எஸ்.ராமகிருஷ்ணனின் உப பாண்டவம் பற்றி சாரு நிவேதிதா எழுதிய விமர்சனம் என்று அருள் விக்டர் சுரேஷ் என்பவர் மின்னஞ்சலில் அனுப்பி இருந்தார்.
இதைப் படித்து முடித்ததும் இதற்கு நேரடியாய் சம்மந்தமில்லாத பாதல் சர்க்கார் நாடகத்தின் தலைப்பு நினைவுக்கு வந்தது. கோ.ராஜாராம் மொழிபெயர்ப்பில் வெளியான அதன் பெயர் அமல் விமல் கமல் பிறகொரு இந்திரஜித்.
அமல் விமல் கமல் என்று சமூகமே தனித்த அடையாளமற்று வாழ, இந்திரஜித் தன் சுயத்தைக் காப்பாற்றிக்கொள்ளப் போராடுவதைப் பற்றியது அந்த நாடகம்.
சரி போகட்டும். இப்போதைக்கு இதை மறந்துவிடுவோம்.
எஸ்.ராவின் உப பாண்டவம் பற்றிய மேற்கண்ட கட்டுரை சாருவால் எழுதப்பட்டிருப்பது இரண்டாயிரத்தில்.



