Monday, February 14, 2011

பாஸ் நீங்க இவ்வளவு பூஞ்சையா பாஸ்! சொல்லவே இல்ல!


அவதூறுகள் ஏன்? - ஜெயமோகன்

February 13th, 2011

யார் செய்த அவதூறுகள்! ஜெயமோகனுக்கு எதிரான விமர்சனம் செய்வது அவதூறு! அப்படியெனில் சமகாதலத்த் தமிழின் நடமாடும் காந்தி அருந்ததி ராயைக் ’குருவி மண்டை’ என்று கூறியது என்ன? சிந்தனைத் தெறிப்பா? இல்லை தேஷ் பக்தி!

தட்டிக்கேக்க ஆளில்லேன்னா தம்பி பெரிய சண்டப் பிரசண்டன்.


April 1st, 2004

<ஒவ்வொரு காலத்திலும் ஒருவர் என் மீது வெறுப்பைக் கொட்ட உக்கிரமாக முயல்வது உண்டு. நான் எழுத ஆரம்பித்த காலத்தில் அக்கினிபுத்திரன். பிறகு விமலாதித்த மாமல்லன். பிறகு அறிவுமதி. இப்படிப் பலர். மாதம் ஒரு கட்டுரையாவது இவ்வாறு எழுதப்படுகிறது- நான் ஒரு அடிமுட்டாள், அரிச்சுவடி கூடத்தெரியாதவன், கடைந்தெடுத்த அயோக்கியன் என்றெல்லாம். ரவி சீனிவாஸ் என் கருத்துகளையோ தரப்பையோ மறுக்கவில்லை, நான் ஒரு வடிகட்டிய முட்டாள் மட்டுமே என நிறுவ ஓயாது முயல்கிறார். நான் எப்போதுமே என்மீது கொட்டப்படும் வெறுப்பலைகளை இம்மிகூட பொருட்படுத்தியத இல்லை. பொருட்படுத்தியிருந்தால் இந்த அளவுக்கு ஊக்கத்துடன் எழுதியிருக்க இயலாது.

அதற்கு இரு காரணங்கள். என் இடம் எனக்குத்தெரியும். அதை உணர்ந்த வாசகர்கள் எனக்கு உள்ளனர்.

1994ல் ஆற்காட் ரோடு மேம்பாலத்திற்கு அடியில் அரவிந்தனிடம்,  சுகுமாரன் சுந்தர ராமசாமி என மூலக்கதை கவிதைகளில் இருந்து ஜெயமோகன் எப்படி சுடுகிறார் என நேர்ப்பேச்சில் விளக்கமாய் விவரித்ததற்கு, 2004ல் 10 வருடம் கழித்து நான் எழுதுவதையே நிறுத்திய பிறகு, கிட்டத்தட்ட என் பெயர் அறியா ஒரு தலைமுறை வாசகர்களும் எழுத்தாளர்களும் வந்த பிறகு, தமது ஆகப்பெரிய முடவன் வளர்த்த வெள்ளைப்புறாக்களில் இருந்து சுட்ட சாதனையான (அப்போது எனக்குத் தெரிந்திராத) பின்தொடரும் நிழலின் குரல் வெளியாகி தமிழின் தன்னிகரற்ற பேராளுமையாக இணையத்தில் நிறுவிக்கொண்ட பிறகும் கூட ஏன் இன்னும் இந்த அடிமனக் குறுகுறுப்பு? 

இணையத்தில் கூட ஜெயமோகனின் கொடி அவர் சொல்லும் அளவிற்கு எல்லாம் ஒன்றும் பட்டொளி வீசிப் பறக்கவில்லை, அலெக்ஸா ரேட்டிங்கில் சவுக்கு, சாரு நிவேதிதா, வினவு என பலர் முன்னிலையில் இருக்கின்றனர், அவர்களுக்கெல்லாம் மிகப்பின் தங்கியே (நான் கூறியது சில மாதங்களுக்கு முன். அந்த சமயத்தில் ஜெயமோகன் 14,000, சாரு 7,000, வினவு 8,000 என்றிருந்தனர்) என ராயப்பேட்டைப் பாலத்திற்கு அடியில் வசிக்கும் ஜெமோவிற்கும் எனக்குமானப் பொது நண்பரிடம் சாதாரணத் தகவலாக, கூறினேன். அதற்கு மக்யா நாளுக்கு மக்யா நாள் சிவராமன் என்பவர் இதைக் கேள்வியாய்க் கேட்கிறார் அவர் வலைபூவில். ஆதெள கீர்த்தனாரம்பத்திலே கேபிள் சங்கர் தான் நெம்பர் ஒன்......மஹாஸ்வாமிகள் விளக்கவுரை நல்கினார்.  இதற்குப் பெயர் பொச்சரிப்பா இல்லையா? இல்லையில்லை, ஓ! அரித்துக்கொண்டே இருக்கும் பொச்சா?

இது ஒரு தம்மாத் தூண்டு விஷயம். இது கூட தாங்கவியலா மென்குழவி வாய் திறந்தால் டிண்-ட்ரம் சிறுவன் போலக் கண்ணாடிகள் நொறுங்க கூச்சல் இடுகிறது. இதற்குப் பின்னணியாய்க் குலவியிட ஒரு உச்சிஷ்ட சிஷ்ய கும்பல்.
Tindrum

விமர்சனம் தாங்க முடியா வெறுப்பு உமிழ்வு? 

எம் போன்ற இலக்கியச் சிறு பயல்களின் விமர்சனத்தைக் குச்சி ஐஸ் எச்சி ஐஸ் எனச்சொல்ல ஜெமோவின் கோளம்பி கோஷ்டி இருப்பதைப் புரிந்து கொள்ளலாம். 

தன் சாதனை சரித்திரத்தைத் தாண்டியது எனத் தானே சொல்லிக்கொள்ள வேண்டிய அளவிற்கு ஏன் இந்த இன்செக்யூரிட்டி ஜெயித்துக் கொண்டே இருக்கிற மோகனான வினைத்தொகையாம் ஜெயமோகனுக்கு?

பாஸ் க்ரேட் டிக்டேட்டர் படம் பாருங்கள். ச்ரேஷ்ட உச்சிஷ்டர்களும் பார்க்கலாம் ஜெயமோகனுடையதைத் தவிரவும் அவ்வப்போது இந்த உலகில் உள்ள உருப்படியான வேறு சில விஷயங்களையும் பார்க்கலாம்தானெ. 

க்ரேட் டிக்டேட்டரில், பூமி உருண்டையை வைத்துக் கொண்டு விரல் நுனியில் சுழற்றத் தொடங்கி, 

பல சேஷ்டைகள் செய்து படாதபாடு படுத்தி கடைசியில் அதை இருக்கையென பாவித்து அதன் மேல் உட்கார அது வெடிக்க, அடுத்த நொடியில் ஹிட்லராக நடிக்கும் சாப்ளின் இருக்கும் இடம் திரைச்சீலையின் மேல் நுனி!

சர்வ வல்லமையுடன் உலகை வெற்றிலையாகக் குதப்பிக் கொண்டிருந்தவனின் குண்டிக்குக் கீழே சின்ன பலூன் வெடிப்பு என்ன செய்கிறது எனச் சித்தரித்து டவிசர் கழற்றிய சாப்ளினைக் கொல்லத் தனிப் படை அனுப்பினான் ஹிட்லர்.

ஜெயமோகன் பாவம் எழுத்தாளர் கம் சிந்தனையாளர் அல்லவா, அவரால் தன் விமர்சகர்களுக்கு எதிராக ஹிட்லர் போலக் கொலைப்படையா அனுப்பி வைக்க முடியும்? ஏதோ அவர் ரேஞ்சுக்குக் கட்டுரை எழுதுகிறார்.

பாஸ் நீங்க இவ்வளவு பூஞ்சையா பாஸ்! உங்க அடிப்பொடிகள் கூட சொல்லவே இல்ல!