<காகம், கட்டிடங்கள் யோசிப்பது போல எழுதிய பத்திகள் நல்லா இருந்தன. அடுத்தப் பதிவு எப்போங்க? இக்கதையில் குறியீடுகள் (கடைசி வரியில்லைன்னா இதைக் கேட்டிருக்க மாட்டேன்) எல்லாமே புரிந்தாமாதிரி இன்னும் எவ்வளவு நாள் தான் நான் நடிக்கறது? ;))>
***
இது கதைதான் ஆனால் மாமல்லன் கதையா? சட்டுலிட்டி எங்கே? ரொம்ப அப்பட்டமாக இருக்கிறது. சொல்லி இருப்பதைத் தாண்டி வழக்கமாக உன் கதைகளில் இன்னொறு விஷயம் இருக்குமே அது எங்கே? என்றான் ஒரு நண்பன்.
***
<அன்புநிறை மாமல்லன்,
கதை இன்னும் இருக்கிறது போலிருக்கிறதே. முழுமை பெற்று முடிவை அடைந்து போல் தெரியவில்லை. பால்கனியில் காக்கைகள் அட்டகாசம், நல்ல சப்ஜெக்ட். கதையில் வரும் பாத்திரங்கள், காக்கைகளின் தொல்லைக்கு ஏதேனும் செய்தனரா, இல்லை அதனோடு வாழப் பழகிவிட்டார்களா? இல்லை, பின் பகுதியில் காக்கைகள் தம் உரிமைப் பிரதேசங்களை, மக்கள் பிடிங்கிக்கொள்வது பற்றி ஏதேனும் செய்ய விழைகின்றனவா?
கதை வளர்ந்து முடிவுபெற்ற நிறைவு இல்லை. பார்க்கவும்.>
இது ஒரு வெகுஜனப் பத்திரிகை எழுத்தாள நண்பரின் அபிப்ராயம்.
அவருக்கு என் பதில்,
சரி. ஆனால் கதை அவ்வளவுதான்.