Tuesday, June 28, 2011

பொங்கிப் போட்டதெல்லாம் பொங்கலா

பொறுக்கி வார்த்தையைப் பொறுக்கி, பொறுக்கி எழுத்தாளர் எழுதிய பிறகும் பிடிக்கவில்லை போய்விடுவேன் என்று பேசிக்கொண்டே இருந்தது அவள்தானா அல்லது அவளது பேஸ்புக் அக்கவுண்டிற்குள் வேறு யாரேனும் அப்போதே புகுந்து இருந்தார்களா?

அது பெண்தான் என்பதற்கும், அந்தப் பெண்தான் என்பதற்கும் ஆதாரம் வசிஷ்டர் வாக்கு மட்டுமேவா? அல்லது அது தவிர வேறு ஏதும் உண்டா? அந்தப் பொண்ணுடைய ஐடியில் லாகின் ஆனவன் பாஸ்வேர்ட் கைக்குவந்தபின் இரண்டு ஐடியிலும் லாகின் ஆகி பலவிரல் மன்னனாக தட்டச்சி சாட் செய்வதற்கான சாத்தியக்கூறு இல்லவெ இல்லையா?

யூஸர் நேம் பாஸ்வேர்டை அந்தப் பாப்பாவிடம் - பெண்ணின் அறியாப் பருவத்தை தெளிவாக அறிவிக்க வேண்டியே பாப்பா என்று அழைக்கிறோம். அந்தப் பாப்பாவிடம் ’பொறுக்கி எழுத்தாளர்’ கம் பேக்கு திலகம் கடவுச்சொல்லைக் கொடுத்தது என்று? ஜூன் 03. 

35 வருடங்களாக ஓய்வொழிவின்றி எழுத்தை வியர்வையைக் குருதியாய் சிந்தி இந்த சமூகத்தையும் உலகையும் இடைவிடாது உய்வித்துக் கொண்டிருக்கும்  ஒருவர் எவ்வளவு பேமானியாக இருக்கிறார் என்று மாவிலைத் தோரணம் கட்டி மண்டபம் அறிவிக்கிறது. ஆனால் தாமதித்து ஒளிரும் குழல்விளக்கு விட்டில் பூச்சியிடம் ஏமாந்த சோணகிரியும்கூட என்கிற உண்மை மறைக்கப்படுகிறது. சந்தர்ப்பம் கிடைத்தால் பெரும்பாலோரைப் போலப் பெண்ணை பிராக்கெட் போட எதை வேண்டுமானாலும் இழக்கத் தயாராய் இருக்கும் காரிய ‘பேக்கு’. மெய்நிகர் உலகில் தான் பேசிக்கொண்டு இருப்பது உண்மையிலேயே பெண்தானா என்பதைக் கூட உரசிப்பார்த்துக் கொள்ளாத அளவிற்குக் காமம் கண் மறைத்த பேக்கு.

மே 31
எழுத்ஸ்: பை சொல்லுடி என் செல்லமே
பாப்பா: பை
எழுத்ஸ்: னைஸ் ஹனி பை
பாப்பா: ம்ம் பட் என்னைய டி எல்லாம் யாரும் சொன்னது இல்லை. இட்ஸ் ஓகே :) (ஸ்மைலி)

எழுத்தாளக் கிழத்தின் இந்த நெருக்கத்தில் பாப்பாவுக்கு அப்ஜெக்‌ஷன் இல்லை. ஆகவே பொங்கலோ பொங்கலெனப் பொங்கும் பொங்கல்களுக்கும் எந்த ஆட்சேபணையும் இல்லை. அதைப்பற்றிய விவாதமும் இல்லை.

ஆணோ பெண்ணோ எடுத்த உடனே பாசக் கயிறு வீச எவராகவே இருப்பினும் என்ன எமனா? முதலில் நுழைகிறதா என்று நூல்விட்டுப் பார்ப்பதுதானே பொது இயல்பு. அதுதான் உலகம் தெரியாத பாப்பா ஆயிற்றே! யாருமே தன்னை டி என்று சொன்னது இல்லை என்று முதலில் சொன்னாலும் இட்ஸ் ஓகே என்று இடம் கொடுத்தால் எவனும் நெருங்கித்தான் உட்காருவான் என்பதுகூடத் தெரியாத பச்சிளம் பாப்பாவோ?

இஸ்லாமியப் பின்னணியில் வளர்ப்பு இணையத்தில் பீற்றிக் கொள்ள. ஆனால் பிராக்கெட்டு போட பிராமண சமூகத்தில் வாழ்பவன் என்கிற பட்டை. ஆனால் இதைச் சொன்னதும் பாப்பாவின் ரியாக்‌ஷன் ஓ கியா. ஹிந்தி தெரிந்த தேசீய பாப்பா போலும்.

’அதனால தாண்டா’ என்றதும்
ஓகே ஓ!

உன்னை மட்டுமே என் மனைவியைக் கூட இப்படிக் கூப்பிடுவதில்லை என்றதும்
ம்ம்.

அவளை நான் டீ சொன்னது இல்லை என்றதும்
தேங்க்யூ. கவிதை அனுப்புகிறேன் படித்துப் பார்த்து ஜொள்ளுங்க என்கிற காரியார்த்த ஜொள்ளு பாப்பா.

இதுவரையிலான சாட் உரையாடைலைப் பார்த்திருந்தாலே, எந்த பெற்றோரும் யாரைக் குறை சொல்வார்கள். இப்படியெல்லாம் பேசுபவனிடம் ஏன் பேசவேண்டும் என்கிற கேள்வி எழுப்புபவனுக்கு பிற்போக்காளன் என்கிற அர்ச்சனை. உங்கொம்மா உங்கொக்காவுக்கு இது நடந்திருந்தால் என்கிற செந்தழலின் மூட மூர்க்க வசைவாதம்.

கரித்துண்டு ஒன்றுக்கு
சிவப்புக் கலர் தோய்த்து
நெருப்பின் பெயரை
இட்டுவிட்டால் என்ன அது
சுட்டுப் பொசுக்கிடுமா?
இல்லை வெறும் 
சிவப்பாய்க் கிறுக்குமோ
சொல்லும்!


யதார்த்தமான எதிர் கேள்வி கேட்பவர்களுக்கு, எழுத்தாளன் வன்புணர விளக்கு பிடிப்பவர்கள் என்கிற பட்டம். வசை கூடக்கூட மடியிலே கனம் வழியிலே பயம் என்பதுதான் உறுதியாகிறது.

ஒன்றுமே அறியாத, வீட்டில் போடப்பட்டிருக்கும் தாப்பாளுக்கு உள்ளேயே சிறையிருக்கும் பாப்பா இருந்தார்ப்போலிருந்து சம்பந்தமே இல்லாமல் எப்படி செட்டப்பாகப் பேசுகிறது?

ஜூன் 03
பாப்பா: அப்பறம் ஒரு விசயம்
எழுத்ஸ்: சொல்லுடா
பாப்பா: உங்க ஃபேஸ்புக் அக்கவுண்ட்ல உங்க வால்ல லாக் பண்ணி வைங்க அப்படித் தெரியாtதி. எங்கிட்ட பாஸ்வேர்ட் குடுங்க நான் சேஞ்ச் பண்ணித் தரேன். என் டியர் ஃப்ரெண்ட்ஸுக்கெல்லாம் நாந்தான் சேஞ் பண்ணித் தந்தேன்.
எழுத்ஸ்: ஓகே குட்டி இப்ப தரவா
பாப்பா: யார்யாரோ உங்க வால்ல வந்து எழுதிட்டுப் போறாங்க
எழுத்ஸ்: ******* திஸ் ஈஸ் மை பாஸ் வேர்ட்.

<என் டியர் ஃப்ரெண்ட்ஸுக்கெல்லாம் நாந்தான் சேஞ் பண்ணித் தந்தேன்>

எலி என்றாவது எதேச்சையாக ஜட்டி போட்டு ஓடுவது உண்டா?

வலை விரிக்கப்படுவது தெரியாமல் தலை குப்புற விழுந்து கிழம் கிளீன் போல்டானது இங்குதான்.

வலை விரித்ததைப் பற்றியே பேசாமல், கிழம் போல்டாகிக் கீழ்த்தரமாக ஜொள்ளுவிட்டதைப் பற்றி மட்டுமே தூற்றிக் கொண்டு இருப்பது பருண்மை ஆராய்ச்சி.

எழுத்ஸ்: அது மாத்த்தவேணாம் குட்டி
பாப்பா: இல்லை மாத்த மாட்டேன் உங்க ஜிமெய்ல் ஐடி குடுங்க.

பாஸ்வேர்டை மாத்திவிட்டால் வயதான காலத்தில் புது கடவுச்சொல்லை நினைவு வைத்துக் கொள்வது கஷ்டம் இல்லையா?பதைப்பு மாத்திடாதேவில்தான் இருக்கிறது. கீழ் நோக்கிய ஜொள்ளு கண் மூளை அனைத்தையும் அமிலத் தாரையாக அரித்துக் கொண்டு இருக்கிறது.

எதையோப் பிடிப்பதற்கு சப்பு கொட்டிக் கொண்டு, தும்பை விட்டுட்டு வாலைப் பிடிக்கிற எழுத்த்ஸின் காமெடியைப் பாருங்கள்.

எழுத்ஸ்: ஆஸ் ஐயாம் அண்டர் யுவர் கண்ட்ரோல், திஸ் ஈஸ் ஆல்ஸோ அண்டர் யுவர் கண்ட்ரோல். ஜிமெய்ல் ஐடி எதுக்குடி

பாஸ்வேர்டே கொடுத்தாகிவிட்டது. ஜிமெய்ல் ஐடியில்தான் ஜென் தாத்தாவின் உயிரே இருப்பது போல எதுக்குடி என்று கொஞ்சல். சூத்தம்பட்டைக்குக் கீழே தோலே வழண்டுகொண்டு இருப்பதுகூடத் தெரியாமல் ஜொள்ளு ஆறாய் ஓடுகிறது. சென்ற வருடம் நண்பேண்டா என்று நம்பி ஏற்கெனவே ஒருவர் பாஸ்வேர்ட் கொடுத்து மாட்டிக்கொண்டது கூடவா உறைக்கவில்லை? சிந்தனை முழுக்க லத்தீன் அமெரிக்காவில் வைத்திருப்பதாய் உதார்விட்டுக் கொண்டு கவனத்தைக் கவட்டையில் குவித்திருந்தால் இதுதான் கெதி. இல்லாவிட்டாலும்தான் என்ன? பெண் என்று வந்துவிட்டால் எல்லா தோஸ்தும் ஏழாம் பேஸ்த்து எட்டாம் பேஸ்த்துதான்.

இழப்பதற்கு ஏதுமில்லை அடைவதற்கோர் பொன்னுலகம் காத்திருக்கிறது என்கிற மூட நம்பிக்கையில் கீழைப் பிரபஞ்சத்தின் மோகப் புளிப்பைக் கரண்டி முகரும் கனவு நுரைத்துக் கடைவாய் வழி ஒழுக ரொங்கிப்போய் பாஸ்வேர்டைத் தூக்கிக் கொடுக்கிறது எழுத்ஸ். பிராக்கெட்டு போடப்பட்டது நிஜம். யாருக்கு யார் போட்ட பிராக் கட்டு என்பதுதான் கேள்வி.

பாஸ்வேர்ட் மெய்ல் ஐடி வாங்கியதும் பாப்பாவின் பக்கத்தில் ’கரண்ட் போய்விடுவது’ எவ்வளவு தற்செயல்! அதை அந்தப் பாப்பா சொன்னதும் அன்றைய ‘பேச்சு வார்த்தை’ கிழம் கொடுக்கும் முத்தத்தில் முடிகிறது. முத்தத்திற்கு நோ அப்ஜெக்‌ஷன். ஏனென்றால் அது பாஸ்வேர்ட் கிடைத்தப் பொன்னான தினமல்லவா!

வீட்டைவிட்டு வெளியே வரவே வராத வரவே முடியாத பாப்பாவை எல்லோருக்கும் தெரியுமாம். பாப்பாவைத் தெரியுமா? ப்ரொஃபைலைத் தெரியுமா? இணையத்தில் பெரும்பாலோர் ப்ரொஃபைல்கள்தான். அதிதீவிர நக்சலைட் பிரச்சாரகர்களில் தொடங்கி காவிக்கொடி கோஷ்டிகள் வரை எத்துனைப் ப்ரொஃபைல்கள். ஜெமோ சாரு தற்கொலைப் படையினரே ஏராளமான ப்ரொஃபைல்களில் உலாவருகிறார்கள். ஒரே ஆள் நான்கு ஐந்து ப்ரொஃபைல்களில் வந்துவந்து நோண்டுவது இணையத்தில் புதிதா என்ன? ப்ரொஃபைல் ஆதரவை மட்டும் புரட்சி ஓட்டுகளாக்கினால் யார் இன்று ஆட்சியில் இருப்பார்கள் என்பதை உங்களை நீங்களே வினவிக்கொள்வது நல்ல வினவாக இருக்கும்.

இணையத்தில் அந்தப் பாப்பாவைப் பலருக்கும் தெரியும். பாப்பா பலரிடமும் ஃபோனில் பேசி இருக்கிறது எனவே அது உண்மையான பெண்தான் என்பது கடவுளுக்குக் கட்டியம் கூறுவதற்கு சமம். இதை எல்லாம் வைத்து இந்த ப்ரொஃபைலுக்கு உரியவர் இவர்தான் என்று உறுதியாகச் சொல்லிவிட முடியுமா? அல்லது அந்த ப்ரொஃபைலை அவர் மட்டுமே பாவிக்கிறார் என்பதற்கு அது உத்திரவாதமா? குடும்பத்தினரின் 24 மணிநேர நேரடிக் கண்காணிப்பில் இருப்பவர் என்று அம்பலப்படுத்துவோரால் அறிமுகப்படுத்தடும் ப்ரொஃபைலுக்கான இந்த அறிமுக பிலடப்பே தற்காப்பாகத் தோன்றவில்லையா? ஆளின் அசல் தெரிந்துவிடாமல் இருக்க எதிர் கேள்விகள் எழுப்பப்படாமல் இருப்பதற்கான பாதுகாப்பு வளையம். அந்தப் ப்ரொஃபைல் அந்தப் பாப்பா இருக்கும் ஊரில் இருந்து மட்டுமே லாகின் ஆகியுள்ளதா சென்னை கோவை வெளிநாடுகளில் இருந்தும் லாகின் ஆகியுள்ளதா? இன்னும் குறிப்பாகச் சொல்வதென்றால் எழுத்துக் கிழத்துடனான அனைத்து சாட் உரையாடல்களின் போதும் ஒரே ஐபியில் இருந்தே லாகின் ஆகி இருக்கிறதா? ஸ்டேடிக் அல்ல டைனமிக் ஐபிதான் என்றால் என்னென்ன ஐபிகளில் இருந்து லாகின் ஆகி உள்ளது?

அசைக்கவியலா கடும் ஆதாரங்கள் கைவசம் இருக்கையில், அம்பலப்படுத்துபவர்கள் யாராயிருந்தாலும் ஏன் எப்போதும் எங்கள் மேல் அவதூறு வழக்கு போடு போடு என்கிற வீராவேச சவாலையே விடுகிறார்கள்.

கிழம் ஒண்ணாம் நம்பர் கோழை பயந்தாங்குளி காகிதப் புலி என்கிற ரகசியம் எல்லோருக்கும் பட்டவர்த்தனம் ஆகிவிட்டதா? தாமே போய் சைபர் கிரைமில் புகார் கொடுத்தால் மேற்குறிப்பிட்டபடி ப்ரொஃபைல் லாகின் எங்கெங்கிருந்து என்று அகழ்வாராயப்படும் என்கிற அச்சமா? அப்படி என்றால் அம்பலக்கூவல் அண்ணாத்தையும் அக்காச்சியும் பூச்சாண்டி காட்டிச் சும்மா மிரட்டும் வெற்றுக் காகிதப் புலிகள்தானா?

இதற்கிடையில் காமாட்சி கஞ்சீராவின் தனி ஆவர்த்தனக் காமெடி வேறு.

ஒரு மாதத்திற்கு முன்னாலேயே தனது மன உளைச்சலை துருப்பிடித்த கஞ்சீராவிடம் சொல்ல முயன்றதாம் அந்தப் பாப்பா. பாப்பாவுக்குக் காது கொடுக்காமல் போய்விட்டோமே என்று இப்போது கஞ்சி ராவுக்கு மன உளைச்சலாம். இதை 23 ஜூனில் சொல்கிறது சட்டைகழற்றி சுக்கிராச்சாரி. 

அம்பலத்து ஆண்டையின் ஸ்கிரீன் ஷாட்படி ஹாய் கிழமே நான் உங்கள் விசிறி என்று பாப்பா விட்ட முதல் குரலே மே 22தானே? அடுத்து பாப்பா இரண்டாவது முறையாக கிழத்தைக் கூப்பிடுவது மே 29ல்தானே? அதை கிழம் கவனித்ததே மே 30தானே? கிழம் கொடுத்த குரலுக்குப் பாப்பா குயிலாக பதில் சொல்வதே மே 31தானே?

ஆக இருவருக்குமான சாட் உரையாடலே மே 31ல்தான் ஆரம்பிக்கிறது. ஆனால் முதல் அம்பலப்படுத்தலில் தம்மாத்தூண்டு காட்டி அக்காச்சி முன்வைத்த தோரணை என்ன? ஏதோ ஒருவாரகாலம் கிழம் ஒழுங்காகப் பேசியதாகவும் அதற்குப் பிறகே அது ரூட் மாறியது போலவும் அல்லவா இருந்தது ஜோடனை. மே 31க்குப் பிறகுதான் ரூட் மாறுகிறார் என்றது முதல் அம்பலப்படுத்தல். உண்மையில் சாட் உரையாடலே மே 31ல்தான் தொடங்குகிறது.

அச்சு அசலான உள்ளது உள்ளபடியிலான சாட் உரையாடல் வெளியிட இன்னும் என்ன தயக்கம்? ஒவ்வொரு சாட் உரையாடலும் யாரால் எப்படித் தொடங்கப்படுகிறது என்பதுகூட இல்லாமல் இது என்ன பருண்மை ஆராய்ச்சி? ஜெயமோகனின் பேருண்மை ஆராய்ச்சி போல காதறு கதாகாலட்சேபமாக அல்லவா இருக்கிறது.

ஜூன் 06
கிழம்: உன் ப்ரெஸ்ட் சைஸ் என்ன

என்று கேட்டபின் பாப்பாவின் எதிர்வினை என்ன?

”நீங்க ரொம்ப ஓவரா பேசறீங்க அப்புறம் நான் போயிருவேன்”

பேசுவது சின்னப் பாப்பா என்றால் இப்படிப் பேசியிருக்க சாத்தியமா? இங்கேயே மன உளைச்சல் வந்திருக்குமா இல்லையா?

சாட் உரையாடல் தொடங்கிய மே 31 முதல் ஜூன் 06 வரை குஜாலாக அல்லவா ஓடிக்கொண்டிருந்தது உறவுப் பரிவர்த்தனை. அதுவரை பாப்பாவுக்கே உண்டாகியிருக்காத மன உளைச்சல் நாகூர் ஆட்டின் ஞானதாடியில் அப்போதேத் தட்டுப்பட்டுவிட்டதாம்? ஒரு மாதம் முன்பாகவே அந்தப் பாப்பா இதனிடம் புகார் சொல்ல வந்ததாம்

ஜூன் 03 பாப்பா பை சொல்ல கிழம்: பதிலுக்கு ஒன்னும் கிடையாதா என்பதோடு முடிகிறது

மே 04 ஹை என்கிற பாப்பாவின் அழைப்பு மட்டுமே இருக்கிறது அன்று அஷ்டமி நவமியோ ’பிராமின்’ பேக்கிரவுண்டு ஒன்றும் பேசவில்லை

மே 05 எனக்குத் தமில் பேசவேத் தெரியாது. என் தமில் எப்படி இருந்துது? அதற்கு முன்பான உரையாடல்கள் அம்பலப்படுத்துவோர் அவசியமில்லை என்று நினைத்துவிட்டனரோ? சாட் உரையாடலில் இருந்து ஃபோனுக்குப் போகிறது உறவு. 24 மணிநேர கமேண்டோ கண்காணிப்பில் வாழும் அசோகவனத்து சீதை இணையத்தில் எழுத்த்ஸ் மட்டுமன்றி இன்னும் பல குமரக்கிழங்களுடனும் கிழக்குமரர்களுடனும் ஃபோனிலேயே பேசி இருக்கிறது வீட்டாருக்குத் தெரியாமல். ஃபோனில் பேசியது பெண் என்பதால் சாட்டியதும் பெண்ணாகவே இருக்கவேண்டும் என்பது அனுமானமா? கட்டாயமா? இது என்ன தர்க்கம்?

அம்பலத்தார் சொல்வதே அறம். படிக்கக் கொடுப்பதை மட்டுமே படித்துவிட்டு அடிக்கச் சொல்பவனை அடிக்க வேண்டும். எந்தக் காலத்திலும் ஆட்சி அதிகாரத்தைப் பிடிக்கப்போவதே இல்லை என்கிறபோதே, பொதுஜனம் விலங்குப் பண்ணையாக இப்படித்தான் நடத்தப்படும் என்றால் தப்பித்தவறி கவுன்சிலராக ஆனால் கூட இந்தக் கம்நீஸ்டுகளிடம் சிக்கிய அந்த வார்டு மக்களின் கதி என்ன? நம்பச்சொல்வதை மட்டுமே நம்பவேண்டும். எழுதப்பட்டதைக் கேள்விக்குட்படுத்தினால் சாட்டையடி சவுக்கடி. தக்க சந்தர்ப்பம் பார்த்து வீட்டு வாசலில் கோஷ்டிப் பிலாக்கணம். இதற்குப் பெயர் மக்கள் ஜனநாயகமா? கும்பல் ஜனநாயகமா?

<இப்போது இந்தப் பிரச்சினை தெரியவந்து அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் அவளைக் கண்டித்திருக்க வேண்டும். ஒருவேளை இணைய வாய்ப்பு கூட பறிக்கப்பட்டிருக்கலாம்>

பாலூட்டி வளர்த்த கிளியாக இணையத்திற்கு அறிமுகப்படுத்தப்பட்ட கிளி இப்போது எப்படி இருக்கிறது என்றுகூட கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு அனுமான ‘லாம்’ ஆகி விட்டது.

அந்தப் பாப்பா தனது பாஸ்வேர்டைக்கூட மாற்றி இருக்கலாம். அந்தப் பாப்பாவேகூட மாறி இருக்கலாம். ஒரிஜினலாக இருந்தது போல் பையனாகக்கூட மாறி இருக்கலாம் லாம் லாம் என்று போட்டுக்கொண்டே போகலாம்.

ஏன்யா சைபர் கிரைமுக்குப் போகாமல் லோலோவெனக் கத்திக் கொண்டு இருக்கிறீர்கள் என்கிற கேள்விக்கான ஆண்டிசிபேட்டரி பெய்ல்தான் இது.

எந்த அயோக்கியனையும் அயோக்கியத்தனம் செய்கையில் பிடிப்பதுதான் நியாயம். அயோக்கியத்தனம் செய்ய வைத்துப் பிடிப்பது நியாயமா? இந்திய இறையாண்மையிலேயே நம்பிக்கை அற்றவர்களிடம் இதை எல்லாம் எதிர்பார்க்க முடியுமா?

ஐசிஐசிஐ வங்கி இந்திய இறையாண்மைக்கு உட்பட்டதா இல்லையா? இறையாண்மையைத் தூக்கி எறிந்துவிட்டுத்தான் மறுவேலை என்பவர்கள் தேசிய வங்கிகளில் அக்கவுண்ட் வைத்துக் கொள்வது சரியில்லை என்பதால்தான் பாட்டாளி மக்களுக்காக பாட்டாளி மக்களால் பாட்டாளி மக்களைக்கொண்டு நடத்தப்படும் ஐசிஐசிஐ வங்கியில் அக்கவுண்ட் வைத்துக் கொண்டு அமெரிக்காவில் அரை வயிறும் கால் வயிறுமாய்க் கஞ்சி குடித்தபடி ஐடி துறையில் அல்லும் பகலும் அல்லல்படும் பாட்டாளிகளிடம் இருந்து நிதியைத் தியாகத்துடன் திரட்டி, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை இணையவெளியில் நிறுவப் பாடுபடுகிறார்கள்.

ஜொள்ளுவிடுவது என்று வந்துவிட்டால் லீனா மணிமேகலை ‘கவிதை’ போல எல்லா மயிராண்டிகளும் ஜொள்ளர்கள்தான். 

ஒரு குட்டிக் கதை

ஒருத்தருக்கு நெம்ப கடனாயிடுச்சி. பேங்குக்காரன் வாங்கினக் கடனுக்கு வட்டிமேல வட்டி கணக்குப்போட்டு எண்ணிக் கீழ வெச்சாதான் ஆச்சுங்கறான். ஐடி எக்‌ஷ்பெர்ட்டான காதலிளம் மனைவி அவரது பூர்வஜென்மக் கடனை அடைக்கவேண்டி அயல்நாட்டுக்கு வேலைக்குப் போவுது. பாக்கப் பாக்க அசல் சாமியாராட்டமே இருக்கறவர் என்கிறதுக்காக ஆளில்லாத போது ஆட்டாமயா இருக்க முடியும்? சாமியார் வேஷ சபலிஸ்ட்டு, தான் சமூக நிலையில் இன்னாருன்னு சொல்லி உறவு வெச்சிக்க இஸ்டப்பட்டப் பொண்ணுங்க யாராச்சியும் இருந்தா தொடர்பு கொள்ளுங்கன்னு, இணையம் பத்தி எதுவும் தெரியாம பொது வெளில எய்திட்டாரு.

எய்துறமோ இல்லையோ சதா எத்தையாச்சும் தேடிக்கிட்டும் நோண்டிகிட்டும் இருக்கற நம்ம கண்ணுல இது பட்டுருச்சி. இன்னாபா இது அல்லாருக்கும் தெரியறாப்புல எய்தி வெச்சிக்கிறியே வூட்காரப் பாப்பா கண்ல பட்டா இன்னா ஆவறதுன்னு சொன்னேன். யப்பா யப்பா மானிட்டர்மேல லப்பர்லாம் வெச்சிக் கலச்சிப் பாத்துட்டேன்பா போவே மாட்டேங்கிது. எப்பிடினாக் கல்ச்சிடுப்பான்னிச்சி. தாடியாலத் தடவிக் கலைக்கிற மேட்டரா இது? ஏதோ போரத்துல அஞ்சாறு வருசம் மின்னேடி எய்தினது அவ்ளோ சுலபத்துலப் போயிடுமா?

ஒருத்தன் வசமாக மாட்டிக் கொண்டால் அவனுக்கு தர்ம அடி கொடுப்பதன்மூலம் உன்மத்தனான தன்னை உத்தமனாகக் காட்டிக் கொள்ளத்தான் எத்துனைப் பேருக்கு அரிப்பு?

சொறி நாய் என்று பல்வேறு தளங்களில் தரச்சான்றிதழ் வழங்கப்பட்ட ஒன்றிற்கு வக்காலத்து வாங்க வேண்டிய அவசியம் நமக்கு மட்டுமல்ல எந்த அமைப்பும் சாராத எவருக்கும் கிடையாது.

காமம் வெட்கம் அறியாதது என்பதற்காக வன்புணர்ச்சி நியாயமான வடிகால் அல்ல. இந்த எளிய உண்மையின் ஒரு பகுதி மட்டும் பூதாகாரமாக்கப் பட்டிருக்கிறது.எலியைப் பிடிக்க, பொறியில் தேங்காய் பத்தையாய் உபயோகிக்கப்பட்டிருக்கிறது ஒன்றும் அறியாத பாப்பா.