Tuesday, March 15, 2011

எழுத்துக்கலை - விவரண தர்க்கப் பிழை

புர்ரா
சிறுகதை. - எஸ்.ராமகிருஷ்ணன்.
<சில நாட்கள் இரவில் சுகு அழும்போது உறக்கத்தில் பாlலூட்டும் மனைவியின் முகத்தை பார்த்திருக்கிறேன். அதில் கருணையோ, அன்போ எதுவுமிருக்காது. எப்போது பால்குடித்து முடியும் என்று பொறுமையற்று காத்திருப்பவளின் சிடுசிடுப்பே நிரம்பியிருக்கும்.

அந்த சிடுசிடுப்பிற்கு இன்னொரு காணரம் இருந்தது. சுகுவின் அழுகையை மீறி நான் நிம்மதியாக தூங்கிக் கொண்டிருந்தது.>

தூங்ஸொல்லொ மனக்கண் முய்ஷ்சிக்குமா பாஸ்?

அடுத்தடுத்த செண்டென்ஸ்லையே, இவ்ளோ அபத்தமாவா எய்துறாங்கோ இத்தினி புக்கு போட்டவங்கொ:))))

படிக்கிறவன் கூமுட்டையாயிடாம ரொம்பொ ஜாக்கிரதையாத் தன்னைப் பாதுகாத்துக்கணும் போலக்குதே!

<காணரம்> இதுதான் இசுபெல்லிங் மிசுடேக்கு. அத்த ஆண்ந்தவெகடன் ப்ரூப் ரீடரு கரெக்ட் பண்ணிக்குவாரு.

அப்பொ மேலக்காட்டினது இன்னா மிசுடேக்கு. நம்பொ ரயிலு இங்கியே தடம் பொறண்டுடும். இதுக்குமேல எங்கேந்துணா ட்ராவல் பண்றத்து. அழுவின எடத்த கழுவிட்டு துண்ண டோமரையா நானு. இதுதான் எம் பிரச்சனை.

நாம்பொ படைக்கிறது எலக்கியம் பாஸ். ஒவ்வொரு வார்த்தையும் முக்கியம் ஏனோதானோன்னு எய்த நாம்ப இன்னா பல்ப்பா எய்தறோம்.

இது வெமர்சனம் எல்லாம் இல்லே. சொம்மா மன்ஸுலப் பட்டத்த சொன்னேன். அவ்ள்தா. 

யோவ் பட்சாத்தானய்யா வெமர்சனம் பண்ண மிடியு?. 

அடிங்கொ, படிக்கவே முடியிலேங்கறேன்!

படிக்கவே முடியிலேங்கறத்த எப்பிடிய்யா வெமர்சனம்னு ஒத்துக்க முடியும்.

ஆ! அது ஒம் பிரச்சனை.




பஸ்ஸில் பார்த்த சுட்டி Vidhya Chandrasekaran - http://www.sramakrishnan.com/?p=64111:56 am நன்றி