Tuesday, August 2, 2011

உப்பரிகை [சிறுகதை] - மேலும் சில அபிப்ராயங்கள்


உப்பரிகை [சிறுகதை]


ட்விட்டரில் kavi_rt kavirajan

80’ளின் நடை என்றெல்லாம் படுத்தமாட்டேன் ஆனால் இந்தச் சிறுகதை 80களில் வந்திருந்தால் பிரபல்யமாகியிருக்கும் என்ற எண்ணத்தைத் தவிர்க்கமுடியவில்லை

***

அன்புள்ள மாமல்லன் அவர்களுக்கு,

உப்பரிகையை இப்பொழுது அருகில் சென்று சற்று உணர்ந்து பார்க்க முடிகிறது. ஒரு நடுத்தரக் குடும்பத்தைப் பற்றிய கதையாக தொடங்கி....
அடுக்குமாடி குடியிருப்புகளில் வாழும் மக்களின் சிக்கல்களை விவரித்துக் கொண்டே வரும்போது... கோபப் பறவைகளின் (Angry birds) களனாக மாறுகிறது. Angry Birds பற்றி சிறிது யோசித்துக் கொண்டிருந்தேன். ஹிட்ச்காக்கின் Angry birdsஓ அல்லது கூகுளின் விளையாடோ எது உங்களை தூண்டியிருக்கக் கூடும் என்று... 

காகங்களின் உரிமைக்குரல்... அதைத் தொடர்ந்து குடியிருப்புக் கட்டிடங்களின் கொந்தளிப்பு என்று வண்ணம் மாறி பயணிக்கிறது கதை.

காகங்கள் அசைவ உணவை பதுக்கி வைப்பது, வெடிக்காய்களை சமையலறையில் போட்டுப் போவது... இறுதியில் பால்கனியை அடைத்து பாதுகாவலன் கையில் கொடுத்துவிட்டு வீட்டு மனிதர்கள் தம் பக்கம் வெற்றி பெற வெள்ளிக்கிழமை ஜபிப்பது என்று எல்லாம் இந்திய துணைகண்ட Mapல் உப்பரிகையான காஷ்மீரை தொட்டு செல்கிறது. 

நிறைய நுணுக்கங்களோடு பிரமாதமாக எழுதியிருக்கிறீர்கள். வாசிக்க தந்ததற்கு நன்றிகள்.

அன்பான ஸ்ரீதர்,

நன்றி.

***

அதிஷா

12:52 PM அதிஷா: கதைய படிச்சேன் ஒன்னுமே புரியல.. நான் இன்னும் வளரணும்போல

12:53 PM ஆனா சொன்னான் பேசினான் நினைத்தான்ற மேட்டர எப்படி ஹேன்டுல் பண்ணிருக்கீங்கனு கத்துகிட்டேன்
me: காஷ்மீர்

12:54 PM அதிஷா: நான் இலங்கையவே மைன்ட்ல வச்சிட்டு வாசிச்சேன்.. அதுக்குள்ள இது வரல அதான் கன்ப்யூஸ் ஆகிட்டேன் போல
me: அதான் பிரச்சனை. ஆனா நேரடியாப் பாக்காம கொஞ்சம் விலகினா நிறைய விஷயங்களுக்குப் பொருந்தும்.

12:55 PM அதிஷா: ம்ம்..மென்மையான கதைதான்

12:56 PM ஆட்டோ ஃபிக்சன் வகையறாவா இது?

5 minutes

1:01 PM அதிஷா: மௌடீகம்னா கமுக்கமா இருக்கறதுதானே!

3:17 PM me: மெளடீகம் = மூடத்தனம்

***

யுவகிருஷ்ணா

1:10 PM யுவ: சார்! உங்க கதையை படிச்சிட்டு பயந்துட்டேன்.
8 minutes

1:18 PM me: யோவ் கிண்டலா

1:19 PM யுவ: சார்! birds படம் பார்த்த மாதிரி இருந்தது. ஆக்சுவலா நீங்க ஒரு டீடெயிலிங் கிங்

24 minutes

1:44 PM me: birdsல சூப்பரா பொம்மைப் பறவைகளையும் கலந்து வெச்சி சீட் பண்ணி இருப்பாரு. குறிப்பா வீட்டுக்கூரைல வீட்டு முன்னாடி எல்லாம். படம் பாத்த பின்னாடி ரெண்டு நாளைக்குத் தெருவுல நடக்கவே பயமா இருந்துதுன்னு சொன்ன பெருசுங்கள்ளாம் உண்டு. நாமல்லாம் எங்க?

***

கென் Ken

2:57 PM கென்: மச்சி சார் ஒரு நாவலோட ஒரு அத்தியாயம் முடிச்ச பீல் வருது இந்த கதையை நீங்க ஏன் நாவலா எழுதக்கூடாது

2:58 PM வழக்கமா சொன்னதுதான் உங்க கதை மொத்தமா திரைக்கதையாவே விரியுது

24 minutes

3:22 PM me: அது சிறுகதைதான்:)))