Saturday, February 18, 2012

சாரு எஸ்.ரா ஜெமோ பிறகொரு கொசு - 5

மாமல்லன் எழுதும் எதற்கும் எதிர்வினையே செய்யாத அளவுக்கு எழுத்தாளத் திமிர் இருப்பதாய் ஜெயமோகனாலேயே பொறாமையுடன் அண்ணாந்து பார்க்கப்படும் எஸ்.ராவின் Tuesday, September 7, 2010 எழுத்துக் கலை - உண்மைக்கான எதிர்வினை Oct 19, 2010 வாக்கில் மிக மெத்தனமாய் எப்படி பிள்ளைத்தமிழ் பேசுகிறது என்று பாருங்கள்.

குறிப்பாக இலை (மார்ச் 1981) கதை அழியாச்சுடர்களில் வெளியான அன்று பார்க்க வந்த இலையை எழுதுகிறார் எஸ்.ரா. இதுதான் எழுத்தாளத் ‘திமிர்’ உடையவர் என்னைப் புறக்கணிக்கும் லட்சணம்.


<என்னைப்பார்க்க ஒரு வாசகர் வந்திருந்தார். அவர் கையில் எங்கோ வழியில் பறித்த ஒரு இலையிருந்தது.>

ஓ!என் வாசகர்களே! அழியாச்சுடர்களில் போய் ஏன் இந்த ’வழியில் பறித்த ’ இலையை எல்லாம் வலையேற்றுகிறீர்கள்?

<எனக்கோ அந்த இலையிடமிருந்து கவனத்தை அகற்ற முடியவில்லை. எவ்வளவு பசுமை. எவ்வளவு அழகு.>

கடைசியில் செத்துப்போய் விட்டது என்று சொல்லவேண்டும் அல்லவா அதற்காக பீடிகை. என்னா டெக்னிக். விருதாய் வாங்கிக் குவிப்பதென்பதென்ன சும்மாவா?

<அந்த இலை ஏன் என்னைப் பார்க்க வந்திருக்கிறது. இந்த நிமிசம் முன்பு வரை எங்கிருந்தது அந்த இலை.>

கருமாதியே செஞ்சி முடிச்சாச்சினு நெனச்சிகிட்டு இருந்தா, இப்ப ஏன் திடீர்னு எழுந்து வந்துருக்குது இந்த எச்சகலை?

<எதற்காக என்னைத் தேடி வந்திருக்கிறது. என்ன பேச விரும்புகிறது. அல்லது எதைக் கற்றுத் தர வந்திருக்கிறது>

ஏன் என்னைப் பார்க்க வந்திருக்கிறதுன்னு ஒரு தபா சொல்லு அப்பால அதே பாராவுலையே எதற்காக என்னைத் தேடி வந்திருக்கிறதுன்னு ஒரு தபா சொல்லு அப்பதானைய்யா புக்கு பெருசாவும். இதுதான் சொற்சிக்கண போர்ஹேவைப் புடிச்சி படிச்சி இடிச்ச லட்சணமா?

<எதைக் கற்றுத் தர வந்திருக்கிறது> இவன் யார்ரா எழுத்துக் கலை - உண்மைனு நக்கலடிச்சி நமக்குக் கிளாஸ் எடுக்க?

<இதைத் தற்செயல் என்று எடுத்துக் கொண்டு எளிதாகக் கடந்து போய்விட வேண்டும் தானா?>

டேய் மாமல்லா இந்த ஒரு தபா மட்டும் அடிச்சதோட என்னைய உட்ருவியாடா?

<அவர் எதற்காக அந்த இலையை பறித்தார் என்று தெரியவில்லை. பொதுவாக பதற்றத்தை மறைத்துக் கொள்ள விரும்புவோர் எதையாவது பறிப்பது, கையில் வைத்து ஆட்டிக் கொண்டிருப்பது போன்றவற்றை செய்வார்கள். நண்பருக்குள்ளும் அப்படியான பதற்றம் இருந்திருக்க கூடும்.>

ஆடுகளின் நடனம்னு சொல்லி என்னைய ஏண்டா போட்டு இந்த ஆட்டு ஆட்டினே. ஆமாமா நம்ம பதற்றத்தை அடுத்தவன் மேல போட்டுல்ல மறைச்சிக்கணும்.

<என்னவொரு வடிவமைப்பு. ஒரம் கிழிந்திருப்பது கூட அழகாகத் தானிருக்கிறது.>

பின்ன மார்ச் 81ல எழுதின கதையாச்சே ஓரம் கிழிஞ்சிருக்குன்னு சும்மானாச்சுக்கும் சொல்லி வெக்க வேணாமா? அப்பதான ‘வாசகர்கள்’ அடுத்த கதையையாச்சியும் வலையேத்தாம இருப்பாய்ங்க.

<இந்த இலைக்கு எத்தனை வயசிருக்கும். இலையை வைத்து செடியின் வயதைக் கண்டு சொல்ல முடியுமா.>

என்ன இருந்தாலும் எனக்கு நீயி சீனியர்தானேப்பா. எதுக்கு என்னையப்போயி இந்த காச்சு காச்சறே. வயசுக்கேத்த மெச்சூரிட்டியோட என்னையப் படுத்தாம சும்மா விடுவியா...

<செடியை விட்டு வந்த பிறகு இதற்கு காற்றோடு என்ன உறவிருக்கும்.>

இவ்ளோ வருட இடைவெளிக்கு அப்புறம் வந்து என்ன கிழிக்கப்போறே.

<பொதுவில் இலைகள் காற்றைக் கண்டு பயப்படுகிறதா. அல்லது காற்றை கண்டதும் உற்சாகம் கொள்கிறதா?>

பன்னீர் புஷ்பங்களே கானம் பாடு ரேஞ்சுல கவிஜெ நடைல அறிவுரை.

நான் காற்று நீ இலை என்ன சொன்னாலும் தலையாட்டணும் (கவிப்பேரரசைப் பாத்தாச்சியும் பிரபலங்களைப் பாத்து ஆமாஞ்சாமீன்னு தலையாட்டக் கத்துக்கப்பா.) நான் பிரமுகர் நீ பூஜ்ஜியம் என்ன சொன்னாலும் தலையாட்டணும்.

<இலைகள் ஒடுங்கி நிற்பதை சில வேளைகளில் கண்டிருக்கிறேன். அடிவாங்கி அழுது அடங்கிய சிறுமிகளின் முகபாவத்திற்கு ஒப்பானது அது.>

சமத்தா இருந்தா உனக்கு சாக்லேட் கெடைக்கும். சாருவையே மேடையேறி பாராட்டறேன். (சிறுமி, சிறுமி கொண்டுவந்த மலர் எழுதியவன் என்பதற்கான கோடிகாட்டலா மச்சி உனக்கு மிட்டாய் குடுக்காமப்போயிடுவேனா? ஆனா இப்புடியே எழுதிகிட்டு இருந்தே அத்தா பண்ணிடுவேன். ஆமா.

<காற்று எவ்வளவு ஆவேசப்பட்டால் அதனால் பசுமையான ஒரு இலையை செடியிடமிருந்து பறித்துவிட முடியாது .>

உன்னைய என்ன பண்ணித் தொலைக்கிறதுன்னே தெரியலியேய்யா?

<இலைகள் எப்போதுமே துள்ளுகின்றன. தன் பசுமையை காட்டிக் குதூகலம் கொள்கின்றன.>

ஓவரா குதிக்காதே ஆமா சொல்லிப்புட்டேன்.

<என் கையில் ஒரு இலை வந்தவுடனே வயது கரைந்து போவதை உணர துவங்கினேன். அதை ஒரு சிறுவனை போல ஆட்டிக் கொண்டேயிருந்தேன்.>

அடேய் மாமல்லா உன் ’இலை’ கதையைப் பாராட்டி எழுதியிருகேன் அப்பிடிங்கறதாவுது உனக்குத் தெரியுமா? (ஓ நல்லா தெரியுமே இலைகளை வியக்கும் மரம்தானே அந்த வெளியீட்டு விழாவுல சுகுமாரன் படிச்ச உரை திண்ணைல கிடைக்குதே)

இன்னமும் என்கிட்ட ஏண்டா வம்பு பண்றே? (மாமே அதுல கூட உன் நாட்டிய முத்திரைகள் சுகுமாரன் கைவண்ணத்துலப் பளபளப்புதேம்மா? மறந்துடுச்சா? இந்தா ரெடி ரெஃபெரென்சூ.

//ஹாலிவுட் சாகசப் படங்களுக்கு இசையமைப்பாளராகப் பணியாற்றிய இத்தாலிய இசையமைப்பாளர் எனியோ மோரிகோனைப் பற்றியது.மதுரை புதுமண்டபம் பகுதியில் பழைய இசைத் தட்டுகள் விற்பனையாளரிடம் பார்த்த இசைத் தட்டின் உறையிலிருந்து தெரிந்துகொண்ட மோரிகோனைப் பரவசத்துடன் அறிமுகப்படுத்துகிறார் ராமகிருஷ்ணன்.//


அட்டையில அதுதானேய்யா இருந்துது.

//மோரிகோனின் சாதனைகளையும் அவர் புறக்கணிக்கப்பட்ட விதத்தையும் பேசும் ராமகிருஷ்ணன் அவருடைய இசை பற்றிய முக்கியமான அணுகுமுறையைக் குறிப்பிடாமல் போவது வியப்பைத் தருகிறது.//


யோவ் சுகுமாரா பழைய கடையில பாக்கசொல்லோ இசைத்தட்டு அட்டையிலயே இசையைக்கேட்டு எவனாச்சியும் எளுதியிருந்தா எளுதியிருப்பாரில்லே. இசை பத்தி அதுல எதுவும் எளுதித் தொலைக்கிலியே. வச்சுகிட்டா வஞ்சனை பண்றாரு எஸ்.ரா?

//ஹாலிவுட் படங்கள்,இத்தாலியப் படங்கள், பிற படங்ககள் உட்பட நானூறுக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்தவர்//

அப்பிடியா இது அட்டைல போடாதது எப்பிடிய்யா எஸ்.ராவோட குத்தமாகும்?

//மோரிகோன்.தன்னுடைய இசையை இரண்டு அணுகுமுறைகளில் வெளிப்படுத்தியவர். சினிமாவுக்கு உருவாக்கிய இசையை 'செயல் இசை' (applied music) என்றும் ஆபரா,கான்சர்டோ போன்ற மரபான வடிவங்களில் அமைத்த இசையை 'அசலான இசை'(absolute music) என்றும் வகைப்படுதியிருந்தார் என்பதும் 2001 செப்டம்பர் 11 ஆக்கிரமிப்பை மையமாக வைத்து Response to Sept 11 என்ற இசைக்கோர்வையை உருவாக்கியிருந்தார் என்பதும் கவனத்துக்குரிய விடுபடல்களாகத் தோன்றுகின்றன.//

வெளியீட்டு விழாவுல சொல்ற மூஞ்சியப் பாரு.இதை மொதல்லியே சொல்லீருக்ககூடாதா? கட்டுரைல சேத்து எழுதியிருப்பாருல்ல. பிளடி வயித்தெரிச்சல் புடிச்ச் தமிழ் நண்டுகள். சு.வெங்கடேசனின் காவல் கோட்டம் தவிர வேற எப்பையாச்சும் யார் வம்புக்காச்சும் போயிருப்பா எஸ்.ரா? தான் உண்டு தன் ரூம் உண்டுன்னு ரூம்புக்குள்ளையே தேசாந்தரம் போயிகிட்டு இருக்கிறவரைப் போயி இப்பிடியா அவதூறு செய்யிறது.

அது செரி இந்த வெளியீட்டு விளாவுக்கப்புறம் எத்துனை எஸ்.ரா புக்கு விளாவுல கட்டுரை படிக்கிற பாக்கியம் கெடைச்சி இருக்கு சுகுமாரா? அதான் லாஷ்ட்டா? அப்பிடின்னா செரி. டமிலிளக்கியம் ஆரோக்கியமாத்தான் மரணப்படுக்கையில இருக்கு. ரை ரைட்.

//'காலமும் குழந்தைகளும்' கட்டுரையில் குழந்தைகளின் உலகைச் சித்தரிப்பவையாக குறிப்பிடப்படும் கதைகளில் ஒன்றான விமலாதித்த மாமல்லன் கதையின் தலைப்பு 'கறிவேப்பிலை' என்று இருக்கிறது. அது வெறும் 'இலை'.//

தலைப்புல என்ன இருக்கு? ராமகிருஷ்ணனை கிருஷ்ணராமன்னு கூப்டா என்ன வேற ஆள் திரும்பிப் பாப்பான். நம்மாளில்லேன்னு தெரிஞ்சதும் அப்பிடியே கண்டுக்காமநடையைக் கட்டி,தேசாந்தரம் போயிகிட்டு இருக்கறேன் டோண்ட் டிஸ்ட்ரப் மீன்னு சொல்லிட்டு வூடு பாக்க, எதிர்காத்து தலையைக் கலைக்காதபடிக்கு பாத்து ரிசர்வ் பண்ண டிக்கெட்டோட வண்டியேறிட்டாப் போச்சு. ஊட்டுக்குப் போற பயணத்துலயே விகடனுக்குக் கட்டுரை வழில டீக்குடிக்க நிக்கும்போது உயிர்மைக்கு பத்தின்னு போறவழியெல்லாம் இலக்கியமா வாழ்ந்துடலாம்.

சரி தொடங்கிய கச்சேரியான ‘பார்க்க வந்த இலை’க்கு வருவோம்.

<நண்பர் தீவிரமாக இலக்கிய சச்சரவுகள், வம்புகள் பற்றி பேசிக் கொண்டேயிருந்தார்.>

மாமல்லன் வெறும் வம்பன்.

<இலை என் கண்முன்னே வாடத்துவங்கியிருந்தது.>

கெட்ட வார்த்தைல திட்டத்திட்ட கே.பாலச்சந்தர் படத்துல செடி வாடறதா காட்டுவாரே! வா ரே வா என்னா டச்சு எழுத்தாளர் எஸ்.ரா டச்சு. அது மேரி

<உலகின் எந்த சக்தியாலும் இனி அதன் பசுமையைக் காப்பாற்ற முடியாது. இலை வாடுகிறது என்று நண்பர் சொன்னார்.>

அட்வைஸ்ஸு. வாடறது இலையா இல்லை மாமல்லனா இல்லே காயறது உன் மண்டையா பாஸ்..

<எவ்வளவு எளிய வாசகம். ஆனால் எவ்வளவு பெரிய துயர். மனித முயற்சிகள் அத்தனையும் ஒன்று கூடினாலும் ஒரு சிறிய இலையை அதன் வாடுதலில் இருந்து இந்த நிமிசம் காப்பாற்ற முடியாது தானில்லையா.>

இது ஒரு பிரச்சனையா? தத்துபித்துனு இல்லாம நீ கொஞ்சம் நல்லா எழுத ஆரம்பி, இலை ஃப்ரெஷ்ஷா ஆகி உன்னை வருடிக்கொடுத்துப் பாராட்டும். அதே பால்சந்தர் டெக்னிக்தான் ரிவர்ஸ் ஷாட் ஓட்டினா இலை திரும்ப பச்சையாயிடும். நெல்லா எழுதறது யாரால முடியுங்கறியா? அதுக்கு எந்த இலையா இருந்தாலும் என்னையா பண்ண முடியும்?

<பூக்களின் நறுமணத்தை தான் யாவருமே ரசிக்கிறார்கள். அதன் முணுமுணுப்பை ஒருவருமே கேட்பதில்லை என்று குட்டி இளவரசன் நாவலில் சொல்வதாக ஒரு நினைவு.>

அது இன்னா நினைவு?

மச்சி, கண்டமேனிக்குக் காணாததையும் கண்டுக்கிணே இருந்தாமேரில்ல நீயி அடிச்சி வுடுவே. இதையும் தப்பாதான் சொல்றாம்பாரு எஸ்.ரான்னு எங்க மாமல்லன் நோண்டிறப்போறானோன்னு ஒரு சேஃப்டிக்கு நினைவுன்னு சொல்லி டிஸ்கி போட்டுக்கிறியா? ஓகே ஓகே. எப்பியும் போறதோத் தப்பும்தவறுமா ஒன்வேல. போலீஸ்காரன் கண்லபடும்போது மட்டும் எறங்கி தள்ளிகிணு போயிட்டாப்போதும். அப்பால வண்டிய எப்பவும்போல ஓட்டிகினு போலாம்னு ‘நினைவு’ போட்டு வெச்சிருக்கியோ? 

<நாம் இயற்கையைப் பிரித்து நமது புலன்கிளர்ச்சிக்கு ஏற்ப அறிந்து கொள்கிறோம். வாசனையிருப்பதும் இல்லாதிருப்பதும் அதனதன் தனித்துவம். இயல்பு. ஒரு மரத்தில் உள்ள இலைகள் யாவும் ஒன்று போல இருப்பதாக அவை நம்மை நம்ப வைக்கின்றன. அது நிஜமில்லை.>

என் இலையும் உன் இலையும் எப்பூடி ஒரே மேரி வாஜனையோடவே இருக்கும்னு பெயில்ல உடச்சொல்றியா?

<இலை ஒரு சிறிய கனவைப் போலிருக்கிறது.

இலை காற்றின் உதிர்ந்த சிறகைப்போலிருக்கிறது.

இலை ஒரு குறுஞ்சிரிப்பைப் போலிருக்கிறது.>

அதான் வாடிருச்சே அப்பால எப்புடி இவ்ளோ குஜாலா இருக்கும்? கொஞ்சமாச்சியும் கண்டினியூட்டி மெய்ண்டெய்ன் பண்ணு மேன். அது இன்னாது சந்துல பேந்தாவா - காற்றின் உதிர்ந்த சிறகுன்னு சொல்லி கபால்னு கப்ஸா உட்டூட்டே?

இலை ஒரு இலையைப் போலவே இருக்கிறது.>

உன்னோட ஸ்டாக் ஷாட்டைப் போட்டுட்டீயா. இதான் விகடன் முத்திரை எழுத்தாளரோட ஸ்பெஷல் சாப்பா.

<மனம் அதன் மீது படிந்து நகர மறுக்கிறது. நண்பர் விடைபெற்றுப் போய்விட்டார்.>

நெம்ப ஃபீலிங்சோட சொல்றேன். இதோட உட்டுடுங்கறாரோ எஸ்.ரா?

<ஆனால் அந்த இலை வெயில் தாளமல் வாடி மடங்கி துவண்டு போயிருந்தது. ஆழமான துக்கமும் வலியும் மனதில் ஒரு முறை எழுந்து அடங்கியது.>

ஃபீலிங்ஸ் ஃபீஃபர் லெவலுக்கு ஏறிடுச்சி.

<வாடி மடங்கி துவண்டு >

இவ்ளதானா இன்னும் கருகி இளகி பழுத்து இப்பிடியொரு பத்திருபது போடுப்பா கஞ்சத்தனம் பாக்காம. செத்தேஏஎ பூட்ச்சின்னு வேற எப்புடி எஸ்டாப்ளிஷ் பண்றது.

<வாழ்வு குறித்த ஏதோ ஒரு பெரும் உண்மையின் துளியை நாவில் உணர்ந்தைப் போலிருந்தேன்.>

ஆமா. ஆ காட்டுன்னு சொல்லி சரசு வந்து “எழுத்தாளனே எழுத்தாளனை விமர்சிக்கும் துரோகியாவான். உசார்” அப்பிடின்னு நாக்குல பேருண்மையை எய்ட்டுப் பூட்டாளா.

யோவ் ஒயிங்கா எயுது. வெத்துகுனா ஓட்டாதேன்னு சொன்னேன். இதுக்கு எதுக்குமேன் சாக்ரீன் டீயெல்லாம் குடிக்கிறே?

<இனி அந்த இலையை என்ன செய்வது. மேஜையில் வைத்திருந்தேன். பாதியில் முறிந்த நட்பைப் போல>

ஆடியோஸ் அமிகோ நோ ப்ராப்ளேமோஸ்

< அதைக் காண

மனது என்னவோ செய்து கொண்டிருந்தது.>

அட வுடுப்பா நா இன்னா பத்திரிகை ஆசிரியனா சினிமாக்காரனா இல்லே பப்ளிஷரா நட்பை லாங்கா மெயிண்டெய்ன் பண்ணலேன்னா நஸ்டம்னு கவலைப்பட. 

<அறையை விட்டு நான் வெளியேறினேன்.>

எங்க மச்சி தேசாந்தரமா? டைனிங் டேபிளுக்குப் போயி ஜூடா தோச சாப்பிடத்தானே அறையை விட்டு வெளியப்போறே? கல்லுல மாவூத்தர சத்தம் சமையல்கட்டுலேந்து கேட்டுறிச்சா? 

<என்ன செய்ய, என்னால் அது தானே முடிகிறது.>

சொம்மா புளிச்ச மாவுலையே தடிதடியா ஊத்தப்பம் வாக்காம சர்வதே கானடா தேச இயல் விருது வாங்கினப்புறமாச்சியும் நல்லா எழுத முயற்சி பண்ணலாமே.

***

எதிர்வினை செய்யாத எஸ்.ராவின் எழுத்தாளத் திமிர் தன்னை சோர்வடைய வைப்பதாய்க் குழுமத்தில் குசுகுசுக்கும் ஜெயமோகனுக்கு, அழியாச்சுடர்களில் இலை கதை பதிவேறியதும் எஸ்,ரா பார்க்க வந்த இலையை எழுதி என் மீது பரிதாபம் கொள்வதைப்போல் சபிப்பதைப் படிக்கவெல்லாம் நேரம் ஏது? பாவம் அந்த நேரத்தையும் வீணடிக்காமல் ஆன்மாவை உலுக்கும் ஆன்மீகக் கதையோ கட்டுரையோ எழுதி உலகை உய்விக்க வேண்டிய உன்னதமான வரம் பெற்று வந்திருப்பவர் அல்லவா அவர்.


வைத்துக்கொண்டு கொடுக்க மாட்டேன் என்கிற வஞ்சனை எஸ்.ராமகிருஷ்ணனிடம் என்றுமே கிடையாது. 

எஸ்.ராவிடம் 2000த்தில் இருந்ததும் 2010ல் இருப்பதும் உப பாண்டவம் பற்றி சாரு சுட்டிக்காட்டிய அதே குறை மொழிதான். சாரு நேரத்துக்கு ஒன்றாய் கருத்தாட்டம் போடுவதற்கெல்லாம் எஸ்.ரா என்கிற ஒரேவிதமான ஒழுங்கில் ஊதிக்கொண்டேயிருக்கும் ஒத்துவாத்தியம் மாற்றி ஊதமுடியுமா என்ன?

பதினாறு வருட இடைவெளியில் இந்த யானைகள் போட்டதையெல்லாம் படிக்காமல் போனது மனிதகுலத்திற்கு எதிரான எவ்வளவு பெரிய குற்றம்?

இரண்டாவது கருத்துக்கு இடமேயில்லை. கட்டாயம் கொசுவைத் தூக்கில் போட்டே ஆகவேண்டும். ஆனால் இந்தக் கொசுவைத் தூக்கில் தொங்கவிடுவதற்கான நூல் எங்கே இருக்கிறது? தங்களுடைய நூல் கொசுவின் பார்வைக்குப் படாமல் இருப்பதே நல்லது என்றல்லவா உள்ளூரப் பதறிக்கொண்டிருக்கிறார்கள் இந்தக் கொசு தடுக்கி பயில்வான்கள்.

இதில் யானையைப் புணர்ந்த கொசு என்று எழுதிய யானையின் கதிதான் அந்தோ பரிதாபம். கொசு கொடுக்கிற அடியில் குருதி கொட்டிக்கொண்டிருக்கிறது என்பதை யானையால் எப்படி திரும்பிப் பார்க்க இயலும்? வயதான காலத்தில் வலியில் பிளிறக்கூட முடியாமல் ஈனஸ்வரத்தில் மியாவ் என்கிறது பூனை. அதைக் கண்டு கையறு நிலையில் குறைத்துக்கொண்டிருக்கின்றன