Tuesday, September 27, 2011

உயிர்

எப்போதும் உனக்கு சொல்லிக்கொள்

எளிய சொற்களில் கடின விஷயமா
கடின மொழிக் கற்றைகளில் எளியதா
என்பதில் ஒருபோதும் மயிரை இழக்காதே
எஞ்சி இருப்பதே கொஞ்சம் எனும்போது
சிக்கனம் அவசியம்

பூ எப்படி மலர்ந்தது அல்லது ஏன் மலர்ந்தது
எப்போது மலர்ந்தது இல்லை அது பூதானா என்பது குறித்து
(உன்னால் இயன்ற) விரிவான ஒற்றைவரி அறிக்கை வெளியிடும் முன்
வாசம் பற்றி அல்லது இன்மை பற்றி
அதன் உயிர்தொட்டுச் சொல்ல
உன்னிடம் ஏதும் இருக்கிறதா என்று கேட்டுக்கொள்

நாக்கை நீட்டும் முன்பாக
துருத்தி நிற்கும் உன் மூக்கை உபயோகி

முக்கியம், மூக்கின் நீள அகலமல்ல
அதன் முகரும் திறன்