Tuesday, March 1, 2011

திற்பரப்பில் தேவதேவனும் திறந்த பரப்பில் பிரமிளும்


இரண்டு கவிதைகள் கீழே இருக்கின்றன. இவற்றில் ஒன்று கவிதை. ஒன்று கட்டுரை. ஜெயமோகன் முன்னிலையில் படிக்கப் படுவதாலேயே ஒன்று கவிதையாகிவிட முடியுமா என்ன? பாவம். ஜெயமோகனாகிய நான், என்னை மட்டுமே முன்னிருத்துவதில்லை பிறரையும் சொல்லுகிறேன் பார் என்பதற்காகத் தன் குழுமப் படைப்பாளிகளை அவ்வப்போது தூக்கிக் காட்டுவதேத் தொழிலாகிக் கொண்டு இருக்கிறது.
தப்பித்தவறி தான் சொல்வதை நம்பி தன் ஆரம்ப வாசகன் எவனாகிலும் விழா நாயகனை தன்னை விடவும் பெரிய எழுத்தாளனாக எண்ணிவிடுவானோ என்கிற தற்காப்பு உணர்ச்சியில் சிறப்புரை.

நாஞ்சில் நாடனுக்கு விழா மேடையிலேயே, தனது வளர்ப்பு நாயுடன் ஒப்பீடு அது என் வீட்டுச் சுவரை எல்லாம் நாக்காலேயே நக்கி உணர்ந்து கொண்டதைப் போல அவரும் உணவினாலேயே உலகைப் புரிந்து கொள்கிறவர் (சோற்றாலடித்த பிண்டம்). பாவம் நாஞ்சிலார் மட்டும் சாரு நிவேதிதாவாகக்  கூடுவிட்டுக் கூடு பாய்ந்திருந்தால் நண்பனின் துரோகம் எவ்வளவு எழுதி இருக்க வேண்டும்.

ஒருவேளை எங்கே தன் வாசக மொக்கைகளுக்கு, இதுவும் புரியாமல் போய்விடுமோவென (தன் வீட்டு நாயும் தன் வாசகர்களுக்கு உயர்ந்ததாகவே அல்லவா தோன்றும்) ஆகையால், ஒரு சுரா சொன்ன கதை; மதுரை சோமுவின் பாடல்களில் தாளம் நிற்காது, வார்த்தை மறந்து விடும், ஸ்ருதி போயிடும் (இவ்வளவு குறைகள் இருந்தும்) ஆனால் பாவம் இருக்கும். அது போலத்தான் நாஞ்சிலார் என்பது அவருக்கு மரியாதை செய்வதா?

நாஞ்சில் நாடனோ, தேவதேவனோ நவீன தமிழின் எண்ணிறைந்த நல்ல படைப்பாளிகளில் ஒரு நல்ல எழுத்தாளரும் நல்ல கவிதைகள் எழுதியவரும் ஆவர். ஆனால் இவர்களை மட்டுமே முன்னிருத்துவது ஜெயமோகனின் அ-இலக்கிய அரசியல். 

இல்லையென்றால் ஒரு கட்டுரையைப் படித்துக் காட்டி கவிதை என்பார்களா திற்பரப்பு கவிதை அரங்கில்? அந்தக் கட்டுரையும் எப்படி பிரமிளளின் ’கன்னி’ கவிதையின் இனிஷியலோடு இருக்கிறது என்பதைப் பாருங்கள்.

ரெண்டுத்தையும் நீங்களேப் படிச்சு பாத்துக்கொங்கோ நேக்கெதுக்கு பொல்லாப்பு. நா உண்டு என் காரியம் உண்டென்னு நாம்பாட்டுக்கும் தேமேன்னு இருந்துட்டுப் போறேன். நேக்கு ஒண்ணும் தெரியாது, கேட்டேளா?

ஒரு கெட்ட வார்த்தை கூட இல்லாம எழுதியிருக்கியே! சமத்த்து!

உப்பளம்சேறு மித்துக் கூறு கட்டிய
தெப்பங்களிலும் பாத்திகளிலும்
என் நாடி நரம்புகளிலும்
நிரம்புகின்றன
பூமியிலிருந்தும் கடலிலிருந்தும்
மின்சார வேகம்
உறிஞ்சிக் கொட்டுகிற
நீர்

நீருக்கும்
சூரியனுக்கும்
நடுவே
நீரோடு நீராய்க்
காய்ச்சப்படும் மனிதன்
முதிர்கிறான்
ஒரு தானியக் கதிராய்.
ஊமை இதழ் திறந்து
எட்டிப் பார்க்கின்றன
உப்புப் பற்கள்.
இப்புன்னகை காணவோ
இத்தனை உழைப்பும்?
மனிதப் பாட்டின் அமோக விளைச்சல்
மலை மலையாய்க் குவிந்து
கண்கூச வைக்கிறது
பூமியின் மேல்தோலைப் பிறாண்டித்
தூசு போர்த்தும் பேய்க்காற்றின்
ஜம்பம் சாயாதபடி
பூமியெங்கும்
இடையறாது நீர் தெளித்துக்
கண்காணிக்கிறான் மனிதன்
மீண்டும் எடுத்துக்கொள்ளப்
பொழியும் மழையிடமிருந்து
காக்கிறது
அம்பாரங்களின் மார்மூடிய
மேலாடைக் கற்பு.
கோடானுகோடிக்
கண்சிமிட்டல்கள் ஓய்ந்து
நிலைத்த பார்வை
இருள்திரை நீங்கிய
சூர்யப் பிரகாசம்
விடிவு
நிழலற்ற பேரொளி
ஓர் உப்புக் கற்பளிங்கில்
சுடர்கிறது
கடலும் பூமியும் பரிதியோடிய
பெருங்கதை
மானுஷ்யம்
வியர்வை


- தேவதேவன்

(சேறு மிதித்து என்பது ஸ்பெல்லிங் மிஸ்டேக்தானே! இல்லை புதியமொழியோ?)கன்னி


ஒரு நூற்றெட்டு 
அரிவாள் நிழல்கள் பறக்கும்
அறுவடை வயல்வெளியில்
ஏதோ ஒரு ஆள்நிழல் 
மிதிக்க மடங்கி
சிரம் பிழைத்துக் கிடந்து
அறுவடை முடிய
ஆள் நகர
மெல்ல வளைந்தெழுந்து
தனித்து நாணிற்று 
ஒரு கதிர்; உச்சியில்
ஒரு நெல், சுற்றிலும்
வரப்பு நிழல்களின்
திசை நூல்கள்-

இன்று நிழல்நகரும்
நாளை உதயம்;
உனக்கும் 
நாணத் திரை நகரும்
உயிர் முதிரும்; உன்
கூந்தலின் உமிநீக்கி
வெடித்தெழும் வெண்முகம்.

ஒரு அணுத் தான்யத்தின்
பகிரங்கம்.

- பிரமிள்
(கொல்லிப்பாவை, ஜனவரி-மார்ச் 1977.
வைகை, ஆகஸ்ட் 1977)

நன்றி: Arangasamy K.V - Buzz - Public
தேவதேவன் கவிதை அரங்கு .- திற்பரப்பு