Friday, October 5, 2012

மனுஷ்ய புத்திரனின் ராயல்டி கவிதைகள்

உயிர்மை பதிப்பகத்தின் உரிமையாளரும் கவிஞருமான மனுஷ்ய புத்திரன் தமது பேஸ்புக் சுவரில், கீழ்க்காணும் இரண்டு சிறந்த கவிதைகளை சிறப்பாக எழுதியுள்ளார்.

கவிதை ஒன்று

இந்த வார ஆனந்தவிகடனில் தா.பாண்டியனின் பேட்டிக்கு நிகராக வந்திருக்க்ம் இன்னொரு பேட்டி செக்ஸ் பட இயக்குனர் ருக்மாங்கதனுடையது. நான் சமீபத்தில் இவ்வளவு வெளிப்படையான ஒரு பேட்டியை படித்ததே இல்லை. ’ உங்கள் படத்தில் நடிக்கும் நடிகைகளுக்கு எவ்வளவு சம்பளம் கொடுப்பீர்கள்?’ என்று கேட்டால் ஐம்பதாயிரம் ரூபாய் என்கிறார். அவ்வளவுதானா என்று நிருபர் அதிர்ச்சி அடைகிறார். ‘ படத்துல நடிச்சா பின்னாடி வேற தொழிலுக்கு உதவும்ல’ என்கிறார் கூலாக. நடிகருக்கு எவ்வளவு சம்பளம் என்று நிருபர் கேட்கிறார். ‘’ சம்பளமா? அவனுங்கள்ல இதுல நடிக்கிறதுக்கு எனக்கு பணம் தரணும் ’’ என்கிறார் கோபமாக. ருக்மாங்கதனுக்கு இருக்கும் நேர்மையுணர்ச்சி நமது அரசியல் தலைவர்களிடம் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?

***

மேற்கண்ட கவிதையில் வரும் செக்ஸ் நடிகைகளை, இயற்கை எய்திய பின்னும் மார்க்'கட்டு'டன் இருக்கும் நட்சத்திர வணிக எழுத்தாளர்களுடனும் நடிகர்களை, என்றுமே மார்க்'கட்டு' இல்லாத இலக்கிய எழுத்தாளர்களுடனும் தொடர்புபடுத்திப் பார்க்கும் குறுக்குபுத்திக்காரர்களுக்கு நரகம் சர்வ நிச்சயம்.

ஏனென்றால், அற உளைச்சலுடன் கவிஞர் எப்படி அலமறுகிறார் என்று அடுத்த கவிதையில் பாருங்கள்.

கவிதை இரண்டு

தமிழகத்திலேயே விலை மலிவாகவோ இலவசமாகவோ கிடைப்பது என்ன தெரியுமா? ஒரு தமிழ் எழுத்தாளனின் உழைப்புத்தான்.

***

அந்த ‘ஒரு தமிழ் எழுத்தாளன்’ யார் என்று, உயிர்மை பதிப்பித்த எழுத்தாளர்களுக்குள் தேடுவது மட்டும்தான் சிரமமான காரியமாக இருக்கிறது.

ஆதாரம்: