Sunday, March 20, 2011

எஸ்.ராவை ஓட ஓட விரட்டும் ஜெயமோகன்

மரம் வாளாவிருக்க நினைத்தாலும்
காற்று அதை சும்மா இருக்க விடுவதில்லை

- மாவோ

நான் பாட்டிற்கும் தேமே என்று, லயோலா கதை பற்றி, புரியவில்லை எனச் சொல்லிய இணைய நண்பர்கள் சிலருக்காக, பதிவு ஒன்று எழுதிக் கொண்டிருக்கிறேன்.

தற்செயலாக, என்ன நடக்கிறதென பஸ்ஸை எட்டிப் பார்த்தால் ரசிகர் ஒருவர் ஜெயமோகன்  கவிதை என எழுதியதைப் பகிர்ந்திருந்தார். கீழே இப்படி ஒரு குறிப்பு இருந்தது.

<1999 ல் வெளிவந்த பின்தொடரும் நிழலின் குரல் நாவலில் வரும் மேலும் சில கவிதைகள் வாசிக்க... http://www.jeyamohan.in/?p=12854>


சுட்டியை அழுத்த 
March 20th, 2011

என்கிற பதிவிற்குக் கொண்டு சென்றது. அதில் இருந்த முதல் கவிதை

இரு பறவைகள்

வல்லூறு ஆற்றல் மிகுந்த பறவை
காற்றின் படிக்கட்டுகள்
அதன் கண்களுக்கு மட்டுமே தெரியும்
பூமி ஒரு கசங்கிய போர்வை அதற்கு

சிட்டுக்குருவி சின்னஞ்சிறியது
கிளைகளின்மீது எம்பித் தாவுகிறது
வானம் அதற்கு
தொலைதூரத்து ஒளிக்கடல்

இரு பறவைகள்
இரண்டிலிருந்தும் வானம்
சமதூரத்தில் இருக்கிறது

இது 1999ல் எழுதியது. தமிழின் மாபெரும் இலக்கிய சக்தியாக ஜெயமோகன் அந்த காலகட்டத்திலேயே, அவிழ்ந்துவிட்டிருந்தார் அல்லவா? நான் என்னத்தைக் கண்டேன். சொல்லக் கேள்விதான். நான்தான் ரிப்வான் விங்கிளாக உறங்கிக் கொண்டிருந்தேனே!

ஜெயமோகனின் தன்னம்பிக்கை நிச்சயம் பாராட்டப்பட வேண்டிய ஒன்றுதான். 

ஒரு வணிகப் பத்திரிகையின் - வேலைக்கு சேர்ந்து ஆறுமாதம் கூட ஆகியிருக்காத தற்காலிக உதவி ஆசிரியனுக்கே - தெரிந்திருக்க வேண்டிய, தெரிந்திருக்கக் கூடிய ஒரு விஷயம், எப்படி ஜெயமோகன் என்கிற, தமிழின் தானைத்தலைவருக்கு அடுத்தபடியான, தமிழின் தனிப் பேராளுமையான ஜெயமோகனுக்குத் தெரியாமல் போனது?

சரி இலக்கிய உலகத்தில் எவனுக்குமே தோன்றவில்லையா? அல்லது சொதப்பல்களை எழுதிக்கொண்டு, அதற்கே எம்பிஎம்பிக் குதித்தபடி கோஷிக்கும் வானளாவிய அறைகூவல் அறிக்கைகளைக் கண்டு, உள்ளூர சிரித்துக் கொண்டு தாண்டிச்சென்றார்களோ?

வானம்

அப்படி என்றால் என்ன? அது எங்கே இருக்கிறது?  அதைத்தாண்டி எந்த ஒரு பறவையும் - வல்லூறோ நெல்லூரோ - பறந்துவிட முடியுமா? இல்லை வல்லூறு என்பது என்ன விண்வெளிக் கலமா? 

சிட்டுக்குருவிக்கு வானம் எங்கே இருக்கிறதோ அங்கேதானே வல்லூறுக்கும் இருக்கமுடியும். 

ஜெயமோகன் அவர்களுக்கும் அவரது மாடிவிட்டில் வசிப்பவருக்கும் நடுவில் தளம் இருக்கிறது என்றால் இருவருக்கும் சமதூரத்தில் இருக்கிறது என்பது முன்னே பின்னெ இருந்தாலும் சரி. (அப்போதும் நீ உன்வீட்டுத் தரையில் பூச்சியாக ஊர்ந்து கொண்டும் அவர் தம் வீட்டு உத்திரத்தில் பல்லியாக ஒட்டிக்கொண்டும் இருந்தாலே அது சமதூரம் என்பது துல்லியம்).

ஜெயமோகனும் அவரது வளர்ப்பு நாயும் ஒரே வீட்டில் வசிக்கிற பட்சத்தில், இருவருக்கும் மேற்கூரை அல்லது உத்திரம், மேலே ஒரே இடத்தில்தானே இருக்க முடியும். ஒருவர் உயரம் ஒருவ்ர் குட்டை என்பதால் தூரம் கூடக் குறைய இருக்கலாம், சமதூரம் ஆக முடியுமா? வல்லூரும் சிட்டுக்குருவியும் ஒரே வானத்தின் கீழேதானே வசிக்கின்றன? அப்படி இருக்கையில் சமதூரம் எப்படி? வானத்திற்கு அப்பால் பறக்கின்ற ஒன்றுக்கும் இப்பால் இருக்கின்ற ஒன்றுக்கும் எனக் குறிப்பிடுகையில்தானே சமதூரம் என்கிற வார்த்தைப் பிரயோகம் வரக்கூடும்.

இல்லையில்லை கவிதை அப்படிப் பேசவில்லை என எதிர்விவாதித்து என் உயிர் எடுக்க வரும் வீரபாகுக்களே! அப்போது இதற்கு என்ன பொருள்?

<பூமி ஒரு கசங்கிய போர்வை அதற்கு> - வல்லூறுக்கு (மேலிருந்து கீழே பார்ப்பதால்)

<வானம் அதற்கு
தொலைதூரத்து ஒளிக்கடல்> - சிட்டுக்குருவிக்கு (கீழிருந்து மேலே பார்ப்பதால்)

<இரு பறவைகள்
இரண்டிலிருந்தும் வானம்
சமதூரத்தில் இருக்கிறது>


வானம் நடுவில் என்றுதானே பொருள். ஜெமோவின் காலாட்படையின் முனணித்தலைவர் சொல்லக்கூடும் - இது ப்ரூப் மிஸ்டேக். வெறும் எழுத்துப் பிழை. இந்தக் ’கவிதையில்’ இருந்து வானத்தைத் தூக்கிவிட்டால, எஞ்சுவது என்ன? இப்படியாப்பட்ட கவிஞ்ஞர்தானே கவிதை பற்றிப் பேச மீதகுது பெற்றவர். இவர் தேவதேவனுக்கு கிரீடம் சூட்டுகிறார், பாரதிக்குப் பின் தமிழின் ஒரே பெரும் கவிஞன் தேவதேவன் என்று. போடப்பட்ட மாலையையே கயிறாக்கி இழுக்க அவரும் பாவம் பின்னாடியே போகிறார் மந்தையில் ஒருவராய். அமுட்டு ஜெமோவிற்கான நோபலை ஒரே அமுக்காய் அமுக்கு.

இந்தக் குமட்டல் பிழைகள் எதனால் நேர்கின்றன? குறைப்பிரசவத்தால். ஆனால் நமது நக்ஷத்தி ரேசரோ தனது செயற்பாடுதான் அகில உலகத்திலும் ஆகச்ச்சிறந்தது என நிரூபிக்க இப்படிப் பிரசங்கிக்கித்துப் பரிந்துரைக்கிறார்.

<படைப்பூக்கம் சம்பந்தமான சில பிழையான எண்ணங்களும் எழுத்தின் அளவை பாதிக்கின்றன. ஒரு கதை மனதில் முழுக்க உருவானபின்னரே எழுதவேண்டும் என நினைப்பவர்கள் உண்டு. அவர்கள் மாதக்கணக்காக அக்கதையை போட்டு உருட்டிக்கொண்டிருப்பார்கள். அப்படி அல்ல. ஒரு கருவுக்கு எழுதுவதற்கான ஒரு தொடக்கம் அமைந்தாலே போதும், எழுத ஆரம்பிக்கலாம். சிறுகதைக்கு என்றால் முடிவு கண்ணுக்கு தெளிவில்லாமலாவது தெரிந்தால் போதும். கவிதைக்கு நல்ல தொடக்கம் போதும். நாவலுக்கு மையப்படிமம் தோன்றினால் போதும்.>
March 18th, 2011

<கவிதைக்கு நல்ல தொடக்கம் போதும்.> அப்போ இப்படி வானமாய்த்தான் பீச்சியடிக்கும் கவிதை.


நிறைய எழுதுவதா? இல்லை நேர்த்தியாய் எழுதுவதா? நிறையவும் எழுதி நேர்த்தியாகவும் எழுதுவது எப்படி? இதெல்லாம் அவனவன் தேர்வா? அவனவனது இயல்பா? ’நேர்த்தி’தானே தரமாக இருக்க முடியும். நேர்த்தியின்றி நிறைய மட்டும் எழுதுவதில் என்ன பெருமை?

நான் வாலறுந்த நரி. என்போலவே எல்லோரும் அறுத்துக் கொண்டால்தானே நரிகளின் ராஜனாக நானே என்றும் இருக்க முடியும்.


முதல் வெளிப்பாட்டிலேயே கவிதையின் ஆன்மா கத்திவீச்சாய் விசையுடன் வந்து விழுந்தாலும், பளபளப்பைப் பார்த்து மயங்காமல், முனையை இன்னும் எப்படி கூராக்கலாம் என எட்டுப் பத்து தடவை, எழுதியதைத் திருத்தித்திருத்தி எழுதிய பிரமிள் என்ன அம்மி உளி கொத்தியவரா? எத்துனைக் கவிதைகளைக் கைப்பிரதியில் பார்த்திருக்கிறோம். 


எப்படி வேண்டுமானாலும் உளறி எழுத, இலக்கியம் என்ன வீட்டு நாய்க்கு விசிறப்படும் எலும்புத்துண்டா?

இந்த லட்சணத்தில் இடைவிடாத பேதியாய் இலக்கியம் கழிப்பது எப்படி என லெக்சர் வேறு!

இணையத்தில் இலக்கிய முலாம் பூசிக்கொண்டு சுந்தர ராமசாமியைவிட நான் பெரியவனாக்கும் என குஞ்சாமணி ஆட்டிகளிடம் நிறுவிக்கொள்ள இப்படி ஒரு உடான்ஸு, 

<நிறைய எழுதக்கூடாது என்ற மனநிலை சிற்றிதழ்ச் சூழலில் உருவாக்கப்பட்டுள்ளது. இதை சுந்தர ராமசாமி உருவாக்கினார். அவர் அதிகம் எழுதக்கூடியவரல்ல. மேலும் சிற்றிதழ்ச் சூழலில் இயல்பாகவே அதிகம் எழுதமுடியாது. பக்கங்கள் குறைவு.>

ஒரு படைப்பு பிரமாதமாக வந்துவிட்டது என்று தோன்றினால் பத்திரிகையின் பக்கத்தைக் கூட்ட சிறப்பிதழ்கள் வெளியிட பெண்டாட்டி நகையை அடகு வைத்த, விற்ற பரந்தாமன்களும் செல்லப்பாக்களும் பிரம்மராஜன்களும் பத்திகையாசிரியர்களாய் இருந்த தேசம் இது. வரலாற்றை மறைக்காதே. மறக்காமல் வாயக் கழுவு.

<இதை சுந்தர ராமசாமி உருவாக்கினார்.> 

’வானம்’ போலவே அர்த்தமற்ற இன்னொரு அடித்துவிடல். சுந்தர ராமசாமி இந்த மாதிரி எல்லாம் வெத்து உபதேசங்கள் செய்தவரன்று. முடிந்தால் தரவு கொடு! இன்றேல் குறைந்த பட்சம் மேல்வாயை மூடிக்கொள். எப்படியும் கீழ்வாயை மூட முடியாது என்பது தெரிந்த விஷயம்தான்.