Friday, November 18, 2011

தமிழ் விக்கி ஊடகப் போட்டி

Bala Jeyaraman 12:16 AM (4 hours ago) to me


மாமல்லன் சார்,

ஒரு உதவி. தமிழ் விக்கிப்பீடியாவில் ஒரு ஊடகப் போட்டி ஒன்றை நடத்துகிறது. தமிழ்-தமிழர் தொடர்புடைய புகைப்படங்கள், ஒலி, ஒளிக் கோப்புகளுக்கான போட்டி இது. இது பற்றிய சிறு செய்தியினை தங்கள் வலைப்பதில் தளத்தில் வெளியிட்டு உதவுமாறு வேண்டிக் கொள்கிறேன். போட்டி குறித்த தகவல்களை கீழே தந்துள்ளேன். ஒரு துண்டறிக்கை ஒன்றையும் இணைத்துள்ளேன்.

நன்றி
பாலா (சோடாபாட்டில்)

தமிழ் விக்கிப்பீடியா ஊடகப் போட்டி ஒன்றை நடத்துகிறது. இதில் பங்கேற்போர் தமிழ்-தமிழர் தொடர்புடைய புகைப்படங்கள், ஒலிக் கோப்புகள், ஒளிக் கோப்புகள், அசைப்படங்கள், வரைபடங்கள் ஆகியவற்றைப் பதிவேற்றலாம். போட்டிக்காகப் பதிவேற்றும் கோப்புகள் பங்கேற்பாளரது சொந்தப் படைப்புகளாக இருக்க வேண்டும். இப்போட்டியின் மொத்தப் பரிசுத் தொகை 850 அமெரிக்க டாலர்கள். இப்போட்டியில் முதல் பரிசாக 200 டாலர்கள், இரண்டாம் பரிசாக 100 டாலர்கள், மூன்றாம் பரிசாக 50 டாலர்கள் என பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளன. ஆறுதல் பரிசாக 25 டாலர் வீதம் இரண்டு பரிசுகளும் வழங்கப்பட உள்ளன. இவை தவிர தொடர்ச்சியாகப் பங்களிப்போருக்காக 100 டாலர் வீதம் மூன்று சிறப்புப் பரிசுகளும், தமிழர் தொழிற்கலைகளைப் பற்றிய சிறந்த ஊடகக் கோப்புக்காக 150 டாலர் சிறப்புப் பரிசாகவும் வழங்கப்பட உள்ளன.

போட்டி நவம்பர் 15, 2011 முதல் பெப்ரவரி 29, 2012 வரை நடைபெறும். போட்டியில் பங்கேற்க விரும்புவோர் http://ta.wikipedia.org/wiki/contest என்ற இணையமுகவரிக்குச் சென்று முழு விபரங்களையும் அறிந்து கொள்ளலாம். போட்டி பற்றிய சந்தேகங்கள் மற்றும் கேள்விகளை tamil.wikipedia@gmail.com என்ற  மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.