Saturday, December 3, 2011

யாருக்காக எதற்காக எழுத வேண்டும்?

நேற்றிரவு உயிர்மையின் நூறில் ஒன்று - சிரைப்புக்குத் தப்பிய சிகை என்று எழுதியதை கூகுள் பஸ்ஸில் பகிர்ந்திருந்தேன். அதற்கு வந்த சில மறுமொழிகளை இங்கே பகிர்கிறேன்.

***


ramji Yahoo - one more +1 for Kizakku

பாலு மகேந்திரன் - நீங்கள் சீக்கிரம் எழுதிக் கொடுத்திருந்தால், ஒரு வே(லை)ளை உங்களையே editing செய்யும்படி கேட்டிருப்பார்களோ? நேரம் போதாததால்தான் அவர்களாகவே edit செய்து விட்டனரோ!

உண்மைத் தமிழன் - மச்சி ஸார்.. உங்களுடைய நட்பு உலகத்தில் எனக்கான இருப்பிடம் எப்படி, எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை. இருந்தாலும் இதற்கான எனது கருத்தைச் சொல்லலாம் என்று நினைக்கிறேன்..!

மனுஷ் செய்தது சரிதான் என்று எனக்குத் தோன்றுகிறது.. முதல் மூன்றரை பாராவில் நீங்கள் எழுதிய பதிலுக்கான முன்னுரையைத்தான் கொடுத்திருக்கிறீர்கள்..! "இருக்கிறேன் என்பதற்கு" என்ற வார்த்தைகளில் இருந்துதான் கேள்விக்கான பதில் துவங்குகிறது..! (நான் அதை இன்னும் படிக்கவில்லை)

எதற்குத் தேவையில்லாத தனிப்பட்ட விளக்கங்கள் இதில் அச்சேற்றப்பட வேண்டும் என்று மனுஷ் நினைத்திருக்கலாம் இல்லையா..? உங்களையே எடிட் செய்ய வைத்து வெளியிடுவதற்கு கால அவகாசம் அவருக்குக் கிடைக்காமல் இருந்திருக்கலாம். அல்லது நீங்கள் உருகி, உருகி எழுதிய முந்தின பதிவு கொடுத்த நெருக்கம் காரணமாய் மனுஷ், அதீதமாய் உரிமை எடுத்து "இதுக்கெல்லாம் கேக்கணுமா?" என்று நினைத்து வெட்டியிருக்கலாமே..!

Athisha Vino - நீங்க எழுதினத விட எடிட்டட் வெர்சன் சிறப்பாகவே இருந்ததாக நினைக்கிறேன். இலக்கியபத்திரிகையாக இருந்தால் என்ன எடிட் பண்ணாம எதுவா இருந்தாலும் அப்படியே போட்டுடணுமா என்ன? 

அதுவும் போக லேஅவுட் சிக்கல்கள், இடப்பற்றாக்குறை முதலான காரணங்களாலும் எடிட் செய்வதென்பது சமகால இலக்கிய சூழலில் தவிர்க்க முடியாதது என்பதே அடியேனின் தாழ்மையான கருத்து.

யுவ கிருஷ்ணா - எடிட் செய்யப்படாதவற்றை வாசித்தேன். அவை எடிட் செய்யப்பட்டதால் ஒன்றும் குடிமுழுகிப் போய்விடவில்லை என்றே நினைக்கிறேன்.

உங்கள் அலுவலக வேலை, ஜலதோஷமெல்லாம் இலக்கியத்தில் இடம்பெற்றாக வேண்டும் என்று ஏன் தான் அடம் பிடிக்கிறீர்களோ தெரியவில்லை :-(

Athisha Vino - அலுவலக வேலையும் ஜலதோஷமும் கூட கேள்விக்கு தொடர்பானதென்றே நினைக்கிறேன்

***

திரும்பத்திரும்ப இணையம் பற்றிய இளக்காரம் இது போன்ற எதிர் விளைவுகளால் வலுப்பெறவே செய்கிறது.

எதிர் கேள்வி கேட்பவர்கள் அந்தப் பதிவை கவனத்துடன் படித்தார்களா என்பதே கேள்விக்குறியாக இருக்கிறது. 

<ramji Yahoo - one more +1 for Kizakku>

ஆச்சார அனுஷ்டானங்களுடன் இலக்கியத்தை நாலாம் ஐந்தாம்பட்ச இலக்காய்க் கூடக் கொண்டிராத கிழக்கின் வாசக பரப்பிற்கும் எனக்கும் என்ன சம்பந்தம். உயிர்மையுடன் ஏற்பட்ட முதல் உரசலிலேயே எந்த கிளை ஏதுவானது எனத் தாவ நான் என்ன குரங்கா? இல்லை சர்க்கஸ் சாகசக்காரனா? ஒரு தவறும் ஆற்றாமையும் ஆதாரக் கேள்வியும் எம்ஜிஆர் சிவாஜி கமல் ரஜினி கருணாநிதி ஜெயலலிதா தளத்த்திலேயேதான் பார்க்கப்படுமா?

<பாலு மகேந்திரன் - நீங்கள் சீக்கிரம் எழுதிக் கொடுத்திருந்தால்>

கொடுக்கப்பட்ட கெடு 12ஆம் தேதிக்கும் அனுப்பப்பட்ட 13ஆம் தேதிக்கும் என்ன பெரிய வித்தியாசம்? போகவும் 300 வார்த்தைகளை மிகாத ஒன்றை எடிட் செய்ய அப்படி என்ன அவசியம்? இதெல்லாம் பதிவிலேயே எழுப்பப்பட்டிருக்கும் கேள்விகள்.

<உண்மைத் தமிழன் - <முதல் மூன்றரை பாராவில் நீங்கள் எழுதிய பதிலுக்கான முன்னுரையைத்தான் கொடுத்திருக்கிறீர்கள்..!>

300 வார்த்தைகளைத் தாண்டாதபோது அது முன்னுரையோ பின்னுரையோ என்ன கண்றாவியோ அதில் ஏன் கை வைக்க வேண்டும்?

< "இருக்கிறேன் என்பதற்கு" என்ற வார்த்தைகளில் இருந்துதான் கேள்விக்கான பதில் துவங்குகிறது..!>

அந்தத் தொடக்கம் தொளதொள கால்சாராய் அணிந்த கோமாளியாய் என்னைக் காட்டும் எனில் காட்டிவிட்டுப் போகட்டுமே. அந்தப் பகுதி பத்திரிகைக்கு ஒவ்வாது எனில் முற்றாக என்னையே தவிர்த்திருக்கலாமே. என்ன குடியா முழுகிவிடப் போகிறது? நான் ஒன்றும் காலியாகக் கிடக்கும் வெற்று மனையில் கோபுரக் கட்டிடங்களைக் கட்டியெழுப்பவல்ல பேர்கொத்த இலக்கியக் கொத்தனார் இல்லையே.

<(நான் அதை இன்னும் படிக்கவில்லை)> 

அடங்கொப்பா முருகா ஞான பண்டிதா

<எதற்குத் தேவையில்லாத தனிப்பட்ட விளக்கங்கள் இதில் அச்சேற்றப்பட வேண்டும் என்று மனுஷ் நினைத்திருக்கலாம் இல்லையா..?>

அதைத் தீர்மானிக்கும் உரிமை யாருக்கு? எழுத்தாளனுக்கா இல்லை எடிட்டருக்கா என்பதைப் பற்றிதானே ஆதாரக் கேள்வியே.

<உங்களையே எடிட் செய்ய வைத்து வெளியிடுவதற்கு கால அவகாசம் அவருக்குக் கிடைக்காமல் இருந்திருக்கலாம்.>

12 கெடு. 13 நான் அனுப்பியது இடைப்பட்டது என்ன அகாலமா? அல்லது தபால் போய்ச்சேர எட்டு நாள் ஆகும் என்கிற கற்காலமா? ஒரு மெய்ல் ஒரு குறுஞ்செய்தி ஒரு அலைபேசி அழைப்புக்கு எவ்வளவு கால அவகாசம் தேவை?

<நீங்கள் உருகி, உருகி எழுதிய முந்தின பதிவு கொடுத்த நெருக்கம் காரணமாய் மனுஷ், அதீதமாய் உரிமை எடுத்து "இதுக்கெல்லாம் கேக்கணுமா?" என்று நினைத்து வெட்டியிருக்கலாமே..!>

கால இட வெளிகளைத் தாண்டிய, உங்கள் குருநாதர் சுஜாதாவையும் மீறிய, விஞ்ஞானக்கதைகள் எழுதி சாதனை படைக்கும் சாத்தியக்கூறுகள் உங்களுக்கு இருப்பதற்கு இந்த வார்த்தைகளே சாட்சி.

ஐயா! நான் பதில் எழுதி அனுப்பிய தேதி நவம்பர் 13. விற்றதும் கற்றதும்  கட்டுரையை நான் எழுதியது நவம்பர் 30. பத்திரிகை வெளியீட்டு விழாவோ டிசம்பர் 1 

இப்படி எல்லாவற்றையும் கசாமொசாவெனக் குழப்பிக்கொள்ள்ளும் பெருவாரியான இணைய மொக்கைகளுக்கு, கதை கட்டுரை எல்லாம் நுட்பமாக எழுதிக்கொண்டிருப்பதற்கு பதில் எவன் குண்டியையாவது கழுவி நாளைக் கழித்து வேளைவருமா என சாகக் காத்துக் கிடப்பது மேல்.