேயேதான் இருக்கிறது என நினைக்கிறேன். நல்ல ஊமைக்கோட்டான்.


16 வருஷ இலக்கிய லீவ் காரணமாக இதில் என் கடிதங்களும் பிரசுரிக்கப் பட்டிருப்பினும் முந்தாநாள்தான் சுகுமாரன் மூலம் எனக்குக் கிடைத்தது.