Sunday, December 11, 2011

ஆவியில் அமுட்டு வீசிய இலக்கிய குண்டு

<பாமினி இரவு முழுக்க என்ரை மகளின் துணிச்சலைப் பற்றியே பேசினாள். மகள் பயிற்சியில் திறமாகச் செய்ததால் குறுகிய நேரத்தில் படைக்கு தலைவியாக தேர்ந்தெடுக்கப் பட்டிருந்தாள். அவள் அடிக்கடி சொல்லுவாளாம் 'எங்களுக்கு தேவை எதிரிகளின் உயிர் மட்டும் அல்ல. அவர்களுடைய ஆயுதங்கள். துப்பாக்கிகள், குண்டுகள். கிரனேட்டுகள், ரேடியோக்கள். எல்லாமே தேவை.' கிரனேட் என்றால் அவளுக்கு பைத்தியம். பந்துபோல தூக்கிப்போட்டு பிடித்து விளையாடுவாள். பின்னைக் கழற்றி கிரனேட்டை மேலே எறிந்து அது திரும்பி வந்ததும் பின்னை சொருகி இடுப்பிலே அணிந்து கொள்வாள். கிரனேட்டின் ஆயுள் ஐந்து செக்கண்ட்தான். 'அது ஆயுளைத் தாண்டினால், உன் ஆயுள் போய்விடும்' என்று சொல்லி சிரிப்பாளாம். இவளுக்கு எங்கேயிருந்து இவ்வளவு துணிச்சல் வந்தது என்று நானே என்னைக் கேட்டுக்கொள்வேன்.>

<Shaseevan Ganeshananthan கொண்டோடியின் இன்னொரு கருத்தையும் கீழே இணைக்கின்றேன். கொண்டோடி 1995 - 2004 வரை புலிகள் இயக்கத்தில் இருந்தவர். அதுமட்டுமல்லாது 'ஜெயசிக்குறு' சண்டையில் பங்குபற்றியுமுள்ளார்.

/ கொழுவி,
அ.முத்துலிங்கம் எழுதிய கதை இப்போதும் நினைவிருக்கிறது. அதிலே, 'அவள் கிளிப்பைக் கழற்றி குண்டை மேலே எறிந்துவிட்டு அக்குண்டு கீழே வரும்போது பிடித்து மீளவும் கிளிப்பை மாட்டிவிடுவாள். அவ்வளவு துணிச்சற்காரி' எண்டு எழுதியிருந்தார். ஏதோ கலைஞ்ச முடியைப் பிடிச்சுக் கிளிப்பை மாட்டிற மாதிரி அந்தாள் கதை சொல்லிக் கொண்டு போகுது. எட கூகிளிலை தட்டிப்பாத்தாலே ஒரு கையெறிகுண்டு எப்பிடித் தொழிற்படுது எண்டு பார்க்கலாம். சும்மா நாலு செக்கனுக்குப்பிறகு வெடிக்கும் எண்ட தகவலை வைச்சுக்கொண்டு (அதுகூட தமிழ்ச்சினிமா பாத்துத்தான் அ.மு. அறிஞ்சு வைச்சிருப்பார்) ஒரு கதையையே கட்டமைக்கிற கயமைத்தனத்தை என்ன சொல்ல? ஆனால் சோ.ச. முந்தி குண்டு தூக்கி அடிபட்ட காயெண்டபடியால் உப்பிடி அ.மு. மாதிரி லூசுத்தனமா எழுதமாட்டார். ஆள் றிவோல்வர் காலத்திலயே புரட்சிசெய்யப் புலமேகியதால இயக்கத்தையும் போராட்டத்தையும் பற்றி சரியான அப்டேட் இல்லாமல் அல்லற்படுறார். அவ்வளவுதான் பிரச்சனை.

ஆனா உந்த இந்திய இலக்கியவாதிகளுக்கும் வாசகனுகளுக்கும் உப்பிடியான கதையள் கிளுகிளுப்பாத்தான் இருக்கும். கிரனைற் எண்டா நாங்கள் கையெறிகுண்டு நினைப்பம், அவங்கள் கிரனைற் கல்லைத்தான் நினைப்பாங்கள்.

சோபாசக்தி, அ.முத்து போன்றவர்களுக்கு கொண்டோடியின்ர ஒரு அட்வைஸ் என்னெண்டா, நீங்கள் ஈழத்தாருக்கு ஒரு வேர்சனும், இருபது வருசத்துக்கு முந்திய புலம்பெயர்ந்த புலத்தாருக்கு ஒரு வேர்சனும் இந்தியாக்களுக்கு ஒரு வேர்சனும் எண்டு மூண்டு வேர்சனா எழுதினா நல்லது, எங்கட கிருத்திகன் குமாரசாமி முந்திச் செய்தமாதிரி;-).

உந்தக் கப்டன் கதையைக்கூட ஈழ வேர்சனில பசீலன் எண்டும், இந்திய வேர்சனில ஆட்லறி எண்டு எழுதியிருந்தா ஒரு பிரச்சினையுமில்லை.

எங்க நாங்கள் சொல்லிறைக் கேக்கிறாங்கள்? />

இந்தக் குறிப்பை வைத்துத் தேடியதில் பொற்கொடியும் பார்ப்பாள் என்கிற இந்த ’கிரனேட்’ விளக்கக் கதை கிடைத்தது. 

இணைய தமிழ் எழுத்தாளர்களின் எழுத்தை விமர்சிக்கப்போனால் விசிலடி கூட்டம் விரட்டிக்கொண்டு வருகிறது. அ.முத்துலிங்கத்தின் கதை ஈழ மக்களிடம் அல்லோலகல்லோலப் படுவதைப் பாருங்கள்.

DJ said...
/http://www.thinnai.com/?module=displaystory&story_id=10710047&format/ 
அண்ணை ஈழநாதன் உந்தக்கதை ஆ.வியில்தான் முதலில் வந்திருந்தது. இடம், பொருள், ஏவல் பார்த்துத்தான் நீங்கள் கதையெழுதவேண்டும், இல்லாவிட்டால் நீங்கள் சிறந்த கதைசொல்லியல்ல. ஏதோ அ.முவால் 'பின்' நவீனத்துவம் விகடன் வாசகர்களுக்கும் பரவலாய்ப் போய்ச்சேர்ந்தால் நல்லந்தானே :-).

'பின்' நவீனத்துவம் பற்றிய மேலதிக விளக்கத்துக்கு, அ.முவின் சொற்களிலிருந்து...

கிரனேட் என்றால் அவளுக்கு பைத்தியம். பந்துபோல தூக்கிப்போட்டு பிடித்து விளையாடுவாள். பின்னைக் கழற்றி கிரனேட்டை மேலே எறிந்து அது திரும்பி வந்ததும் பின்னை சொருகி இடுப்பிலே அணிந்து கொள்வாள். கிரனேட்டின் ஆயுள் ஐந்து செக்கண்ட்தான். 

இதிலிருப்பதெல்லாம் புளுகு என்று ஒரு வாசகர் எடுத்துக்கொண்டால் அவருக்கு magical realism தெரியவில்லையென்றே எடுத்துக்கொள்ள்வேண்டும் :-).
Thu Oct 11, 05:07:00 PM 2007

முத்துலிங்கம் எழுதியது கதையா அல்லது உண்மைச் சம்பவமா?
ஏனென்றால் இறுதியில் வரும் 'உணர்வுபூர்வமான' கதைகள் நடந்திருக்கச் சாத்தியமில்லை. பிணங்களுள் மகளைத் தேடிதெல்லாம் முழுக்கமுழுக்கக் கற்பனையாகவே இருக்கச் சந்தர்ப்பமுண்டு.

//போர் ஓய்ந்த நிலையில் எங்களை கோட்டைக்குள் அனுமதித்தார்கள். நானும் மகனும் மட்டும்தான் போயிருந்தோம். கோட்டை முற்றிலுமாக பிடிபட்டபோதிலும், போராளிகளின் சடலங்கள் அங்கங்கே விழுந்த இடத்திலேயே கிடந்தன. அவை சதைகள் எல்லாம் உருகி அழிந்துபோய், அடையாளம் தெரியாத நிலையில் காணப்பட்டன. மேலே கழுகுகள் வட்டமிட்டன. அடங்கலும் இலையான்கள் மொய்த்தன; நாற்றம் காற்று முழுவதும் வியாபித்திருந்தது.// 

கோட்டை பிடிபட்டபோது சண்டை நடக்கவில்லை, போராளிகள் சாகவில்லை. பிணங்கள் கிடக்கவில்லை. (அட இராணுவத்தின் பிணங்கள்கூட). எல்லாமே சுமுகமாக நடந்து முடிந்திருந்தது. 

நிற்க போராளிகளின் உடல்களை இப்படி விட்டுவிட்டுப் புலிகள் அடுத்தவேலை பார்த்ததில்லை. 

யாழ்ப்பாணக் கோட்டையடியில கழுகுகள் வட்டமிட்டதெல்லாம், ஏற்கனவே இருக்கிற ரெம்பிளேட் வசனங்களைக் கடன்வாங்கியதால் வந்த பிரச்சினைகள் என்பதால் மன்னித்துவிடுவோம்.

"ஈழத்து" எழுத்தாளர் முத்துலிங்கம் திலீபன் உண்ணாவிரதம், வீரச்சாவு, அவரின் மூன்றாமாண்டு நினைவுநாளன்று யாழ்.கோட்டை புலிகளிடம் வீழ்ந்தது என்பவற்றை அறிந்திருக்கிறார் என்பது ஒருவகையில் திருப்திதான்.

ராஜேஸ்குமார், ராஜேந்திரகுமார் வகையறாக்கள் வெடிப்பொருட்களைப் பற்றி விடும் றீல்களைப்போலவே முத்துலிங்கத்தாரும் எழுத வெளிக்கிட்டிட்டார்.
Fri Oct 12, 03:50:00 AM 2007

அதுக்குள்ளை வசந்தத்தாரும் வந்திட்டார்.அப்பு முத்துலிங்கம் பாணியே நடக்க முடியாததை நடந்ததாக எழுதுவதுதான்.அது இந்த விடயத்தில் கிண்டலாகப் புரிந்து கொள்ளப்படும் அபாயமிருக்கிறது.

பதினாறு வயது தாண்டாத கிளி என்கிறார் தாய் அப்ப பிள்ளை 14 வயதில் இயக்கத்திற்குப் போய் பதினாறு வயதில் முப்பது பேர் கொண்ட அணியொன்றை தலைமை தாங்கிச் சென்றாள் என்பது உட்பட
Fri Oct 12, 08:15:00 AM 2007

/டிசே பெயரிலிதான் கதைக்கமாட்டாராம்/

பின்னை, சொல்லிக்கொள்ளாமக் காணாமப் போறவையோட என்ன கதைக்கக் கிடக்குது?

முத்துலிங்கத்தின்ரை கதையை வாசிக்கேல்லை. முத்துலிங்கத்தை ஏன் அரசியற்கதைகள் எழுதவில்லை என்று பகிரங்கமாக கேட்டவர்கள், "ஏன் கேட்டோம்" என்று இப்போது கேட்டவர்கள் யோசிக்கும் வண்ணம் முத்துலிங்கம் பதிலடி கொடுத்திருக்கிறார் :-) வேறென்ன சொல்வது? அவரை ஈழத்து எழுத்தாளர் என்று அடக்கி அவரின் சுடரைக் குடத்துக்குள் அடக்கக்கூடாது. அவர் அகிலத்தமிழெழுத்தாளர் :-)

ஆனால், ஒன்று. பிற்காலத்திலே அவர்தான் ஈழத்தமிழ்எழுத்தாளராக வரலாற்றிலே நின்றுபிடிப்பார். நீங்கள் எல்லாம் திட்டித்திட்டியே சாவீர்கள். :-(

ஈழப்பிரச்சனையால் நாட்டைவிட்டு வெளியேறிய எழுத்தாளர் என்று தீராநதியோ காலச்சுவடோ அவரின் செவ்விக்கு முன்னால், விபரித்திருப்பினம். அவர்தான் கோட்டையைப் பிடிக்கக் கொமாண்ட் பண்ணிப்போனார் எண்டதைச் சொல்லாமல் மறைத்த தன்னடக்கத்தைப் பாராட்டுவியளோ, அர்ஜுன்படம் மாதிரி லொஜிக்கோட எழுதிப்போட்டரெண்டு நக்கலடிப்பீங்களோ? ஒருவேளை கொஞ்சம் ரீசனபிளா நடக்கிறதை நடக்கிறமாதிரி எழுதினால், அடுத்தமுறை அமெரிக்கா, இந்தியா போகேக்கை பட்ரியோரிட், தடாவில உள்ளைபோட்டுடுவாங்களோ எண்டு எச்சரிகையோட எழூதியிருப்பாரோ தெரியேல்லை.
Fri Oct 12, 08:31:00 AM 2007


ALIENS படத்தில் வரும் ரோபோ மனிதன் கைவிரல்களை விரித்து இடைவெளிகளில் அதிவேகமாய் குத்தி விளையாடும் காட்சியை நினைவுபடுத்துவதுபோல றேணுகா விளையாடுவதாய் வரும் சீன் இருக்கிறது. 14 வயதுகூட ஆகாத அவளது சாகச உணர்வை விளக்குவதோடு, பின்னால் இறந்துபட்டபின், அவள் உடலை அடையாளம் கண்டுபிடிக்க ஏதுவாய் இருக்கவே அவள் கை விரல்களுக்கு இடையில் கத்தி குத்தி விளையாடுவதான சீனைப் பிடித்துப்போட்டிருக்கிறார். நல்ல திரைக்கதை நுணுக்கம். மணிரத்தினத்தின் பார்வை எப்படி இவர்மேல் விழாமல் போனது. விமானச் செலவு மிச்சம் என்பதால்தான் ஜெயமோகனைப் பிடித்தாரோ?.

கிரனேட்டில் இருந்து பின்னைப் பிடுங்கிவிட்டால் திரும்பப்போட முடியுமா?  இதற்கு நேரடிப் போர் அனுபவமெல்லாம் அவசியமா? போர் பின்னணி கொண்ட ஹாலிவுட் படங்களைப் பார்த்திருந்தாலே போதுமே.

டிவிடியில் மனிதன் பட கிளைமாக்ஸை மட்டும் பார்த்த அனுபவத்தில் இலக்கிய குண்டு வீசினால் அது ஆனந்த விகடனில் போய் இப்படித்தான் வெடிக்குமோ. 

<ஆள்காட்டி விரலுக்கும் நடுவில் பெரிய வெட்டுக் காயம் தென்பட்டது. நாலு தையல் போட்டது வடிவாய்த் தெரிந்தது. ஐமிச்சத்துக்கு இடமேயில்லை. அதுதான் என் மகளுடைய உடம்பில் எஞ்சிய பாகம். பதினாறாவது பிறந்த நாளை என்ரை கிளி காணவே இல்லை. அப்படியே இழுத்து, காகங்கள் கொத்தி, புழுக்கள் தின்று முடித்த உடலை மடியில் போட்டுக்கொண்டு இரண்டு வருடத்து அழுகையை அழுது தீர்த்தேன்.>

என்று சொல்லும் தாயிடம், தொலைக்காட்ட்சிக்கு நேர்காணல் எடுப்பவர்கூட சட்டெனக் கேட்கத் தயங்கக்கூடியதை

<உடலை என்ன செய்தீர்கள்?>

என்று பொரிகடலை சாப்பிட்ட பொட்டலத்தை என்ன செய்தாய் என்று கேட்பதுபோல் எப்படி எழுதமுடிகிறது. பேசியேக் கொல்லும் தமிழ் சீரியல்கள் ரொறன்றோவிலும் தெரிகின்றன என்பதற்கு தெளிவான சாட்சியமாய் பொற்கொடிக்கும் கதை சொல்லிக்கும் இடையிலான இந்த வசனங்கள் திகழ்கின்றன.

அனைத்தையும் தொட்டு எழுதினால்தான் ஒருவர் இலக்கியவாதி என்கிற அங்கீகாரம் கிடைக்குமா? இல்லை,வாரியார் கீரன் சுகிசிவம் காலட்சேபங்களைக் கேட்டு மகாபாரதக் கதைகளுக்கு நவீன முகம் கொடுப்பதாய் அரதப் பழைய ஆன்மீக முகமூடியையே தூசு தட்டி திரும்ப அணிவிக்கும் இலக்கிய பகீரதரைப் பார்த்துப் போர்க்கதை எழுத போட்டுக்கொண்ட சூடா? 

2007ல் ஆனந்த விகடனுக்கு ஈழ மசாலா தேவைப்பட்டது. அவசர அவசரமாய் அரைத்துக் கொடுத்துவிட்டார் அமுட்டு?

எழுதுவது ’ஆனந்த விகடனுக்காகவே’ ஆனாலும் அனுபவ எல்லையைத் தாண்டாமல் இருப்பது அவசியம்.