Monday, July 25, 2011

யூகே கல்லூரிப்பெண்ணுடன் ஒரு சாட் உரையாடல்

Today

hai sir
hw r u
i hv been flowing u r blog fr long
just awesom
வணக்கம்

keep it up

நன்றி

welcome

தமிழ் எழுதி வைத்துக் கொள்ளவில்லையா?

no sir i can read tamil but i found my self very difficut to write in tamil bcz i born and brought up in uk

ஓ! சரி சரி. தமிழ் படிக்க மட்டுமே முடிந்தவருக்கும் கூட என் எழுத்து படிக்கக் கடினமாகத் தோன்றாதது ஆசுவாசமாய் இருக்கிறது.

எழுத்தாளர்கள் பிள்ளைபிடிப்பவர்கள் போல் இருக்கும் காலகட்டத்தில் என்னிடம் ஒரு பெண் பேச வருவது மிகுந்த ஆச்சரியத்தை அளிக்கிறது.

ha ha
dnt be afraid on me sir
i knw the issue about charu

:)))))))))))))

July 25 at 9:36pm
என்மீது அவதூறு வழக்கு போடப்போவதாய் மிரட்டிக் கொண்டிருந்த ஜேபீ ராஜேன்ந்திரன் அவர்கள் வசிக்கும் புனித பூமிகூட தாங்கள் வாழும் ********* என்பதால் சற்றே மெர்ஸலாகிவிட்டேன். (send as a message)
Your chat message wasn't sent because ******** is offline.

July 25 at 9:43pm Report
ohhh,,sir dont worry

***************

இந்தப் பெண்ணின் ஃபேஸ்புக் தொடங்கப்பட்டிருப்பதே 
added ******** UK '13 to her education.
********* UK
18 hours ago · Like · 
There are no more posts to show.

****************

அந்தப் பெண்ணின் ப்ரொஃபைல் படத்தை தரவிறக்கிப் பெரிதாக்கிப் பார்த்துக் கொண்டிருந்தேன். படத்தின் தெளிவின்மையில் வயது சரியாகப் பிடிபடவில்லை. டிவியில் பாடல் நிகழ்ச்சி பார்த்துக் கொண்டிருந்த மனைவி மடிக்கணினியைப் பார்த்து,

யார் இது?

மாணவி போல் தோன்றுகிறதா?

இல்லை பெரியவள்தான்? ஏன்? இன்னும் கொஞ்சம் பெரிதாக்கு.

பெரிதாக்கப் பெரிதாக்கத் தெளிவின்மைதான் கூடும். இது சாட்டில் என்னைப் போட்டுப்பார்க்கும் முயற்சியாக இருக்கலாமோ என்றொரு சந்தேகம்.

அய்யோ கடவுளே நீ அப்படியெல்லாம் மாட்டிக் கொள்ளாதே.

***************

ஹூம். மனைவிக்குதான், குணப்படுத்தவே முடியாத ஜொள்ளன் இவன் என்பதில் என்ன ஒரு தீர்மானமான நம்பிக்கை.

பெண்ணே! நீங்கள் உண்மையிலேயே நட்போடு உரையாடவந்தவர்தான் என்றால், சந்தேகப்பட்ட என்னை மன்னிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். சாரி.