Thursday, November 29, 2012

இந்தப் பிரபலங்க பண்ற லொள்ளு தாங்கலப்பா

மறவர் சீமையில் தமிழ் வளர்த்த ஒரு குடும்பத்தைச் சேர்ந்த’ சின்மயி ஸ்ரீபாதா அவர்களின் தமிழர் நலன் தமிழ்ச்சமூகம் பற்றிய அறிவார்ந்த புரிதல் தமிழாபிமானம் சாதிபேதம் பாராட்டா நல்லியல்பு ஆகிய உயர்குடி குணநலன்கள் பற்றி, பிஎச்டி ஆராய்ச்சி செய்யும் மாணவனின் தீவிரத்தோடு இணையத்தை அலசிக்கொண்டிருக்கையில் வீடியோ சுட்டியைக் கொடுத்திருந்த  ட்விடொன்று காணக் கிடைத்தது. சின்ன நடிகர்தானே என்று நினைத்தார் போலும் யாருடைய வீடியோ என்கிற விபரம்கூட கொடுக்கவில்லை.

Tuesday, November 27, 2012

முதுகெலும்பற்ற அறச்சீற்ற அடலேறு

நானுண்டு என் வேலையுண்டு என வேலைக்கும் போய்க்கொண்டு தொழிலாய் இணையத்திலும் எழுதிக்கொண்டு இருப்பவனுக்கு எங்கிருந்தெல்லாம் விருந்து அழைப்பு வருகிறது என்று பாருங்கள்.

வன்மத்தை எண்ணிக் கலங்கிடும் விஜயா

வன்மத்தை எண்ணிக் கலங்கிடும் விஜயா 
வன்மத்தின் தன்மை சொல்வேன்

ஆடி போயி ஆவணி வந்தா...

நிஜ வாழ்வில் தாம் புரிந்த லீலாவிநோதங்களை அப்படியே உல்டா பண்ணி எக்ஸைலாக உருட்டிக் கொடுத்திருக்கிறார் சாரு என்று காலையில் விவகாரங்களும் விகாரங்களும் என்று எழுதிப் போட்டால், நைஸாக மூக்கை நுழைத்து பாருங்கள் இப்படித்தான் என்னை அப்போதைய சாட்டிலும் மாட்டிவிட்டார்கள் என்று ஒரு குப்பையை, ஸ்பாமைக் காட்டி நிஜத்தில் தாம் நடந்துகொண்ட கீழ்மையிலிருந்து திரும்பவும் எப்படித் தப்பிக்கப் பார்க்கிறார் சாரு நிவேதிதா என்கிற கைப்புள்ளை.

Monday, November 26, 2012

விவகாரங்களும் விகாரங்களும்

போலி மனிதாபிமான முற்போக்கு எழுத்தாளனை ஜேஜே எப்படி டாராக வகுந்து காட்டுகிறான் என்று பாருங்கள்

Friday, November 23, 2012

Tuesday, November 13, 2012

பிராமணர்களா வாமனர்களா

நமஸ்காரம் பத்மாசினி அம்மா!

தாங்கள் @kalyanasc கல்யாண் ராமன் அவர்களுக்கு எழுதிய ட்விட்லாங்கரைப் படிக்க நேர்ந்தது. அதில் நேரடியாக என்னைக் குறிப்பிடவில்லை எனினும் நீங்கள் பிரஸ்தாபிக்கும் விஷயம் ட்விட்டு - ரீட்விட்டு - ரிவிட்டு என்கிற என் கட்டுரை  பற்றியது என்பதால் நான் ஆஜராக நேர்கிறது. பெரியவா பெரிய மனசு பண்ணி க்ஷமிக்கணும்.

Sunday, November 11, 2012

கலைஞனும் குமுறலும்

மேதைகளுக்குள் பொது அம்சம் கிறுக்குத்தனம் என்றாலும் ஒவ்வொருவரிடமும் அது ஒவ்வொருவிதமாக வெளிப்படும். 

Wednesday, November 7, 2012

கொடுத்தால் மரணஅடி கொடு! இல்லையேல் மன்னித்துவிடு!

எஸ்.வி.ராஜதுரையும் ஜெயமோகனும் அவதூறு செய்ததாய் பரஸ்பரம் குடுமிப்பிடி சண்டையில் இருக்கும் தற்காலச் சூழலில், இணையத்தில் நான் ஈடுபட்ட பல சண்டைகளில் ஒரு குழாயடியைப் பதிவுசெய்திருப்பது நினைவுக்கு வந்தது. புதிய வாசகர்களின் வசதிக்காக, அதை அப்படியே கீழே பிரசுரித்து இருக்கிறேன். அந்த சண்டையின் பின்னணி பற்றி தெளிவுபடுத்தவே இந்த முன்னுரை.

Tuesday, November 6, 2012

மைய்யா மைய்யா உன் ட்விட்டரில் சுடர்விட்ட சொற்களும் பொய்யா பொய்யா

சின்மயி ஸ்ரீபாதா (ட்விட்டரில் நிர்மலா கொற்றவையிடம்): அதைப்போன்ற (ஆபாசமான நிறைய பாடல்களை நான் பாட மறுத்திருக்கிறேன். அதைப்பற்றியெல்லாம் (பொதுவெளியில் சொல்லி) அலட்டி ஆர்ப்பரிப்பதில்லை என்கிறார்.

Saturday, November 3, 2012

ஜெயமோகன் பற்றிய பெருங்கவலை

<Court slams anti-Kudankulam agitators for protests>

கிடைத்தது மைக் என்று, நாளை நடக்கவிருக்கும் ராஜபாளையம் நாற்று கூட்டத்தில், கடுப்பை சிம்மில் வைக்காமல், ஓவராய் அறச்சீற்றத்தில் பொங்கி, கோர்ட் அவமதிப்புக்கு ஆளாகிவிடாமல், என் உயிர் நண்பர் ஜெயமோகன் உசாராய் பேசவேண்டுமே என்று, மனம் கிடந்து அடித்துக்கொள்கிறது. 

ஷீனாவும் நாணாவும்பாட்டக் கேட்டேளோ! என்னமா பாடியிருக்கா ரெண்டுபேரும். ஷபாஷ்!

Friday, November 2, 2012

விதைகளும் வதைகளும்

புஷ்பவனம் குப்புசாமி ஆரம்ப நாட்களில் சாஸ்தரீய சங்கீதம் கற்றுக்கொள்ள கர்நடக சங்கீத வித்வானிடம் சென்ற போது, உனக்கெல்லாம் சங்கீதம் வராது அல்லது சொல்லித்தர முடியாது (இது போன்ற அர்த்தத்தில்) கூறிவிட்டார் என்று, அவர் கொடுத்திருந்த பத்திரிகை செய்தி/பேட்டியைப் படித்திருப்போருக்கு, இன்றைய விஜய் டிவி நிகழ்ச்சியில் பூவே செம்பூவே பாடலின் இசைக்கோர்வை பற்றி சிலாகித்துவிட்டு அதை ஸ்ரீராம் பாடுகையில் அவர் நெகிழ்ந்து அழுததோ அப்புறம் அந்த மேடையிலேயே இளையராஜாவுக்கு மானசீகமாக சாஷ்ட்டாங்க நமஸ்காரம் செய்ததோ மெலோடிராமாவாகப் படாது.