Sunday, May 1, 2011

வண்டு முருகனின் வால்கள்!//21 வயதில் எழுதியது இந்த நாவல் , தமிழின் பெரும் ஆளுமை முளைவிட்ட காலம் . உங்களைப்போல தேய்ந்து தேய்ந்து வெறும் வசைஞராக ஆகிப்போன ஆள அல்ல .//

<21 வயதில் எழுதியது இந்த நாவல்>

ரப்பர் வெளியான வருடம் 1990 
ஆதாரம்: நூல்கள் http://www.jeyamohan.in/?page_id=359

22.04.1962ல் பிறந்த ஒருவருக்கு 1990ல் என்ன வயது? 21ஆ? 28ஆ?
ஆதாரம்: பிறந்தநாள் http://www.jeyamohan.in/?p=14610 


<தமிழின் பெரும் ஆளுமை முளைவிட்ட காலம்>

இலக்கிய முளையா? இல்லை கமர்சியல் முலையா?
பள்ளிநாட்களிலேயே எழுத ஆரம்பித்தேன். முதல்கதை ரத்னபாலா என்ற சிறுவர் இதழில் வெளிவந்ததாக நினைவு. இக்காலகட்டத்தில் குமுதம் விகடன் கல்கி இதழ்களில் பலபெயர்களில் கதைகள் வெளிவந்தன. ‘பாரிவள்ளல்’ என்ற குமுதம் உதவியாசிரியர் எனக்கு ஊக்கமூட்டி கடிதங்கள் எழுதினார்.
ஆதாரம்: அறிமுகம் http://www.jeyamohan.in/?page_id=2 

1985ல் சுந்தர ராமசாமி அறிமுகமானார். என்னை இலக்கியத்துக்குள் ஆற்றுப்படுத்தினார். எழுதலாம் என்று சொல்லி ஊக்கமூட்டினார். எழுத்துக்கள் அதிகமும் அவருக்கே அனுப்பபட்டன. ஒரு மனநோயாளிக்குரிய தீவிரத்துடன் எழுதினேன்.’கைதி’ என்ற கவிதை 1987ல் கட்டைக்காடு ராஜகோபாலன் நடத்திவந்த ‘கொல்லிப்பாவை’ இதழில் வெளியாயிற்று. 1987 ல் கணையாழியில் ‘நதி’ அசோகமித்திரனின் சிறு குறிப்புடன் வெளியாயிற்று. அது ஒரு தொடக்கம். தொடர்ந்து நிகழ் இதழில் ‘படுகை’ ‘போதி’ முதலிய கதைகள் வந்து கவனிக்கப்பட்டன. இந்திரா பார்த்தசாரதி, சுஜாதா ஆகியோர் இக்கதைகளைப்பறி குறிப்பிட்டிருந்தார்கள்
ஆதாரம்: அறிமுகம் http://www.jeyamohan.in/?page_id=2 

அய்யோ பாவம் ஜெயமோகன்! சுயபுராணத்திலேயே தகவல் பிழை.
’கைதி’ கவிதை வெளியானது கொ.பா - 18 அக்டோபர் 1986
ஆதாரம்: கொல்லிப்பாவை இதழ் தொகுப்பு

ஜெயமோகன் எழுதிய முதல் கவிதை ‘கைதி’ யே மொக்கைத் திருட்டு
இலக்கிய முளையிலேயே ஏகப்பட்ட துளைகள்
ஆதாரம்: சுகுமாரன் கவிதையிலிருந்து ஜெயமோகன் சுட்ட மொக்கை http://www.maamallan.com/2010/11/blog-post_24.html

<1988ல் எழுதிய ரப்பர் நாவலை 1990ல் அகிலன் நினைவுப்போட்டிக்காக சுருக்கி அனுப்பினேன். அதற்கு விருது கிடைத்தது. தாகம் [தமிழ் புத்தகாலயம்] அதை வெளியிட்டது. அகிலன் கண்ணன் அதன் பதிப்பாசிரியர். அந்த வெளியீட்டு விழாவில் தமிழ் நாவல்களின் வடிவம் [தமிழ் நாவல்கள் தொடர்கதைகள் அல்லது குறுநாவல்களாக உள்ளன. நாவல்களுக்கு சிக்கலான ஊடுபிரதித்தன்மையும் தரிசன தளமும் தேவை] பற்றிய என் பேச்சு பல வருடம் நீண்ட விவாதங்களை உருவாக்கியது. அதன் நீட்சியாகவே 1992ல் நாவல் என்ற நூலை எழுதினேன்.>
ஆதாரம்: அறிமுகம் http://www.jeyamohan.in/?page_id=2

<1988ல் எழுதிய ரப்பர் நாவலை 1990ல் அகிலன் நினைவுப்போட்டிக்காக சுருக்கி அனுப்பினேன். அதற்கு விருது கிடைத்தது.>

ஏன் இரண்டாம் பதிப்பிலேனும் விரித்து வெளியிட்டு இருக்கலாமே! ஸீரியஸ் சிரிப்பா சிரிச்சிருக்கலாமே!

<தமிழ் நாவல்கள் தொடர்கதைகள் அல்லது குறுநாவல்களாக உள்ளன.>
லப்பர்ல <சிக்கலான ஊடுபிரதித் தன்மை> என்ன இருக்கு? ஆரம்ப அத்தியாயங்கள் தொடர்கதை மாதிரி சஸ்பென்ஸோட முடியுதே! 
ஆதாரம்: 
அத்தியாயம் 1 : 
<சாலைக்கு வந்ததும், “காலம் போற போக்கைப் பாத்தியளா?” என்றான் டிரைவர்.
“என்ன” என்றான் ராம்.
அந்தப் பெண்ணைப் பாத்தியளா?”
”ஆமாம் அவளுக்கு என்ன?” 
”அவ அறைக்கல் குடும்பத்துப் பெண்னாக்கும்”
”அறைக்கல்லா?”
”இந்த ஊர் ராஜவம்சம் சார் அது. இந்த ஏரியாவே முன்னே அறைக்கல் குடும்பச் சொத்துதான். காலம் போற போக்கைப் பாருங்க! என்ன இருந்தாலும், விதி எண்ணு ஒண்ணு இருக்கு, என்ன சொல்லுதிய?”
ராம் பதில் கூறவில்லை.>

தொடரும் ஸ்டைல் இல்லையா இது. பெரிய கொலைக் குற்றமில்லைதான் <<தமிழ் நாவல்கள் தொடர்கதைகள் அல்லது குறுநாவல்களாக உள்ளன.> இப்படியெல்லாம் பெளண்ட்ரி லைனுக்கு பேட்டே உருவிக்கொண்டு போகையில் ஸிக்ஸர் ஸிக்ஸர் எனக் குதிக்காமலாவது இருக்கலாம் இல்லையா?

அத்தியாயம் 2 முடிகையில் சஸ்பென்ஸ்
<”தவித்த பார்வை அவன் முகத்தில் அலைய, கிழவர் கேட்டார், ஏல பிராஞ்சி குடியான் லகள நடந்து இப்பம் எம்பிடு வரியம்ல ஆவுது?”>

மூன்றாம் அத்தியாயத்திலிருந்துதான் தாம் தொடர்கதை எழுதவில்லை, எழுதிக் கொண்டிருப்பது நாவல் என்பது பிரக்ஞையில் உரைத்தது போலும்.

முளை கட்டும் போதே மரமாகவே பிதுங்கத் தொடங்கிவிட்டதோ? மரத்தைப் போட்டிக்கு அனுப்பும்போது பான்ஸாயாக்கியது ஏனோ? அதற்கு முன் தமிழில் நாவலே இல்லை என்று சகட்டுமேனிக்கு அடித்துவிடும் மனிதர் இட்ட முதல் அடியிலேயே சமரசம் செய்யலாமோ? இதற்கு அவ்வளவு முக்கித்துவம் எல்லாம் இல்லை. விழாவில் இப்படிப் பேசினால்தான் கவனத்தை ஈர்த்து, யார் எனப் பார்க்க வைக்க முடியும்.

தமிழ் இலக்கிய வரலாற்றில் ரப்பருக்கு முன் இருந்தவை எல்லாம் குறு நாவல்கள். சரி குறைந்தபட்சம் உங்க ரப்பராவது <சிக்கலான ஊடுபிரதித்தன்மை> இந்தத் தாண்டு கழியைத் தாண்டிச்சா? 

<தரிசன தளம்> 
அப்பிடின்னா என்னா “ட்ரான்ஸ்பரண்ட் ஸீலிங்கா” 

<என் பேச்சு>
1990ல் பேசியது  
< பல வருடம் நீண்ட விவாதங்களை உருவாக்கியது.>
தோடா 90-92ற்குள் - இரண்டு வருடங்கள் - பலவருடங்களாயிடுச்சா?


<1982ல் கல்லூரிப்படிப்பை முடிக்காமல் வீட்டை விட்டு வெளியேறினேன்.>
ஸோ நம்பளப்போலவே பிராக்கெட் இல்லாம ஓப்பனா P.U.C.ன்னு போட்டுக்கலாம். காலேஜ் வாத்தியானோ இல்ல படிச்சவன்னு எவனாச்சும் மாட்டினா அடிச்சித் தொவைக்கலாம். சரியா படிக்காததால படிப்பு ஏறாததால உருவான தாழ்வு மனப்பான்மை, யாரையும் விட தான் ஒஸ்தின்னு ஜபம் பண்ணிகிட்டே இருக்கும். தவிக்கின்ற நிழலாகப் பின்னால ஆடும். என்முதுகுக்குத் தெரியுதே.

<1984ல் கேரளத்தில் காஸர்கோடு தொலைபேசி நிலையத்தில் தற்காலிக ஊழியராக வேலைக்குச் சேர்ந்தேன்.>
P.U.Cக்கு அது கெடச்சதே புண்ணியம்.

<1988 நவம்பரில் பணி நிரந்தரம். 1989ல் தமிழ்நாட்டுக்கு மாற்றலாகி தருமபுரி மாவட்டம் பாலக்கோடு ஊரில் தொலைபேசி நிலையத்தில் வேலைபார்த்தேன். 1990 வரை பாலக்கோடு. அதன் பின்னர் தருமபுரி தொலைபேசி நிலையம். 1997ல் நாகர்கோயிலுக்கு மாற்றலாகி வந்தேன். 1998 முதல் தக்கலை தொலைபேசி நிலைய ஊழியர். அலுவலக உதவியாளர் பணி. 2000 வரை பத்மநாப புரத்தில் குடியிருந்தேன். 2000த்தில் நாகர்கோயில் பார்வதிபுரத்தில் சொந்த வீடு கட்டி குடிவந்தேன்.>

இது இலக்கியம் இல்லே குமாஸ்தா மேட்டர்.
84ல டெம்ப்ரெவரி (கேரளா) 88ல பர்மனெண்ட் (கேரளா) என்ன போஸ்ட்? 89ல தமிழ்நாட்டுக்கு மாற்றல்.கேரள சீனியாரிட்டி போயிடும். தமிழ்நாடு சீனியாரிட்டில கட்டங்கடைசிலதான் வெப்பான். 98ல ஆஃபீஸ் அசிஸ்டெண்ட்டா ஆனதே பிரமோஷன்தானே?

என்னவோ இலக்கிய தாகத்துனால சாதாரண வேலையே போதும்னு தியாகத்தோட இருந்ததா அபிமானி ஒருத்தர் அலைபாயுறார். டிகிரியே இல்லை துறையில் தேர்வெழுதிப் பாஸானாதான் டெலிஃபோன்ஸ்ல பிரமோஷன். 89-98ல ஒரு பிரமோஷன் வந்துருக்கு. 1988-2010ல சினிமாவிற்காக வேலையைத் துறந்தார்.


Mr. Jayamohan said writing for cinema was yet another profession. “But it should be honourable and creative for a writer like me,” he said.

“But I must tell that entry into the film world has suddenly relieved me of all the burdens of a head of a family. Had I not come to this industry, I would have been running from pillar to post to organise money for my son's higher-education,” said the writer, who recently resigned his job in BSNL.


http://www.thehindu.com/news/cities/Chennai/article509835.ece

இது ஜெயமோகனைப் பற்றிக் குறைகூற அல்ல, உச்சுக் குடுமி அபிமானிகளின் அபரிமித உச்சு கொட்டல்களுக்கான உச்சிக் குட்டு.

<உங்களைப்போல தேய்ந்து தேய்ந்து வெறும் வசைஞராக ஆகிப்போன ஆள அல்ல>

வெறும் வசைகளா? இல்லை என்பதற்கு 
ஆதாரம்: ஊரான் வீட்டு நெய்யே என் பெண்டாட்டி கையே http://www.maamallan.com/2010/11/blog-post_23.html 
ஜெயமோகன் எழுதிய பிரமிள் கவிதை http://www.maamallan.com/2010/11/blog-post_21.html
ரசனையின் விகாசமும் அழகுணர்வின் பயிற்சியும் http://www.maamallan.com/2011/03/blog-post_26.html
லயோலா என்ற பெரும்பாம்பின் கதை - புரிதலுக்கான சிறு வெளிச்சம்! http://www.maamallan.com/2011/03/blog-post_791.html

அடித்தது ஸிக்ஸர்தான் ஆனால் பெளண்ட்ரிக்குப் பறந்தது பந்தா ஸ்டம்பா - ஜெமோவின் படுகை

ஏற்கெனவே படித்தவர்கள் மன்னிக்கவும். இந்த சுட்டிகள் இணையத்திற்குப் புதிய சுட்டிகளின் வசதிக்காக கொடுக்கப்பட்டிருக்கின்றன.

இருந்துகொண்டே இருந்தால்தான் மனிதன் என்பது போல எழுதிக்கொண்டே இருந்தால்தான் எழுத்தாளனா? எழுதுவதைக் கதைகளாக மட்டுமே எழுதிக் கொண்டு இருந்தால்தான் எழுத்தாளனா?

எழுதித் தள்ளுவதெல்லாம் எழுத்தாகிவிடுமா? 
ஆகாது.
ஆதாரம்: குடித்தால்தான் என்றில்லை குடியைப் பற்றி எழுத முற்பட்டாலே உளற முடியும் http://www.maamallan.com/2011/04/blog-post_29.html