Friday, December 30, 2011

எக்ஸைல்

ஒரு நாவலை எப்படி எழுதவேண்டும் என்று எனக்குத்தெரியாது. தெரிந்திருந்தால் எழுதியிருக்கமாட்டேனா? ஆனால், நாவலை எப்படி வேண்டுமானாலும் எழுதலாம் அதில் சம்மந்தா சம்மந்தமில்லாமல் எதை வேண்டுமானாலும் எழுதலாம் என்பது சாரு நிவேதிதாவுக்குத் தெரிந்திருக்கிறது. அதனால்தான் ஆண்டுக்கொன்றாய் எழுதிக்கொண்டே இருக்கிறார் போலும். ஆரம்ப வாசிப்பில், ஆசிரியரின் மேலை வாசிப்பு காரணமாக அதை அப்படியே இறக்கிக் கீழ் வாசிப்பாக எழுதிக்கொண்டு போவதுபோல் தோன்றியது. 

Thursday, December 29, 2011

சகிப்பும் தகிப்பும் [சிறுகதை]

திங்கட்கிழமை காலை வழக்கம்போல கிண்டியில்போய் வண்டிபிடிக்க, இரு சக்கர வாகனத்தில் மத்திய கைலாஷ் அருகில் வந்தபோது, அன்றாடம் பார்க்கும் சென்னையா என்று வியக்கும்படி வெண்ணையாக வண்டிகள் சென்று கொண்டிருந்தன. அற்ப சந்தோஷம் ஐஐடி வரைதான் நீடித்தது.

Saturday, December 24, 2011

ஆராய்ச்சியும் அகழ்வாராய்ச்சியும் அல்லது சோத்துக்கு ஊம்பியும் சொகத்துக்கு ஊம்பியும்


<நான் தயாரிப்பில் ஈடுபட்டு பதிப்பித்த நரிக்குறவர் அகராதியும், ஜேனு குருபர் மொழி அகராதியும் ஃபோர்ட் ஃபவுண்டேஷன் நிதியுதவி பெற்றவை அல்ல; ஒரு பைசா கூட ஃபோர்டிலிருந்து வந்ததில்லை. நான் வேலை பார்க்கும் நிறுவனத்திலிருந்து வெளியிடப்பட்டிருக்கும் இந்த அகராதிகளை யார் வேண்டுமென்றாலும் வாங்கிப்பார்க்கலாம். இந்த அடிப்படை பொது விபரத்தினை அறிந்துகொள்ளாமல் மேற்கண்ட பதிவில் மாமல்லன் என்னை அவதூறு செய்வதன் காரணம் என்ன?>

Wednesday, December 21, 2011

சாமானியர்களின் சாமானும் அறிவுஜீவிகளின் சாமானும்

சாமான் என்று எழுதினால் அறிவுஜீவி அக்ரகாரத்தில் ஆச்சாரம் கெட்டு, பொறுக்கி மொழியாகிவிடும். ஆனால் அயல்நாட்டானின் அம்மண சாமானத்தை அட்டையில் படமாய்க் போட்டுக்கொண்டு, கலாச்சாரம்: அ-கலாச்சாரம்: எதிர்-கலாச்சாரம் என புடுக்கும் கூடசேர்ந்து ஆட அட்டைக்கத்தியைச் சுழற்றுவதுதான் அதிதீவிர அறிவுப் புரட்சி.

Tuesday, December 20, 2011

அவசியமும் அத்தியாவசியமும்

Shaseevan Ganeshananthan கொண்டோடியின் இன்னொரு கருத்தையும் கீழே இணைக்கின்றேன். கொண்டோடி 1995 - 2004 வரை புலிகள் இயக்கத்தில் இருந்தவர். அதுமட்டுமல்லாது 'ஜெயசிக்குறு' சண்டையில் பங்குபற்றியுமுள்ளார். 

நரம்பில்லாத நாக்கும் எலும்பில்லாத மூக்கும்

விளிம்பு நிலை மக்கள் என்பதைத் தமிழில் சொல்லிவிட்டு லும்பன் என்று ஆங்கிலத்தில் கூறுவதில் இருப்பது அறிவார்த்தமா? மொழிப் பற்றாமையா? ஆராய்ச்சி செய்வதற்கான டாலர் பற்றாமையா?

சென்னை உலக திரைப்படவிழா 19 டிசம்பர் 11 மலையின் நிறங்கள்

குட்டிப் பையனொருவன் எட்டி உதைக்கும் நிலையில் இருக்க, அந்தரத்தில் நிற்கும் கால்பந்து. தபால்தலை அளவில் இப்படியான ஒரு புகைப்படமும் கொலம்பிய நாட்டுப்படம் என்கிற கூடுதல் தகவலும் மட்டுமே இந்தப்படத்தைப் பார்க்குமுன் எனக்குத் தெரிந்தவை.

Monday, December 19, 2011

வேலை

நாவலைப்பற்றி நான் எழுத இருக்கிறேன் என்பது எப்படிப் பரவிற்று என்றுதான் தெரியவில்லை.

சென்னை உலக திரைப்படவிழா 18 டிசம்பர் 11 அன்னா பற்றிய கடைசி அறிக்கை

இன்று பார்த்த முதல் படம் An Ordinary Execution. இதைத்தான் பார்ப்பது எனத் தேர்வு செய்யக் காரணம், கதையின் பின்புலம் ஸ்டாலினிய காலம் என்பது மட்டுமின்றி ஸ்டாலினே பாத்திரமாய் வருகிறார் என்பதும்தான்.

Sunday, December 18, 2011

சென்னை உலக திரைப்படவிழா 17 டிசம்பர் 11 ஹேபியஸ் பாப்பம்

இன்றைய தினத்தின் சிறந்தபடம் என்று இத்தாலியின் Habamus Papam என்றுதான் கூறவேண்டும்.

இளையராஜாவும் எம்டிஎம்மும்

எந்த சம்பந்தமும் இல்லாத வித்யாசங்கர் நம்பிராஜன் நக்கீரன் என எல்லோரையும் லும்பன்கள் என்று வசைபாடவேண்டிய அவசியம் என்ன? வித்யாசங்கரை விக்ரமாதித்தனைக் கடைசியாகப் பார்த்தது 95 புத்தகக்கண்காட்சியில் என்று நினைக்கிறேன். அப்புறம் தொடர்பே இல்லை. திரும்ப எழுதவந்தபின் 2011ல்தான் வித்யாசங்கருடன் சாட்டிலும் விக்ரமாதித்யனுடன் கைபேசியிலுமாகத் தொடர்புவந்தது.

Saturday, December 17, 2011

சென்னை உலக திரைப்படவிழா 16 டிசம்பர் 11

இந்தப்படத்தின் முதல் பத்து நிமிடங்களைப் பாருங்கள். கால்பந்தாட்டக் கலவரம் போலந்து பட்ஜெட்டுக்குள் இவ்வளவு அட்டகாசமாய் எடுக்கப்பட்டிருக்கும் இந்தப்படம் போகப்போக ஹாலிவுட்படம்போல் ஆகிவிடுவது துரதிருஷ்டம்.

Friday, December 16, 2011

சென்னை உலக திரைப்படவிழா 15 டிசம்பர் 11

நத்தையடிக்கும் படங்களுக்கும் பெரும்பாண்மைக்கும் எப்போதும்  ஆவதில்லை. நிதானமாக நகரும் படங்களைப் பார்க்க மனதைத் தயார்படுத்திக் கொண்ட அகிம்சாவாதிகளையும்கூட வன்முறையாளர்களாய் ஆக்கவல்லவை பிரஸ்ஸோ(ன்) மணிகெளல் அடூர் கோபாலகிருஷ்ணன் போன்றோரின் படங்கள். 

Thursday, December 15, 2011

சென்னை உலக திரைப்படவிழா 14 டிசம்பர் - சைக்கிள் சிறுவன்

இன்று மதியமும் மாலையும் சிறுவர்களைப் பற்றிய இரண்டு படங்கள் பார்க்கக் கிடைத்தன. இரண்டுமே தந்தையால் புறக்கணிக்கப்பட்ட சிறுவர்களைப்பற்றிய படங்கள். ஒன்று வடிவ ரீதியில் கலைத்துப்போட்டு விளையாடித் தீர்த்த படம் மற்றது. விசேஷமாக ஒன்றுமில்லை சும்மா பாருங்கள் என்பதுபோல் விளையாட்டாய் சொல்லிச்செல்லும் படம். இரண்டு தந்தைகளுமே வாழ்வில் வெற்றிகாண முடியாது தவிப்பவர்கள். தவிப்பின் ஆதங்கம் முந்தைய தந்தையிடம் வன்முறைச் செயல்களாகவும் பின்னதில் தப்பியோடுதலாகவும் வெளிப்படுகின்றன. 

Sunday, December 11, 2011

ஆவியில் அமுட்டு வீசிய இலக்கிய குண்டு

<பாமினி இரவு முழுக்க என்ரை மகளின் துணிச்சலைப் பற்றியே பேசினாள். மகள் பயிற்சியில் திறமாகச் செய்ததால் குறுகிய நேரத்தில் படைக்கு தலைவியாக தேர்ந்தெடுக்கப் பட்டிருந்தாள். அவள் அடிக்கடி சொல்லுவாளாம் 'எங்களுக்கு தேவை எதிரிகளின் உயிர் மட்டும் அல்ல. அவர்களுடைய ஆயுதங்கள். துப்பாக்கிகள், குண்டுகள். கிரனேட்டுகள், ரேடியோக்கள். எல்லாமே தேவை.' கிரனேட் என்றால் அவளுக்கு பைத்தியம். பந்துபோல தூக்கிப்போட்டு பிடித்து விளையாடுவாள். பின்னைக் கழற்றி கிரனேட்டை மேலே எறிந்து அது திரும்பி வந்ததும் பின்னை சொருகி இடுப்பிலே அணிந்து கொள்வாள். கிரனேட்டின் ஆயுள் ஐந்து செக்கண்ட்தான். 'அது ஆயுளைத் தாண்டினால், உன் ஆயுள் போய்விடும்' என்று சொல்லி சிரிப்பாளாம். இவளுக்கு எங்கேயிருந்து இவ்வளவு துணிச்சல் வந்தது என்று நானே என்னைக் கேட்டுக்கொள்வேன்.>

Friday, December 9, 2011

இடுகுறியும் குறியீடும் தற்குறியும்


எனக்கு (கப்டன்) இதைப் படித்ததிலிருந்து அப்பாவின் ஞாபகம். கவலை. பொலிஸ், புளொட், ஊராட்கள், நேவி, புலி என அடிவாங்கி உளவியல் தாக்கமுடையவராக இப்பவும் இந்தியாவிலிருக்கிறார். 6 மாதம் புலிகள் கொண்டு வைச்சிருந்து அடிச்சு விட்டாப் பிறகு அந்தக் கோபமெல்லாம் அடியாக எனக்கும் அம்மாவுக்கும் தான் விழுந்தது. உண்மையாகவே என் சங்கிலி வாங்கிக் கொண்டு ஒரு பானையில் சோறுடன் இந்தியா போறதாக வெளிக்கிட்டார். நாம் நம்பவில்லை. 13, 19 வயது பிள்ளைகள் அகதிகளாக படகில் இந்தியா போனது கவலை. ஒரே குடி. கோட்டை நோக்கி வந்த ஆமி பிடித்து 5 நாட்களாக வைத்திருந்து விடுவிக்கப்பட்டவர்களவர்கள் .படகில் வேட்டி கட்டி நெடுந்தீவடைந்து நயினாதீவு போய் பிறகு நேவியிடம் உளவாளி என அடிவாங்கி.புலிகளிடமும் நேவியின் உளவாளி என அடிவாங்கி (அப்ப 53 வயசு) புலிகளின் 6 மாத சிறைக்கு பிறகு வந்தும் மோட்டார் சைக்கிள் சத்தம் கேட்டால் பயப்பிடுவார்.இப்பவும் யாழ்ப்பாணம் போக விருப்பமில்லை.இந்தியாவில் சுதந்திரமாக இருக்கிறதாக சொல்வார்.இது உண்மை. தனிப்பட உங்களுக்கு எழுதுகிறேன். நம்பகத்தன்மை பற்றிய உங்கள் கணிப்பு சரியெனச் சொல்ல இதை எழுதுகிறேன். இது அண்ணன் எழுதிய கதை. ஆகவே சாட்சியாயிருக்கும் நான் அமைதியாக கருத்துகளைப் படித்துக் கொண்டிருக்கிறேன். இடையில் நுழைந்து கதையை இரசிப்பவர்களை குழப்ப விரும்பவில்லை. "நான் இயக்கத்திட்ட வாங்கின அடியெல்லாம் உங்களுக்குத் தருவன்" என எனக்கும் அம்மாவுக்கும் ஒரே அடி. இவர்கள் எழுதுவதால் எம் வாழ்விலும் இது போல பல சனங்களின் வாழ்விலும் நடந்தவைகள் இல்லெயென்றாகாது.

Thursday, December 8, 2011

கலையின் தாவலும் திறந்த மனமும்

90 என்கிற காலச் சட்டகம் காரணமாக ஆட்லரி வரும் சிக்கல் தவிர ஷோபா சக்தியின் கப்டன் கதை காலப் பொதுமை கொண்டதாக அல்லவா இருக்கிறது.

<மனுவேல் பொன்ராசாசாவிற்கு ஆயிரத்துத் தொளாயிரத்து தொண்ணூற்றோராம் வருடம் ஜனவரி மாதம் ‘கப்டன்’ பட்டம் தமிழீழ விடுதலைப் புலிகளால் வழங்கப்பட்டது. அந்தச் சம்பவம் பின்வருமாறு நிகழலாயிற்று:>

நிர்மல் ஷேகர் - விளையாட்டு எழுத்தில்லை

கால்பந்தாட்டக்காரர் சாக்ரடீஸுக்கு,நிர்மல் ஷேகர் எழுதியிருக்கும் அஞ்சலியைப் படித்துப் பாருங்கள். இப்படி எழுத நம்மூர் இலக்கிய பீடாதிபதிகள் பிச்சைப் பாத்திரம் ஏந்தி வரிசையில் நிற்க வேண்டும்.

கோட்டையும் ஓட்டையும்


<அதென்னய்யா ஆட்லரி?

சோபாசக்தியின் கதை 1990 இல் நடக்கின்றது. அப்போதே ஆட்லரிகள் கோட்டை மதில்களில் ஓட்டைகளைப் போட்டுக்கொண்டேயிருந்தன என்று எழுதிச் செல்கின்றார் ஷோபாசக்தி. (கவனிக்க ஓட்டைகளைப் போட்டுக்கொண்டிருந்தன அல்ல 'போட்டுக் கொண்டேயிருந்தன'. எஸ். ரா இன் பாதிப்போ?)>

Wednesday, December 7, 2011

கும்பிடுகிறேன் ஷோபா சக்தி

பஷீரின் பூவன் பழம் படித்தபோது, அடடா நம்மிடமும் செல்மா லாகர்லெவின் தேவமலர் போல இப்படி ஒன்றா என்று உள்ளம் விம்மியது. இப்போது ஷோபா சக்தியின் கப்டன் கதையைப் படித்து முடித்ததும் தவறிப்போய் பேர் லாகெர் குவிஸ்டின் பாரபாஸைப் படித்துவிட்டோமா என்கிற சந்தேகம் தோன்றியது. 

Monday, December 5, 2011

கதையும் கத்தரியும்

இறுதி வடிவத்திற்கு வந்து சேர்ந்துவிட்டது என்று எழுத்தாளன் முடிவு செய்துவிட்ட படைப்பில் ஒரு வார்த்தையை எடுக்கவோ சேர்க்கவோ இடமிருக்கக்கூடாது என்று காலம்காலமாக நம்பும் மூட கோஷ்டியில் நிரந்தர உறுப்பினராக இருக்கவேண்டுமே என்பதுதான் என் ஏக்கம்.

Saturday, December 3, 2011

யாருக்காக எதற்காக எழுத வேண்டும்?

நேற்றிரவு உயிர்மையின் நூறில் ஒன்று - சிரைப்புக்குத் தப்பிய சிகை என்று எழுதியதை கூகுள் பஸ்ஸில் பகிர்ந்திருந்தேன். அதற்கு வந்த சில மறுமொழிகளை இங்கே பகிர்கிறேன்.

உயிர்மையின் நூறில் ஒன்று - சிரைப்புக்குத் தப்பிய சிகை

தூரத்து நாமத்தைப் பார்த்தால் உள்ளே நுழையாவிட்டாலும் பெருமாள் என்று கும்பிட்டு வைப்பதில்லையா அது போல, பெரிதாக வாசித்ததில்லை என்றாலும் இத்துனை நாளும் உயிர்மையை இலக்கிய பத்திரிகை என்றுதான் நம்பிக்கொண்டிருந்தேன். 

Thursday, December 1, 2011

மத்தகமும் மண்ணும்

இந்த இதழாளர்களில் பெரும்பாலானவர்கள் முதலாளிகளின் அதிகார தரகர்கள் – பர்கா தத், ராஜ்தீப் சர்தேசாய் போல. பலர் உண்மையில் பெண்தரகர்களும் கூட.