Friday, November 23, 2012

புழலுக்குப் போக நேர்ந்தால்

புழலுக்குப் போக நேர்ந்தால் - 66Aவிலே
     புழலுக்குப் போக நேர்ந்தால்
அங்கு கம்பி துருபிடிக்காமல் - கதவுகள்
     புது பெயிண்டடித்தனவாய்
அந்த ஏக்கர் ஜெயிலிடையே - ரெண்டு
     செல்லுக்கு ரெண்ட்டு வரவேண்டும்
அங்குக் கேணியருகினிலே - ஞாநியின்
     இலக்கியக் கூட்டம் நடகாமல்
நெட்புக் ஐஃபோன் - ஐபேட்
     இண்டர்நெட் கனெக்‌ஷனுடனே
பவர்கட் தெரியாமல் பகல்போல - இன்வெர்ட்டர்
     பாட்டரிகளுடன் வேணும்
ஜெமோ பிளாகின் நாராசம் - சற்றும்
     பார்வையில் படாதிருக்க வேணும்
என்றன் சித்தம் மகிழ்ந்திடவே - பேக்கப்பில்
     ஓஜெனரல் ஏசி ஓடிடவேணும்
சோறு கலந்துதர எங்கூட்டுப் - பத்தினிப்
     பெண் ஒருத்தியே போறும்
அந்த பருப்பு சாம்பாரின் - உப்புசம்
     ஆளைத் தூக்காதிருக்கவேணும்
அந்த நகரோரத்திலே அம்மா - உங்கள்
     ஓரக்கண்பார்வை படவேணும்
என்றன் ட்விட்டு திறத்தாலே - ஈவ்னிங்கே
     நான் ரிலீஸாகிவிடவேணும்

- உப்புசமணிய நாரதி