Thursday, June 23, 2011

ஒரு ஸீரோவை அம்பலப்படுத்த ஒன்பது ஸீரோக்கள்


<அவரின் தகவல்களை உறுதிபடுத்தும் நோக்கத்தோடு ஆதாரங்களை சேகரிக்க ஆரம்பித்தோம். முதலாவதாக சாருவுடன் செய்த சாட் அனைத்தையும் நிதானமாய் வாசித்தோம்.>

<அவரின் தகவல்களை உறுதிபடுத்தும் நோக்கத்தோடு>

பாரட்டப்படவேண்டிய நோக்கம்தான் சந்தேகமே இல்லை.

<ஆதாரங்களை சேகரிக்க ஆரம்பித்தோம்>

இதுல சேகரிக்க என்ன இருக்கு? சாட் ஹிஸ்டரியைத்தான் கூகுள் சேகரித்து வைத்திருக்கிறதே! எடிட் பண்ணாமல் அப்டியப்பிடியே போடுங்கன்னுதானே கேட்டுகிட்டு இருக்கோம் - வேண்டுமானால் அந்தப் பெண்ணின் பெயரை மறைத்து.

<மே மாதம் 22.05.2011- இல் சாட் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது.>

அப்ப்டின்னு டைட்டில் மட்டும் காட்டறீங்க. என்னதான் பேசிக்கிட்டாங்க?

<உங்கள் வாசகர்களில் ஒருவர் என்ற அறிமுகத்துடன் பெண் பதிவரின் அறிமுகம் செல்கிறது.>

சரி அந்த தினத்தின் சாட்டில் சாரு பேசியது என்ன? பச்ச மண்ணு அன்னிக்கும்  mmனு சவுண்டு மட்டுமே குடுத்துகிட்டு இருந்துச்சோ? ம்னு ஒரு தபா சொன்னாலே சம்மதம்னு விடலைப் பையனாட்டம் துள்ளிக்குதிக்கும் கிழம். ரெண்டு தபா ம்னு சொன்னா ஆஹா என் பேச்சுல எதிராளி ஆர்கஸத்துல கிராஸ் லெக் போட்டுகிட்டதா இல்ல போஸ்டர் போட்டு சுயமா கிக் ஏத்திக்கும்!

<சில நாட்கள் சாதாரண நலன் விசாரிப்புகளுடனே சாட் தகவல்கள் உள்ளன. >

அப்பால எப்பங்க எப்பிடிங்க சாரு டிராகுலா ஆவராரு?

<மே 31-இல் சாருவின் அணுகுமுறை மாறி இருக்கிறது.>

முழு திரைக்கதையே கைவசம் இருக்கையில் இந்த கதைச்சுருக்கம் எதற்கு?  அதில் ’பாப்பா’ பேசியது என்ன? 

இதை அப்படியே அதே வடிவத்தில் படிக்கத் தருவதில் என்ன தயக்கம்? அதைப் படிப்பது சிலருக்கு மட்டுமேயான விசேஷ சலுகையா? ஒப்புக்குத் தலையாட்டி முஷ்டி உயர்த்திப் பின்னணிஇசையின் கோரஸாய்க் கூவ மட்டும் இணையத்து வாசகர்களா? 

இப்படியெல்லாம் கேள்விகேட்பதால், சாருவின் அல்லக்கை, சொம்பு இத்யாதி இத்யாதி என்கிற மாலைகளை என் கழுத்திலும் மாட்ட முயன்றால் அதைவிட நகைப்புக்கு உரிய விஷயம் வேறு எதுவும் இருக்காது. 

அலுவலக டெபுடேஷன் போஸ்டிங் ஒன்றிற்கு, அரசியல் சிபாரிசாக உதவி செய்து தருவதாய் - அதுவும் மற்றொரு இலக்கிய நண்பர் மூலம் செய்து தருவதாய்ச் சொன்னதற்கே, என்னைப் பச்சைக் குதிரை ஏறலாம் என்று நினைத்த அற்ப லீலை விநோதன் சாரு. கடந்த இருபது வருடங்களில் இவர் இலக்கியத்தில் ஆட்டிக் காட்டிய அற்புதங்கள் பற்றிய அடிப்படை அறிவுகூட இல்லாதவனாக இருக்கிறேன் என்று என் பெயர் போடாமல் அடித்த லூட்டிதான் கீழ்க்காணும் பதிவுகள்.

July 23rd, 2010

July 23rd, 2010

July 24th, 2010

July 26th, 2010

எதுவுமே வேண்டாம் என்று அநாமதேயமாகக் கிடந்தவன், என்னைப் பற்றி இவ்வளவு கேவலமாக சாரு தனது தளத்தில் எழுதியதாலேயே, பதினாறுவருட இடைவெளிக்குப்பின் எழுத்து அஸ்திரத்தைத் திரும்ப எடுத்தவன் என்பது தான் உண்மை. 

<ஜனாதிபதி கையால் சிறந்த குமாஸ்தா என்று விருது வாங்க நினைத்த குமாஸ்தா எழுத்தாளர் ஒரே மாதத்தில் பதிவர் உலகில் ஃபேமஸ் ஆவதற்கு கரணம் போடுகிறார்.> 

என்று என்னைக் கிண்டலடித்துப் போட்ட ட்விட்டிற்கு அதே வடிவத்தில் நான் அடித்த ரிவிட்டுதான் கீழ்க்காணுவது.

சொந்தக் காசில் twitter சூனியம் Monday, September 20, 2010 இப்படி ஏறி அடித்தால் சாருவின் எதிர் அடி என்ன தெரியுமா? கையாலாகாப் புலம்பல்.

போன ஆகஸ்டில் தமிழில் தட்டச்சவே தெரியாத, ப்ளாக் ட்விட்டர் பஸ்ஸ் ஃபேஸ்புக் என்பவையெல்லாம் என்னவென்றே தெரியாத, என் திருப்பிக் கொடுத்தல் வீராதி வீரனை வீர மணி கண்டனை எப்படிப் புலம்ப வைத்தது எனத் தெரிய வேண்டுமா?

@charunivedita charu nivedita
மிதாஸ் தொட்டால் பொன்னாகும்.நான் தொட்டால் மட்டும் ஏன் நஞ்சா வருது?குமாஸ்தா எழுத்தாள்ரை சொன்னேன்.என்னை பார்த்தவுடன் தானே இப்படி ஆய்ட்டார்?


ஒளிப்பதற்கு ஏதுமற்றோர் கைஇருப்பை, முதல் வார்த்தையில் இருந்து பொதுப்பார்வைப் பரிசீலனைக்கு முன்வைக்க வேண்டும். அதை விட்டு சும்மா சும்மா தூள்பக்கோடாவே கொடுத்துக் கொண்டிருந்தால், பாத்திரத்தில் இருப்பதே இவ்வளவுதானோ என்கிற சந்தேகமே வரும்.

முழு சாட் ஹிஸ்டரியை அதன் மூல வடிவத்தில் சைபர் க்ரைமுக்கு சமர்ப்பிக்கத் தயாராய் இருப்பவர்கள், முதல் காரியமாய் அங்கே போகாமல் ஏன் சந்திக்கு வரவேண்டும்? இப்போதும் சைபர் க்ரைமுக்கு சாரு சார்பில் அடுத்தவர்தான் போக வேண்டும். அதுவும் இவர்கள் சாருவை அவதூறு செய்கிறார்கள் என்கிற புகாராய்.

இந்த அம்பலப்படுத்தலில் 21 வயது ஏதுமறியாச் சிறுமியின் மன உளைச்சலுக்காக கொள்ளும் தார்மீக அக்கறையைவிட, சாருவுக்கு வைக்கப்படும் ’சு.சாமித்தனமான’ ப்ளாக்மெய்லின் சாயல் அல்லவா தூக்கலாகத் தெரிகிறது! 

சாரு பொய்யன் புரட்டன் ஸ்த்ரீலோலன் என்பதும் வரும் போகும் பெண்களை சராசரி ஆண்களைப் போல,சும்மா வெறித்துப் பார்ப்பதையே ஏதோ கோபிகாஸ்த்ரீகளுக்கு நடுவில் குழலூதுவது போல போஸ் கொடுக்கும் புருடன் என்பதும் இவர்கள் சொல்லித்தான் தெரிய வேண்டிய பேருண்மையா?

இந்த விவகாரத்தில், பாகம் பாகமாய்த் திரை விலக்கும் செயல், அந்தப் பெண் எவ்வளவு தூரம் ஒரு பெண்ணின் இயல்பில் இருந்திருக்கிறார் என்பதையே கேள்விக்கு உள்ளாக்குவதாக இருக்கிறது. ’அவள்’பேசிய முதல் வார்த்தையிலிருந்து வெளியிடத்தயங்குவதிலிருந்து அது பெண்தானா அல்லது பெண்ணாக ஆக்கப்பட்டவரா என்கிற சந்தேகமே வலுக்கிறது.

முழுதாய் வெளியிட்டு, அந்த உரையாடலில் அந்தப் பெண் அப்பிராணியாகவும் சாரு காமாந்தகாரனாகவும் இருப்பது அம்பலப்பட்டால், இதை ஏன் ஆரம்பத்திலேயே செய்திருக்கக்கூடாது என்கிற கேள்வி இவர்களையே நோக்கி வெறித்து நிற்கும்.

பொறுக்கியைப் பிடிக்கப்
பொண்ணை செட் பண்ணு.
டவுசர் கழற்று.

செட்டப்பை யாரும்
பொறுக்கித்தனம் என்று
சொல்லாதிருக்க,

கழற்றிய டவுசரைப் 
பொம்பளை கையால் 
ஏலம் போடு. 


இந்த லட்சணத்தில், இந்த எக்ஸ்போஸே குறித்து சாரு நிவேதிதா ஸ்டைலிலேயே சுய விளம்பரம் வேறு.

<எழுத்தாளர் சாருநிவேதிதாவின் அயோக்கியத்தனத்தை அம்பலப்படுத்தி எழுதிய கட்டுரை இன்று தமிழக இலக்கிய வட்டத்திலும் இணைய தளத்திலும் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வரும் நிலையில் சாருவின் விளக்கம் வந்திருக்கிறது.>

கடைசியில் இதற்குத்தானா இவ்வளவு செட்டப்பும்.