| hide details 7:33 AM (5 hours ago) | ||||||||||||||||||||||||||||
அன்புள்ள மாமல்லன்,
****
உண்மை. தேவதேவனுடையது மடக்கி மடக்கி எழுதப்பட்டிருக்கிற வரிகளாலான ஒரு கட்டுரை. ஒரு கவிதை சொற்சிக்கனத்தோடு இருக்க வேண்டியது மட்டுமல்ல, எந்த இடத்தில் அடுத்த வரி துவங்க வேண்டும் என்பது கவித்துவத்தின் இன்றியமையாத அம்சம், அதன் கட்டுமானத் தேவை.
//நீருக்கும்
சூரியனுக்கும்
நடுவே
நீரோடு நீராய்க்
காய்ச்சப்படும் மனிதன்
முதிர்கிறான்
ஒரு தானியக் கதிராய்.
ஊமை இதழ் திறந்து
எட்டிப் பார்க்கின்றன
உப்புப் பற்கள்.
இப்புன்னகை காணவோ
இத்தனை உழைப்பும்?
மனிதப் பாட்டின் அமோக விளைச்சல்
மலை மலையாய்க் குவிந்து
கண்கூச வைக்கிறது
பூமியின் மேல்தோலைப் பிறாண்டித்
தூசு போர்த்தும் பேய்க்காற்றின்
ஜம்பம் சாயாதபடி//
மேலே இருப்பனபோல,தேவதேவனின் பல வார்த்தைகள் ஏன் இத்தனை வரிகளில் சிதறிக் கிடக்கின்றன என்பதற்கு விடையே கிடைக்கவில்லை. வரிகளுக்கிடையிலான வெளியை கவிதை எழுதும் பலரும் “எண்ட்டர்”தட்டுவதன் விளைவு என்று புரிந்துகொண்டிருப்பதற்கு ஒரு வகைமாதிரியும் கூட இது:
தவிர, எப்படி ஒரு மொழிதல் வெறுங்கூற்றாகவும் இன்னொன்று கவிதையென்றும் விகசிக்கிறது என்பதற்கு இவ்விரு கவிதைகளும் அருமையான எடுத்துக்காட்டுகள்.
ஆனால், மாமல்லன், ஜெயமோகன் பிரமிள் கவிதைகளையும் சிலாகித்துப் பேசியிருக்கிறார் என்பதே என் நினைவு.
**********
அன்புடன்
பெருந்தேவி
