Tuesday, August 16, 2011

முட்டாளுக்காக மூன்று

தத்தளிப்பு

தத்தளிக்கிற தக்கை
முக்குளிக்கும் தோற்றம் காட்டலாம்
மூழ்கிக் கடலாழம் காணமுடியுமா?

***

வெத்து

சிறைக்குப்போன அப்பாவிக்காய்ப் போராடி 
சிறைபுகுந்த தோழர் வெற்றிகரமாய் பெயிலில் வந்தார். 
மாலை மரியாதையுடன் வீடியோ படமெடுத்து 
புரட்சிகரமாய் வெளியிட்டுக்கொண்டார்கள்.

***

வேட்டு

எவனோ வெடித்துப்போட்ட 
பட்டாசுக் கூளத்தை
எவனோ பொறுக்கிக் கொண்டிருந்தான்.

தண்டவாளத்துத் தலையைப் பார்த்து 
ஓட்டுப்பொறுக்கி என இளித்தது
தண்ட வாளம்.

***