Sunday, October 23, 2011

ஜெயமோகனின் அர்ச்சனைக்கு நம் அபிஷேகம்


ஜெயமோகனின் அர்ச்சனை

from Haranprasanna haranprasanna@gmail.com hide details 12:04 PM (10 hour ago)
reply-to solputhithu@googlegroups.com
to solputhithu@googlegroups.com
date Sat, Oct 22, 2011 at 12:04 PM
subject (ஜெயமோகன்.இன் Group) ரகசியம் பரம ரகசியம்
mailing list <solputhithu.googlegroups.com> Filter messages from this mailing list
mailed-by googlegroups.com
signed-by googlegroups.com
unsubscribe Unsubscribe from this mailing-list
Important mainly because of the words in the message.

இனி ரகசியம் பற்றிப் பேசிப் பயனில்லை. இருந்தாலும் இங்கே இருக்கும் உறுப்பினர்களுக்கும் ஜெயமோகனுக்கும் இது தெரியட்டும் என்ற நோக்கில் இது இங்கே பதியப்படுகிறது. 
=====================

http://www.maamallan.com/2011/10/blog-post_1056.html

from jeyamohan_ B jeyamohan.writer@gmail.com hide details 12:16 PM (10 hours ago)
reply-to solputhithu@googlegroups.com
to solputhithu@googlegroups.com
date Sat, Oct 22, 2011 at 12:16 PM
subject Re: (ஜெயமோகன்.இன் Group) ரகசியம் பரம ரகசியம்
mailing list <solputhithu.googlegroups.com> Filter messages from this mailing list
mailed-by googlegroups.com
signed-by googlegroups.com
unsubscribe Unsubscribe from this mailing-list
Important mainly because of the words in the message.

Arangasamy K.V arangasamy@gmail.com to solputhithu show details 12:51 PM (10 hours ago)

கண்டுக்காம விடுங்கப்பா , மேலே எந்த விவாதமும் இதையொட்டி வேண்டாம், 

இதென்ன இவ்வளவு முக்கிய விஷயமா என்ன ?

Cyril Alex cyril.alex@gmail.com to solputhithu show details 2:27 PM (8 hours ago)

இந்தக் குழுமம் ரகசியக் குழுமமாய் இருக்கத் தேவையில்லை என்பதுவே என் கருத்து. இந்தக் குழுமம் பின்னூட்டங்களுக்குப் பதிலாக உருவாக்கப்பட்டது. எனவே மட்டுறுத்தல் மட்டும் தேவை. மற்றபடி இங்கே எல்லோரையும் அனுமதித்து பொதுவான விவாதங்களை செய்வதே சிறந்தது என நினைக்கிறேன். ஜெ எப்படி சில தேர்ந்தெடுக்கப்பட்ட அல்லது அவர் விருப்பப்பட்ட பின்னூட்டங்களுக்கு எதிர்வினையாற்றுவாரோ அப்படியே இங்கேயும் செயல்படட்டும்.

Please throw this open to all. Let all people come in. We can create another group for selected readers if needed.

ஜெயமோகனின் அர்ச்சனைக்கு, பதில் மரியாதையாய் நம் அபிஷேகம் 

எஸ்.ராமகிருஷ்ணனுக்கு விருது கிடைக்கும்போதெல்லாம் பாராட்டு தெரிவித்து உலகறிய உத்தம்ர் போல் தனது தளத்தில் எழுதுவது. மறுபுறம் அவர் எழுதுவது இலக்கியம் இல்லை பலப்பம் சிலேட்டு, அவர் வெறும் பல்ப் எழுத்தாளர் என்று தனது குழுமத்திற்குள் கூலிப்படைகளைத் தூண்டிவிட்டு ‘விவாதம்’ புரிந்து அகமகிழ்வது..

இந்த இரண்டில் எது உண்மையான ஜெயமோகன் 

விகடனில் வெளியான ’தொப்பி-திலகம்’ (காணோமே நீக்கியாகிவிட்டதோ - விகடனைக் கண்டித்து குரல்கொடுத்த இலக்கியவாதிகள் பாவம்)பிரச்சனைக்குப்பிறகு தினம் பல்லாயிரம்பேர் வந்து அதற்குப்பின் சில ஆயிரம் வாசகர்கள் நிரந்தரமாய் தங்கிவிட்ட மாபெரும் ’வலைத்தளம்’ கொண்ட எழுத்தாளருக்கு, பதினாறு வருடங்கள் காணாமற்போயிருந்த, இரண்டு தலைமுறை வாசகர்களுக்குப் பெயர்கூடத் தெரியாத ஒருவனைப் பார்த்து ஏன் இந்தப் பதற்றம்? 

ஜெயமோகனின் ’கருத்து கந்தசாமி’ கட்டுரைகள் மீது எள்ளளவு நல்ல அபிப்ராயம் கூட இல்லாத இணைய வாசகர்களுக்கும்கூட புனைவில் ஜெயமோகனே பெரிய புளுத்தி என்கிற எண்ணம் இருக்கிறது.

கொட்டையைக் கசக்கி பிரித்து உடைத்து இது உண்மையிலேயே பெரிய புலியா இல்லை புளியாகக்கூடத் தேறும் லாயக்குள்ளதா என்று கேட்பவன் அரைவேக்காடு.

தன் படைப்புகள் பற்றி அவன் எழுதுவது எதுவும் பொருட்படுத்தத்தக்கவையல்ல என்பதே உண்மையான அபிப்ராயம் எனில், ஏகத்துக்கும் பணம் செலவழித்து, ஜெயமோகன் கூலிப்படையின் வீரபாகுத்தேவர் பதவியைப் போட்டியின்றித் தக்கவைத்துக் கொண்டிருக்கும் கே.வி.அரங்கசாமி அவர்கள், <கண்டுக்காம விடுங்கப்பா> என்று குழுமத்திற்குள் கூறிக்கொண்டு, வெளியில் எதிர்படும் இலக்கியவாதியிடமெல்லாம் மாமல்லன் ஜெயமோகனைப்பற்றி இப்படி எழுதுவதையெல்லாம் ஏற்றுக்கொள்கிறீர்களா என்று ஏன் கேட்க வேண்டும்?

<விரிவான விவாதமும் தேவை இல்லை.>

<இந்த ஆசாமிகள் நான் அவர்களை பொருட்படுத்துவதில்லை என்பதன் சோர்வில் இருந்து மீள இதை பயன்படுத்திக்கொள்கிறார்கள்.>

<நாம் இதை எவ்வகையிலும் பொருட்படுத்தவேண்டியதில்லை> 

என்று ஜெயமோகன் ஏன் அலற வேண்டும்? 

ஜெயமோகன் படைப்புகள் பற்றி நான் எழுதுவதை அவர் பொருட்படுத்திப் படிப்பதே இல்லை என்பது உண்மை என்றால் கிடப்பது கிடக்கட்டும் கிழவியத் தூக்கி மணையில் வை என்கிறவிதமாய் Jul 19 2011 ரப்பர் நினைவுகள் ஏன் எழுதப்பட வேண்டும்?  

அதற்கான உண்மையான காரணம் Friday, April 29, 2011 குடித்தால்தான் என்றில்லை குடியைப் பற்றி எழுத முற்பட்டாலே உளற முடியும் என்கிற இந்தக் கட்டுரை இல்லை என்று ஜெயமோகனால் நெஞ்சைத் தொட்டுச் சொல்லமுடியுமா?

இத்துனைக்கும் நான் எழுதி இருப்பது என்னவோ ரப்பர் நாவலின் ஒரு அத்தியாயத்தின் சிறு பகுதியைப் பற்றி மட்டுமே. யாரேனும் ரப்பர் நாவலை தட்டச்சு செய்து கொடுத்தால் ரப்பரைக் கலைக்கும் பென்சில் என்கிற புத்தகம் எழுதித் தமிழ் இலக்கியத்திற்குத் தொண்டாற்ற உதவியாய் இருக்கும் என்று சொன்னதற்கே அது கொஞ்ச வயசில் எழுதப்பட்ட பிஞ்சு நாவல் என்கிற தொனியில் கெஞ்சல் ஏன்? 

பிரபல எழுத்தாளர்கள் தங்களைப்பற்றிய விமர்சனக்களை படிக்கவே இல்லை அல்லது என் பார்வைக்கு வரவே இல்லை என்கிற ரீதியில் புறக்கணிப்பது ஒன்றும் புதிய விஷயமில்லை. குறிப்பாக என்னைப் புறக்கணிக்கிற வேஷம் எனக்குப் புதிதன்று.

எஸ்.ராமகிருஷ்ணனின் புறக்கணிப்பைப் பார்க்கவேண்டுமா?

ஆடுகளின் நடனம் என்கிற எஸ்.ராமகிருஷ்ணன் பதிவு பற்றி Tuesday, September 7, 2010 எழுத்துக் கலை - உண்மை இணையம் வ்ந்து இருபது நாட்களுக்குள் எழுதிய கட்டுரைக்கு, விகடன் புகழ் ஜெயமோகனைவிடவும் விகடனைத் தாய்வீடாகக்கொண்ட பேமஸ் எழுத்தாளர் எஸ்.ரா அவர்களின் எதிர்வினைதான் ஒன்றரை மாதம் கழித்து Oct 19, 2010 வாக்கில வெளியான பார்க்க வந்த இலை.

அவனைப் படிப்பவர்களெல்லாம் இணையத்தின் ‘அற்ப வாசகர்கள்’ என்பதுதான் பாப்புலர் எழுத்தாளர்களின் கருத்து என்றால், ஒரமாய் உட்கார்ந்து ஓய்வுபெற்றபின் எழுதிக்கொண்டிருக்கும் புலம்பெயர்ந்த கனவான் எழுத்தாளர், ஜெயமோகனின் அறம் கதை குறித்து, அதுதான் கதை எழுதக் காமுறுவோருக்கான அட்சராப்பியாசம் என்று உளறிக்கொட்டியதை அபிஷேகமாய் தன்மீது ஊற்றிக்கொண்ட ஜெயமோகனை சற்று அடித்து விளையாடியதுதான் Saturday, February 5, 2011 அறிசொறி? அறியா(ச்)சொறி? அதற்கே இந்த அரைவேக்காட்டின் எழுத்தை, ’கானடா’வில் வாழ்வதன் காரணமாய், ஜெயமோகனின் விசேஷ அன்புக்குப் பாத்திரமான,எழுத்தாளர் அ.முத்துலிங்கம், அறம் பற்றிய நாட்குறிப்புகள் நல்ல சிறுகதை (2011-02-02) என்கிற தம் பதிவை தளத்திலிருந்தே நீக்கிவிட்டார்.

ஜெயமோகனின் அறம் கதையைப் படித்துவிட்டு இணையமே தழுதழுத்துக் கண்ணீரும் கம்பலையுமாய் கையறு நிலையில் நின்றபோது எழுதப்பட்ட Thursday, February 3, 2011 பரப்பிசை மோடில் பப்பரப்பா எழுதும் இலக்கியக் கதைகள் பதிவை ஜெயமோகன் படிக்கவே இல்லை. ஆனால் பாருங்கள் அ.முத்துலிங்கம், ஜெயமோகன் சொல்லச்சொல்லக் கேட்காமல் படித்துவிட்டார் போலும். ஐயோ பாவம் அறம் கதையைப் பாராட்டிய அந்தப் பதிவையே தம் தளத்தில் இருந்து நீக்கி விட்டார். 

பின்தொடர்ந்து விடாமல் அலறும் நிழலின் குரலின் குழுமத்தில் தழைத்து விஸ்வரூபமெடுத்து நிற்கும் ஜனநாயகத்தில் எல்லோரும் எப்படி சுதந்திரமாக சுவாசிக்கிறார்கள் என்பதற்கு, Cyril Alex cyril.alex@gmail.com to solputhithu அவர்களே சிறந்த எடுத்துக்காட்டு. 

இதை மட்டும் சொல்லி நிறுத்தி இருந்தால் ஜெயமோகன் தளத்தை நிர்வகிப்பவர் என்றாலும் குழுமத்தில் இருந்தே தூக்கி எறியப்பட்டுவிடக்கூடும் என்பதனால் எவ்வளவு புத்திசாலித்தனமாக We can create another group for selected readers if needed. என்று சொல்லி வைத்துக்கொள்கிறார் பாருங்கள்.

தன்னைப்பற்றிய விமர்சனங்களைப் படிப்பவர்களை அற்ப வாசகர்கள் என்கிற ஜெயமோகன், இன்னும் நான் எழுத இருப்பவற்றைப் படிக்கிற இனைய வாசகர்களை என்னவென்று அழைக்கப்போகிறார்? இவ்வுலகில் வாழவேத் தகுதியற்ற அற்ப ஜீவிகள் என்றா? 

நினைவில் இருத்துங்கள். 

இந்த பாசிஸ்டு ஜடாமுனிதான் இந்திய ஜனநாயகத்திற்காய் ஓங்கி ஒலிக்கும் இன்றைய இணைய காந்தி. 

ஓம் சாந்தி ஓம்.