Tuesday, November 13, 2012

பிராமணர்களா வாமனர்களா

நமஸ்காரம் பத்மாசினி அம்மா!

தாங்கள் @kalyanasc கல்யாண் ராமன் அவர்களுக்கு எழுதிய ட்விட்லாங்கரைப் படிக்க நேர்ந்தது. அதில் நேரடியாக என்னைக் குறிப்பிடவில்லை எனினும் நீங்கள் பிரஸ்தாபிக்கும் விஷயம் ட்விட்டு - ரீட்விட்டு - ரிவிட்டு என்கிற என் கட்டுரை  பற்றியது என்பதால் நான் ஆஜராக நேர்கிறது. பெரியவா பெரிய மனசு பண்ணி க்ஷமிக்கணும்.

அம்மா! எனக்கு வயது 52. எனவே நான் 62 வயதாகும் உங்களை அம்மா என்று விளிப்பது பொதுவெளி நாகரிகத்திற்காக மட்டுமே அம்மா. உங்களைக் கேள்வி கேட்டாலே எத்துனை நாகரிகமாகக் கேள்வி கேட்டாலும் உங்களுக்குக் கண்மண் தெரியாத கோபம் வருமாமே உண்மையா அம்மா? போலீசில் மாட்டி வைத்து விடுவீர்கள் என்று எல்லோரும் உங்களைப் பார்த்து பயப்படுகிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா அம்மா. இது குறித்து உள்ளூர உங்களுக்குப் பெருமையாகக்கூட இருக்கலாம் அம்மா. ஆனால் என்னை என் எழுத்தும் இந்திய அரசியல் சட்டமும் சத்தியமும் காப்பாற்றும் என்பதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு அம்மா. அதன்பேரில்தான் அடுத்த அடியே எடுத்து வைக்கிறேன் அம்மா.

சின்மயி பிரச்சனையில், உங்களுக்கு சாதகமான நிலைபாட்டைக் கல்யாண் ராமன் எடுத்திருக்கிறார் என்பதால்தான், அவரைத் தேடித் தெரிந்துகொண்டு இருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன் அம்மா. ஆனால் அவரை எனக்கும் எனக்கு அவரையும் எழுத்தாளர்களாகவும் கிட்டத்தட்ட 1982இலிருந்தே பெயர்களாகவும் எழுத்துக்களாகவும் தெரியும் அம்மா. அவர் சிவசங்கரா என்கிற பெயரில் பிரக்ஞை பத்திரிகையில் 70களில் எழுதியவற்றை தேடி வாசித்தவன் என்கிற முறையில் அவர் மீது எனக்கும்கூட இதற்கு முன்பாக மரியாதை இருந்தது அம்மா.

ஆனால் இன்று அவர் நியாயத்தைப் பேசாமல், மொக்கைப் பார்வையாய், பிராமணப் பதாகையைத் தூக்கிக்கொண்டு இணையத்தில் திரிகிறார் என்று கடுமையாக அவரை ட்விட்டரிலேயே விமர்சித்தும் வருகிறேன் அம்மா.

reading your tweets I have developed a great deal of respect for the way you look at and analyze issues

கல்யான் ராமனிடம் ஜாதீய சார்பு மட்டுமே இருக்கிறது என்கிற வாதத்தை கடுமையாக எதிர்த்து ஆவேசமாக என்னிடம் வாதாடி என் படைப்பூக்கம் பற்றி கவலைப்பட்டு எனக்கு அறிவுரை வழங்கிய @pavaraksha வுக்கு, என் கணிப்பு சரிதான் என்பதற்கு கல்யானை நீங்கள் தேடி வந்ததே போதுமான சான்றம்மா. அதற்காக உங்களுக்கு இன்னொரு நமஸ்காரம் அம்மா.

@kalyanasc After spending considerable time in reading your tweets I have developed a great deal of respect for the way you look at and analyze issues. I didn't want to respond to anyone so far but I feel obliged to write to you.

சின்மயி மீது நடத்தப்பட்ட பாலியல் தாக்குதலை மட்டுமே முன்னிருத்தி, மறுபக்கத்தைப் பார்க்கவே மாட்டோம் என்று பிடிவாதாமாய் சின்மயியை ஆதரிக்கும் ஷோபா சக்தி லீனா மணிமேகலை சாரு நிவேதிதா ஜெயமோகன் போன்றவர்கள் இருந்தும் நீங்கள் கல்யான் ராமனிடம் பேசப்போனதிலோ,  கல்யான் ராமன்மீது உங்களுக்கு பெரிய மரியாதை வந்திருப்பதிலோ எனக்கு எந்த ஆச்சரியமும் இல்லையம்மா. அவரது புகைப்படத்திலேயே ஒளிரும் பிராமண தேஜஸ் உங்களை ஈர்த்ததில் என்னம்மா வியப்பு?

சகஜமா ஆத்துக்குள்ள வந்துபோனாலும் சூத்ரா சூத்ராதான் இல்லியோ. அவாள்ளாம் வேலபாக்கன்னா வந்துட்டுப்போனா? நம்பளவாகிட்ட மனசு விட்டு சொல்லிக்கறாப்பல அவாளண்டயெல்லாம் சொல்லிக்க முடியுமோ? நானும் ஒரு பிராமணன் என்பதால் இதை என்னால் நன்றாகப் புரிந்துகொள்ள முடிகிறது அம்மா. இதெல்லாம் என் சொந்தக்காரர்கள் வீட்டில் இப்போதும் காணக்கிடைக்கும் காட்சிகள்தானம்மா. சொந்த கட்சிக்கு வாதாட சொந்தக்காராளே வக்கீலாவும் ஜட்ஜாவும் வாச்சா அதவிட ஆனந்தம் என்ன இருக்கும் சொலுங்கோ.

காரவான் பத்திரிகையில் புத்தக விமர்சனம் எழுதுபவர் கல்யான் ராமன்.. அவருடைய பல எழுத்துக்கள் அறிவு தள விவாதங்கள் எனக்குப் புரியாமல் பீதியூட்டுபவை. உங்களுக்குப் புரிந்திருக்கிறது என்பதில் எனக்கு உங்கள் மேல் பெருத்த பொறாமை ஏற்படுகிறது அம்மா!

At 62, I am orienting myself with all the technological changes and electronic gadgets. If I have to be in the present tense floating comfortably, knowledge on all these formidable things have become necessary. By shunning I go nowhere. I decided to tackle and learn. 

நன்றாகவே எழுதுகிறீர்கள். அடுத்து வரப்போவதற்கு சரியாகத்தான் லீட் கொடுக்கிறீர்கள். ஜெயமோகனைவிட காட்சிக்கோர்ப்பில் நீங்கள் திறமையானவர் என்பது நன்றாகவே தெரிகிறது. திரைக்கதை விவாதத்தில் சேர்த்துக்கொள்ளச்சொல்லி மணிரத்தினத்துக்கு உங்கள் பெயரை மனமார  சிபாரிசு செய்கிறேன் அம்மா.

இணையத்திலேயே டெண்ட்டு போட்டு 24 மணிநேரமும் வசிக்கும் கணினிப் புலிகள்கூட, வந்த மெய்லைப் படிப்பார்களே தவிர  மெய்ல் ஹெட்டரில் போய் பார்ப்பார்களா என்பது சந்தேகமே. ஆனால் எங்களுக்கு வந்த மெயில் இன்னாருக்கும் போயிருக்கிறதே அன்னார் யார் அவருக்கு ஏன் அது போயிற்று என்று ஃபோனிலேயே செம காய்ச்சு காய்ச்சியவர் அல்லவா  நீங்கள். தயவுசெய்து டெக்னாலஜியெல்லாம் உங்களுக்குத் தெரியாது என்று புளுகாதீர்கள் அம்மா. பொய் சொன்ன வாய்க்கு போஜனம் கெடைக்காதென்று எவனோ லூசுப்பயல் சொஇல்லிவைத்திருக்கிறான். யூ கண்டினியூ.

The aforesaid RT on Manusmriti was an idiocy of mine

நீங்கள் RT பண்ணினால் என்ன பண்னாவிட்டால் என்ன? தானுண்டு தனது அறிவு நூலில் கட்டிப் பறக்கவிடும் ட்விட்லாங்கர் உண்டு என்று ட்விட்டாயுதபாணியாய் இருப்பவர் அவர். அவரிடம் போய்...

ஓ! அடடா அப்படியா மகளைக் காப்பாற்ற ஆயத்தமா அம்மா சரி. அக்டோபர் 28 2012 க்ஷமிக்கணும் சின்னப்பயலின் சின்னத்தனமான கேள்விகளில் அதன் ஆரம்பத்திலேயே ”ஏதோ சின்ன பொண்ணு,தெரியாம ரீட்விட் பண்ணிடுத்து” என்று சொல்லியிருந்ததற்கு இது பதிலா அம்மா. என்னடா இவன் டக்குமுக்காக சிக்கவைத்துவிட்டானே என்று அது என் மகளில்லை நான்தான் என்கிறீர்களா அம்மா!

while learning how to use a mobile for checking and responding to tweets. It was my blunder to RT while reading this Manusmrti tweet.

கொலை செய்தது நான்தான் என்றாலும் என் அம்மா கூட, இல்லையில்லை தான்தான் என்று வைராக்கியத்துடன் வாதாடி தண்டனையைத் தான் ஏற்றுக்கொள்வாள் அம்மா. பிராமினாக இருந்தாலும் அவள் பாவம் எட்டாங்கிளாஸ்வரை மட்டுமே  படித்தவள் என்பதால் இதோடு நின்றுவிடுவாள். மெத்தப்படித்தவர் என்பதால் நீங்கள் ஒரு படி மேலே போய் உங்கள் மகளை மட்டுமல்லாது, கைதவறி செய்துவிட்டதாக உங்களையும் சேர்த்துக் காப்பாற்றிக் கொள்கிறீர்கள் அம்மா.நடிக்க வந்த நாடகத்தை மிகத்திறம்பட நடத்துகிறீர்கள் அம்மா சபாஷ்! 62 வயதுக்கு இது அபாரமான நடிப்புதான் அம்மா!

Fortunately Chinmayi was there by my side. She was horrified when she noticed that I had pressed retweet for this particular one;
பஞ்சம ஜாதி தீண்டத்தகாதவர்கள் ஒட்டுண்ணிகள் என்கிற நான் ஈ இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலியின் ட்விட்டை ரீட்வீட் செய்தது என் மகள் சின்மயி அல்ல என்பது மட்டுமல்ல.

RT was a mistake while I thought I was pressing cancel,I had pressed affirmation
அம்மா இது என் ஐஃபோனில் எடுத்த ஸ்கிரீன்ஷாட். உங்கள் மொபைல் எதுவென்று எனக்குத் தெரியவில்லை. உங்கள் ஸ்கிரீன் ஷாட்டை எடுத்துப் போடுங்கள். ரீட்வீட்டுக்கும் கேன்சலுக்குமான வசதி எப்படி இருக்கிறது என்று பார்ப்போம்.

மேலும் எதையாவது படித்து முடித்ததும் எல்லோரும் பேக்ஸ்பேஸ் அல்லவா போட்டாக வேண்டும். என்னதான் மொபைல் என்றாலும் எவனுடையதோவான இணைய பக்கத்தை  நீங்கள் எப்படியம்மா கேன்சல் செய்ய முடியும்?
சாட்ஷாத் என் படமேதான். படம் கொஞ்சம் சிறுஷாப்போயிட்டதுக்கு க்ஷமிக்கணும். பூதக்கண்ணாடி வெச்சுப்பாத்தேள்னா அப்பயே காது குத்தியிருக்கறது நன்னா தெரியும்.

பொய் சொல்வது என்று முடிவெடுத்தால்,சும்மா போகிற போக்கில் சொல்லிவிட்டுப் போகவேண்டும்.  என்பதை கல்யாண் ராமனை மட்டும் படித்தால் போதாது முக்கியமாக நீங்கள் ஜெயமோகனைப் படிக்க வேண்டும்.

அழுந்ததம் திருத்தமாக இப்படி எல்லாம் கப்ஸாவிட்டால்,எங்கப்பன் குதுருக்குள்ள இல்லை என்பதாக ஆகிவிடும். நீங்கள்தான்  பரமக்குடி மறவர் சீமையைச் சேர்ந்தவர்களாயிற்றே, உங்களுக்குத் தெரியாத பழமொழியையா நான் சொல்லிக் கொடுத்துவிடப் போகிறேன்?

(Padattam leading to more mistakes).

ஆமாம் உண்மையை மறைக்க வேண்டுமே என்கிற பதட்டம், மகளான சின்மயி தாழ்த்தப்பட்டவர்களை தீண்டத்தகாதவர்கள், ஒட்டுண்ணிகள் என்று சொல்லியிருப்பதை ரீட்விட் செய்து விட்டாளே என்கிற பதஷ்ட்டம். இது தமிழ்நாடு முழுக்கவும் பரவினால், சினிமா இண்டஸ்ட்ரி முழுக்கவும் பரவினால், இசைஞானி காதுவரை போய்விட்டால் என்னாவது என்கிற பதற்றம். எப்படியாவது மகளைக் காப்பாற்ற வேண்டுமே என்கிற பதறலே மேலும் மேலும் பொய்களைச் சொல்ல வைக்கிறது.

She took the mobile from me and undid the RT. From then on till now I am scared of using the phone for browsing.

அடடா என்னா உலக நடிப்புடா சாமி என்று கைதூக்கி உங்களைக் கும்பிட வைக்கிறீர்களே அம்மா.

சின்மயி எப்போதம்மா அந்த RT யைக் கேன்சல் செய்தார் ? பதறிப்போய் உடனடியாக கேன்சல் செய்தார் என்றுதானே மேலே இருக்கும் உங்கள் வார்த்தை சொல்கிறது. ஆனால் உண்மை என்ன தெரியுமா? வாருங்கள் பொய்யென்னும் புதைமணல் உங்களை வரவேற்கிறது. இன்னும் இன்னுமென இறங்குங்கள். உங்களைக் கைகொடுத்துத் தூக்கிவிட மாயவரத்தான்களற்ற நிதாட்சண்ய பிரதேசம் என் வாத களம்.

I was indeed dismayed and apologized.

யாரிடம் மன்னிப்பு கேட்டீர்கள் அம்மா? உங்கள் வீட்டின் பாதுகாப்பில் உங்கள் அருமந்த புத்திரியிடமா அல்லது உங்கள் மனசாட்சியிடமா? இல்லை மானசீகமாக ஐயங்கார் கடவுளிடமா? நடக்காததை நடந்ததாக சாட்சிகளே இல்லாத ஏகாந்த நிலைக்குக் கொண்டு சென்று, அப்பட்டமாய்ப் புளுக தமிழுக்கொரு ஜெயமோகன் ஏற்கெனவே இருக்கிறார் அம்மா.

But the damage was already done. Almost immediately Mankudhirai flashed a question about Chinmayi's agreement on this.

பாவம், மகள் மொபைலை சும்மா நோண்டிக்கொண்டிருக்கையில் நீங்கள் செய்த ரீட்விட்டை மகள் உடனடியாகக் கேன்சல் பண்ணினாலும் மண்குதிரை பிடித்துக்கொண்டார் என்கிறீர்களா?

We kept quiet.

ஏனம்மா தற்செயலாக தவறு நிகழ்ந்துவிட்டமைக்காக காற்றில் மன்னிப்பே கேட்டவர்கள் மண்குதிரையிடம் அதையே சொல்லி இருக்கலாமே. வரலாற்றுச் சான்றாக உங்களது மறுப்பு பதிவாகி இருக்குமே.

மனுஸ்மிருதியை அம்பேத்கர் எரித்தார் என்பதை உங்கள் முகத்துக்கெதிரில் சுட்டிக்காட்டுகிறான் ஒரு ஆண்மையுள்ள தமிழன். அதற்கு நீங்களும் உங்கள் மகளும் சும்மா கெப்ட்டு கொயட்டாக இருந்தீர்களா? மனசாட்சியைத்தொட்டுச் சொல்லுங்கள். தப்பித்தவறி உங்கள் பக்கம் துள்யூண்டு உண்மை இருந்திருந்தாலும் நீங்களும் உங்கள் மகளும் வாய்மூடி இருப்பவர்களா? திருடர்களுக்கு இங்கே கொட்டியது தேள். எனவேதான் பல்லைக் கடித்துக்கொண்டு சும்மா இருந்தீர்கள். ஆடாம கொள்ளாம பல்லெல்லம் நன்னா இருக்கோ. அசிரத்தையா இருந்துடாதேள் செக் பண்ணிக்குங்கோ. வாசன்ல ஃப்ரிய்யா பாக்கறாளாம் பிட் நோட்டீஸ் பாத்தேன்.

தவறு சுட்டிக் காட்டப்பட்டும் உணர மனமில்லை. சத்தியம் உறைந்த மனமம்மா உங்களூடையது. அதனால்தான் உடனடியாக ரீட்விட்டைக் கேன்சல் செய்ததாகப் புளுகும் நீங்கள் உடனடியாக செய்தது என்ன தெரியுமா? ஆதாரம் இங்கே.
ஆனால் கல்யான் ராமனுக்கு எழுதிய ட்விட்லாங்கரில் எதுவுமே நடக்காததுபோல எவ்வளவு அப்பாவியாக நடிக்கிறீர்கள். மனசாட்சியற்ற உங்களது புளுகு சவப்பெட்டியின் மீது அறையப்பட்ட முதல் ஆணியம்மா இது.

We did not want to let this grow and wanted to ignore it then and there.

தாழ்த்தப்பட்டவர்களைத் தீண்டத்தகாதவர்கள் என்பதும் அவர்களை ஒட்டுண்ணிகள் என்பதும் அதை மனுஸ்ம்ருதியின் பேரால்  சொல்வதும் வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படவேண்டிய குற்றங்கள். எனவே அதை நேரடியாகச் சொல்வதற்கு பதில் எவனோ கூமுட்டை போட்ட டிவிட்டை ரீட்விட் செய்து நான் சொல்லவில்லை, மனுஸ்மிருதி சொல்கிறது என்று அவன் சந்தோஷப்பட்டுக்கொண்டால் அவன் முதுகுக்குப் பின்னால் மறைந்திருந்து ரீட்வீட் செய்து மகிழ்கிறீர்கள். இது அம்பலப்பட்டு உறுதியாகிவிடக்கூடாது என்பதற்காகவும் இது மேன்மேலும் வளர்ந்து பிரச்சனை ஆகிவிடக்கூடாது என்பதற்காகவுமே நீங்களும் உங்கள் மகளும் அமைதி காத்தீர்கள் என்பதுதான் உண்மை.

However, I called up a friend and explained my idiocy and consulted him.

நீங்கள் ஜெயமோகனைப் படிக்காமலேயே அவரது ஏகாந்த பாணியில்தான் அல்ரெடி இருக்கிறீர்கள். அடடே அவரைப்போலவே சாட்சியமே இல்லாமல் எவனோ ஒரு அநாமதேயத்திடம்தான் நீங்களும் கன்சல்ட் செய்கிறீர்கள் சவாசு!

I wanted to apologize then and there as that retweet was my mistake.

அதுதான் எங்கோ யாரிடமோ அந்த ரீட்விட்டுக்காகவும் அது கை தவறி நேர்ந்த தவறு என்றும் ஏற்கெனவே மன்னிப்பு கேட்டதாய் சில வரிகள் முன் சொன்னது பொய்யா? இலை எதிரிலிருந்தது முகம் காணும் கண்ணாடியா?

But the friend said, "Amma, neenga senjadhu oru genuine mistake than. Ana idha neenga ippo explain pannina idhu oru vazhikattiyayidum; ellarum idhaiye solla arambicha kashtam". I saw the point and kept quiet.

அந்த ஃப்ரெண்டு யாருங்கம்மா? ராயபுரத்தானா? இவுனுங்க எல்லாமே சுத்த மோசம். இவுனுங்க பேச்சைக்கேட்டாலே அதோகதிதான் அம்மா. நீங்கள் என்ன மாதிரியான கடவுள் நம்பிக்கையாளர் அம்மா? வருவது வரட்டும் என்று உண்மையை உரக்கச் சொல்வது அல்லவா உண்மையான தெய்வபக்தி. மைதா மாதிரி வெள்ளையா இருக்கறது மட்டுமில்லேம்மா, பொய் சொல்லாம வெள்ளையா இருக்கறதும் பிராமண லட்சணத்துல ஒண்ணுன்னு ஆத்துக்குப் பெரியவா அலம்பிவிடும்போதே சொல்லிக் குடுப்பாளே?

நீங்கள் கிருஷ்ண பக்தையோ? அவன்தான் சகல திருசமங்களையும் சாதுர்யமாக செய்யக்கூடியவன். ஆனால் நீங்கள் உண்மையிலேயே  ரொம்பப் பாவம். பொய்யை சொல்லும் அளவுக்கு இருக்கும் புத்திசாலித்தனம் பொறுந்தும் அளவுக்கு சொல்லக் காணவில்லை. டெக்னாலஜியைக் கற்றுக்கொண்டது போலவே எதிர்காலத்தில் அதையும் கற்றுக்கொள்ளுங்கள்.

உங்கள் மகள் பெயரில் நீங்கள் கைத்தவறிச் செய்த ரீட்வீட்டை பதறிப்போய் உங்கள் மகள் உடனடியாக கேன்சல் செய்துவிட்டார் அதற்குள் மண்குதிரை ஸ்கிரீன்ஷாட் எடுத்துவிட்டார் என்கிறீர்களே அம்மா!

சின்மயி ரீட்விட் செய்தது 04 அக்டோபர் 2012 (ஆம் அதே யூஸ் பண்ணிக்கோ கடலை போடத்தான் என்று விதி ஷ்ரண்கேவின் வாழ்வில விளையாடிய அதே தினம்தான்)

மண்குதிரை ஸ்கிரீன்ஷாட் எடுத்த தேதி 06.10.2012 நீங்கள் சொல்வது போல உடனடியாக ரீட்வீட் கேன்சல் செய்யபடாமல் சொளையாக இரண்டு நாட்கள் அது ரீட்விட்டிலேயே இருந்திருக்கிறது என்பதற்கு ஆதாரம் அம்மா இது.
அம்மா மனசாட்சியற்ற உங்களது புளுகு சவப்பெட்டியின் மீது அறையப்பட்ட இரண்டாவது ஆணியம்மா இது.

உங்கள் மகள் சின்மயியின் ஜாதீய வெறியை அம்பலப்படுத்த நான் எழுதிய  ட்விட்டு - ரீட்விட்டு - ரிவிட்டு கட்டுரைக்காக நான் எடுத்த ஸ்கிரீன்ஷாட் இது

ஆதாரத்தை முன்வைப்பது என்று வந்தால் மண்குதிரை அல்ல கல்குதிரையைக் கூட நம்பாதவன் நான். இதை நான் , தரவிறக்கிய தேதி என்ன தெரியுமா அம்மா? 25 அக்டோபர் 2012. இதுதான் 26.10.12ல் வெளியான என் கட்டுரையில் இருக்கிறது.
உடனடியாக கேன்சல் செய்யப்பட்ட ட்விட் எப்படியம்மா 21 நாட்களுக்கு 25.10.12 வரை அப்படியே ரீட்விட்டோடு இருக்கும்?

நீங்கள் எல்லாம் தூய்மையான பிராமணர்களா அம்மா? இல்லை அசல் பொய்யினால் தயாரிக்கப்பட்ட ஆன்மாக்களா அம்மா? 

எவன் சொன்னாலும் அதை அப்படியே எடுத்துக்கொள்ளாமல் நானே சரிபார்த்து ஒருமுறைக்கு இருமுறை உறுதிசெய்துகொண்ட பின்பே வாய் திறப்பது என் வழக்கம். இது எழுத்தாளனாக மட்டுமல்ல புலனாய்வாளனாகவும் ஒருவனுக்கு அடிப்படைத் தேவை..

62 வயது என்று சொல்லிக்கொள்கிறீர்கள். அனுதாபத்துக்கு வேண்டியல்ல அது என்றே நினைக்கிறேன். 62 வயதில் கூசாமல் மனமறிந்து இப்படிப் பொய் சொல்லலாமா அம்மா?

This was a misery added by me to my daughter. Already I am pained beyond words for this constant harassment my daughter is facing for 2 years. For my part I also added this RT for her to carry on her shoulders.

உங்கள் மகளுக்கு இழைக்கப்பட்ட அநீதியை நான் மறுக்கவே இல்லை. கட்டாயமாக அது கண்டிக்கப்பட வேண்டியதுதான் அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் உங்கள் மகள் பேசியவை ஐநாவில் பேசத்தக்க மரியாதைக்குரியவையா என்பதையும் சற்று சிந்தித்துப் பாருங்கள். நீங்கள் செய்திருக்கும் இந்த முழுப்பூசனிக்காய் மறைப்பு மோசடி உங்களுக்குப் பெருமை சேர்க்குமா? கண்ணெதிரில் தெரியும் இதிலேயே இவ்வளவு பெரும் சூதை கூசாமல் செய்யத் துணிந்த  நீங்கள் திரைமறைவில் என்னவிதமான தகிடுதித்தங்களை மேற்கொண்டிருப்பீர்கள் என்கிற ஐயம் இதைப் படிக்கும் ஒவ்வொரு தமிழனின் மனதிலும் எழுமா இல்லையா?

To believe this or not is Mr. Mankudirai's choice, but it also shows how people are waiting to pounce on someone to tear them to pieces. I find this group to be heartless.

அடடா அபலைகளான உங்களையும் உங்கள் மகள் சின்மயியையும் குதறிக்கூறு போட உலகமே காத்திருப்பதாகவும் இணையத்தில் இருக்கும் கறுப்பு பிராமணன் தவித்த எல்லா அப்பிராமணாளும் கடை வாயில் பல் நீண்டு தலையில் கொம்போடு ஒரே கும்பலாக உங்கள் குடும்பத்துக்கு எதிராகத் திரண்டிருப்பதாகவும் உங்களுக்கு மனப்பிராந்தி அம்மா. தயவுசெய்து நல்ல மனநல மருத்துவரை தாமதிக்காமல் பாருங்கள். அது உங்களுக்கு மட்டுமல்ல தமிழகத்துக்கும் நல்லது.

மண்குதிரை ஆபாசமாக ஏதாவது பேசினார் என்று ஒரு ஸ்கிரீன் ஷாட்டைக் கட்டுங்கள் பார்ப்போம். இதுவரை உங்களையோ அல்லது உங்கள் மகளையோ குறித்து நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ  நான் எங்காவது ஆபாசமாகப் பேசியிருக்கிறேனா காட்டுங்கள் பார்ப்போம். உங்கள் மகளைக் கேள்விகேட்டால் அது வன்முறையா?

அம்மா இது ஜனநாயக இந்தியா. இதில் சுப்ரீம் கோர்ட்டையே விமர்சனம் செய்ய்யலாம். அது நியாயமான விமர்சனமாக இருக்கவேண்டும். இதை யோரோ சொல்லவில்லை. நீதிமன்றங்கள் அவமதிப்புச் சட்டம் 1971 (5)ல் சொல்லப்பட்டிருக்கிறதம்மா.

The Contempt of Courts Act, 1971

ஆனால் உண்மையிகேயே மிரட்டியது யார் தெரியுமா? சாக்ஷாத் உங்கள் சீமந்த புத்திரியேதான். மிரட்டப்பட்டது வேறு யார்? நானேதான்.

Friday, October 26, 2012 ட்விட்டு - ரீட்விட்டு - ரிவிட்டு at 8:11 AM இதைப்படித்துவிட்டு உங்கள் தெய்வீக புத்திரி ட்வீட்டுகிறார். அதை ஆஞ்சநேய மாயவரத்தான் ரீட்விட் செய்கிறான்.

இது மிரட்டலா இல்லையா? அவார்டு குடுக்கணும் தீயா செயல்பட்டு என்றால் என்ன அர்த்தம் அம்மா? தண்டனையா? 

ஒரு முறை ஒரு புகார் கொடுத்தீர்கள். கூடவே அழுத்தமும் கொடுத்தீர்கள். ஆகவே அதை சிபர் கிரைம்  எடுத்தார்கள். இதனால் ஒட்டுமொத்த காவல்துறையே அம்மா மகள் இருவரின் கைகளுக்குள் இருக்கிறது என்கிற நினைப்பா? இல்லை தமிழகத்தின் ஆட்சியே உங்கள் கைகளில் இருப்பதாக எண்ணமா? நீங்கள் ம் என்று சொல்ல வேண்டியதுதான். உங்களுக்குக் கைகட்டி நிற்கும் காவல்துறை,  உடனே நீங்கள் கைகாட்டிய திசைப்பக்கம் இருப்பவர்களை எல்லாம் தூக்கி ஜெயிலில் போட்டுவிடுவார்கள் என்று பயமுறுத்துகிறாரா உங்கள் மகள்? 

முன்னணி டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டாக இருப்பதற்கே இவ்வளவு ஆணவமா? இன்னும் ஜானகி சித்ரா போலவெல்லாம் நிஜமான பாடகியாகி நிறைய பாடல்கள் பாடிவிட்டால் இவர் போடும் ஆட்டத்தில் இந்தியா இந்துமகா சமுத்திரத்தில் அல்லவா மூழ்கிவிடும்.

நாலு ட்விட்டை வைத்து நான் அப்படி என்னதான் நாடகம் ஆடினேன் என்று பின்னொரு சமயம் பார்க்கலாமா அம்மா?

மீனவன் மீனவனைக் கொல்றான் என்பது நான் ஏதோ ஒரு சிங்களவனைப் பார்த்துச் சொன்னது. அதை சின்மயிக்கு எதிராக யார் யாரோ திரித்தால் அதற்கு நானா பிணை? நான் இணையத்துக்கு வந்ததே ஜூலையில்தான். ஆகஸ்டு 16ல்தான் ஃபெலினியின் இண்டர்வ்யூ பற்றிய என் முதல் பதிவே எழுதுகிறேன்.

16 வருட இடைவெளியில் இலக்கிய உலகிலேயே என்னை எல்லோரும் கிட்டத்தட்ட மறந்தே போயிருந்தனர். இணையத்தில் நான் யாவர்க்கும் புதியவன். ஆறு மாதத்தில் நான் பெரிய கோஷ்டி சேர்த்து எல்லோருக்கும் ஃபோன் செய்து கும்பல் திரட்டி உங்கள் மகளுக்கு எதிராக சதி செய்தது போல அல்லவா எழுதி இருக்கிறார் சின்மயி.

அதை, பாவம் அவர் உண்மையென்று வேறு நம்புகிறார். அதுதான் பிரச்சனை. நான் என்ன உங்கள் மகளோடு ஒரு கொடம் தண்ணியூத்தி ஒரே ஒரு பூப்பூத்து விளையாடும் சிறுவனா? என்னை வந்து இப்படி மிரட்டுகிறார்?

ஜனவரி 2011ல் சின்மயியிடம் நான் பேசியதே ஐந்தாறு ட்விட்டுகள் இருந்தால் அதிகம். அதில் எதிலாவது சின்மயியை ஆபாசமாகப் பேசியிருக்கிறேனா என்று கமிஷ்னர் ஆபீசில் வைத்து பேசத் தயாரா?

அடிப்படையற்ற சந்தேகம்தான் நாளடைவில் முற்றி பாரனாய்டு சீஷோஃப்ரீன்யாவாக ஆகிறது. இது பெரும்பாலும் கலைஞர்களைத்தான் பாதிக்கும் வியாதி. இது ஆரம்ப நிலையாகத்தான் இருக்க வேண்டும். முத்துவதற்கு முன் நல்ல மனநல மருத்துவரிடம் காட்டுவது நல்லது. அக்கு பஞ்சரில் எல்லாம் இது சரியாகாது. எவனோ சொன்னான் என்று நம்பி இறங்க வேண்டாம். இப்போதே சொல்லிவிட்டேன்.

நாங்க உயிர்களை துன்புறுத்தறவங்க இல்ல. வெட்டி சாப்பிடறவங்களும் இல்ல. சப்போர்ட்டர்ஸ் ஆஃப் பெட்டா. என்று தீவிர கருத்தாக்கத்தை வைத்திருப்பவரான பிரச்சாரம் செய்பவரான வாழ்வில் கடைபிடிப்பவரான மீனை தொட்டியில் வளர்ப்பதே துன்புறுத்தலாகக் கருதுபவரான உங்கள் மகள் சின்மயி  எப்படியம்மா சிக்கனை வெட்டி சமைக்கும் வென்காப் சிக்கனுக்குப் பாடி இருக்கிறார். அங்கே என்ன கோழிகளைக் கோமாவுக்குக் கொண்டுபோய் துன்புறுத்தாமல் கொல்கிறார்களாமா?
இதைப் பார்த்துவிட்டு, ஏனம்மா நீங்கள்தான் வெஜிடேரியனிசம் பேசுகிறவராயிற்றே, என்னதான் வேலை என்றாலும் ஏன் உயிர்க்கொலையை ஊக்குவிக்கிறீர்கள் என்று ஒருவர் கேட்கிறார். அதற்கு சின்மயி சொல்லும் பதிலைப் படித்து விட்டு எவருக்கேனும் வயிற்றுவலி வந்தால் நான் பொறுப்பில்லை.
இதைவிட லூசுத்தனமாய் யாராலாவது பதில் சொல்ல முடியுமா? ஒட்டுமொத்த படப்பிடிப்புக் குழுவும் சைவமாம். அதனால்? கோழியின் கழுத்தைத் திருகாமல் அதை வெட்டாமல் இந்தப் படத்தை எடுத்திருக்க முடியுமா? இந்தப்பாட்டைப் பாடியவர் ஐயங்கார் என்பதால் அந்தக்கோழி வைகுந்தத்தில் பெருமாளுக்குப் பக்கத்தில் உயிரோடு வாழ்கிறது என்கிறீராரா?

எல்லோருக்கும் நன்கு அறிமுகமான இரு இயக்குநர்களுக்குள் ஒரு முறை முட்டிக்கொண்டது. ஒருவர் இரு பெரும் நட்சத்திரங்களை உருவாக்கிய ஜாம்பவான். கூடவே அவர்களை வைத்து குருநாதர் என்பதால் குறைந்த சம்பளத்தில் மசாலாப் படங்களைத் தயாரித்து சூப்பராய் கல்லா கட்டியவர். மற்றவர் உலக சினிமாவில் இருந்து கதைகளை சுட்டு மூவி கேமராவை வைத்து ஸ்டில்களாய் சினிமா எடுத்தவர். பட்டின் போதுதான் படம் கிரேன் டிராலி என்று மூவ் ஆகி நாம் மூவிதான் பார்த்துக்கொண்டிருக்கிறோம் என்பதை நமக்கு உணர்த்தும்.

ஒன்று சொன்னது: நான் மசாலாப்படங்களே இயக்கியதில்லை.

மற்றது வேறொரு சமயத்தில் கொமட்டில் குத்திற்று. ஆமாம் அவர் பிராத்தல் செய்ததில்லை ஆனால் பிராத்தல் வீடு மட்டுமே நடத்தியவர் என்று.

கோழியைத் தின்பவன் கொலைகாரன் நான் வெஜிடேரியன். கோழியைத் தின்னாதவர், இந்த கோழிக் கறி சூபரோ சூப்பர் தின்று பார் என்று பாடினால் வள்ளலாராம்.

பாப்பாவுக்குப் பாட மட்டும்தான் தெரியும். ஆனால் அது அதற்கு மட்டுமின்றி  எல்லாவற்றுக்கு வாயைத் திறக்கும்

Chinmayi is young,

டெல்லிக்கு ராஜான்னாலும் தல்லிக்கு பிட்டதான் அம்மா. ஆனால் 10 செப்டம்பர் 1984ல் பிறந்த அவர் வயது என்ன அம்மா? 28 இல்லையா அம்மா? 28 வயது முதிர்ந்த பெண்மணி சொல்லும் கருத்துக்களை எல்லாம் உலகம் சிசுவின் கருத்தாக ஏற்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது நியாயமா அம்மா? அம்மா உங்களுக்குப் பிறந்தால் மட்டும்தான் குழந்தையா அம்மா. உங்கள் மகள் சின்மயி 28 வயதில் குழந்தை என்றால், 25 வயதுதே ஆகிற ராஜன் லீக்ஸ் குழந்தை இல்லையா அம்மா? ஒரு கண்ணில் வெண்ணை இன்னொரு கண்ணில் சுன்னாம்பு. அதுவும் அந்த இன்னொரு கண் எவளோ ஒருத்தியுடையதுதானே. அவளும் யாரோ ஒரு சூத்தரச்சிதானே இல்லையாஅம்மா.

she contemplates and when she can, reads up on a few social issues, especially if the issues are to do with women and children.

அம்மா சின்மயி சொன்னதெல்லாம் பெண்கள் குழந்தைகள் பற்றிய கருத்துக்களா அம்மா. முஸ்லீம்கள் தலித்துகள் சேரிவாசிகள் பற்றிக் கூறிய கறுப்புக் கருத்துகளுக்கெல்லாம் உங்களால் இவ்வளவு சுலபமாக வெள்ளையடிக்க முடிகிறதே  அம்மா. இந்த பெயிண்டிங்கையே இவ்வளவு சாமர்த்தியமாக செய்கிற நீங்கள் மாயவரத்தானோடு சேர்ந்து பெய்ண்டர் பிக்காசோவுக்கு தளம் அமைத்து விவாதிக்கபோவது குறித்துப் பார்த்தேன். பெயிண்ட்டிங்குக்கு நீங்கள் முழுத்தகுதி உடையவர்தான் அம்மா. பெயிண்டிங்கை தீற்றும்போதே நிறையதடவை பூசிப்பூசிக் கலைக்கவும் வேண்டும். ட்விட் போட்டுப்போட்டுக் கலைப்பதில் கைதேர்ந்த உங்கள் மகளையும் இதில் சேர்த்துக்கொள்ளுங்கள் அம்மா.

ஆனால் அதில் நீங்கள் கவனிக்க வேண்டிய சட்டச்சிக்கலும் இருக்கிறது உங்கள் மகளின் ட்விட்டழிப்பு வேலைக்கு என்ன தண்டனை தெரியுமா அம்மா? சக மனிதர்களைப்பற்றி பல ஆபாசக் கருத்துகளைக் கூறி கூறி ட்விட்டரில் கலைப்பது எவ்வளவு பெரிய தண்டனைக்கு உரிய குற்றம் தெரியுமா அம்மா.

Indian Penal Code (IPC)

Section 204. Destruction of document or electronic record to prevent its production as sevidence

Destruction of 1[document or electronic record] to prevent its production as sevidence.— Whoever secretes or destroys any 1[document or Electronic Record] which he may be lawfully compelled to produce as evidence in a Court of Justice, or in any proceeding lawfully held before a public servant, as such, or obliterates or renders illegible the whole or any part of such 1[document or Electronic Record] with the intention of preventing the same from being produced or used as evidence before such Court or public servant as aforesaid, or after he shall have been lawfully summoned or required to produce the same for that purpose, shall be punishable with imprisonment of either description for a term which may extend to two years, or with fine, or with both.

CLASSIFICATION OF OFFENCE

Punishment—Imprisonment for 2 years, or fine, or both—Non-cognizable—Bailable—Triable by Magistrate of the first class—Non-compoundable.

-------------------------

1. Subs. by Act 21 of 2000, sec. 91 and Sch. I, for “document” (w.e.f. 17-10-2000).

போனது போயிற்று இனியாவது ட்விட்டருக்கு வருகையில் உங்கள் மகளைக் கொஞ்சம் கையையும் வாயையும் கட்டச்சொல்லுங்கள்.

All English Medium educated children have their own vocabulary issues in Tamil. That's how this Thazhdhavar and thazhthappattavar had a confusion in her handling the terms in Tamil initially. My family has not agreed on disparities at least for three generations.

தாழ்ந்தவர் தாழ்த்தப்பட்டவர் மட்டுமில்லை அம்மா. உங்கள் மகளுக்கு ஒரு மண்ணும் தெரியவில்லை என்பதுதான் உண்மை. உங்கள் மகளுக்கு வாய் இருக்கும் அளவுக்கு காது இல்லை அம்மா. உங்களால் சிறைக்கு அனுப்பப்பட்ட ராஜன் லீக்ஸும் உங்கள் மகள் சின்மயியும் எப்படி மகிழ்ச்சி பொங்க பேசிக் கொள்கிறார்கள் என்று இதில் பார்த்தால் தெரியும் அம்மா.

http://365ttt.blogspot.in/2011/12/famous-tamil-twitter-conversation.html

rajan_allinall 441 January 5, 2011

@Chinmayi நீங்க பிராமணரா?!

Chinmayi 18,152 January 5, 2011

@rajan_allinall Yaen kaekkareenga?

Chinmayi 18,152 January 5, 2011

@thiagu1973 aan jaadhi pen jaadhi. Alladha jaadhi malli poo. Kalaignargal jaadhi kavignargal inam.

rajan_allinall 441 January 5, 2011

@Chinmayi ஒதற முடியாத அளவுக்கு என்ன ஜாதின்னு தெரிஞ்சுக்க தான்

Chinmayi 18,152 January 5, 2011

@rajan_allinall pen jaadhi.

rajan_allinall 441 January 5, 2011

@Chinmayi யாருக்கு! கல்யாணமாயிடுச்சா!?

Chinmayi 18,153 January 5, 2011

@rajan_allinall excuse me?

rajan_allinall 441 January 5, 2011

@Chinmayi யெஸ் ப்ரொசீட்!

Chinmayi 18,153 January 5, 2011

@rajan_allinall what is that about ?

Chinmayi 18,153 January 5, 2011

@rajan_allinall neenga paesardhu puriyaadha poadhu proceed panradhu not possible.

rajan_allinall 441 January 5, 2011

@Chinmayi பெண்ஜாதின்னு சொன்னீங்களே! அப்பிடீன்னா சம்சாரம்னு அர்த்தம்! அதான் கேட்டேன்! இப்போ ப்ரோசீட் பண்ணுங்க

Chinmayi 18,154 January 5, 2011

@rajan_allinall Interesting. Prefer not to :)

கத்தியின்றி ரத்தமின்றி ராஜன் செய்த யுத்தம் அம்மா இது. எப்படித் தொடங்கி எங்கே கொண்டுவந்து உங்கள் மகள் சின்மயி ஒன்றுமே தெரியாமல் சும்மா உளறிக்கொண்டிருப்பவர் என்பதை எவ்வளவு அழகாக அம்பலப்படுத்திவிட்டான் பாருங்கள் அம்மா.

வரி ஏய்ப்பாளர்கள் கடத்தல்காரர்கள் மோசடிக்காரர்கள் போன்ற கெட்டித்தட்டிப்போன கிரிமினல்களிடமெல்லாம் அதிகாரபூர்வ விசாரணை செய்து அடிக்காமல் உதைக்காமல் ஸ்டேட்மெண்ட் ட்ரா செய்வது என்பது  புலனாய்வில் பெரிய கலை.

மூன்று தலைமுறைகளாகவே  பெரிய குடும்பம்ப் பின்னணி வயது ஜாதி போன்றவற்றிலெல்லாம் உங்கள் மகள் சின்மயியை ஒப்பிட்டால் ராஜன் ஒன்றுமே இல்லை. ஆனால் மலர் தொடுப்பது போல அங்கங்கே விட்டுவிட்டு சில கேள்விகள். ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவை போன்று தோற்றமளிக்கும் கேள்விகள். இப்போது ஒட்டுமொத்தமாய் கோர்த்துப் படிக்கையில் வெகு திறமையான வசனகர்த்தா  போல, தான் தீர்மானித்த வழியில் நாசூக்காக அழைத்துப்போய் சின்மயி நீ ஒன்றுமில்லை என்று அம்பலப்படுத்திவிட்டான் பாருங்கள் அம்மா. 

இதுதான் மண்ணின் சுய அறிவு. இதைப் புத்தகப் படிப்பால் ஒருபோதும் அடைய முடியாது.

கம்யூனிசப் புத்தகங்களைக் கரைத்துக்குடித்த ஏழரையும் தியாகுவும் மொக்கைக்கு மொக்கையாய் எசப்பாட்டுப் பாடிக்கொண்டிருக்கையில் சில ட்விட்டுகளிலேயே சின்மயிக்கே தெரியாமல் வலிக்காமல் நீ இவ்வளவுதான் ஆனல் நீ பேசுகிறாய் கண்டதையும் வாய்கிழிய என்று எப்படி சொல்லாமல் சொல்லிவிட்டான் பாருங்கள் அம்மா. இப்படி மட்டுமே அவன் இயங்கி இருந்தால், உண்மையில் அவனை விஞ்ச ஆள் கிடையாது.

ஆனால்  ராஜன், ஆபாச மொழியின்மேலிருந்த தனது அற்ப  கிளுகிளுப்பு  காரணமாய் பாரதி சொன்னதுபோல், பொக்கென எல்லாம் போகத் தொலைத்து விட்டான் என்பதுதான் எனக்கு அவன்மீது கோபம் அம்மா.

அம்மா பெண்ஜாதி என்றால் சம்சாரம் என்பதைக்கூட தெரியாத அளவுக்கு வளர்த்த உங்களது குழந்தை வளர்ப்பு பெரும் கலை அம்மா. நீங்கள் குழந்தை வளர்க்கும் கலை என்று புத்தகமே கூடப்போடலாம் அம்மா. கல்யாண் ராமன் போலவே நன்றாகப் படித்த நம்பளவாளால் நடத்தப்படும் நல்ல பதிப்பகம் ஒன்று எனக்குத் தெரியும் அம்மா. அதில் உங்கள் புத்தகத்தைப்போட சிபாரிசு செய்கிறேன் அம்மா. சின்மயி விவகாரம் பற்றி எரியும் இந்த வேளையில் போட்டால் புக்கு சேல்ஸ் பிய்த்துக்கொள்ளும் என்று ஷார்ப்பான வியாபாரிகளான அவாளுக்கும் நன்றாகத் தெரியும் அம்மா. நீங்கள் எழுத வேண்டியதுதான் அவா அனெளன்ஸ் பண்ண வேண்டியதுதான் சேல்ஸ் அட்வான்ஸ் புக்கிங்கிலேயே பிய்த்துக்கொள்ளும் அம்மா.
அம்மா பெண்ஜாதி என்றால் மனைவி என்பது கூட ஜனவரி 2011ல் கிட்டத்தட்ட 27 வயதில்கூடத் தெரியாத உங்கள் குழந்தை சின்மயி இங்கிலீஷ் மீடியத்தில் படித்துவிட்டார் என்கிற ஒரே தகுதியில் ஊருலகம் பற்றியெல்லாம் ஒன்றுமே தெரியாமல் ஜெயமோகன் போலவே உளறிக் கொட்டுகிறாரே அம்மா. இது நியாயமா? 
ஆனால் பிரச்சனை பெரிதாகி ஒட்டுமொத்த தமிழர்களே உங்களுக்கு எதிராய்த் திரும்பி விடுவார்களோ, தாழ்த்தப்பட்டவர்கள் என்ன பிரச்சனை செய்து விடுவார்களோ என்கிற கலவரத்தில் நாங்கள் மறவர் சீமை என்பதை அழுத்திச்சொல்லும் உங்கள் பாலிடிக்ஸ் யாருக்குமே தெரியாது என்று நினைக்கிறீர்களா அம்மா?

ஒரு காலத்தில் பிரிட்டிஷாரொடு சேர்ந்து இதே பிராமண சமூகம் தங்களை எப்படி நடத்தியது சமூகத்தில் ஒவ்வொரு நாளும் தாம் எப்படி நடத்தப்பட்டோம் என்கிற வரலாறு மறவர்களுக்குத் தெரியாதென்று நி8னைக்கிறீர்களா அம்மா? முருகனோடும் முத்துராமலிங்கத் தேவரோடும் பெரியாரையும் நன்றியோடு நினைக்கும் ஒவ்வொரு மறவனுக்கும் கிடுக்கிப்பிடியிலிருந்து தப்பிக்கப்பார்க்கும் பிராமணீய குறுக்கு புத்தியின் கீழ்த்தரமான சூழ்ச்சிதான்  இது என்று தெரியாதா?  இதெல்லாம் இவர்களுக்கு எங்கே உறைக்கப்போகிறது என்றா தமிழர்களை இளக்காரமாக எடைபோட்டு விட்டீர்கள் அம்மா?

மண்வெட்டிக் கூலி தின்னலாச்சே - எங்கள்
வாள்வலியும் தோள்வலியும் போச்சே

இதை எந்த பிராமணன் யாரைப்பற்றிப் பாடியது என்று அட்லீஸ்ட் உங்களுக்காவது தெரியும் இல்லையா அம்மா?
It is this same girl who has thrashed the two tumbler systems and human labour being used for sewage clearance etc. when she was running a breakfast show as an RJ.

ஒரு நிகழ்ச்சியில் ஒரு காலை நேரம் அவனவன் அலுவலகம் கிளம்ப ஓடிக்கொண்டிருக்கும் வேளையில் சொன்னது மாபெரும் சமூகத்தொண்டுதான் அம்மா. தமிழ்ப்படம் பார்த்தாலே தெரியக்கூடிய பெண்ஜாதி தெரியவில்லை. ஆனால் இரு டம்ளர் முறை மற்றும் பீவார மனிதனை பயன்படுத்தும் கீழ்மை எல்லாம் தெரிகிறது என்பது சின்மயி சமூகத்தைக் கூர்ந்து நோக்குகிறார் என்பதற்கான சிறந்த சான்றுதான் அம்மா.

The then corporation commissioner and other VIPs have been a part of her breakfast show. People were managing to stream it through web and listen to it in several parts all over the world. We heard one such (recorded) show in S'pore shopping mall! This show was much much before this twitter abuses. When people can show there concocted stories as Chinmayi said, why don't they remember her breakfast shows which are remembered by people even now. 

ஒரே கட்டுரையில் முடிக்க விடமாட்டீர்கள் போல் இருக்கிறதே அம்மா. சேரிக்காரர்கள் பற்றி உங்கள் தவப்புதல்வியின் ஆண்டாள் பாசுரத்தை அடுத்த கட்டுரையில் வைத்துக்கொள்வோமா அம்மா. அதற்கு உங்கள் உதவி வேண்டும் அம்மா. உங்கள் வீட்டில் இன்னமும் புது பேட்டரி போடாத பழைய லேப்டாப்பில் சேமிக்கப்பட்டிருக்கும் இரண்டாயிரம் மூவாயிரம் ஸ்கிரீன் ஷாட்டுகளில் எதிரிகளுடைய ஸ்கிரீன்ஷாட்டுகள் மட்டுமே உள்ளனவா அல்லது உங்கள் மகள் சிந்திய முத்துக்களும் உள்ளனவா? உங்களால் சிறைக்கு அனுப்பப்பட்ட ஷரண்கேவுடனான லடாய்க்கு தோற்றுவாயாக இருக்கும் இரண்டு ஸ்கீரின் ஷாட்டுகள் எனக்குத் தேவைப்படுகின்றன.

ஒரு ட்விட்டு ஹிண்டு பேப்பருக்கு சுட்டி கொடுத்தது.

இரண்டாவது ட்விட்டு, ஹிண்டு பேப்பர் செய்திக்கும் இதற்கும் ஸ்நானப் ப்ராப்தியே இல்லாமல் சேரிக்காரர்கள்  கரண்டு திருடுவதால்தான் தங்கள் வீட்டு கரண்டுபில் ஏறுவது பற்றியது.

இதற்கு ஷரண்கே ஆபாசமாக இல்லாமல், காட்டமாக பதிலடி கொடுத்தவை என்னிடம் உள்ளன. நான் கேட்ட இரண்டு ட்விட்டுகளின் ஸ்கிரீன் ஷாட்டுகளுக்கும் சீக்கிரம் ஆவன செய்யுங்கள் அம்மா. பழைய லேப் டாப்புக்கு புதிய பேட்டரி போடும் செலவை வேண்டுமானால் நானே ஏற்கிறேன் அம்மா.

இந்தியா முழுமைக்குமான ஒட்டுமொத்த தலித் சமூகத்தை தாழ்த்தப்பட்டவர்கள், தீண்டத்தகாதவர்கள் ஒட்டுண்ணிகள்  என்கிற கிரிமினல் கருத்தை மனுஸ்ம்ரிதியின் பேரால் சொல்லப்பட்டதை உங்கள் மகள் தனது ஒரு லட்சத்துக்கும்மேற்பட்ட விசிறிகளுக்குப் பரப்பினால் அது கை தவறி செய்ததாகி ஒரு தண்டனையும் கிடையாது. எந்த உள்நோக்கமும் இல்லாமல்  உனக்கு செட்டாகும் கடலைப்போடத்தான் என்பதை எழுதியதற்கு  பத்துநாள் சிறைவாசமா? இழுத்துக்கொண்டுபோய் கமிஷ்ணர் முன்னால் நிறுத்தி முன் நிபந்தனையற்ற மன்னிப்பை எழுதிவாங்கி இருக்கலாமே அம்மா.

ஷரண்கே எழுதியது ஆபாசம்தான். அதில் எந்த சந்தேகமும் இல்லை. கட்டாயம் கண்டிக்கப்படவேண்டியதுதான். அதற்கு சிறைவாசமா? வேலை பறிப்பா?

ஆனால் சின்மயியைக் காப்பாற்ற, கல்யான் ராமனை முன்வைத்து நீங்கள் செய்த மேற்படி குற்றங்கள் ஆபாசம் இல்லையா? தனி மனிதனுக்கு எதிராக செய்தால்தான் ஆபாசமா? பொய் சொல்லக்கூடாத பிராமணன் பொய் சொல்வது ஆபாசம் இல்லையா?

மனுஸ்ம்ருதி பற்றிய ட்விட்லாங்கரை சின்மயி ரீட்விட் செய்து பரப்பியது கிரிமினல் குற்றமா இல்லையா? அதற்கு தண்டனை என்று ஒன்று இல்லவே இல்லையா?

புகார் கொடுத்தால்தான் நடவடிக்கை எடுக்க முடியும் என்றால் தலித் பாசறை சின்மயி மேல் கொடுத்ததுக்குப் பெயர் இல்லையா?

சின்மயி புகார் கொடுத்தால் 48 மணிநேரத்தில் நடவடிக்கை எடுத்து தேசியத் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பி விசாரணையே இல்லாமல் வாழ்நாள் முழுவதுக்குமான தண்டனையை வாங்கிகொடுத்தீர்களே அம்மா தலித் பாசறை புகார் கொடுத்து எத்துனை நாட்கள் ஆகின்றன? தலித் பாசறைக்கு சஞய் பிண்டோ இல்லையே அதனால்தான் அது பத்திரிகைகளில் பெரிதாகப் பேசப்படவில்லையா?

மனுநீதி சோழனைப்பற்றி நீங்களோ அல்லது உங்கள் அருமை மகள் சின்மயியோ manu neethi sozhan enru oru mannar irunthaar என்று ட்விட்டரில் எப்போதம்மா தமிழர்களுக்கு சிறப்புத் தமிழில் நீதி போதனைக் கதைகளை சொல்லி எங்களையெல்லாம் உயர்த்தப்போகிறீர்கள்?

மனுஸ்ம்ருதியில் பிராமணனுக்கு ஒரு நீதி சூத்திரனுக்கு ஒரு நீதி பஞ்சமனுக்கு ஒரு நீதி என்று சொல்லப்பட்டிருக்கிறது. நம் இந்திய குற்றவியல் சட்டத்தின்கீழும் அதே கதைதானா?

Between two girls, same Iyengar community, she was meaning those thivra vaishnavaites as Highengars and ridiculing them for doing Ganesh Chaturti alone as though condescending to do it for their children. That is a conversation between friends which only they understand the 'read betweens' and 'underlines'.
இந்த தமிழ்ப் படம் இயக்குநர் C S Amudhan பெண்னா? ஸ்தல புராணம் கேட்டு மெய்சிலிர்க்கிறாரே. கர்பத்தில் இருக்கையிலேயே கதாகாலட்சேபம் கேட்டு வளந்த சிசு போலும். 

I am baffled at this constant spewing of fire upon a girl who is young, generous, compassionate, determined, ever evolving towards getting better. As a mother, myself and people who know her closely know her as a very good girl and a very good human being. We are pained at the hatred generated by this group of people.

அம்மா பிராமண மேட்டிமைத் தனத்துக்கும் அடக்கு முறைக்கும் ஆக்கிரமிப்புக்கும் எதிராகப் போராடியவர்கள் எல்லாம் காந்தி மாதிரியே இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க முடியுமா அம்மா.

வாயே இல்லாமல் சமூகத்தின் பெருங்கூட்டத்தை கீழாக நடத்திக் கொண்டிருந்த பிராமணர்களை பார்ப்பணர் என்றார். அது கெட்ட வார்த்தைகூட இல்லை அம்மா. அந்த ஒரே காரணத்துக்காக பெரியாரை வசைபாடி வெறுப்பை உமிழ்ந்தவர் என்று வத்திப் பெட்டிக்குள் அடைக்கப் பார்க்கிறார் ஜெயமோகன்.

சினிமாத் தொடர்புகளில் இருப்பவர்தானே அம்மா உங்கள் மகள். உங்களுக்கு மான்புமிகு தமிழக முதல்வரை சந்திப்பது பெரிய காரியமில்லை அல்லவா. அப்பாயின்மெண்ட் வாங்கி பிராமணர்களை விமர்சித்த பெரியார்  வசைபாடிதானா, வெறுப்பை உமிழ்ந்தவர்தானா என்று முதல்வரிடமே கொஞ்சம் கேட்டுச் சொல்லுங்களேன். சிரமமாக இருந்தால் அந்தக்கட்சியின் பரமக்குடிக்காரர்களிடமும் கேட்டுச் சொல்லுங்கள் அம்மா. எத்துனை திராவிடர்கள் அவரைப் பெரியார் என்று சொல்லாமல் ஜெயமோகன் போல ’ஈவேரா’ என்கிறார்கள் என்றும் கேட்டுச் சொல்லுங்கள் அம்மா?

As I see things in a clearer perspective, the trouble is not with Chinmayi but it is the general hatred toward successful or intelligent girls who also happens to be identified as a brahmin. That's all there is to this, in my humble opinion. 

நீங்கள் கறுப்புத்துணியால் கண்ணைக் கட்டிக்கொண்டு பார்த்தாலும் சின்மயியின் மீது எந்த கறையையும் உங்களால் பார்க்க முடியாது அம்மா.  காக்கைக்கும் தன்குஞ்சு பொன்குஞ்சு தானம்மா. போதாக்குறைக்கு அந்தக் காக்கை இருப்பதே சேறில் எனும்போது சின்மயியிடம் இருக்கும் குறை உங்களுக்கு எப்படியம்மா தெரியும்?
.
பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே என்று சென்ற நூற்றாண்டின் தொடக்கத்திலேயே சொல்லிவிட்டுச் சென்ற பாரதி என்கிற பார்ப்பானை எப்படி அம்மா பார்ப்பீர்கள்? வசைபாடி வெறுப்பை உமிழ்ந்தவன் என்றா?

இன்நாளிலே பொய்மைப் பார்பான்
அவன் ஏது செய்தும் காசு பெறப் பார்ப்பான்
பேராசைக்காரனடா பார்ப்பான்
ஆனால் பெரியதுரை என்னினுடல் வேர்ப்பான்
பிள்ளைக்குப் பூநூலாம் என்பான்
நம்மைப் பிச்சுப் பணம் கொடெனத் தின்பான்

இதை எழுதியவன் ஒரு பிராமணன்தானம்மா. ஆனால் அவன் நம்மைப்போன்ற வாமனன் அல்ல. விஸ்வரூபம் எடுத்து விகசித்த பிராமணன்.

அதனால்தான் பாரதிதாசன் அடிகடிக் கூறுவாராம், பார்தியார் ஒருத்தருதான்யா ஐயிறு மத்தபேரெல்லாம் பார்ப்பான் என்று.

Every single person who was associated with us thoughout our life are only laughing at these allegations. 

திரும்பவும் உங்கள் வீட்டு வேலைக்காரகளையே துணைக்கிழுக்கிறீர்களே அம்மா. ஆதார பூர்வமாய் நிரூபிக்கப்பட்டபின்னும் எங்கள் எசமானியம்மா இப்படியெல்லாம் இணையத்தில் ரீட்வீட் மோசடியெல்லாம் ஒருக்காலும் செய்திருக்க மாட்டார்கள்  என்று அவர்கள்  சொல்வதை இந்த உலகமும் கோர்ட்டும் நம்பும் என்று நினைக்கிறீர்களா அம்மா.

The time ahead should prove.

ஹிட்ச்காக் எடுத்த சைக்கோ படத்தில், தான் செய்த கொலைகளை தன் அம்மா செய்துவிட்டதாக எண்ணி, தனது தாய்மேல் பழி வந்துவிடக்கூடாதே என்று, சாட்சியங்களை அழித்து மறைக்கப் பார்ப்பான் மகன்.

இணையத்துக்கு வந்த நாள் முதல் மீனவர்கள், தலித்துகள், சேரிக்காரர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள் சிறுபாண்மை முஸ்லீம்கள் என்று ஒட்டுமொத்த தமிழர்கள் மேலும் உங்கள் மகளான சின்மயி செய்துகொண்டிருக்கும் ஆதி பிராமணத்தனமான கொலைகளை அம்மாவான நீங்கள் அபத்தமாக பொய் சொல்லி மறைக்கப்பார்க்கிறீர்கள்.

Satyameva Jayate!

சத்தியம் மட்டுமே உண்மையில் ஜெயிக்கும் என்பது உண்மையானால்,  உண்மையிலே தண்டிக்கப்படவேண்டியவர்கள் யார் என்பதைக் கோர்ட் மட்டுமல்ல தமிழகமும் தீர்மானிக்கட்டும்.

நான் சின்மயிக்கு எழுதிய கடைசி ட்விட் இதுதான்.
பேசிப்பேசி ஒண்ணுமில்லேன்னு ஆகியே விடுவது என்று கங்கணம் கட்டிச் செயல்படுகிறீர்கள் என்பது நன்றாகத் தெரிகிறது.

என்னை தீர்க்கதரிசி என்று ருசுப்பிக்க அம்மாவும் மகளும்தான் பாவம் எவ்வளவு தீவிரமாக செயல்படுகிறீர்கள். உங்களிருவருக்கும் என் மனமார்ந்த நன்றி.

பெரும் பிராமணர்கள் என்று பெருமை பேசும் நீங்களும் உங்கள் மகளும் மனதளவிலும் மனசாட்சியின் அளவிலும்  நிஜத்தில் வெறும் வாமனர்கள் மட்டுமே என்பதை இன்று நான் சொல்கிறேன். உலகம் நாளை சொல்லும்.

வாய்மை மட்டுமே வெல்ல வேண்டும்.

பிகு: 62 வயது சீனியர் சிடிசனை முன்னிறுத்தி எழுதும் கட்டுரை இது. வாசிப்போர் கண்ணில் ஏதேனும் எழுத்துப்பிழை தெரிந்தால் தயவுசெய்து உடனடியாக எனக்கு madrasdada@gmail.comக்கு தெரியப்படுத்தவும். எழுத்துப்பிழை காரணமாக ஆபாசமான பொருள் எதுவும் தொனித்துவிடக்கூடாது என்கிற முன்னெச்சரிக்கையுடனேயே இதை எழுதுகிறேன். எனவே தயவுசெய்து எதிரிகளும் கூட இதில் உதவலாம்.