Friday, February 17, 2012

சாரு எஸ்.ரா ஜெமோ பிறகொரு கொசு - 3

<புத்தகம் முழுவதும் இப்படிப்பட்ட இலக்கணக் கொலைகள்தான் மலிந்து கிடக்கின்றன. இலக்கணத்தை அல்லது மொழியை தேவை கருதி திரித்தோ உடைத்தோ எழுதுவது என்பது வேறு. ஆனால் இலக்கணம் தெரியாமல் மொழியைக் கொலை செய்வது என்பது வேறு>

உப பாண்டவ விமர்சனத்தில் சாருவின் வியாக்கியானம்.

சுவரில் என்று எழுத வேண்டியதை சுவற்றில் என்றே எழுதுவார் சாரு. வீட்டு கக்கூசுக்கு பதிலாக சுவர்களையே ஆசுவாசத்திற்குப் பயன்படுத்துவதால் உண்டான சுவரிலக்கியப் பரிச்சயமாய் இருக்கலாமோ என்னவோ. இந்த சுவற்றில் வெளிப்பாடு. இதைக்கூட <மொழியை தேவை கருதி திரித்தோ உடைத்தோ>தான் எழுதிகிறார் இணைய எலிஃபெண்ட்மேன் என்றே நம்புவோம்.

2000த்தில் உப பாண்டவத்தில் இலக்கணக் கொலைகளாய் தோன்றிய அதே ’மொழி’யில் பத்துவருட காலத்தில் படிப்படியாய் ஏகத்துக்கும் எழுதி எஸ்.ரா பாண்டித்யம் அடைந்திருப்பதைத்தான் ஆடுகளின் நடனம் காட்டுகிறது. ஆனால் அதே கண்றாவி 2010ல் சாருவுக்கு போர்ஹேவாய்த் தோன்றுகிறது? வெள்ளெழுத்துக் கண்ணாடியில் எல்லாவற்றையும் அனுசரித்துப்போவெனச்சொல்லி யதார்த்தம் முட்டைக்கண் காட்டி முறைக்கிறது போலும். 

எஸ்.ராவுக்காக பரிந்து, எனக்கெதிராய் சாரு நிவேதிதா.எழுதியதைப் பாருங்கள் பைத்தியக்காரனிடம் அகப்பட்ட அழகிய மலர் September 7th, 2010 

<ஒருமுறை ஒரு இலக்கியப் பத்திரிகையில் எழுத்தாளர் இமையம் ஒரு கட்டுரை எழுதியிருந்தார்>

இந்த ஒருவை நமது சாட் குரு கண்டமானத்துக்கும் உபயோகிப்பது இன்று நேற்றில்லை சாமியோவ் September 7th, 2010 லேயே இதுதான் பவுசு.

ஒரு உடகார்ந்து ஆடு மேய்க்கும் சிறுவன் புகழ் எஸ்.ரா பாணியில் ’ஒரு’.எழுத்தாளர் இமையம் என்றும் எழுதியிருக்கலாமே. நித்திய ஆனந்தம் இன்னும் கூடியிருக்குமே.

எழுத்தாளர் இமையம்,

<அதில் தற்காலத்திய தமிழ் எழுத்தாளர்களுக்கு தமிழே எழுதத் தெரியவில்லை என்று சொல்லி ஒரு பத்தியை உதாரணமாகக் கொடுத்திருந்தார்.>

அடப்பாவமே, ஊரெல்லாம் அடச்சே என்றுதான் ஏற்கெனவே துப்பிக்கொண்டு இருக்கிறதா? இது தெரியாமலேயே என்னாலான நாமாவளி அர்ச்சனையைத்தான் எஸ்.ராவுக்கு செய்து வைத்தேனா?

ஆனால் அப்போது மொழிக்கொலை எஸ்.ராவாகத் தெரிந்தவர். நீர்மோருக்கு இப்போது எப்படி இனிக்கிறார் பாருங்கள்.

<அந்தப் பத்தியோ கவிதை நயத்தோடு அற்புதமான போர்ஹேஸின் பாணியில் இருந்தது. இதை எழுதியது எஸ். ராமகிருஷ்ணனாக இருக்குமோ என்று சந்தேகம் கொண்டு தேடிப் பார்த்ததில் அது எஸ்.ரா.வே தான். அடப்பாவிகளா என்று நினைத்துக் கொண்டேன். ஒரு உச்சபட்சமான உரைநடை வெளிப்பாட்டை மோசமான உரைநடைக்கு உதாரணமாகக் காட்டும் மடமையை எண்ணி வருந்தினேன். >

வசமாக மாட்டிக்கொண்டதும் சாட்டா அப்பிடின்னா என்ன? நோணின்னா தோணியோட தம்பியா? பருப்புன்னா என்ன? ஊட்டுக்காரம்மா சாம்பார் வெக்க யூஸ் பண்றதா? என்ற ரீதியில் தப்பிப்பதற்காகக் குழறிய அதே வாய் எக்ஸைல்  நாவலில் நாவுக்கரசராகி வளர்ந்த ஆணும் பெண்ணும் தனிப்பேச்சில் செக்ஸ் பேசிக்கொள்வதில் என்ன தவறு என்று கொண்டாட்டமாய் நியாயப்படுத்துகிறது. குட்டிக்கரணக் கலையில் மீரு கெட்டிக்காரனில்லே!

எஸ்.ராவிடம் இலக்கணம் மட்டுமல்லாது மொழிக்கொலையாய்த் தொடங்கி படுகொலையாய் வளர்ந்து பார்வைக்கோண கொடூரக்கொலைக்களமாய் எப்படி விஸ்தரித்திருக்கிறது என்று நான் ஆடுகளின் நடனத்திற்கு எழுதினால், வந்தேனையா தேங்கா மூடி வக்கீலு என்கிறவிதமாய் சாரு எழுதுவதைப் பாருங்கள்.

<இப்போது எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய ஒரு சிறு உரைநடை வீச்சைப் படித்தேன். அதை ஒரு குறுங்கதை என்று சொல்லலாம். தேவதச்சனோ, தர்மு சிவராமுவோவாக இருந்தால் அந்தக் காட்சியை அப்படியே ஒரு கவிதையாக்கி இருப்பார்கள். ராமகிருஷ்ணன் கவிதையின் வீச்சுடன் கூடிய உரைநடையாக ஆக்கியிருக்கிறார்.>

கதை கட்டுரை என்று, எதை எழுதும்போதும் சாருவுக்கு நுட்பமான விஷயங்களை வெளிப்படுத்துவதில் எப்போதும் இன்னுமொரு அப்படியே  ‘அப்படியே’ எழுதப்பட்டிருப்பதில் என்ன ஆச்சரியம்?.

சிறுகதை வரலாற்றிலேயே முள்ளில்லாத ரோஜா என்று கொண்டாடப்பட்ட பிலிமாய்க் காட்டப்படும் 1979 கணையாழியில் வெளியான ‘முள்’ கதையில் எத்துனை ‘அப்படியே’ என்று கண்ட்ரோல் எஃப் போட்டுத் தேடிப்பாருங்கள். வருகிற 7 அப்படியேவில் எத்துனை அந்த சூழ்நிலைக்குப் பொருத்தமானவை?


<அந்த ஏந்து வலையை வைத்துக்கொண்டு அப்படியே ஏந்தி ஏந்திப் போட்டுக்கொள்ள வேண்டியதுதான்.. இந்த வலையைத்தான் கச்சா வலையென்று சொல்வது...> இதில் இருக்கும் அப்படியே இயல்பான விவரிப்பு.

<இந்தத் திண்ணை இருட்டில் இப்படிக் கிடைத்த அத்தையின் இந்த அண்மைக்காக அப்படியே நான் எரிந்து போவதற்கும் தயார்....>

<என் கையைப் பிடித்துக் கொண்டிருக்கிற அத்தையின் கைகளை அப்படியே எடுத்து ஒரு முத்தம் கொடுத்தால் என்ன என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.>

இவையிரண்டும் கதாபாத்திரத்தின் உணர்வெழுச்சியைத் துல்லியமாய்க் கூற முடியாமல் எழுத்தாளன் திக்கித் திணறித் திண்டாடுவதன் வெளிப்பாடில்லையா?

<எனக்கு அப்படியே அத்தையைக் கட்டிக்கொண்டு கதற வேண்டும் போல் இருக்கு... >

இது என்ன ஐந்து வயதுப் பையனின் பாசவலையா? அல்லது பருவமெய்திய விடலையின் அன்பு காதல் காமத்தின் குழப்பக் கலவையா? இதுதான் வாழ்க்கையைக் கொண்டாட்டமாய் வாசகனுக்குக் காட்டுவதா? இல்லை சிவாஜியின் பாவன்னாப் பட அழுகையா அல்லது அதைப்போல இருந்துவிடக்கூடாதே என்கிற அறிவுபூர்வ பதற்றத்தில் அந்தக்க்கால கமல்ஹாசனின் முகம் மூடிய அழுக்காச்சி விம்மலா?

இலக்கிய உடான்ஸின் நேரடிப்பேச்சிலும் நினைத்ததைத் துல்லியமாக வெளிப்படுத்த இயலாமல் அப்படியே அப்படியேவைப் நிறைய பயன்படுத்துவதைக் காணலாம்.

இந்த அப்படியேதான் எஸ்.ராவின் ஆடுகளின் நடனம் கேசில் சம்மனில்லாமல் ஆஜராகி விமர்சனத்திற்கு பதில் சொல்ல வக்கில்லாமல் சும்மா நாக்குத் துருத்தி ரவுடியாய், கையை வலித்து ஏய் கொமட்ல குத்துவேன் என்று இடுப்புக்குக் கைலியை திரைப்பதைப் பாருங்கள்.

<இதை ராஷ்ட்ரபதி கையால் சிறந்த குமாஸ்தா விருது வாங்க வேண்டும் என்பதையே தன் வாழ்நாள் குறிக்கோளாகக் கொண்ட மாஜி எழுத்தாளர் ஒருவர் மிக ஆபாசமாகக் கிண்டல் அடித்து எழுதியிருக்கிறார். இந்த ஆபாசத்தைப் பாராட்டி சில மேதாவிகள் பின்னூட்டம் போட்டிருக்கிறார்கள். பின்னிட்டிங்க, கொன்னுட்டிங்க அப்படி இப்படி என்று.>

செத்துப்போன பயல் என்கிற திமிர். அலுவலகத்தில் பிரச்சனையோடு அனாதையாக நிற்பவன் தானே என்கிற எகத்தாளம். அடித்தால் நாதியில்லை என்கிற ஆணவம். 

<பைத்தியக்காரன் ஒருவனிடம் ஒரு அழகிய மலரைக் கொடுத்தால் அவன் என்ன செய்வான்? அந்த மலரைப் பிய்த்துப் போட்டு ஒன்னுக்கு அடிப்பான். அதைத்தான் அந்த மாஜி எழுத்தாளர் செய்திருக்கிறார். உடனே பின்னூட்ட ஜாம்பவான்கள் கிளம்பி விட்டார்கள்… ’ஆஹா நீங்கள் அந்த மலரைப் பிய்த்துப் போட்டு ஒன்னுக்கு அடிப்பது எவ்வளவு பிரமாதமாக இருக்கிறது!’ என்று.>

புதுமைப்பித்தனின் புத்தகத்தின்மேல் ஒன்றுக்கடிப்பேன் என்று சொன்ன மூடர்தானே. அதுதான் தீயணைப்பு வண்டியின் ஹோஸ்பைப் போல சதாசர்வ காலமும் கையில் தயாராய் பிடித்துக்கொண்டே இருக்கிறது போலும்.

<இது உத்தமத் தமிழ் எழுத்தாளனின் டெக்னிக் தம்பி… அதையே நீயும் பின்பற்றுகிறாய்! அதாவது, எம்ஜியாரையும் சிவாஜியையும் ஆபாசமாகத் திட்டுவது. உடனே பத்திரிகையில் கொட்டை எழுத்தில் இவருடைய பெயர் வந்து விடும். அன்றைய பிரச்சினை தீர்ந்தது! தன் பெயரை எல்லோரும் உச்சரிக்க வேண்டும். இல்லாவிட்டால் உ.த.எ.வுக்கு அன்றைய தினம் தூக்கம் பிடிக்காது. நல்ல டெக்னிக் சிம்மா! அடுத்தாற்போல் பெண்ணீய எளுத்தாளர்களை – அதாவது, பெண் கவிஞர்களை நக்கல் பண்ணி எழுது… ஓவர்நைட்டில் பெரிய்ய்ய்ய்ய எளூத்தாளனாகி விடலாம். ஜமாய்…>

இப்போது புரிகிறதா வாலண்டியராய் வாயைத் திறந்தது, எஸ்.ராவுக்கு வக்காலத்து வாங்குவதற்காக அன்று. இப்போது இவனை அடிக்க வேண்டும். அதற்காக அவனை ஆதரி. ஐயோ அவனைப் பற்றி அப்போது அப்படிச் சொல்லிவிட்டோமே அந்த வாந்தியை என்ன செய்வது? அதிலென்ன பிரச்சனை. அப்படியே வழித்து நக்கிவிட்டு, வைரஸ் அடித்துவிட்டதாய் சொல்லிவிட்டால் போயிற்று. இதுதான் ஃபேன்ஸி பனியனின் எக்ஸிஸ்டென்ஷியலிஸம். நூலேணியில் மேலேறிப்போக நேரத்திற்கேற்ப எடுத்தும் கவிழ்த்தும் செல்பவனுக்கு புழக்கத்தில் இருக்கும் இன்னொரு பெயர் கெரியரிஸ்ட். வெற்று சந்தர்பவாதிக்கு இலக்கியப் பட்டுக்குஞ்சலம் ஒன்றுதான் குறைச்சல்.

எலிகளின் யானையாய் காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கும் பேர்வழிக்கு ஏதிலியிடம்போய் என்ன பெரிய சண்டை இருந்துவிட முடியும்? இதை விளங்கிக்கொள்ள கொஞ்சம் பின்னோக்கிச் சென்றாக வேண்டும்.