Monday, March 7, 2011

என் காவிக் கோமணத்தை நீ கட்ட வேண்டும்!


 விமலாதித்த மாமல்லன் 

@ கோமல் பேசறதைப் பாதி படிக்கிறதுக்குள்ள நேக்கு மூச்சு எளைக்கறது அவ்ளோ சிக்காக் கெடக்கறவர் ஜெமோவாட்டமே மூச்சுவிடாம பேசறார் # ம்ஹ்ம்


 kavirajan 
@ அதான் எனக்கும் உறுத்தியது (குரு ஆசிர்வாதம்! :-) #கோமலை எட்டையபுரம் பாரதிவிழாவில் ஒருமுறை பார்த்தது நினைவுக்கு வந்ததுதான் மிச்சம்


 விமலாதித்த மாமல்லன் 

<ஆனா நீயாவது புரிஞ்சுக்கணும்னு நினைக்கறேன். என்னைக்காவது நீ இதை எழுதிருவே…’ நான் தலையசைத்தேன்> # ஆ ராசா அதான் விக்கி இல்லாம எழுதறியா?

 விமலாதித்த மாமல்லன் 

உங்க மேட்டரெல்லாம் நேரா வா.ரா டேபிளுக்கு போய்டும். எல்லாத்தையும் போட்டிருங்கன்னு சொல்லிட்டேன் # தம்புட்டன்


 விமலாதித்த மாமல்லன் 

<கைலாயம் என்பது ஒரு மாபெரும் விபூதி மலை> சைனாக்காரன் காதுல உய்ந்துதுன்னா கோத்தாக் கவுண்டமணியாட்டம் எட்டி சூத்துலையே வுடுவான்


 விமலாதித்த மாமல்லன் 

<புழுவா மலமா> மாமல்லனை எஸ்வி சேகரைக் காப்பியடிச்சது பத்தாதுன்னு சுரேஷ் கண்ணனையும் காப்பி அடிக்கிறான்யா ஜெயமோகன் # பதிவர்களே பாரீர்


 விமலாதித்த மாமல்லன் 

கோமலைத் தாக்கியது முதுகெலும்புக் கேன்ஸர்னா ஜெயமோகனைத் தாக்கி இருப்பது மூளைக் காய்ச்சலா? # கோமலை விட டக்கரா ட்ராமா போட்றான்யா ஜெமோ!

kavirajan

On Sunday 6th March 2011,  said:

>என் காவிக் கோமணத்தை நீ கட்ட வேண்டும்< இந்த வரியைப் படித்ததும் ஞாபகத்திற்கு வந்த ஒரு விஷயம். சுந்தர ராமசாமி இறந்த சில நாட்களிலேயே ஜெமோ “நினைவின் நதியில்”என்று ஒரு புத்தகம் எழுதுகிறார். அதில் சுரா தன் மரணத்திற்குப் பிறகு எந்தவித மதச் சடங்குகளும் தன் உடலுக்கு செய்யக்கூடாது என்ற வேண்டுகோள் எப்படி நடைமுறையில் தோற்றுப் போனது என்பது போல (அதாவது வைதீக முறையில் சுரா’வின் இறுதிச் சடங்குகள் நடக்கவிருப்பதாக) ஒரு பார்வையை முன்வைக்கிறார். சுராவின் உடல் எரியூட்டப் படுவதற்கு முன்பாகவே அந்தப் பகுதியை சாப்பிடாமல், தூங்காமல் (பேளாமலும் என்று நக்கலடித்திருந்தார் ஒருவர்) எழுதி ஒரு பத்திரிகையிலும் வந்தது. பிறகு “நினைவின் நதியில்” புத்தகம் வெளிவரும்போது அதை சரி செய்தாக வேண்டிய கட்டாயம் ஏனென்றால் சுராவின் விருப்பம் அவர் குடும்பத்தாரால் ஏற்கப்பட்டு வைதீகச் சடங்குகள் ஏதுமில்லாமலே அவரின் உடல் எரியூட்டப்பட்டது.

ஜெயமோகன் வரலாற்றின் சடலங்களோடு தற்போது விளையாடுவது போல அன்று முயற்சி செய்யவில்லை. சுரா’வைப் பற்றி எழுதியவற்றை திருத்தவில்லையென்றால் அவதூறு வழக்குகளை சந்திக்கவேண்டியிருக்கலாம் என்ற பயம்தான் காரணமாக இருந்திருக்கவேண்டும். அதை மிகத் திறமையாக சுராவின் விருப்பம் நிறைவேற்றப்பட்டதற்காக அவர் குடும்பத்தினரை பாராட்டுவது போல திருத்தி எழுதினார். அதை ஜெமோ அடிப்பொடிகளிடம் சுட்டிக்காட்டினால் அவரது பெருந்தன்மை என்று கூட சொல்வார்கள்.


இதில் நான் சொல்ல விரும்புவது சுரா ஒரு முற்போக்களாராக வாழ்ந்தார் என்பதோ, வைதீகச் சடங்குகளில் அவர் ஆர்வமில்லாதிருந்தார் என்பதையோ நம்புகிறேன் என்பதல்ல. ஒரு படைப்பாளியாக அவரை அணுகும் போது அது குறித்து கவலையும் இல்லை (சிலரின் பார்வையில் பிள்ளைகெடுத்தாள் கதை போன்ற புனைவு அவர் முற்போக்கு முகமூடியை கிழிக்கலாம்) ஜெமோ வரலாற்றைத் திரிப்பதில் இருக்கும் பூடகமான அரசியல் நிஜமாகவே கவலைக்குரிய ஒன்று என்பதுதான்.

நீங்கள் எவ்வளவு முற்போக்காளராக இருந்தாலும் (அல்லது ஜெமோ உரித்துக் காட்டுவது போல தோற்றமளித்தாலும்) உங்களால் இந்த ஜாதிய, இந்து மத சிந்தனைகளில் இருந்து ஒரு அடி கூட முன் நகர முடியாது அப்படி நீங்கள் செய்வதெல்லாம் வெற்று பாவனைகள்தான் என்பதுதான் ஜெமோவின் செய்தி. அதை எத்தனை விதமாக சொல்லமுடியுமோ தலித், பிராமணர்கள் இடைப்பட்ட அத்தனை ஜாதியை சேர்ந்தவர்களின் வாக்குமூலங்களாக தான் சொல்ல விரும்புவதை எழுதிக் குவிக்கிறார். புனைவின் இலக்கணத்தைக் குலைப்பதில் இருக்கும் உள்ளரசியல் இது. மீட்பு வாதத்தின் அழுகிய முகம் இது. சிலருக்கு இது மிகைப் படுத்தப் பட்டதாகத் தோன்றலாம். சில புனைவுகளில் இதற்கு எதிர்மாறான கருத்துகளும் சொல்லப்பட்டிருக்கிறெதே என்றும் சுட்டலாம். அவைதான் நிஜமான பாவனை என்று நான் நினைக்கிறேன்.

தாஸ்தயெவ்ஸ்கியோ, ரிச்சர்ட் வேக்னரோ தங்களது யூதர்கள் குறித்த எதிர்மறையான விமர்சனங்களை வெளிப்படையாக முன் வைத்தும் கூட படைப்பாளிகளாக மதிக்கப்பட்டார்கள், தங்கள் படைப்புகளில் விஷமேற்றவில்லை. ஜெமோ தற்போது எழுதிவரும் நன்னெறிக் கதைகளில் புனைவுக்கும் அபுனைவுக்கும் இடையே இருக்கும் மெல்லிய திரை கிழிந்து தொங்கும் போது அதில் தெரிவது அற்ப அரசியலின் முகம். இலக்கிய ரீதியில் இதற்கு எந்த மதிப்பும் எந்தக் காலத்திலும் இருக்கப் போவதில்லை. அழுமூஞ்சிகள் இலக்கியத்தின் பாதையை என்றாவது தீர்மானித்தாலொழிய.