Sunday, August 26, 2012

வினவண்ணாவுக்கு அட்வான்ஸ் மன்னிப்புக் கடிதம்!

தினமலரின் காசுவெறி - காமவெறி! - வினவு http://www.vinavu.com/2012/08/24/dinamalar-sucks/

<கேரளாவைச் சேர்ந்த அந்த 25 வயது பெண்ணை செகாநாத் என்று தினமலர் குறிப்பிடுகிறது. மற்ற பத்திரிகைகள் சகானாஸ், சகானா என்றும் அழைக்கின்றன.>

அப்படி என்றால் தினமலர் தவிர மற்ற பத்திரிகைகள்தாம் அந்தப்பெண்ணை மதரீதியாக அடையாளம் காட்டுவதில் முனைப்பாய் இருக்கின்றன என்றல்லவா பொருள்படுகிறது. இப்படி சேம்சைட் கோல் போடுவதற்கே மார்க்ஸ் எங்கல்ஸ் மாவோ என்று எவ்வளவு படிக்கவேண்டி இருக்கிறது. புரட்சிகர வாழ்க்கை நடத்துவதுதான் எத்துனை சிரமமானது?

<மற்ற பத்திரிகைகள் காதல் வலையில் இளைஞர்களை வீழ்த்திய கேரள அழகி என்பதாக முடித்துக் கொள்ளும் – இதுவும் விமரிசனத்திற்குரியதே – போது தினமலர் மட்டும் அதை செக்ஸ் வெறியாக வலிந்து எழுதுகிறது.>

<கொள்ளும்> மற்ற பத்திரிகைகளைப் படிக்காமலேயே, அவற்றிலிருந்து மேற்கோள் காட்டி நிறுவாமலேயே, அனுமானமாய் எழுதி இருப்பதற்கான காரணம், நக்சல்பாரிய பணிகள் அம்பாரமாய்க் கொட்டிக்கிடப்பதா அல்லது நம்மைப் படிப்பவன் மூளையைக் கழற்றிவைத்துவிட்டு வருபவன்தானே அவனுக்கு சும்மா அடித்துவிட்டு வெறியேற்றினால் போதாதா என்கிற அலட்சிய மனோபாவமா? 'கரம்' புரட்சி செய்பவர்களுக்கு இதற்கெல்லாம் நேரமேது? 

<அந்தப் பெண் முசுலீம் பின்னணி கொண்டவராக இருப்பது பார்ப்பன தினமலரின் போதையை வெகுவாக ஏற்றியிருக்கலாம்.>
                             
திரும்பவும் அனுமானம். அதுவும் சேம் சைடு கோல் போட்டுக்கொள்ளும் அனுமானம். தொடக்கத்தில் எழுதிய வரிகளை நினைவுபடுத்திக்கொள்ளவும். மற்ற பத்திரிகைகள் (மத அடையாளம் வெளித்தெரியும்படியாக)  சஹானாஸ், சகானா என்று குறிப்பிடுகின்றன என்றும் தினமலர் அவரை (மத அடையாளம் வெளியில் தெரியாத வண்ணம்) செகாநாத் என்று குறிப்பிடுகிறது என்றும் எழுதிவிட்டு அந்தப்பெண்மணியின் முசுலீம் பின்னணி பார்ப்பன தினமலரின் போதையை ஏற்றியிருக்கலாம் என்றும் முன்னுக்குப்பின் முரணாக எழுதலாமா? அதுவும் நம்பளவாளான மருதையன் என்கிற வல்லபேச ஐயரும் வீராச்சாமி என்கிற ரங்கராஜ ஐயங்காரும் தலைமைதாங்கி வழிநடத்தும் பேரியக்கத்தின் இணைய ஊதுகுழலான வினவு தளத்தில்போய் இப்படியான அச்சுபிச்சு தவறுகள் நேரலாமா?  

வீராச்சாமியாக புஜக்கிரீடம் கட்டி தீவிர கம்யூனிஸ்ட் ஆவதற்கு முன்னால் எழுபதுகளின் பிராமண லட்சணமாய், பேங்கில் குமாஸ்தா ரங்கராஜனாக வேலை பார்த்து பிரக்ஞை நடத்திக்கொண்டிருந்த காலத்திலேயே, தமிழ்வாட்டில் தெருவோர டீக்கடை பெஞ்சு கம்யூனிஸ்டு என்றால்கூட மரியாதை இருந்தது. காரண காரியங்களோடு அனைத்தையும் அலசி ஆராய்ந்து தமது தரப்பை தர்க்க ரீதியில் நிறுவுபவர் என்று எதிர்தரப்பாரும் ஏற்றுக்கொள்ளும் மரியாதைக்குரிய பிம்பம் இருந்தது. புதிதாக மதம்மாறிய விசுவாசி மூர்க்கமாய் பிரசாரம் செய்வதைப்போல சுய அடையாளத்தை மறைத்துக்கொள்ள, அதிதீவிர பிராமண எதிர்ப்புவெறியில் அறிவார்த்தத்தைக் குழுதோண்டி புதைத்துவிடுவதுதான் மார்க்சிய – லெனினிய மாவோ சிந்தனை வழியில் நக்சல்பாரிப் புரட்சியாளர்களின் உண்மையான களப்பணியோ? 

அடக்க ஒடுக்கமான அம்பிகளாய், ஒரு பயலும் சீந்தாமல், தெருவோரம் நடந்த காலத்திலேயே ஏதோ பதுங்கு குழிக்குள் வாழ்ந்துகொண்டிருப்பதான பாவ்லா காட்டியதில் ஒன்றும் குறைவில்லை. வண்ணநிலவன் அந்த வரலாற்றைப் பதிவுசெய்திருப்பதைப் படித்துப் பாருங்கள். ஒரு குட்டி பூர்ஷுவாவின் அனுபவம்  

ஜெயமோகனுடைய டிவிஎஸ் கீபோர்டிலாவது சரஸ்வதியம்மா நடனமாடுகிறாள் எனவே டிலீட்டோ பேக்ஸ்பேஸோ தட்டி அவளைத் தடுமாறவைக்க முடியாது. சூரியனுக்குக் கீழ் அனைத்தையும் வினவும் பெத்தண்ணாவான உங்குளுக்கு  என்னண்ணா ப்ராளம்? மாவோ மண்டியிட்டு தொழுகையா பண்ணிண்ட்ருக்கார் உங்க பாட்டாளி பிராண்டு கீபோர்ட்மேல, அடிச்சு திருத்தி எழுதினா டிஸ்டர்ப் ஆயிடுமோன்னு பயப்படறத்துக்கு? 

பொதுச்செயலாளர் பதவிதான் வல்லபேச ஐயருக்கு ரிசர்வ் பண்ணிட்டேள். இன்விசிபிள் சேர்மன் போஸ்ட்டு ரங்கராஜ ஐயங்காருக்குன்னு ஆயிடுத்து. போட்டும்,  ப்ரூஃப் ரீடர் போஸ்டுக்காச்சும் ஒரு தலித்தைப் போடப்படாதோ?வாய்க்குவாய் பாப்பான் பாப்பான்னு திட்டிண்டிருந்தாலே போறும் பட்டியல் இனத்தோர் / பழங்குடியினருக்கு  புரட்சிகர சமூகநீதி செஞ்சதா ஆயிடுங்கறேளா?ஸூப்பர் டெக்னிக். ஓட்டுப்பொறுக்கிகள்லாம் உங்களண்டதான் ‘லெவி கண்ணன்’ பாணில அரசியல் பாடம் கத்துக்கணும் ஓய்!  

தினமலரின் காசுவெறி - காமவெறி! இந்த டைட்டிலுக்கு இன்ஸ்பிரேஷன் ’மாமனாரின் இன்பவெறி’யா இல்லை ’சாமியாரின் காமவெறி’யா? 

வினவண்ணா நன்னா நாட்டத்திருத்தறேள் போங்கோ!

இந்தமாதிரி தத்துபித்துத் தப்பெல்லாம்  வராமப் பாத்துக்க நல்ல சப்-எடிட்டர் புரூஃப் ரீடரைப் போடப்படாதோ? அதுல இன்னொரு செளகர்யமும் இருக்கு பாத்துக்குங்கோ! ப்ரூஃப் ரீடர் போஸ்டுக்கு ஒரு தலித்தைப் போட்டுண்டு சமுக நீதிக்கும் கணக்குகாட்டிண்டுறலாம்.நாம்ப பாப்பார கம்பெனயில்லேன்னு தம்பட்டமும் அடிச்சிக்கலாம்.

தினமணில சிவராமையர் இருந்தார்னா சரி புரட்சிகர வினவு தளத்துலையும்  ’பைத்தியக்காரன்’ சிவராமைய்யர்தான் காளமேகம் அண்ணாச்சியா கூடுபாஞ்சு கிண்டவேண்டி இருக்கறது நாலுபேருக்குத் தெரிஞ்சா நன்னாவா இருக்கும்.

கறுப்புச்சட்டை திராவிடர் கழகக்காரா அந்த காலத்துல சொல்லுவா, முந்தில்லாம் பாப்பான் பஞ்சகச்சம் கட்டி கைல தர்பையோடத் திரிவான் இப்ப காலத்துக்கேத்தாப்புல செவப்புக்கொடி நடுல அரிவாள் சுத்தியலோட திரியறான்னு. மார்க்ஸ் ஏங்கல்ஸ் மாவோல்லாம்  பரணைக்குப் போயிட்டா போல இருக்கு. பெரியாருக்குப் பேராண்டி அவதாரம் எடுத்து பொளந்து கட்டறேள் போங்கோ! 

வெல போறதைத்தானே விக்கணும். விக்கறதையும் முடிஞ்ச வரைக்கும் சீப்பா விக்க பாக்கணும். அதைத்தானே மாவோ பொறந்த மண்ணு அமெரிக்காவுக்கே சொல்லிக்குடுத்துண்டு இருக்கு.

டைட்டில்லையே காமவெறின்னு போட்டுட்டேளே. எதை இண்டர்நெட்ல ஜாஸ்தி தேடறாங்கற சூட்சுமத்தை கப்புனு புடிச்சுண்டு நக்ஸபாரி தத்துவத்தை என்னமா கரசேவகர்களாண்டயும் கொண்டுபோறேள் பாருங்கோ.  சைனாக்காரா மாதிரியே மாவோவை நன்னா ஃபாலோ பண்றேள். இந்த சமத்து நம்பளவாளவிட்டா வேறயாருக்கு வரும்? என்ன சொல்றேள்! ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் சத்தமா சொல்லிருக்கபடாதோ! சாரி சாரி. ஆள்படை அங்குசத்தோட எங்காமத் தேடிண்டு லாங் மார்ச் வர்ர அனாவசிய சிரமம் உங்குளுக்கேண்ணா?  இந்தாங்கோ மன்னிப்பு லெட்டர் இப்பவே குடுத்துடறேன்.