Monday, February 14, 2011

ஜெயமோகனின் கடவுள் இருக்கும் பொந்து சோனா கஞ்சின் சந்து


கூகுள் பஸ்ஸில்
ஸ்ரீதர் நாராயணன் - //புனைவு என்றால், மற்றவர்கள் பற்றி அவர் கூறுவது எப்படி எடுத்துக்கொள்வது, போகிற போக்கில் தூற்றுவது போலா? // 

அது எம்விவியோட நடந்த சந்திப்பை முன்வைத்து எழுதப்பட்ட கதைதானே. பிறகு வெளியிட்ட ஒரு கடித்த்தில் ‘இந்தக் கதை பல வருடங்களாக எழுதப்படாமல் ஏதோ குறைவது போலிருந்தது.... பிறகு அந்த ஆச்சி வந்து சேர்ந்த பிறகு நிறைவடைந்தது’ என்று எழுதியிருக்கிறார்.

***********

எனக்கு ஆரம்பத்தில் இருந்தே நெருடிக்கொண்டிருந்த விஷயங்கள். 

1.ஆச்சி உட்காரும் தார் ரோடு. திருச்சியில் தெப்பக்குளத்தருகில் 50ல் தார் ரோடு போடப்பட்டிருக்குமா? மெளண்ட் ரோடு தவிர மெட்ராஸிலேயே அப்படி இல்லாத போது மலைக்கோட்டை கோயில் தெப்பக் குளத்தை சுற்றி...? கூகுளில் எவ்வளவு தேடியிருப்பேன். 50களின் ஸ்ரீரங்கம் கிடைத்தது மெயின் கார்டு கேட் என்ற பெயரில் இருக்கிறது தார் ரோடு? இன்னமும் தெளிவாகவில்லை. திருச்சிக்காரர்களை அவர்களின் தாத்தாக்களைக் கேட்டுக் கொண்டுதானிருக்கிறேன். அதற்கு அவசியமெ இல்லை என்பது போல ஸ்ரீதர் நாராயணன் குரிப்பிடும் ஜெயமோகனின் கடித பதில்.

யோவ் கதையிலப் போயி இதெல்லாம் பார்க்கலாமா?

அடங்கோ இது இன்னா கப்பிக் கவுதாரி மாத நாவல் புக்கா? காலத்தால் அழிக்க முடியாத கலாச்சார பொக்கிஷம்.  வரலாற்றுப் பதிவுகள். இலக்கியம். 

தேவிடியா கிட்டப் போனதை ஜெயிலுக்கு லாக்கப்புக்கு சேரி குடிசைக்குள்ள போன ஜி.நாகராஜன் கதையிலையே இதெல்லாம் பார்க்கும் போது கடவுள் கிட்டப் போயி எழுதற கதைல ஏன் பார்க்கக் கூடாது?
எம்.வி.வியால் சொல்லப்படாத ஆச்சியை ’அறம்’ கதையில் கற்பனையில் உற்பவிக்க ராம கர்ப்பமாக 13 மாதமல்ல, 10 வருஷம். 

கொதிக்கும் தார் ரோட்டில் சப்பென உட்கார்ந்து சதை வழண்ட ஆச்சியின் சூத்தைக் கதையில் இருந்து தூக்கிட்டா கதை சூத்துத் தொடைக்கவாவது தேறுமா?

ஒரு மெலோ ட்ராமா படம் காட்ட பத்து வருஷம் கதை பண்ணுவோம். அதற்கு உண்மைக்கதையின் தோற்றத்தைக் கொடுக்க எம்.வி.வியின் வீக்கிப்பீடியா முலாம் பூசுவோம். இதைத்தானே மணியண்ணா செய்கிறார் சினிமாவில். 

கஷ்மீர் வெடிக்கத் தொடங்குதா ரோஜா குடு! கலவரம் நடந்து முடிஞ்சிருக்கா பம்பாய் எடு! கன்னத்தில் முத்தமிட்டு ஈழத்தைக் காசாக்கு! ஏழு சகோதரிகள் எரிகின்றனரா எடுடா உயிரை! எரியும் எல்லாப் பிரச்சனைகளும் எனக்கு நாடகமேடையின் பின்திரைச் சீலை. இயக்குநருக்கு ஏற்ற கதாசிறியர். செத்துப்போன இலக்கிய வாதிகளை பின்திரையாக்கி அரிதாரம் பூசி அவதாரம் எடு! 

ஒக்காளி சொன்னார்டா எங்க சுந்தர ராமசாமி! உழைப்பின்றி கற்பழிப்பில்லை. உழைப்பிற்குப் பின்னிருக்கும் பிரக்ஞையே முக்கியம் (ஜேஜே).

2000ல் இறந்து போன எம்.வி.வியுடனான சந்திப்பு (அப்படி ஒன்று நடந்ததா? என்பதே எனக்கு இப்போது சந்தேகமாக இருக்கிறது). தஞ்சைப் பிரகாஷ் பிரபஞ்சன் ஆகியோர் எம்.வி.வியை எடுத்த பேட்டி, கண்ணதாசன் பத்திரிகையில் வெளியாகிப் பின் அவரது  ”என் இலக்கிய நண்பர்கள்” என்கிற புத்தகதில் வெளியாகி இருக்கிறது என்பது நம்பத்தகுந்த வட்டாரத்திலிருந்து அறிய வந்த தகவல். (புத்தகம் கிடைத்தால் பேட்டி என் ஸ்கேனருக்குள் போய் பதிவேறும்). அந்த பேட்டியில் எம்.வி.வி லாசரா, மெளனி தி.ஜா என அவர் காலத்து இலக்கியவாதிகளைப் பற்றிக் நிறைய அபிப்ராயகங்கள் கூறியுள்ளார். சார் நன்றாக கவனியுங்கள் ஹேஷ்யங்கள் உண்டாக்கும் விதமாக, எம்.வி.வி கிசுகிசு கதை எழுதவில்லை. ஒரு பேட்டியில் நேரடியாகத் தன் அபிப்ராயத்தைக் கூறியுள்ளார். அதை வைத்து எம்.வி.வியை ஆஹா எனவும் சொல்லலாம் அடச்சீய் இவன் ஒரு ஆளா எனவும் படிக்கிற வாசகன் முடிவுக்கு வரலாம்.அதற்கு வாய்ப்பளித்து பொறுப்பேற்று எம்.வி.வி சொன்ன அவரது அபிப்ராயங்கள். அவை உண்மையோ பொய்யோ ஆண்டவனுக்கும் அவருக்கும் மட்டுமே தெரியும், இன்னொரு சமகாலத்தவர் சொல்லாதவரை.

அந்தப் புத்தகத்தை வீக்கிப்பீடியாவாக வைத்துக் கொண்டு புனைவும் கட்டுரையுமாக வாசகனை மயக்கமுற எழுத்தில் பின்னுகிற ஜெயமோகன், தன்னை முன்னிருத்துவதில் மட்டும் தெளிவாக இருக்கிறார். இப்போது கொஞ்சம் யோசியுங்கள். ”ஜெமோவின் செருப்பு தூக்கல்” மற்றும் ”இவருக்குன்னா எல்லாக் கதவும் திறக்கும்” இவை இரண்டுமெ ’உண்மையில் நடக்கவும் இல்லை எம்.வி.வி சொல்லவும் இல்லை’, ஆச்சியைப் போன்றே 10 வருட வெறும் கற்பனை எனில் ங்க்கொக்காமக்கா எங்கடா இருக்குது அறம். 

இதை சொல்வதற்காக என்னை இந்திய தேசத்தைத் துண்டாடுபவன் எனத் திட்டமாட்டீர்கள் என நினைக்கிறேன். மாமல்லனுக்கு மரை கிரை கழண்டுவிட்டதா இங்கெதற்கு சம்பந்தா சம்பந்தமில்லாமல் இந்தியா பற்றியெல்லாம் இழுக்கிறான் என வடக்கிலிருந்து ஏதேனும் ஒரு கரை, சொம்பு தூக்கக்கூடும். அதுகளின் அரோகரா காவடிக்குச்சலில்தான் காது கிழிகிறதே! 

இலக்கியம்தான் ஜெயமோகன்! ஜெயமோகன்தான் இலக்கியம்!
கொஞ்சம் ஜெயமோகன் போலவே கற்பனையைக் கட்டவிழ்த்தால்....
இந்தியாதான் ஜெயமோகன்! ஜெயமோகன்தான் இந்தியா!

மம்தா பேனர்ஜி அனுப்பிய ரயிலில் சென்னை வந்தேன். அவசரம் காரணமாக, பின்னொரு சமயம் அகமத் படேல் நிர்வகிக்கும் விமானத்தில் சென்னை வந்தேன் என்று மிஷ்கின் அனுப்பிய கார் அல்லது மணிரத்தினம் chauffeur ஆக ஓட்டி வந்த கார் என பீற்றிக் கொள்வது போல அல்லாமல் அறம் கதையில் ஜெயமோகன் ஜெயமோகனாகவே வருகிறார். பரவாயில்லையே என்று பார்த்தால், முதல் பத்தியிலேயே பார்த்தியா நான் எவ்ளோ பெரிய எழுத்தாளன்.சினிமாவிலேயெ ஓஹோவெனக் கொண்டாடப்படும் நான் உனக்கொரு ஏழை எழுத்தாளனின் கதை சொல்லுவேன் குக்கூ குக்கூ என பில்டப் கொடுத்தால் சரஸ்வதிகிட்ட ங்கா குடித்தவர் எனக் கூடிக் குலவையிடும் கும்பலின் நெம்பர் கூடாமல் போகுமா? 

வெட்கமோ கூச்சமோ இன்றி அவர் புட்டத்தை அவர் தூக்க, அதற்கு அரும் பொருள் பதவுரை சொல்லி பல்லக்குத் தூக்க ஒரு ஜால்ராக் கூட்டம்.

இப்படியான கதைகள் எழுதுகையில் ஜெயமோகன் கடவுளிடம் சென்று வருகிறாராம். அது உண்மை என்றால், ஜெயமோகனின் கடவுள் இருக்கும் பொந்து, சோனா கஞ்சின் சந்து.