Friday, July 29, 2011

எனினும்...

குப்பையாகிப்போன இரும்பு
கொதித்துக் குழம்பாக ஓடி
வார்ப்பில் குளிர்ந்து
தளவாடமாக வெளியேறிக்கொண்டிருந்தது

கண்காணித்துக் கொண்டிருந்தது
உச்சியில் வெளிச்சம் உமிழ்ந்த கம்பம்

எனினும்
விளக்கடி இடுக்கில்
கட்டப்பட்டுக் கொண்டிருந்தன
எளிய கூடுகள்
சுள்ளிக் குப்பையால்.