Friday, November 18, 2011

நீரில் மிதக்கும் நிலவு

Chandra Sekhar. sekhar.chandra70@ymail.com Nov 14 (3 days ago) to me

மாமல்லன் சார்,

உங்க உடனடி பதிலுக்கு நன்றி சார்.

கரெக்டா சொன்னீங்க. நான் இந்தியாவை விட்டு வந்தே பல வருஷங்கள் ஆகுது. அதனால அமெரிக்க வாழ்க்கை அனுபவத்தை தான் எழுத முடியும்.

உங்ககிட்ட லிஸ்டு  கேட்கலை. புதுசா எழுத வந்தவங்களைப் படிச்சா எதைப் பத்தியெல்லாம் இப்ப எழுதறாங்கன்னு தெரிஞ்சிக்க தான் புது எழுத்தாளர்கள் அதுவும் இணையத்துல எழுதரவங்களைக் கேட்டேன்.நன்றி சார்.

நன்றி
சந்திர சேகர்.


--- On Mon, 11/14/11, Chandra Sekhar. <sekhar.chandra70@ymail.com> wrote: 
From: Chandra Sekhar. <sekhar.chandra70@ymail.com>
Subject: Hello Writer Mamallan sir.
To: madrasdada@gmail.com
Date: Monday, November 14, 2011, 4:54 AM

Chandra Sekhar. sekhar.chandra70@ymail.com Nov 15 (2 days ago) to me

ஜெயமோகனை ஏன் சார் இப்படி திட்டறீங்க? ஒரே மோதலா இருக்கே :)

இதையும் வெளியிடாதிங்க சார்..ப்ளீஸ்..

--- On Mon, 11/14/11, Chandra Sekhar. <sekhar.chandra70@ymail.com> wrote:
From: Chandra Sekhar. <sekhar.chandra70@ymail.com>
Subject: Re: Hello Writer Mamallan sir.
To: madrasdada@gmail.com
Date: Monday, November 14, 2011, 8:21 AM

Chandra Sekhar. sekhar.chandra70@ymail.com Nov 16 (1 day ago) to me

நானே எனக்கு வேண்டியதைக் கண்டுபிடித்துவிட்டேன் சார். தெறம இருக்கோ இல்லியோ எழுத்தாலர்கல்னா ரொம்ப திமிர் பிடிச்சவங்கன்னு ப்ரூவ் பண்ணிட்டீங்க. போய் மத்தவங்க மேல கல்லடிக்கிற வேலையைப் பாருங்க..உங்க உபதேசத்துக்கு நன்றி.

--- On Tue, 11/15/11, Chandra Sekhar. <sekhar.chandra70@ymail.com> wrote:
From: Chandra Sekhar. <sekhar.chandra70@ymail.com>
Subject: Re: Hello Writer Mamallan sir.
To: madrasdada@gmail.com
Date: Tuesday, November 15, 2011, 5:46 AM
***
தொடர்புடைய பதிவு
ரைட்டராவது எப்படி?

*****
M. Raja ***@gmail.com 5:58 PM (41 minutes ago)to me

அன்பும் பண்பும் மிக்க மாமல்லன் அவர்களுக்கு ,

வணக்கம்...எனது பெயர் ராஜா... தனியார் மருத்துவமனையில் மருத்துவனாக பணியாற்றுகிறேன்...சில நாட்களாக தங்களது வலைப்பக்கத்தை தொடர்ந்து வாசித்து வருகிறேன்... தங்களை ஒரு பண்பட்ட எழுத்தாளராக, அடையாளம் காட்டின, தங்களது கட்டுரைகள்...ஈர்க்கப்பட்டவனாய், முதல் பதிவிலிருந்து வாசிக்கத் துவங்கியிருக்கிறேன்...தங்களது சிறுகதைத் தொகுதியையும் வாங்கி படித்துக்கொண்டிருக்கிறேன்...தங்களுடன் விவாதிக்கும் அளவுக்கு தீவிர இலக்கிய வாசிப்பில்லை எனக்கு...ஆனாலும், ஒரு மாணவனாய், தங்களுடன் இலக்கிய சம்பந்தமாய் கலந்துரையாட விரும்புகிறேன்...தங்களுக்கு ஆட்சேபனை இல்லையென்றால், ஒரு ஞாயிறன்றோ அல்லது தங்களுக்கு அவகாசம் இருக்குமொரு வேளையில் தங்களை சந்திக்கிறேன்.

நன்றி,
ராஜா

அன்பான ராஜா,
மேலே இருப்பவரின் மெட்டமார்ஃபிஸிஸைப் பார்த்தீர்களல்லவா? வெறும் இமெய்ல் / இணைய ’உரையாடலுக்கே’ இந்த கெதி. இதற்கு மேலும் நேரில் சந்திக்க வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தால் விதி வலியது - என்னுடையதைச் சொன்னேன்.
<பண்பும் மிக்க> 
மரியாதைக்காகக்கூட பொய் சொல்ல வேண்டாம்.

<தங்களை ஒரு பண்பட்ட எழுத்தாளராக, அடையாளம் காட்டின, தங்களது கட்டுரைகள்...>
இதையெல்லாம் திரைத்துக் கட்டிய காழ்ப்புப் பதிவுகளாக ஒதுக்கவே ’கெளரவ இலக்கியவாதிகள்’ விழையக்கூடும். நீங்களோ கட்டுரை என்கிறீர்கள். உங்கள் பெருந்தன்மைக்கு நன்றி.
<முதல் பதிவிலிருந்து வாசிக்கத் துவங்கியிருக்கிறேன்...>
மறு பிரவேச வளர்ச்சியின் ரகசியம் பிடிபடக்கூடும்.
<தங்களது சிறுகதைத் தொகுதியையும் வாங்கி படித்துக் கொண்டிருக்கிறேன்...>
மிக்க நன்றி.
<தங்களுடன் விவாதிக்கும் அளவுக்கு தீவிர இலக்கிய வாசிப்பில்லை எனக்கு...>
எனக்கும்தான்.
<ஆனாலும், ஒரு மாணவனாய், தங்களுடன் இலக்கிய சம்பந்தமாய் கலந்துரையாட விரும்புகிறேன்...>
அதெல்லாம் முடியாது. கையில் பிரம்போடு திரிகிற 70களின் வாத்தியைப் பார்த்த பீதியைக் கிளப்புகிறீர்கள்.
<தங்களுக்கு ஆட்சேபனை இல்லையென்றால், ஒரு ஞாயிறன்றோ அல்லது தங்களுக்கு அவகாசம் இருக்குமொரு வேளையில் தங்களை சந்திக்கிறேன்.>
மேலே கூறியதுதான் திரும்பவும்.
இதற்கு மேலும் நேரில் சந்திக்க வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தால் விதி வலியது - என்னுடையதைச் சொன்னேன்.
தற்காப்புத் திறம் என்பது அனைத்து உயிரினங்களுக்குள்ளும் அனிச்சையாய் இயங்கிக்கொண்டிருக்கிற விஷயம். தங்களின் பிரத்தியேகப் பிரதேசத்திற்குள் அடுத்தவர் நுழைந்து களேபரப்படுத்திவிடாமல் அரண் அமைத்துக் கொள்ளக் குழந்தைப் பருவத்தில் இருந்தே இயங்கத் தொடங்கிவிடுகிறது. முன்பின் அறியாதவர் எட்ட இருந்தே கொஞ்சப்பார்த்தாலும் குழந்தைகள் முகம் திருப்பிக்கொள்வதைப்போல. சரிதான் போ என்று விட்டுவிட்டால் தாம் கவனிக்கப்படுகிறோமா என்று கொஞ்ச நேரத்திற்கேனும் கள்ளப்பார்வை பார்த்தபடி இருப்பார்கள். கொஞ்சப்படும் முக்கியத்துவம் வேண்டும் அதே சமயம், என்னமோ ஏதோ யாரோ அந்நியர்கள் என்கிற அடிப்படையே இல்லாத கலவரமும் இருக்கும்.

குறிப்பாக இந்தக் கலை இலக்கிய ஜீவன்களின் ’சமன் குலைவு’ அச்சத்தைப் போக்கி, அதுகளைப் பாதுகாப்பாக உணரத்தலைப்பட வைத்ததும், முட்ட முணைவதை விட்டு, கழுத்தடியைத் தூக்கிக்காட்டத் தொடங்கிவிடும் பாவங்கள் அவை என்பது தெளிவாகிவிடும். அருட்பிச்சை கிடைக்கும் என்று பெருமாளிடம் போக, அவர் ஏற்கெனவே தட்டேந்தி தரிசனம் தந்தால் எப்படி இருக்கும்?

ஒத்த அலைவரிசை இல்லாதவர்கள் எவ்வளவு பேசினாலும் இடக்கு முடக்காகவே போய்க்கொண்டிருக்கும். இதற்குப் பெயர் விவாதம் என்று வேறு அவர்களே மாலை சூடிக் கொள்வர்கள்.
பெரும்பாலும் ‘ஒத்த அலைவரிசை’ என்கிற பெயரில் தலைகளின் பெயரடுக்கிய டண்ட ணக்கா டண்டணா டாண டணா ஜிந்தாபாத் என்கிற முறுக்கேறிய கோஷத் தொடராகவோ அல்லது ‘ஜே ஜே ரங்கா பாண்டு ரங்கா’ என்கிற உச்சகட்ட ஜால்ரா ஒலிப்பாகவோ கண்ணைக் கட்டிகொண்டு விடிவு அல்லது தரிசனம் தேடிப் பெருங்கூட்டம் திரிந்துகொண்டிருப்பது எல்லாக் காலத்திலும் நடந்துகொண்டு இருப்பதுதான்.

தீவிரமாக இயங்கிய காலகட்டத்தில், வாழ்ந்துகொண்டிருந்தவர்களில் - மெளனியைத்தவிர அநேகமாக முக்கியமான இலக்கியவாதிகள் அனைவரையும் நேரில் சந்திதவன் என்கிற அனுபவத்தில் சொல்கிறேன்.

தயவு செய்து வேண்டாம்.
நீரில் மிதக்கும் நிலவை, பார்த்து மட்டுமே ரசிக்கலாம். இறங்கிப்போய் தொட்டுப்பார்க்க முயல்வது முதிர்ச்சியின்மை.